இ.யூ.முஸ்லிம் லீக்தேசிய செயற்குழு டெல்லியில் நாளை கூடுகிறது! புதிய தேசியத் தலைவர் தேர்வு!!
http://www.muslimleaguetn.com/news.asp
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு புதுடெல்லியிலுள்ள ரபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பனாத்வாலாவுக்கு இரங்கல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் இ.அகமது வரவேற்றுப் பேசுகிறார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் செய்யதலி ஷிஹாப் தங்ஙள் துவக்க உரை நிகழ்த்துகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப்காலமானதற்குப் பின் முதன் முறையாகக் கூடும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பனாத்வாலாசாகிப் மறைவிற்கும்கேரள மாநில முஸ்லிம் லீக் பொருளாளர் செய்யது உமர் பாபக்கி தங்ஙள் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மறுவுலக நல்வாழ்விற்கு துஆ செய்யப்படுகிறது.
தலைவர் தேர்வு:
பனாத்வாலா சாகிப் மறைவிற்குப் பின் காலியாக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு விரிவுபடுத்திட அமைப்பு பணிகள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
ஆலோசனை:
தேசிய அளவில் தலையாய பிரச்சணைகளாக உள்ள விஷயங்கள் குறித்து தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து பரிசிலிப்பதற்கான ஆலோ சனைக் கூட்டம் பொதுச் செயலாளர் இ.அஹமது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளர் நயீம் அக்தார், தேசிய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் குத்தாலம் எம்.லியாகத்அலி, பீகார் மாநில பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், டெல்லி பிரதேச இளைஞர் அணி தலைவர் குர்ரம் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைவர்கள் வருகை:
தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கேரள மாநில தலைவர் செய்யதலி ஷிஹாப், தங்ஙள் பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி, செயலாளர்கள் இ.டி. பஷீர், டாக்டர் முனீர்கோயா, அகமது கபீர், கேரள முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அரவககுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபூபக்கர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத்பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் எம்.லியாகத் அலி, ராஜஸ்தான் மாநில தலைவர் அகமதுபக்ஷ், அஸ்ஸாம் மாநில தலைவர் முகம்மது திலீர்கான், மேற்கு வங்க தலைவர் ஷாஹின்ஷா ஜஹாங்கீர், கர்நாடக செயலாளர் இப்ராகீம் ஷம்ஷீர், அகில இந்திய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, தேசிய செயலாளர் நயீம் அக்தர், பீகார் பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், ஜார்கண்ட் மாநில தலைவர் அம்ஜத்அலி, பொதுச் செயலாளர் ஹபீஸ் அகமது, புதுச்சேரி மாநில தலைவர் சி.வி.சுலைமான் உள்ளிட்டோர் டெல்லி வந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் நாளை காலை டெல்லி வருகின்றனர்.
இஃப்தார்:
டெல்லி வருகைதரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அஹமது நாளை இஃப்தார் விருந்தளிக்கிறார்.
தேசியசெயற்குழு கூட்ட ஏற்பாடுகளை டெல்லி பிரதேச தலைவர் மர்கூப் ஹ_சைன் இளைஞர் அணிதலைவர் குர்ரம் உமர், சந்திரிகா செய்தியாளர் முகம்மது குட்டி, பேராசிரியரின் டெல்லி உதவியாளர் நூர்ஷம்ஸ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.