Thursday, April 1, 2010

அபுதாபி பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு

அபுதாபி பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு


அபுதாபி, மார்ச் 29-

அபுதாபியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்துறையில் சிறந்து விளங்கும் நாகூர் பனியாஸ் மரைக்காயர் இல்லத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு 26.03.2010 வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழு கைக்குப் பின்னர் வர வேற்பும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த நம்மவர் பனியாஸ் மரைக்காயர் அவர்கள் வணிகத்துறையில் சிறந்து விளங்குவதற்கு பாராட்டினை தெரிவித்தார். மேலும் ஒரு முஸ்லிம் லீகராக அமைதியான முறையில் சமுதாய சேவையாற்றி வரும் மரைக் காயரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்வில் பனியாஸ் மரைக்காயர் மகன்கள், அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொரு ளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறைச் செயலாளர் முதுவை ஹிதாயத், செய லாளர்கள் லால்பேட்டை அப்துல் ரஹ்மான், ஹமீது யாசின், ரியாஸ் அஹமத், ராஜாஜி காஸிம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.