Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Saturday, March 6, 2010

மேலப்பாளையத்தில் மார்ச் 10ல் நடைபெறும் முஸ்லிம் லீக் 62 ஆவது நிறுவன தினத்தில் விருது பெறும் பெரு மக்கள்

மேலப்பாளையத்தில் மார்ச் 10ல் நடைபெறும் முஸ்லிம் லீக் 62 ஆவது நிறுவன தினத்தில் விருது பெறும் பெரு மக்கள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினமான 2010 மார்ச் 10-ம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ~சமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் கல்வி, பொது நலம், இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும் நால்வருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளன.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மேலப்பாளையம் ஜின்னா திடலில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இம் மாநாட்டிற்கான ஏற்பாடு கள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன.

சமூக நல்லிணக்க பேரணி

காலையில் நடை பெறும் மகளிர் விழிப் புணர்வு கருத்தரங்கையும், பிற்பகலில் நடைபெறும் பிரமாண்டமான சமூக நல்லிணக்கப் பேரணியையும், மாலையில் நடைபெறும் சமுதாய மறு மலர்ச்சி மாநாட்டையும் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து இம்மாநாட்டிற்கு பெருமளவில் சமுதாயப் பெருமக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் மஹல்லாக்கள்தோறும் சென்று மாநாட்டு அழைப்பிதழ்கள் கொடுப்பது என்றும், மேலப்பாளையத்தில் வீடுவீடாக சென்று அழைப்பது என்றும், தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கல்வி, இலக்கியம், சமூக சேவைகளில் மிகச் சிறந்த சேவையாற்றி வரும் பிரமுகர்கள் நால்வருக்கு ~சமுதாய ஒளிவிளக்கு| விருதுகள் வழங்கப்பட இக்கூட்டத்தில் முடிவானது.

விருது பெறும் பெரு மக்கள்

சிறந்த கல்வியாளர் - சீனாதானா செய்யது அப்துல் காதர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 22-8-1946-ல் பிறந்த சீனா தானா செய்யது அப்துல் காதர் ஹாங்காங், இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தொழில் செய்யும் முன்னணி பிரமு கர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு சொந்த முயற்சி யிலும், ஓமியத் மற்றும் சமூகப் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கான அறக்கட்டளை சார்பிலும், பைத்துல்மால் வழியிலும் உதவி செய்துவரக் கூடியவர்.

தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் பைத்துல் மால் அமைக்கப்படுவதற்கு துணை புரியக்கூடியவர். அனைத்து சமயத்தவர்களுக்கான அறிவுரைகள், மதங்கள் சொல்லும் நற் சிந்தனைகள் உள்ளிட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் நான்கு புத்தகங்களை எழுதியிருக்கக் கூடியவர். சீனாதான சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி ஏழை களுக்கு மருத்துவ மற்றும் உணவு உதவிகள் செய்து வரக்கூடியவர். ஏராளமானோர் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பெறுவதற்கு துணை நிற்கக் கூடியவர். இத்தகையப் பெருமைக் குரிய சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களுக்கு ~சிறந்த கல்வியாள ருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த இலக்கியவாதி - கவிஞர் வீரை ரஹ்மான்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த கவிஞர் அப்துல் ரஹ்மான் 1931 மார்ச் 28-ல் பிறந்தவர். நாற்பது ஆண்டுகளாக புகைப்படக் கலைஞராக உள்ள இவர் சிறந்த பொதுநல ஊழியர். மிகச் சிறந்த இலக்கியவாதி.

போட்டிகளையும் நடத்தியுள்ளார்.

முஸ்லிம் சமுதாய நலச் சங்கம், வீரை ஜும்ஆ பள்ளிவாசல், மூத்த குடிமக்கள் மன்றம், மக்கள் இயக்கம், தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம், பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையம், வீரை ஜுல்பா அறக் கட்டளை, சிராஜுல் ஹ{ப்தா மதரஸா உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் சமுதாய அமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர்.

மிகச் சிறந்த இலக்கிய வாதியான வீரை ரஹ்மான் அருமையான கவிஞர். இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா பாடிய புகழ் பெற்ற பாடல்கள் பல இவர் எழுதியவை. இத்தகையப் பெருமைக் குரிய கவிஞர் வீரை ரஹ்மானுக்கு ~சிறந்த இலக்கிய வாதிக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம் மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த சமூகசேவகர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை ஒட்டியுள்ள மியான்பள்ளி கிராமத்தில் 1961 மே 4-ம் தேதி பிறந்தவர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை, ஷிபா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராகவும், எம்.எச். அக்ரோபார்ம் பங்குதார ராகவும் உள்ளார்.

ஷிபா கல்வி அறக்கட்டளை, திருநெல்வேலி ரோட்டரி கிளப், சேம்பர் ஆஃப் காமர்ஸ், முஸ்லிம் அனாதை நிலையம், காதர் அவுலியா பள்ளிவாசல், மதரஸத்துல் ஹ{சைனியா அரபிக் கல்லூரி, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நிர்வாகக் குழு, தனியார் நர்சிங் ஹோம், மனிதஉரிமை அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் போன்ற பல்வேறு பொதுஅமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர். சமயப் பாகுபாடின்றி ஆதரவற்றோருக்கு உதவும் மனப்பான்மையுள்ள இவர் நேசப்பார்வை என்ற அமைப்பை ஏற்படுத்தி விபத்து நடக்கும் போது மருத்துவஉதவி செய்து வரக்கூடியவர். கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாரம்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தி வரக்கூடியவர். இவர் ஏற்பாடு செய்கின்ற இலவச கண் சிகிச்சை மூலம் மட்டுமே வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை பயன் அடைந்து வருகின்றனர்.

இளம்பிள்ளை வாத நோயை ஒழிப்பதற்கு இலவச சொட்டு மருந்து வழங்கி சேவை செய்து வரக் கூடியவர். 1986- முதல் ஆண்டு தோறும் 15 தம்பதிகளுக்கு இலவச திருமணங்கள் செய்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் போன்ற அளப்பரிய காரியங்களை செய்து வருகின்றவர்.

இலவச மருத்துவ ஆலோசனை, விபத்து முதலுதவி பயிற்சி முகாம் கள் நடத்துதல், இயற்கை சீற்றப் பாதுகாப்பு உதவிகளை தாராளமாக செய்து வரக்கூடியவர். இவரது தர்ம காரியங்களும், அறப்பணிகளும் இறைவனின் நன்மைக்காக என்ற அடிப்படையில் ரகசியமாக செய்யப்படுவது பாராட்டிற்குரியதாகும். இத்தகையப் பெருமைக் குரிய டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி அவர்களுக்கு ~சிறந்த சமூக சேவகருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த பெண் கல்வியாளர்- தஸ்ரீப் ஜஹான்

மதுரை ஸ்டேட் பாங்க் பணியாளர் காலனியைச் சேர்ந்த ஏ.கே. தஸ்ரீப் ஜஹான் எம்.ஏ. எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், புதுக்கோட்டை ராஜா அரசு கலைக் கல்லூரியி லும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு கலைக் கல்லூரியி லும் முதல்வராக பணி செய்தவர்.
கல்விக் கருத்தரங்குகள், சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கிய வர். பொருளாதாரப் பேராசிரியையான இவர் அது குறித்த தலைப்புகளில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விழிப் புணர்வை ஏற்படுத்தியவர். இஸ்லாம் வலியுறுத்துகின்ற மனிதநேயம், சகோத ரத்துவம், கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பெண் கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் பயனுள்ள பல ஆக்கங்களைத் தந்தவர். 2007.ல் அவர் பணி ஓய்வு பெற்ற பின் மதுரை அவனியாபுரத்தில் உள்ள அல்புர்கான் மெட்ரிகுலே ஷன் பள்ளியின் தாளாளராக பணியாற்றி வருகிறார். முஸ்லிம் பெண் கல்வியாளர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான வழிகாட்டுபவராக திகழ் கிறார். உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக் கான வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். ஏராளமான பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கு மிகச் சிறந்த உதவிகள் செய்து வருகிறார். இத்தகைய பெருமைக் குரிய தஸ்ரீப் ஜஹான் அவர்க ளுக்கு ~சிறந்த பெண் கல்வியாளருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப் படுகிறது

Wednesday, December 30, 2009

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்


காயல்பட்டினம். டிச.30

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம் என தேசிய தலைவர் இ.அஹ்மது ஸாஹிப் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹ் மத் ஸாஹிப், தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலை வருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் நேற்று (29.12.09) காயல் பட்டினம் வருகை தந்தனர்.

காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, வருகை தந்த அவர்களுக்கு பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் அமைப்பா ளர் வாவு ஷம்சுத்தீன் இல்லத்திலிருந்து கருத் தம்பி மரைக்காயர் தெரு, பிரதான வீதி, ஆறாம் பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக ஊர்வல மாக அழைத்துச்செல்லப் பட்டனர்.


பின்னர், ஜலாலிய்யாஹ் திருமண மஹாலில், நகர மக்களின் சார்பிலும், அனைத்து மஹல்லா ஜமா அத்துகளின் சார்பிலும் எழுச்சிமயமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டி னம் நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிர முகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், எம்.ஏ.செய்யித் முஹம் மத் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொகி தீன், மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப், ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசனைக்குழு உறுப் பினர் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இ.அஹ்மத் ஸாஹிப் பேசு கையில் குறிப்பிட்டதா வது:-

காயல்பட்டினத்திற்கு வந்த என்னை சிறப்பான முறையில் வரவேற்ற மைக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக் களிக்கப்பட்ட இந்த வரவேற்பு நான் அமைச்சர் என்பதற்காக அல்ல! காயி தெமில்லத் அவர்களின் ஊழியன் என்ற முறையி லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொண் டன் என்ற முறையிலும் தான் எனக்கு இந்த வர வேற்பு தரப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க கேரள இஸ்லாமிய கலாச்சாரத் தோடு, அரபிப்பாடல் இசைத்து, பெண்களும் - ஆண்களும் ஸலாம் கூறி எங்களை வரவேற்ற காட்சி எனக்கு அப்படியே கேரளாவை நினைவூட்டியது. மலபார் பகுதிக்கும் காயல் பட்டினத்திற்கும் நெருங் கிய தொடர்புண்டு என் பதை இது நிரூபித்து விட்டது.

காயல்பட்டினம் நகர மக்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கின்றார்கள். கெய்ரோவிலும் கூட நான் சென்றிருக்கையில், இந்த நகராட்சியின் தலைவரின் மகனார் என்னை வரவேற் றார். இப்படிப்பட்ட சர் வதேச தொடர்புள்ளவர் களை ஓரிடத்தில் சந்திக்கின்ற அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகபூப் ஆகி யோருக்கு எனது மன மார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இங்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான வரவேற் பின் மூலமாக, கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் தின் கொள்கைகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியங்களையும் இன்னமும் அதிகமாக செயல்படுத்துவதற்கான ஓர் உறுதியை ஏற்கவேண்டிய நிலையை எனக்கு ஏற் படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின், முஸ்லிம் லீகை இன்ன மும் ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதற்காகத்தான் முஸ்லிம் லீகை நான் தொடர்ந்து நடத்துகிறேன் என்று காயிதெமில்லத் அவர்கள் சொன்னார்கள். மக்கள் மன்றத்தில் மட்டு மல்லாது நாடாளுமன்றத் திலும், அரசியல் நிர்ணய சபையிலும் அவர்கள் அதை உறுதியுடன் கூறி னார்கள். அதைத்தான் நாங் களும் சொல்கிறோம். அது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன அந்தப் பாதை யில்தான் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.

கண்ணியத்துடன் வாழ் வது என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டு மின்றி, நாடு தழுவிய அள வில் முஸ்லிம்களுக்கு அதி கமான கல்வி நிலையங்கள், சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறை, அனாதை இல்லங்கள், சமூக சேவை அமைப்புகள் என ஏராளமாக உருவாவ தற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்.

இந்த சமுதாயத்தின் பெயரால் சில இயக்கங்கள் ஆங்காங்கே சமுதாய மக் களுக்கு தவறான வழி காட்டுதலைக் காட்டி பிரச்சினையை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் நாங் களோ அல்லாமா இக்பால் அவர்கள் சொன்னதைப் போன்று, சத்திய இஸ்லா மியப் பாதையில் எங்கள் சமுதாய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கி றோம்.

இந்த நாட்டைப் பொருத்த வரையில், முஸ்லிம்களை இரண்டாந் தர பிரஜைகளாக ஆக்க முயற்சித்தபோது, அவர்கள் கண்ணியத்தோடும், மானம் -மரியாதையுடனும் வாழ்ந்து, இந்த நாட்டி லேயே மடிவதற்கு எல்லா வகையான வழிமுறை களையும் நாங்கள் செய்து தந்தோம். வன்முறை வழிகாட்டுதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. சாந்தி - சமாதானம் - நல்லொழுக் கம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை களைப் பின்பற்றித்தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.

காயிதெமில்லத் காட் டித்தந்த வழியில் உறுதியு டன் நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், 15ஆவது நாடாளுமன்றத்தி லும் நாங்கள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய வாய்ப் பும், மத்திய அமைச்சரவை யில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது இந்த சமுதாயமும், நம் நாடும் நமது தாய்ச்சபைக் குக் கொடுத்த அங்கீகாரம்.

இந்திய அரசில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கின்ற கார ணத்தினால்தான், முஸ்லிம் களின் கல்வி உதவிக்காக வேண்டி 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கி றது. சென்ற வாரம் கூட, பாரதப் பிரதமரை நான் உள்ளிட்ட 12 முஸ்லிம் எம்.பி.க்கள் சந்தித்து, பல கோரிக்கைகளை வலியு றுத்தி, அரை மணி நேரம் கலந்து பேசினோம். நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா தலை மையிலான கமிஷன் பரிந் துரைகள் அமுல்படுத்தப் பட வேண்டும். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் என்ற பரிந்துரை உடனடியாக அமுல்படுத் தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

இப்படிப்பட்ட இயக் கம் இந்த நாட்டில் வளர வேண்டுமா, வேண்டாமா? இதில் நீங்களெல்லாம் அங் கம் பெற வேண்டுமா, வேண்டாமா? ஆகவேதான் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற் காக நானும், எனதருமை நண்பரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அயராது பாடுபடுகிறோம். வரும் ஜனவரி 15ஆம் தேதி, பெங்களுருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவிருக் கிறது. அந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு இ.அஹ்மது பேசினார்

Saturday, May 2, 2009

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்
சிவகாசியில் பேராசிரியர் காதர்மொய்தீன் பேச்சு


சிவகாசி, மே.3-

பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என சிவகாசியில் நடந்த தேர் தல் பிரசார கூட்டத்தின் போது காதர் மொய் தீன் பேசினார்.

பிரசார கூட்டம்

ஐக்கிய ஜனநாயக முற் போக்கு கூட்டணி சார்பில் சிவகாசி பாவடித்தோப்பு திடலில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் காதர்மொய்தீன் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்த லில் 40 இடங்களில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் இந்த முறையும் 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்து நாட்டிற்கு வர இருக் கும் பேராபத்தை விரட்டி அடிப்போம். பெரிய குழப் பத்தை உருவாக்கி மதங்க ளுக்கு இடையே மோதலை உருவாக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பள்ளிவாசலை இடித்து அங்கு தான் ராமர் பிறந்தார். அங்கு தான் கோவிலை கட்டுவோம் என்றால் என்ன நியாயம்? 428 ஆண்டுகள் அங்கு தொழுகை நடந்தது என்பது உண்மை யானால் அங்கு மீண்டும் பள்ளிவாசல் வந்து தான் தீரும். அங்கு தொழுகை நடந்துதான் தீரும். குஜராத்தில் கலவரம் தூண்டப்பட்டு தற்போது அங்கு லட்சக்கணக்கான முஸ் லிம்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அங்கு இருந்த 699 முஸ்லிம் கிராமங்கள் தற் போது இல்லை. அப்படிப் பட்ட கலவரத்தை நடத்திய மோடிக்கு 64 வகை உணவு டன் விருந்துவைத்தவர் தான் ஜெயலலிதா.

யாருக்கு ஓட்டு

உங்கள் கூட்டணியில் யார் பிரதமர்? நீங்கள் யாருக்கு ஓட்டு கேட்கிறீர்கள். இந்தியா வின் பிரதமர் வைகோ என்று யாராவது எழுதி கொடுத்து விட்டார்களா? இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக திரிகிறார்கள். நாங்கள் தமிழ் இனத்தை அழித்து வரும் ராஜபக்சே அரசை ஆதரிக்க வில்லை. இலங்கையில் அப் பாவி தமிழர்கள் கொல்லப்ப டுவதை தடுக்கத் தான் நாங் கள் அங்கே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகி றோம். இலங்கை பிரச்சினை பற்றி முழுவதும் தெரிந்தவர் கருணாநிதி மட்டும் தான். வைகோவுக்கு எதுவும் தெரி யாது. முஸ்லிம் சமுதாயத் துக்கு நீங்கள் செய்த நன்மை கள் என்ன? தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் இல்லை.

330 திட்டங்கள்

யார் பிரதமர் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கி றார்கள். மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதா ரத்தை நிலை நிறுத்தியவர். அதனால் தான் அவரை சோனியா பிரதமராக அறி வித்தார். அமெரிக்க பொரு ளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது.இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டின் பொரு ளாதாரத்தில் எந்தவித பிரச் சினையும் இல்லாமல் இருக் கிறது. அதற்கு மன்மோகன் சிங்தான் காரணம். நாம் பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டோம். அதற்கு இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக் தாகூரை வெற்றி பெற செய்யவேண்டும். சென்ற முறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் 13 பேர் அமைச்சர்களாக இருந்த னர் இந்த முறை 15-க்கும் மேற் பட்டவர் அமைச்சராக உட் கார போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 330 திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இந்த தொகுதியில் கை சின் னத்தை தவிர வேறு யாருக்கு வாக்க ளித்தாலும் அது செல்லாத வாக்காக மாறும். தமிழகத் தில் கருணாநிதி செயல் படுத்தி வரும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Friday, December 12, 2008

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்


http://www.muslimleaguetn.com/news.asp?id=452


ஐந்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பல்வேறு உணர்வுகளை - அதிர்ச்சி, ஆனந்தம், எமாற்றம், வெற்றி, தோல்வி - என அனைத்து உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவது, பாராளுமன்றத்தையே கைப்பற்றுவது போல் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும். ஆனால் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மக்களின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது. டெல்லி மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதுதான் சங்பரி வாரங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாகும்.

கடந்த தேர்தலில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 56 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் இம்முறை 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் 2003 - தேர்தலில் 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஏறக்குறைய இருமடங்காக 71 இடங்களை கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறை 37 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஒன்று கூடுதலாகி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலேறுகிறது.

டெல்லி மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் சென்ற முறை பா.ஜ.க.வின் ஆளுகையில் இருந்தவை. இவற்றில் மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அம்மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வாக்குகளின் சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு மாற்றம். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் இருந்த பா.ஜ.க. 42 சட்டமன்ற தொகுதிகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. முன்னிறுத்தியது நாடெங்கும் நடக்கும் தீவிரவாத - பயங்கரவாத தாக்குதல்களைத்தான். பயங்கரவாத செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்யவில்லை என்றும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கடுமையான சட்ட ஷரத்துகளோடு கொண்டு வந்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியுமென்றும் பசப்பியது. காங்கிரஸ் கட்சி கையாலாகாத கட்சி என்றும், தேச பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையே இல்லையென்றும், பா.ஜ.க. மட்டுமே தேச நலனைப் பற்றி சிந்திக்கும் - பாடுபடும் தேசபக்தி மிக்க கட்சி என்றும் தம்பட்டமடித்தது.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் இந்த பசப்பு வார்த்தை காரர்களுக்கு புரியவைத்துவிட்டது. படுதோல்வி கண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேயின் வார்த்தைகளில் கூறுவதென்றால், ~~மக்கள் எப்போதுமே அறிவாளிகள். அவர்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைத்தான் அறிவாளிகள் என்கிறார். அப்படியெனில் பா.ஜ.க-விற்கு வாக்களித்த வர்களை முட்டாள்கள் என சொல்லாமல் சொல்கிறாரா?

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தீவிரவாத - பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி மக்களைக் கவரவில்லை. காரணம், மலேகான் குண்டுவெடிப்பு சதிகளில் பா.ஜ.க.வின் நடவடிக்கை - அதன் தேசபக்த முகமூடியைக் கிழித்து, அதன் பயங்கரமான பாசிச முகத்தை - ரத்த வெறி கொண்ட சங்பரிவார முகத்தை - அழுகிப்போன இந்துத்துவா முகத்தை - மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மக்களும், தங்களின் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து இந்தியராக ஒன்றுபட்டு எழுந்து நின்று தீவிரவாதத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த நேரத்தில், மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முயன்றது பா.ஜ.க. அதன் மலிவான தேர்தல் உத்தியை மக்கள் இனம் கண்டு நிராகரித்துவிட்டனர் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

மலேகான் சதிகாரர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வக்காலத்து வாங்கி பேசியதுடன், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை மிகவும் இழிவாகப் பேசியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் உளுத்துப் போன ~இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஊளையை, மலேகான் சதித்தனம் அடையாளம் காட்டி விட்து. பா.ஜ.க.வின் ஊசிப் போன தேசபக்தியை மக்கள் நம்பவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இனி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., புதிய முகங்களையும், புதிது புதிதாக முகமூடிகளையும் மாட்டிக்கொண்டு வரும்போது மக்கள் அதன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அறைய தயாராகிவிடுவார்கள்.

- வெ. ஜீவகிரிதரன்
மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் அணி,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்