Thursday, April 22, 2010

நரேந்திர மோடியின் இரத்த வெறி அம்பலம்

நரேந்திர மோடியின் இரத்த வெறி அம்பலம்

(பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர் களுக்கு அறிமுகம் தேவையில்லை )

ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மை யினருக்கு ஆதரவாகவும் இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராகவும் கருத்தியல் ரீதியான யுத்தத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இந்தியாவில் முஸ்லிம் சமுதாயத் திற்கு எதிராக அரங்கேற்றப்படும் அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலராக திகழ்வது டன் எந்த ஒரு பிரச்சினையையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அது தொடர்பான விமர்சனங்களை எளிய முறை யில் வெளியிடுவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2002ரூல் குஜராத்தில் அரங் கேற்றப்பட்ட முஸ்லிம் இனப் படுகொலையின் முக்கிய குற்றவாளி யாக கருதப்படும் முதலமைச்சர் நரேந்திர மோடி சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆஜராகி பதில் சொல்ல நேர்ந்தது குறித்தும் குஜராத் முஸ்லிம் படுகொலை சம்பவத்தில் அவர் தண்டிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் ~பிறை மேடை|க்காக அ.மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து முக்கிய பகுதிகளை மட்டும் தொகுத்தளித்துள்ளோம்.)

2002ரூல் குஜராத்தில் மேற்கொள் ளப்பட்ட கொடூரமான தாக்குதல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஆளாகி பதில் சொல்லும் நிலை முதலமைச்சர் மோடிக்கு நேர்ந்துள்ளது மிகவும் அவமானகரமானது. இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் இத் தகைய அவமானத்தை சந்திக்க வில்லை.

நமது நாட்டில் நடைபெற்ற பல கலவரங்களுக்கும் 2002ரூல் குஜராத் தில் நடந்த மதக் கலவரத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. உதாரணமாக நாடு பிரிவினையின் போது 1947ரூல் நடைபெற்ற இந்து ரூ முஸ்லிம் கலவரத்தின்போது அப்போதைய அரசு அக்கலவரத்தை கட்டுப்படுத்த உயிர், உடைமை, சேதத்தை தடுக்க பெரிதும் முயற்சி எடுத்தது. கலவரக்காரர்களை ஒடுக்கி அரசு எடுத்த முயற்சிகளையும் தாண்டி அப்போது பலர் பலியாக நேர்ந்தது.

ஆனால், 2002ரூல் குஜராத்தில் அரங்கேறிய படுகொலைகள் முற்றி லும் அரசு ஆதாரவுடன் காவல் துறை, நீதித்துறை ஆதரவுடன் நடை பெற்றன என்பதுதான் அதிர்ச்சி யானது.

ஏறத்தாழ 2500 பேர் கொல்லப் பட்டனர். 2 லட்சம் மக்கள் அகதி களாக்கப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும் வீடு திரும்பாத நிலை உள்ளது. இந்த கொடூரங்கள், படுகொலைகள் அனைத்தும் முதல்வர் நரேந்திரமோடி அரசாங்கத்தின் ஆசியு டனும் ஆதரவுடனும் நடந்தது மிகவும் வேதனைப்படக்கூடியது.

ஒரு அரசாங்கமானது குடிமக்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டும். ஏதேனும் கலவரம் அல்லது வன்முறையினால் அழிவுகள் ஏற்பட்டால் குற்றவாளிகளை தண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி அவர்களை நல்ல முறையில் வாழ வழிவகை செய்ய வேண்டியது ஒரு அரசாங் கத்தின் கடமை.

அந்த கடமைகளில் எது ஒன்றை யுமே மோடியின் அரசாங்கம் செய்யா ததன் விளைவே சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஒரு மாநிலத் தின் முதலமைச்சர் சென்று பதில் சொல்ல வேண்டிய அவலம் முதன் முதலாக நேர்ந்துள் ளது.

குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் குறித்து மனித உரிமை போராளிகளும் சமூக நல்லிணக்கத் துக்காக பாடுபடக்கூடியவர்களும் பேசும் பொழுதெல்லாம் குஜராத் அரசாங்கத்தின் குற்றங்களை ரூ குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் போதெல்லாம் உடனடியாக நரேந்திர மோடி ~குஜராத் அஸ்மிதா| என்று பேசத் தொடங்கிவிடுகிறார்.

அதாவது குஜராத்தின் கௌரவத் துக்கு இழுக்கு தேடுகிறார்கள். குஜராத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

~குஜராத் மக்கள் எல்லோரையும் காட்டுமிராண்டிகள் போன்று சித்தரிக் கிறார்கள்| என்று சொல்லி, அதையும் பிரச்சாரம் செய்து தனக்கு ஆதரவாக வாக்கு வங்கியை உருவாக்க முயற் சிக்கும் செயலை செய்து கொண் டிருக்கிறார். ஆனால், உண்மையில் குஜராத்தின் கௌரவம் மோடியினால் தான் களங்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மாநிலத்துக்கும் இதுவரை வரலாற்றில் ஏற்படாத சில அவமானங்களுக்கு முதல்வர் மோடி காரணமாக இருந்துள்ளார்.

அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள்.

ஒன்று : சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகி பதில் சொல்லியது. இரண்டு அவர் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல விசா கேட்டபோது அவர் முதலமைச்சாராக இருந்தும்கூட அங்குள்ள மக்களின் மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த நாடுக ளுக்கு செல்ல விசா வழங்கப்படாதது. இத் தகைய ஒரு அவமானம் வேறு எந்த ஒரு முதலமைச்சருக்கும் ஏற்பட வில்லை. இது முதல்வருக்கு நேர்ந்த அவமானம் என்பதைவிட குஜராத் மாநிலத்திற்கு ஏற்பட்ட அவமான மாகத்தான் கருதவேண்டும்.

இந்த அவமானத்துக்கு முழு பொறுப்பையும் நரேந்திர மோடி ஏற்க வேண்டும்.

உண்மையில் அவர் குஜராத்திற்கு கௌரவம் சேர்க்க விரும்பினால், குஜராத் மாநிலத்திற்கு அவமானம் சேர்த்ததற்காக அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

2002ரூன் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் (என்.ஹெச்.ஆர்.சி) போன்ற நிறுவ னங்களும், உச்சநீதிமன்றமும் கடுமை யாக கண்டித்துள்ளது.

கலவரம் நடந்தவுடன் உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாக சென்று விசாரித்ததுடன் கலவரத்தில் அரசாங் கத்தின் பங்கேற்பை உறுதி செய் துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள் ளது. அடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளன.

2004ரூல் உச்சநீதிமன்றத்தில் நீதியர சர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமி ஆகியோர் அளித்த தீர்ப் பில் ~ரோம் எரிந்து கொண்டிருக் கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு| மோடியை ஒப்பிட்டார் கள்.

கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு ~குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும்| என்று நீதிபதிகள் குறிப்பிட் டார்கள். அப்படி சொன்னது மட்டுமல் லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது என கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றவும் செய்தார்கள்.

அதுமாத்திரமல்ல@ குற்றவாளிகளை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர்களை அந்த மாநில அரசுகளே நியமித்து கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக குஜராத் படுகொலையில் அரசாங்கமே ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப் பதால் மோடி அரசாங்கம் நியமிக்கும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற சவ்பரிவார் சிந்தனை உடையவராக இருக்க நேர்வதுடன் அவர்கள் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்ப வைக்க முயற்சித்தார்கள் என்பதுடன், சாட்சி களை மிரட்டுவதற்கும் காரணமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி யதுடன், அரசு வழக்கறிஞரை பாதிக் கப்பட்டவர்களின் ஒப்புதலுடன்தான் நியமிக்க வேண்டும் என்ற புரட்சிகர மான தீர்ப்பையும் வழங்கியது. இந்நிகழ்ச்சி வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்திராத ஒன்றா கும்.

இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனத்துக்கு நரேந்திரமோடி ஆளாகியிருப்பதுடன், சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையின்போது பல அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.

கோத்ரா பிணங்களைக் காட்டி மதக் கலவரங்களை தூண்டினார்!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் பலியான 56 உடல்களை அரசு நடை முறை வழக்கத்திற்கு மாறாக குஜராத் தலைநகருக்கு வரவழைத்து ஊர்வல மாக எடுத்துச் சென்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு காரணமாக இருந்தார்.

அன்று இரவே காவல்துறை உள் ளிட்ட அரசின் முக்கிய துறைகளின் அதிகாரிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் இரண்டு நாட்களுக்கு கலவரங் கள் நடக்கும். அதை கண்டுகொள் ளாதீர்கள்@ தடுக்காதீர்கள் என பகிரங்கமாக கூறியதாக 2002ரூலேயே சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்து கின்ற வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் ~மினிட்| நடைமுறை பின்பற்றப்படாதது மனித உரிமை அமைப்புகளில் சந்தேகத்தை உறுதிப் படுத்துவதாக உள்ளது.

தெகல்கா பத்திரிகை

வெளிப்படுத்திய உண்மைகள்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தெகல்கா பத்திரிகை, குஜராத் கலவரத்தில் தொடர்புடைய குற்ற வாளிகளை பேட்டி எடுத்து வெளி யிட்டது. அதில் பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிப்பட்டன.

முஸ்லிம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளியை மோடி பாராட்டியதுடன், உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள் ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

கலவரம் நடந்த பகுதிகள் சிலவற் றிற்கு நேரடியாக சென்று குற்ற வாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள் ளார். அந்த குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளை கண்டித்த நீதிபதி களை இடம் மாற்றம் செய்தார். சுமார் 20ரூக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு, எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள் ~நீ செய்த இந்தச் செயலுக்கு, உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும்| என தெரிவித்தனர். ஆனால், அந்த நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி விடுதலையடைந்து சுதந்திரமாக உள்ளான்.

தனக்கு எதிராக சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கிய நேரத்தில் அதிலிருந்து தப் பிக்க இர்ஷத் ஜஹான் என்ற கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை பயங் கரவாதிகளாக ரூ தன்னை கொல்ல வந்தவர்களாக சித்தரித்து அவர்களை ~என்கவுண்டர்| மூலம் படுகொலை செய்தார். அது தொடர்பாக விசாரணைகள் இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட 3 பேரும் அப்பாவிகள் என்பதும் மோடி திட்டமிட்டே அவர் களை படுகொலை செய்ய தூண்டி யதும் தெரிய வந்தது.

இப்படி அடுக்கடுக்கான குற்றங் களை புரிந்த மோடியை பா.ஜ.க.வினர் பாராட்டுவது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

மோடி உண்மையிலேயே குஜராத் தின் அஸ்மிதாவை விரும்பக்கூடிய வராக குஜராத்தின் கவுரவத்தை மதிக்கக்கூடியவராக இருந்தால் அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். அதில்தான் குஜராத் தின் கௌரவம் உள்ளது|| என்று

அ. மார்க்ஸ் தெரிவித்தார்.

சந்திப்பு : அபு அஸ்மா.


ந‌ன்றி :

வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் எம்.ஏ. அவ‌ர்க‌ளை ஆசிரிய‌ராக‌க் கொண்டு வெளிவ‌ரும் பிறைமேடை மாத‌மிருமுறை ஏப்ர‌ல் 16 30 இத‌ழிலிருந்து

பிறைமேடை இத‌ழை அமீர‌க‌த்தில் பெற‌ தொட‌ர்பு கொள்வீர்
050 51 96433

E mail : muduvaihidayath@gmail.com