திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாக அமைப்புக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாக அமைப்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டமுஸ்லிம் லீக்; துணைத் தலைவர் கவிஞர் வீரை அப்தர் ரஹ்மான் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் கானகத்து மீரான் முன்னிலையில் 25.4.10 ரஹ்மத் ஜூம்ஆ பள்ளி வாசலில் மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீகின் செயலாளரும் மாநில மாணவர் அணி அமைப்பாளருமான, எல்;.கே.எஸ்.மீரான் முகைதீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது
கல்லிடைக்குரிச்சி என்றதும் தமிழ் ஆசான் டி.எம்.பீர்முஹம்மது சாகிப் அவர்களும், அவர்களின் மாணவராகத் திகழ்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரவணசமுத்திரம்; எம்.எம். பீர் முஹம்மது அவர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். ஒருவர் சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும் மற்றொருவர் சொல்லின் செல்வராகவும் திகழ்ந்தார்கள்.
1950 களில் கல்லிடைக்குரிச்சி ஆசான் டி.எம்.பீ.அவர்கள் அண்டை நாடான இலங்கையில் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக, தமிழர்களின் உரிமைக்குரலாகத் தம் இளமை வாழ்வை இலங்கையில் அமைத்துக் கொண்டார்கள்.அவர்களது படையின் தலைவராக இருந்தவர் தான் முன்னாள் இலங்கை அமைச்சர் தொண்டமான் ஆவார்கள். டி.எம்.பீ.அவர்களைத் தேடி அங்கே பல்வேறு பதவிகள் வந்தன. அவைகளிலெல்லாம் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை.
பின்னர் தாயகம் திரும்பி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணியையும் இஷா அத்துல் இஸ்லாம் சபையின், தாவா பணியையும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி,மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் தேனி கம்பம் பகுதிகளிலும் மிக நேர்த்தியாக 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே செய்தார்கள்.
அவர்கள் எழுதிய இன்பத்தமிழும்-இனிய இஸ்லாமும், நாற்பெரும் இமாம்கள்,கௌது நாயகம் போன்ற நூற்களும், பல்வேறு கட்டுரைகளும் அவர்களின் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன.அவை கலைஞர் அரசால் நாட்டுடமையாக்கப்படவேண்டுமென செம் மொழி மாநாடு நடைபெற உள்ள இந்தப் பொழுதில், திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீகின் சார்பாக முயற்சிகள் மேற் கொண்டுள்ளோம்.
டி.எம்.பீ.அவர்கள் காலம்வரை அம்பை மற்றும் கல்லிடைக்குரிச்சி வட்டாரத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட இவ்வூர் பிமைரி முஸ்லிம் லீக், தம் முன்னிலை மீட்சியைப் பெற வேண்டுமென்ற ஆவலில் தான் இந்த ஊருக்கு நாங்கள் வந்துள்ளோம். அது நிச்சயம் நடக்கும். இன்ஷா அல்லாஹ்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழகத்தில் நம் தலைவருமான பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் தலைசிறந்த கல்லுரிப் பேராசிரியராகப் பணியாற்றி, பல்லாயிரம் மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கியதோடு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களையும் தாயுள்ளத்தோடு பெற்றுக் கொடுத்தவர். காலமெல்லாம் சமுதாயம் என்றே சற்றிச்சுழன்று வருபவர்கள் அவர்கள்.அது போல இன்று இளைய சமுதாயத்தைச் சேர்ந்த செயலாற்றல் கொண்ட காயல் பட்டணம் அபுபக்கர் அவர்கள் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அப்தல் ரஹ்மான் அவர்கள் மிக உயர்ந்த பதவியை உதறிவிட்டு இன்று முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற உறுப்பினராக அரிய பணி செய்து வருகிறார். சட்ட மன்ற உறுப்பினர்களாக உள்ள கலீலுர் ரஹ்மானும் ஆம்ப+ர் அப்துல் பாஸித்தும். இன்னும் எண்ணிலடங்கா உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் மிகச் சிறப்பாக முஸ்லிம் லீகில் மக்கள் தொண்டாற்றி வருகிறார்கள். மாநில முஸ்லிம் லீகில் செயலாளர்களாக மற்றும் நிர்வாகிகளாக உள்ளவர்கள் அவரவர் தம் பணிகளை செவ்வனே செய்து வருகிறார்கள்.
உங்கள் பக்கத்தில் நெல்லை மாவட்டம் முதலியார்பட்டி ஊராட்சியின் தலைவராக முஸ்லிம் லீக் இயக்கத்தைச் சேர்ந்த பஸ்லுர் ரஹ்மான் இருக்கிறார்.அவரது தலைமையிலான அந்த ஊராட்சி,தமிழகத்தில் தலை நிறந்த நிர்வாகத்துக்கு முன் மாதிரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் லீகால் அவருக்குப் பெருமை அவர் போன்ற தொண்டர்களைப் பெற்றதனால் முஸ்லிம் லீகிற்குப் பெருமை.இது போன்று தான் திருநெல்வேலி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புக்களில் முஸ்லிம் லீகின் தொண்டர்கள் உழைத்து வருகிறார்கள். இது முஸ்லிம் லீகின் தொண்டாகள் வரலாறு. ஆகவே சுட்டிக்காட்டுகிறோம்.
சிறுபான்மை சமதாயமாம் இஸ்லாமிய மாணவர்கள் உயர் கல்வி கல்வி பெற மாவட்ட முஸ்லிம் லீக் தொடர்ந்து உதவி வருகிறது.அது இன்னும் இந்த ஜமாஅத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக வட்டியில்லாத கடன் கொடுத்து உதவவும்,மருந்து மாத்தி;ரை வாங்க வழியில்லாத ஏழை எளிய மக்களுக்காக மாதம் தோரும் உதவித் தொகை கொடுக்கவும்,பைத்துல் மால்கள் துவக்க விரும்பினால் அதையும் செய்து தர தயாராக இருக்கிறோம். 10 ஆம்வகுப்பு தேறிய அல்லது தவறிய 18 வயது நிறைவு பெற்ற இளைஞர்கள் படிப்பதற்கு வழியில்லாமல், அல்லது குடும்பத்தை காப்பாற்ற வெளி நாடு சென்று தான் உழைப்பு செய்ய வேண்டு மென்கிற நிலையிருந்தால் அப்படிப்பட்ட இளைஞர்களை எலக்ட்ரீசியன் அல்லது பிளம்பிங் படிப்பு தெரிந்தவர்களாக உருவாக்கிட குற்றாலம் சீனா தானா ஹைடெக் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 மாதம் பயிற்சி கொடுக்கிறோம். அது முடிந்தவுடன் தாயகத்திலோ அல்லது வெளி நாடு களிலோ வேலை வாய்ப்ப பெற முடியும். இந்த வாய்ப்பை இந்த ஜமாஅத பயன் படுத்திக் கொள்ளலாம்.
இவை தான் இந்த சமுதாயத்துக்கு தற்போது நம் மாவட்டத்தில் அவசியம் என்று நினைக்கிறோம். ஆகவே அன்பு மிக கொண்டு முஸ்லிம் லீகை அரவணைத்து ஆதரவு தாரீர்; என்று கேட்க,உரிமையோடு அழைப்பு செய்ய வந்துள்ளோம். ஒவ்வொருவரையும் இங்கே குடும்பத்துடன் முஸ்லிம் லீகில் உறுப்பினராக இணைப்போம்.இவ்வாறு எல்.கே.எஸ். மீரான் முகைதீன் பேசினார்.
முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டத்தில் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் சேக் மன்சூர் மிஸ்பாகி,அம்பை அமானுல்லா,மேலப்பாளையம் மில்லத் காஜா முகைதீன்,எஸ். ஆர்.சாகுல் ஹமீது,ஒய்.முகைதீன்,ஏ.முகைதீன் பிச்சை,பீ.காதர் முகைதீன்,கேஅப்துல் காதர்,கே.முகைதீன் பிச்சை, அப்துல் காதர்,அப்துல்லா அல்லா பிச்சை உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.