காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்
காயல்பட்டினம். டிச.30
இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம் என தேசிய தலைவர் இ.அஹ்மது ஸாஹிப் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹ் மத் ஸாஹிப், தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலை வருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் நேற்று (29.12.09) காயல் பட்டினம் வருகை தந்தனர்.
காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, வருகை தந்த அவர்களுக்கு பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் அமைப்பா ளர் வாவு ஷம்சுத்தீன் இல்லத்திலிருந்து கருத் தம்பி மரைக்காயர் தெரு, பிரதான வீதி, ஆறாம் பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக ஊர்வல மாக அழைத்துச்செல்லப் பட்டனர்.
பின்னர், ஜலாலிய்யாஹ் திருமண மஹாலில், நகர மக்களின் சார்பிலும், அனைத்து மஹல்லா ஜமா அத்துகளின் சார்பிலும் எழுச்சிமயமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டி னம் நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிர முகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், எம்.ஏ.செய்யித் முஹம் மத் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொகி தீன், மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப், ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசனைக்குழு உறுப் பினர் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், இ.அஹ்மத் ஸாஹிப் பேசு கையில் குறிப்பிட்டதா வது:-
காயல்பட்டினத்திற்கு வந்த என்னை சிறப்பான முறையில் வரவேற்ற மைக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக் களிக்கப்பட்ட இந்த வரவேற்பு நான் அமைச்சர் என்பதற்காக அல்ல! காயி தெமில்லத் அவர்களின் ஊழியன் என்ற முறையி லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொண் டன் என்ற முறையிலும் தான் எனக்கு இந்த வர வேற்பு தரப்பட்டிருக்கிறது.
பாரம்பரியமிக்க கேரள இஸ்லாமிய கலாச்சாரத் தோடு, அரபிப்பாடல் இசைத்து, பெண்களும் - ஆண்களும் ஸலாம் கூறி எங்களை வரவேற்ற காட்சி எனக்கு அப்படியே கேரளாவை நினைவூட்டியது. மலபார் பகுதிக்கும் காயல் பட்டினத்திற்கும் நெருங் கிய தொடர்புண்டு என் பதை இது நிரூபித்து விட்டது.
காயல்பட்டினம் நகர மக்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கின்றார்கள். கெய்ரோவிலும் கூட நான் சென்றிருக்கையில், இந்த நகராட்சியின் தலைவரின் மகனார் என்னை வரவேற் றார். இப்படிப்பட்ட சர் வதேச தொடர்புள்ளவர் களை ஓரிடத்தில் சந்திக்கின்ற அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகபூப் ஆகி யோருக்கு எனது மன மார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
இங்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான வரவேற் பின் மூலமாக, கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் தின் கொள்கைகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியங்களையும் இன்னமும் அதிகமாக செயல்படுத்துவதற்கான ஓர் உறுதியை ஏற்கவேண்டிய நிலையை எனக்கு ஏற் படுத்தியுள்ளது.
இந்திய விடுதலைக்குப் பின், முஸ்லிம் லீகை இன்ன மும் ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதற்காகத்தான் முஸ்லிம் லீகை நான் தொடர்ந்து நடத்துகிறேன் என்று காயிதெமில்லத் அவர்கள் சொன்னார்கள். மக்கள் மன்றத்தில் மட்டு மல்லாது நாடாளுமன்றத் திலும், அரசியல் நிர்ணய சபையிலும் அவர்கள் அதை உறுதியுடன் கூறி னார்கள். அதைத்தான் நாங் களும் சொல்கிறோம். அது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன அந்தப் பாதை யில்தான் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.
கண்ணியத்துடன் வாழ் வது என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டு மின்றி, நாடு தழுவிய அள வில் முஸ்லிம்களுக்கு அதி கமான கல்வி நிலையங்கள், சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறை, அனாதை இல்லங்கள், சமூக சேவை அமைப்புகள் என ஏராளமாக உருவாவ தற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்.
இந்த சமுதாயத்தின் பெயரால் சில இயக்கங்கள் ஆங்காங்கே சமுதாய மக் களுக்கு தவறான வழி காட்டுதலைக் காட்டி பிரச்சினையை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் நாங் களோ அல்லாமா இக்பால் அவர்கள் சொன்னதைப் போன்று, சத்திய இஸ்லா மியப் பாதையில் எங்கள் சமுதாய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கி றோம்.
இந்த நாட்டைப் பொருத்த வரையில், முஸ்லிம்களை இரண்டாந் தர பிரஜைகளாக ஆக்க முயற்சித்தபோது, அவர்கள் கண்ணியத்தோடும், மானம் -மரியாதையுடனும் வாழ்ந்து, இந்த நாட்டி லேயே மடிவதற்கு எல்லா வகையான வழிமுறை களையும் நாங்கள் செய்து தந்தோம். வன்முறை வழிகாட்டுதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. சாந்தி - சமாதானம் - நல்லொழுக் கம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை களைப் பின்பற்றித்தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.
காயிதெமில்லத் காட் டித்தந்த வழியில் உறுதியு டன் நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், 15ஆவது நாடாளுமன்றத்தி லும் நாங்கள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய வாய்ப் பும், மத்திய அமைச்சரவை யில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது இந்த சமுதாயமும், நம் நாடும் நமது தாய்ச்சபைக் குக் கொடுத்த அங்கீகாரம்.
இந்திய அரசில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கின்ற கார ணத்தினால்தான், முஸ்லிம் களின் கல்வி உதவிக்காக வேண்டி 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கி றது. சென்ற வாரம் கூட, பாரதப் பிரதமரை நான் உள்ளிட்ட 12 முஸ்லிம் எம்.பி.க்கள் சந்தித்து, பல கோரிக்கைகளை வலியு றுத்தி, அரை மணி நேரம் கலந்து பேசினோம். நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா தலை மையிலான கமிஷன் பரிந் துரைகள் அமுல்படுத்தப் பட வேண்டும். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் என்ற பரிந்துரை உடனடியாக அமுல்படுத் தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.
இப்படிப்பட்ட இயக் கம் இந்த நாட்டில் வளர வேண்டுமா, வேண்டாமா? இதில் நீங்களெல்லாம் அங் கம் பெற வேண்டுமா, வேண்டாமா? ஆகவேதான் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற் காக நானும், எனதருமை நண்பரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அயராது பாடுபடுகிறோம். வரும் ஜனவரி 15ஆம் தேதி, பெங்களுருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவிருக் கிறது. அந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு இ.அஹ்மது பேசினார்