Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Sunday, April 18, 2010

ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் துபாய் வ‌ருகை

ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் துபாய் வ‌ருகை

ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவ‌ர்க‌ள் 09.04.2010 வெள்ளிக்கிழ‌மை அதிகாலை துபாய் வ‌ருகை புரிந்துள்ளார்க‌ள். க‌ட‌ந்த‌ ஆறு மாதத்திற்கு முன்ன‌ர் துபாய் வ‌ருகை புரிந்த‌ போது அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையினால் கௌர‌விக்க‌ப்ப‌ட்டார். மௌலானாவின் புத‌ல்வர்க‌ள் துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ருகின்ற‌ன‌ர். சுமார் இர‌ண்டு மாத‌ம் அவ‌ர்க‌ள் துபாயில் இருப்பார்க‌ள்.
அத‌ன் புகைப்ப‌ட‌ம் இத்துட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ சிறு குறிப்பு இதோ :

ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம்
இராம‌நாத‌புர‌ம் ஜில்லா பார்த்திப‌னூர் ப‌ர‌ளையில் 1944ம் ஆண்டு பிற‌ந்தார். ஆர‌ம்ப‌க் க‌ல்வி ப‌யின்று 1957 ஆம் ஆண்டு ஈஸ‌ந‌த்த‌ம் ம‌த‌ர‌ஸாவில் ம‌வ்ல‌வி ஆலிம் ப‌ட்ட‌ம் பெற‌ க‌ல்வி க‌ற்க‌ ஆர‌ம்பித்தார். வேலூர் அஃலா ஹ‌ஜ்ர‌த்திட‌ம் நேர‌டியாக‌ கல்வி ப‌யின்ற‌ மீரா ஹுசேன் ஹ‌ஜ்ர‌த்திட‌ம் நான்கு ஜும்ராக்க‌ள் க‌ல்வி ப‌யின்றார்.
1961 ஆம் ஆண்டு லால்பேட்டை அர‌பிக் க‌ல்லூரியில் 3 ஆண்டுக‌ள் க‌ல்வி ப‌யின்று 1964 ஆம் ஆண்டு ம‌வ்ல‌வி ஆலிம் ப‌ட்ட‌ம் பெற்றார். அமானி ஹ‌ஜ்ர‌த்திட‌ன் ந‌ன்கு பேச‌க் கூடிய‌வ‌ர், அர‌சிய‌ல் செய்திக‌ளை சேக‌ரித்து சொல்ல‌க் கூடிய‌வ‌ர், செய்தி தொட‌ர்பாள‌ர். அமானி ஹ‌ஜ்ர‌த் க‌ர‌ங்க‌ளாலேயே ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்.
1958 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் லீக் ப‌ற்றி அர‌பிக் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளிட‌ம் பேச‌க் கூடிய‌வ‌ர். 1964 ஆம் ஆண்டிலிருந்து ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர்க‌ளிட‌ம் ந‌ன்கு ப‌ழ‌கிய‌வ‌ர். 1990 ஆம் ஆண்டு ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக்கின் துணைத்த‌லைவ‌ராக‌ க‌மாலுத்தீன் ஹாஜியரால் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்.
ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ஹாஜி எஸ். க‌மாலுத்தீன் அவ‌ர்க‌ள் வ‌ஃபாத்தான‌தைய‌டுத்து 05.01.2007 ந் தேதி ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ராக‌ பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொஹிதீன் எம்.பி. அவ‌ர்க‌ளால் அறிவிக்க‌ப்ப‌ட்டார். 29.01.2007 ஆம் தேதி ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் பொதுக்குழு பேராசிரிய‌ர் அறிவிப்பை அங்கீக‌ரித்து தலைவ‌ராக‌ தேர்ந்தெடுத்த‌து.
1980 ஆம் வ‌ருட‌ம் ம‌றைநேச‌ன் என்ற‌ மாத‌ந்திர‌ ப‌த்திரிக்கையை ஆர‌ம்பித்து இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் ந‌ட‌த்தி வ‌ந்தார். மாமேதை ம‌வ்லானா அபுல்ஹ‌ஸ‌ன் அலி ந‌த்வியின் க‌ருத்துக்க‌ளை ப‌த்திரிக்கையில் எழுதி வ‌ந்தார். ஜும் ஆ ப‌யான்க‌ளிலும் மாமேதைய்ன் க‌ருத்துக்க‌ளையே அழ‌காக‌ பிர‌திப‌லித்து உரை நிக‌ழ்த்துவார்.
முஸ்லிம் லீக் ப‌ற்றியே பிர‌ச்சார‌ம் செய்து வ‌ருகிறார். நீண்ட‌ கால‌மாக‌ முஸ்லிம் லீக் இய‌க்க‌த்திலேயே இருந்து வ‌ருகிறார்.

Thursday, April 1, 2010

துபாய் விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

துபாய் விமான நிலையத்தில் தலைவர் பேராசிரியருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

துபாய் : துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாயகம் திரும்பும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப்பிற்கு 28.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் அழைப்பினை ஏற்று 23.03.2010 செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பேராசிரியர் 28.03.2010 அன்று தாயகம் திரும்பினார்.
விமான நிலையத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை செயலாளர் தஞ்சை பாட்சா கனி, செயலாளர்கள் ஹமீது யாசின், ரியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் சிறப்பான ஏற்பாட்டிற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் பேராசிரியர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Friday, June 26, 2009

Friday, June 5, 2009

துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு

துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு

துபாய் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் முனைய‌ம் 3ல் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ பொறுப்பேற்ற‌ பின்ன‌ர் முத‌ன் முறையாக‌ துபாய் வ‌ருகைபுரிந்த‌ எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் வெள்ளிக்கிழ‌மை ந‌ள்ளிர‌வு மிக‌ச் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியில் அமீர‌க‌ காயிதே மில்லத் பேர‌வை துணைத்த‌லைவ‌ர் நூஹு சாஹிப், பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ.லியாக்க‌த் அலி, இணைச்செய‌லாள‌ர்க‌ள் ஹ‌மீதுர் ர‌ஹ்மான், ஹ‌மீது யாசின், பொருளாள‌ர் எம். அப்துல் க‌த்தீம், ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ஆம்பூர் ரியாஸ் அஹ்ம‌த், ஈமான் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், முத்துப்பேட்டை அமீர‌க‌ப் பேர‌வை, திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ர், தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் குழுவின‌ர்,ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம், யுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க‌ம், புர‌வ‌ல‌ர்க‌ள், உல‌மாப் பெரும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

த‌ன்னுடைய‌ வெற்றிக்காக‌ பிரார்த்தித்த‌ அனைத்து ந‌ல்லுங்க‌ளுக்கும் த‌ன‌து ந‌ன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான்.

Thursday, June 4, 2009

வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் துபாய் வ‌ருகை

வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் துபாய் வ‌ருகை

http://quaidemillathforumuae.blogspot.com/

வேலூர் பாராளும‌ன்ற‌ தொகுதியின் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் உறுப்பின‌ர் எம்.அப்துல் ர‌ஹ்மான் ப‌த‌வியேற்ற‌ பின்ன‌ர் முத‌ன் முறையாக‌ வெள்ளிக்கிழ‌மை இர‌வு 11.45 ம‌ணிக்கு துபாய் வ‌ருகிறார் என‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்தார்.

எம்.அப்துல் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ள் எமிரேட்ஸ் விமான‌த்தில் டெல்லியில் இருந்து இர‌வு 11.45 ம‌ணிக்கு துபாய் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் டெர்மின‌ல் 3ல் வ‌ந்து இற‌ங்குகிறார். அவ‌ரை வ‌ர‌வேற்க‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை சிற‌ப்பான‌ ஏற்பாடுக‌ளைச் செய்துள்ள‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் அமீர‌க‌ பெரும‌க்க‌ள் அனைவ‌ரும் திர‌ளாக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மேல‌திக‌ விப‌ரங்க‌ளுக்கு 050 5196433/050 2533712

Tuesday, June 2, 2009

துபாயில் காயிதெமில்ல‌த் பிறந்த‌ தின நினைவு க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் காயிதெமில்ல‌த் பிறந்த‌ தின நினைவு க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

அஸ்ஸ‌லாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் )

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் சார்பில் க‌ண்ணிய‌த்திற்குரிய‌ காயிதெமில்ல‌த் அவ‌ர்க‌ளின் 114 வ‌து பிற‌ந்த நாள் நினைவாக‌ க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் இன்ஷா அல்லாஹ் ஜுன் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழ‌மை மாலை 7.15 ம‌ணி முத‌ல் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்தார்.

இந்நிக‌ழ்வில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் ம‌துரை மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ம‌வ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம், 'இசைய‌ருவி' கும‌ரி அபுப‌க்க‌ர், இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌மிழ் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி ம‌ற்றும் க‌ல்வியாள‌ர்க‌ள் உரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.

இந்நிகழ்வில் ச‌முதாய‌ப் பெருமக்க‌ள் அனைவ‌ரும் திர‌ளாக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

தொட‌ர்புக்கு கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 2533712 / முதுவை ஹிதாய‌த் 050 5196 433

மின்ன‌ஞ்ச‌ல் : muduvaihidayath@gmail.com

இணைய‌த்த‌ள‌ம் :http://www.muslimleaguetn.com / www.quaidemillathforumuae.blogspot.com

Friday, March 13, 2009

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தேரா தமிழ் உணவக காயிதெமில்லத் அரங்கில் 13.03.2009 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கீழக்கரை மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி இறைவசனங்களை ஓதினார். அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற மண்டல மற்றும் உலமாக்கள், உமராக்கள் மாநாடு, வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்கின் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவரித்தார்.

கூட்டத்தில் பொருளாளர் ராஜகிரி அப்துல் கத்தீம், கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா, காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், ராமநாதபுரம் தயூப் அலி, ராமநாதபுரம் பரக்கத் அலி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை தளபதி ஷபீகுர் ரஹ்மான் புதல்வர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

துஆவிற்குப் பின்னர் நிகழ்ச்சி நிறைவுற்றது.