நாடறிந்த நாவலர் 'மறுமலர்ச்சி' ஏ.எம். யூசுப் சாஹிப் நினைவு நாள்
http://www.vkalathur.com/article-amyousuf.php
நாட்டுக்கு அவர் மறுமலர்ச்சி ஆசிரியர்! முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு அவர் முன்னோடித் தலைவர். சமுதாயத்திற்கு அவர் நாடறிந்த நாவலர்!
ஆனால், எனக்கு?
நாவலர் அவர்கள் என் ஆசிரியர். என் ஆசிரியர் அண்ணன்!
~இனி யாரை நான் ஆசிரியர் என்று இதயம் நிறைய - வாய் நிறைய அழைக்க முடியும்?| என்று எண்ணிப் பார்க்கிறேன்.
அண்ணன் அவர்களுடன் ஓராண்டா? ஈராண்டா? சற்றொப்ப 38 ஆண்டுகள் அவருடன் உரையாடியிருக்கிறேன். அவருடன் நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். பேசி வந்திருக்கிறேன். எழுதி வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் லீக் என்னும் பேரியக்கப் பணியில் பயணத்தில் அவருடன் தொடர்ந்து பயணித்திருக்கிறேன்.
கல்வித் துறையில் நான் பேராசிரியர் என்னும் பதவி வகித்தவன் என்றாலும், என் இலட்சியப் பணியில் நாவலர் அவர்களே என் ஆசானாகத் திகழ்ந் தார்கள்!
அந்த ஆசான் திலகம் இன்று நம்மிடை யில் இல்லை!
சமுதாயம் பற்றி என்னைச் சிந்திக்க செய்த சிந்தனையாளர்!
சமுதாயத்திற்குத் தொண்டு செய்வது போன்ற சிறப்பு வேறெதிலும் இல்லை என்று வழிகாட்டிய சமுதாயப் பெருந் தொண்டர்!
சமுதாயத்தின் உயர்வுக்கும் நாட்டின் பெருமைக்கும் முஸ்லிம் லீக் மூலம் பணியாற்றுவது போன்ற சிறப்பு வேறெதிலும் இல்லை என்று உணர்த்திய முஸ்லிம் லீக் தலைவர்.
எழுத்திலும் பேச்சிலும் சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்வது போன்றதொரு ஆன்மீகத் திருப்தி தரும் பணி வேறெதுவும் இல்லை என்று விளங்கச் செய்த வீரமிகுந்த விவேகி!
முஸ்லிம் பத்திரிகையாளருள் 42 ஆண்டுகள் வார இதழ் நடத்தி வெற்றி வாகை சூடிய தலைசிறந்த எழுத்துலகச் சிற்பி!
அரசியல்வாதியாக இருந்து கொண்டே ஆன்மீக பலத்தை வளப்படுத்திய தோடு, பல அரிய புதினங்களை உருவாக்கிய மேதை!
என் ஆருயிர் ஆசிரியர் அண்ணன் ஏ.எம். ய+சுப் சாஹிப் அவர்கள் இன்று இல்லை. ஜெனரல் பஜார் சுபரஸ்தானில் நல்லடக்கமாகிவிட்டார்!
ஆம். அவர் சென்றுவிட்டார்! அவர் நமக்கு முந்திவிட்டார்! அண்ணன் அவர்களே!
நீங்கள் எல்லாவற்றிலும் முந்தியவராகவே இருந்தீர்கள்! இறுதிப் பயணத்திலும் நீங்களே முந்திவிட்டீர்கள். நாங்கள் பிந்தியவர்கள்! ஆனால் ஒன்று.
உங்களால் உருவாக்கப்பட்டுள்ளவர்கள் ஒவ்வொருவம் ஒரு நாவலர் ய+சுப் ஆகத் திகழச் செய்து உங்களின் பேராசையை ப+ர்த்தி செய்து வர பிந்தியிருக்கிறோம்!
முஸ்லிம் லீக் என்றும் இருந்தாக வேண்டும்!
முஸ்லிம் லீகில் எல்லோரும் இருந்தாக வேண்டும்!
முஸ்லிமானால் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவர்களாக இருக்க வேண்டும்! என்று நீங்கள் முழங்கியது இன்று எங்கள் இதயங்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது!
அந்த ஒலியை நாடு முழுவதும் ஒலிக்கச் செய்ய சூளுரைக்கிறோம்!
~என் ஆருயிர் ஆசிரியர் அவர்களே உங்களை இழந்த பிறகு சிராஜூல் மில்லத் உயிரனைய தோழர். இன்று பாதியாகிவிட்டேன்| என்று வேதனையில் மூழ்கிவிட்டார்.
பல்லாயிரம் பேர் சேர்ந்தேனும் அந்தப் பாதியாக முயற்சி செய்வோம்!
அண்ணன் அவர்களே! நீங்கள் ஒரு சகாப்ததம்தான்! ஆனால், பல சகாப்தங்கள் தொடர்வதற்கு நீங்களே சான்றாக நின்றீர்கள்!
இனி இங்கே உங்களை சந்திக்க முடியாது!
ஆனால், இறையருளால் சுவனபதியில் ரூ சுந்தர ஒளியில் ஒருநாள் இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்! அந்தச் சந்திப்பு வரையிலும், தாங்கள் செய்த சேவையை எல்லாம் சிந்திப்போம்! செயல்படுவோம்! யா அல்லாஹ்! என் அண்ணனை உன் அருள் ஒளியில் நனைத்து விடுவாயாக!
தலைவர் பேராசிரியர் தாருல் குர்ஆன் பத்திரிகையில் எழுதிய இரங்கல் வரிகளிலிருந்து சில பகுதிகள்.
(ஏப்ரல் 23 நாவலர் ஏ.எம். யூசுப் நினைவு நாள்)
http://www.vkalathur.com/article-amyousuf.php