Sunday, November 14, 2010

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை



அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமய நல்லிணக்கத்தை வேண்டி மார்க்கத்திற்காகவும், பண்பாடு, கலாச்சாரத்திற்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் ஒரே குடையின் கீழ் இயக்கும் சமுதாய பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே.

இந்தியாவில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நோக்கங்களை பறைசாட்டும் விதமாக முஸ்லிம் லீகின் பிறைக் கொடி சமாதனம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பறக்கிறது. இந்த பிறைக் கொடியை தூக்கி பிடிப்பவர்கள் எந்த வித சந்தேகமற்ற நிலையில் பொதுமக்கள் மூலம் அனுகப்படுவார்கள். இந்த பச்சை கொடியில் தன்னை ஐயக்கியப்படுத்தி கொண்ட ஒருவர் அடுத்தவர்களுக்கு நன்மை தவிர வேறு எதுவும் தவறாக பாவங்களை செய்யமாட்டார், இந்த சத்தியசீலர்கள், தனக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியான, அதுவும் அமைதியின் வழிகாட்டியாக ஒவ்வொரு லீக்கர்களும் திகழ்ந்து, அனைத்து மக்களின் பாசத்தையும், அன்பையும் பெற்றுள்ளார்கள். அரசு முதல் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் வரை முஸ்லிம் லீக்கர்களை மதிப்பும், மாரியாதையுடன் தொடர்பு கொண்டு செயல்படும் விதம் என்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.

"மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாவும், தீயதிலிருந்த மக்களை விலக்குபவர்களாகவும் உங்களின் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப எத்தனையோ சமுதாய பணிகளை எந்த வித சுயவிளம்பரம் இன்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டியே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செய்து அல்லாஹ் கூறிய வெற்றியாளர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலையாக இருந்து வருகிறது.

சமுதாயத்தின் பெயரில் எத்தனையோ விளம்பர இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் என்று தினமும் ஒரு பெயரில் வந்தாலும் பராபரியமிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சமூக சமுதாய நல்லிணக்கமிக்க கொள்கையின் முன்பாக இதுபோன்ற கொள்கை அற்ற இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும் கதை தான் நாம் இன்றைய அளவில் கண்டுவருகிறோம். இது போன்ற சுயநலமிக்க இயக்கங்கள் நமது சமுதாய இளைஞர்களை அவர்களின் சமுதாய கவலையை வேறு வகையில் பயன்படுத்தி கொண்டததுடன், அவர்கள் மட்டும் தங்கள் அளவில் வளப்படுத்தி கொண்டார்கள், ஆனால் பயன்படுத்தி கொண்ட இளைஞர்களை நடுதெருவில் விட்ட நிகழ்வுகள் தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயத்திற்கு என்றும் குரல் கொடுக்கும், அதுவும் பொதுவில் சமுதாயத்திற்கு என்று அங்கீகாரமிக்க ஒரே அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக் தான் என்று தன்னை தாய் சபையில் தொடர்ந்து இணைந்து கொண்டு வரும் செய்தி உங்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசயம்.

இளைஞர்களுக்கு சமுதாய பணிகளை எந்த விதத்தில் அமைதியான, ஆர்பாட்டமற்ற வழியில் செய்து சாதிப்பது போன்ற அறவழிகளை முஸ்லிம் லீக் போதிப்பதுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வழி தவறி சென்றவர்களை அவர்களின் சமுதாய வேட்கையை நன்கு உணர்ந்து இளைஞர்களின் வேகத்தை விவேகமான முறையில் சிறப்பான சிந்தனைகளை கொடுத்து ஒரு பண்பட்டவர்களின் பட்டியலில் இந்த இளைஞர்களை சேர்ந்து வருதுடன், மற்றவர்கள் மதித்து போற்றும் விதமாக செய்து வரும் முஸ்லிம் லீக்கின் செயல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளை என்றும் பெற்று பெருமையுடன் முஸ்லீம் லீக் இருந்து வருகிறது.

தன்னக்கும், தன் குடும்பத்திற்கும், தன் ஊருக்கும் எந்த வித அவபெரும் வராமல் இருக்கவும், சமுதாயத்திற்கு பணியாற்ற வரும் அல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்து சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் அறப்பணிகளை சிறப்புடன் செய்வதுடன், இம்மைக்கும், மறுமைக்கும் ஓர் உயர்ந்த இடத்தை பெற வேண்டும், இப்படி கவலை கொண்ட இளைஞர்களை முஸ்லிம் தலைமையகம் என்றும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது. பாதை தெரியாமல் அலைந்து திரிந்து எத்தனையோ இளைஞர்கள் இன்று கடைசியில் தாய் சபையில் தன்னை இணைத்து இன்று சிறந்து விளங்குகிறார்கள். சமுதாய சிறக்க பாடுபடுகிறார்கள்.

வரும் டிசம்பர் 11, 2010 அன்று வரலாறு படைக்கவுள்ள முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஒர் உயர்வான எண்ண பிரதிபலிப்புடன் இம்மாநாட்டின் இலட்சியமாக சமய "நல்லிணக்கம் தழைக்கட்டும், சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்" என்று இந்த தமிழ் பேசும் உலகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தன்னளவில் நடந்தி காட்டி ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட இளைஞர்கள் பாடுபட வேண்டும். பல்வேறு சமய, சமுதாயத்தின் மத்தில் வாழும் நாம் அவர்களுடன் எப்படி நல்லிணக்கமாக வாழ்வதுடன், நம் சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட ஒற்றுமையை மீண்டும் முன் நிலை நிறுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக முஸ்லிம் சமுதாயம் சிறந்து வாழ வேண்டும்.

ஊர் மஹல்லா ஜமாஅத் என்றால் முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் என்றால் மஹல்லா ஜமாஅத் என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத் விசேஷங்களில் நிகழ்ச்சியின் முன்பாக பிறைக்கொடியை ஏற்றி உயர பறக்கவிட்டு தான் அந்த நிகழ்ச்சியை தொடங்கும் வழிமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணப்பு மற்றும் சமுதாய ஒற்றுமை என்று மாநாடு நடக்கும் தினத்தில் காலை அமர்வாக தனியாக ஒரு கருத்தரங்கம் முஸ்லிம் லீக் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் மார்க்கம், அரசியல் பெயரில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து பல்வேறு இன்னல்களை இந்த சமுதாய ஜமாத் அத்தார்கள் பெற்று காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் தேவையற்ற வகையில் அலை வேண்டியதாகிவிட்டது. நம்மை படைத்து பரிபாலனம் செய்யும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தில் எதில் கவனமாக இருக்க சொல்லி இருந்தானோ அந்த ஒற்றுமையை விட்டு நம்மிடையே விரோத போக்கை சில கூட்டங்களின் தூண்டுகோலின் காரணமாக சீர்குலைந்து போய்விட்டது. ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று அடிதடி, கொலை என்று மனிதர்கள் வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மார்க்க விரோத செயல்கள் அனைத்தையும் கலைந்து சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டி இந்த மாநில மாநாடு கருந்தரங்கம் வலிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் நிர்வாகத்தின் மூலமாக ஊரின் வளர்ச்சி திட்டப்பணிகளை சொந்தமாகவே, அதுவும் எந்தவித அரசு உதவி இல்லாமல் சுயமாகவே ஊரில் பைத்துல் மால், வட்டியில்லா கடன் உதவி, கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி தொகை, ஏழைகுமர் மற்றும் முதியோர்களுக்கு உதவி என்பன போன்ற நலப்பணிகளில் சிறப்பாக செய்து தமிழக ஜமாஅத் நிர்வாகங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் ஜமாஅத்களை இனம் கண்டு இந்த மாநில மாநாடு விழாவில் முன்மாதிரி ஜமாஅத் என்ற விருதுகளை முஸ்லிம் லீக் வழங்கி அந்த ஜமாஅத்களை கவுரவிக்க உள்ளது. இதன் மூலம் மற்ற ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் ஊரில் மேற்கண்ட அறப்பணிகளை செய்ய வழிகாட்டியாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்புமிக்க விருதுகளை அவர்களும் பெற முடியும்.

மொத்தத்தில் இந்த டிசம்பர் 11 மாநில மாநாடு சமுகநல்லிணக்கதையும், வல்ல அல்லாஹ்வின் உதவியுடன். சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பாதைகளுக்கு பல வகையில் வழிகாட்டும்

மாநாடு ஆரம்ப ஏற்பாடுகளை தலைமையகம் சிறப்பாக தொடங்கி மாநாடு அழைப்பிதழ், சுவர் விளம்பரம் முதல் டிஜட்டல், ஸ்டிக்கர் விளம்பரம் வரை சிறப்பாக செய்து வருகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை அமீரக காயிதே மில்லத் பேரவை முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலகங்கும் இருக்கும் காயிதே மில்லத் பேரவை மேலும் சமுதாய புரவலர்கள் செய்து வருகிறார்கள்.

சர்வசேத காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் அமீரகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, டிசம்பர் 11 மாநில மாநாடு பற்றிய விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நம் அனைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார்கள். அத்துடன் அமீரகத்தில் வாழும் சமுதாய புரவலர்கள், ஆதரவார்களை நேரடியாக சந்திந்து அழைப்பு கொடுத்ததுடன் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவைகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அழைத்தார்கள். இதன் அடிப்படையில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் சவுதி, கத்தார், குவைத், அமெரிக்கா, ஹாங்ஹாங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் உள்ள காயிதே மில்லத் பேரவையினரை தொடர்பு கொண்டு மாநாட்டில் கூட்டாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு கொடுக்கப்பட்டது, அழைப்பை ஏற்று கொண்ட அவர்களும் திரளாக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள முன்ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அமீரகத்தில் பேரவை பொதுச் செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை முதுவை ஹிதாயத் மற்றும் பேரவையினர்கள் அமீரகத்தில் உள்ள சமுதாய மக்களை சந்தித்து மாநாடு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழ் கொடுத்ததுடன், ஆதரவுகளை பெற்று அமீரகத்திலிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே திரட்டி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள களப்பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற களப்பணிகளை மற்ற நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவையும் செய்ய வேண்டுகிறேன். அத்துடன் மாநாடு நிகழ்ச்சிகளை உலகத்தில் இருக்கும் அனைவர்களும் இருந்த இடத்திலிருந்து நேரடியாக காண முஸ்லிம் லீக் இணையதளத்தின் மூலம் காண அமீரக மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பாக மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்லாஹ்விடம் பிரார்த்னை செய்யுங்கள் சமுதாய நலம் வேண்டி.. மாநில மாநாடு சிறக்க�

வாருங்கள் அனைத்து சமுதாய மக்களும்..

ஒற்றுமைக்கு முன்மாதிரியான சமுதாயம் என்று உலகிற்கு அறிவிக்க..

சமுதாய இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் மாநில மாநாடு�

மீண்டும் உலகம் முழுவதும் எத்திவைப்போம்..

சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்�

சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்�