~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து
பிறைமேடை- மாத இருமுறை ஏடு வெளிவருகிறது! இது நமக்கு மிகுந்த இன்பம் தருகிறது!
தமிழகத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஆரம்பக் காலக் கட்டத்தில் முஸ்லிம் லீகின் சார்பு பத்திரிகைகள் பல வெளிவந்துள்ளன. வார ஏடு, மாதமிருமுறை ஏடு, மாத ஏடு என்று முஸ்லிம் லீக் முன்னோடிகள் பலரும் இதழ்களை நடத்தி முஸ்லிம் லீக் இயக்கத்தை வலிமையுறச் செய்துள்ளனர். இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் வாரஇதழ்களும், மாத இதழ்களும் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதமானவை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை விரோதியாகச் சித்தரிக்கும் போக்கும் நோக்கும் உடையவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
முஸ்லிம் லீகின் அடிப்படைக் கொள்கைகளான-இந்திய தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலை நிறுத் துவது இந்திய சமுதாயங்கள்-சமயங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவது, சிறுபான்மையினர், குறிப் பாக முஸ்லிம்கள் தங்களின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கு முஸ்லிம் லீகின் கொடியின் அடியில் கூடி வருவது போன்றவற்றை கேலியும் கிண்டலும் செய்யும் ஏடுகளும் உள்ளன. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னோடிகளைப் பற்றிக் கற்பனை மூட்டைகளையும், கட்டுக்கதைகளையும், பொய்களையும் புனைந்துரைகளையும் தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் தங்களின் சிறப்பம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவரும் ஏடுகளும் இன்றைக்கு சமுதாயத்துக்குள் வலம் வரவே செய்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் லீகின் ஏடுகள் பலவும் வெளிவரவேண்டும் என்று இயக்கத்தில் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடந்து வந்திருக்கிறது. திருச்சி பொதுக்குழுவில் பத்திரிகை பலம் பற்றி பல செய்திகளும் முஸ்லிம் லீகர்கள் மத்தியில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
~மணிச்சுடர்| நாளேடு முஸ்லிம் லீகின் மூல பலம் மட்டுமல்ல@ மூளை பலமுமாக இருந்து வருகிறது என்பதை சிராஜுல் மில்லத் காலம் தொட்டு உணர்ந்து வருகிறோம். மணிச்சுடர் பணிக்கு இன்னும் வலிவும் பொலிவும் சேர்க்கும் வகையில் இந்தப் புதிய ஏடு-பிறைமேடை-
புறப்பட்டிருக்கிறது.
நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். அப்துர் ரஹ்மான் எம்.ஏ., இந்த ஏட்டின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்பேற்று பிறைமேடை சமுதாயத்துக்குள் பிரவேசிக்கிறது. முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் லீக் பாரம்பரியத்தில் வளர்ந்து, இன்றைக்கு முஸ்லிம் சமுதாயச் சேவையளராகப் பரிமாணம் பெற்றுள்ள பிறைமேடை ஆசிரியர்-தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் ரீதியான ஒற்றுமையை உருவாக்க வேண்டும்@ மார்க்கத்தில் தெளிவும் ஆழமான ஞானமும் வேண்டும்@ இன்றைய சமுதாயத்தவர் மத்தியில் புதிய எழுச்சியும் ஆக்க சக்தியோடு ஆகர்ஷண சக்தியும் வளர வேண்டும், என்று உழைப்பவர்சகோதரர் அப்துர் ரஹ்மான். இவரின் எழுத்து வண்ணத்தில் பிறைமேடை புதிய ஒளிவட்டங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கைநிறையவே உண்டு.
பிறைமேடையின் பொறுப் பாசிரியராக சகோதரர் ஜே. மீராமைதீன் பணியேற்றிருக்கிறார். மணிச்சுடரில் சமுதாயச் செய்திகளும் முஸ்லிம் லீக்செய்திகளும் இவரின் பொறுப்பில் வெளிவந்த வரலாறு உள்ளது. பொறுப்பானவர்@ மிகுந்த பொறுமையுள்ளவர். இவரின் பணியில் பிறை மேடை புதிய தோர் எழுச்சிக்கு வித்திடும் என்று நம்புகிறேன். பிறைமேடை, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளியிடவிருக்கும் தினசரி, வார, மாதமிருமுறை, மாத இதழ்கள் வரிசையில் இணைய இருக்கிறது என்பதை யும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பிறைமேடை, பிறைப்படையாக வலம் வரவும் சமுதாயத்துக்கு நலம் தரவும் வாழ்த்துகிறேன்.
- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு