Thursday, April 29, 2010

திருவல்லிக்கேணி பக்கீர் லெப்பை மஸ்ஜிதில் 300 மாணவர்களுக்கு கோடைகால மார்க்க கல்வி பயிற்சி வகுப்பு

திருவல்லிக்கேணி பக்கீர் லெப்பை மஸ்ஜிதில் 300 மாணவர்களுக்கு கோடைகால மார்க்க கல்வி பயிற்சி வகுப்பு
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு


சென்னை, ஏப்.29:

நூருஸ்ஸன்னா இஸ்லாமிய ஒருங் கிணைப்பு சார்பில் சென்னை திருவல்லிக் கேணி கிருஷ்ணாம் பேட்டை பக்கீர் லெப்பை மஸ்ஜிதில் கடந்த 24.4.10 சனிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கோடை கால பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் எஸ். எம். கனி சிஷ்தி நூரி தலைமை தாங்கினார், பக்கீர் லெப்பை மஸ்ஜித் செயலாளர் தாஜ் எம்.எஸ். காஜா, மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மௌலவி கே.எஸ். ஷாஹ{ல் ஹமீது பையாஜி வரவேற்புரையாற்றினார். ஹாபிள் முஹம்மது ஷாஹ் கிராஅத் ஓதினார்.

புதூர் இ. கராமத்துல்லா கோடை கால பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாணவர்களுக்கு இலவச நோட்டு, பேக், பேனா ஆகியவற்றை வழங்கினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப், சென்னை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை செய லாளர் வி.எஸ். அன்வர் பாதுஷா ஹஜ்ரத் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மௌ லவி இஸ்ஹாக் பிலாலி நன்றி கூறினார்.

விழாவில், மௌலவி எம்.ஏ. ரஹ்மத்துல்லா, மௌலவி முஹ்யித்தீன், மௌலவி காஜா முஹ்யித்தீன், மௌலவி ஆஷிக், முத்தலிப், முஹம் மது கமால், ஷாஹ{ல் ஹமீது, அப்துல் வாஹித், அன்சாரி, பிலால், அப்துல் சமது, முஹம்மது சமது மற்றும் ஏராளமான மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோடைகால தீனியாத் பயிற்சி வகுப்பு 35 நாட்கள் (25.4.2010 முதல் 30.5.2010 வரை) நடை பெறும். இதில், சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, ஐஸ்ஹவுஸ் மீர்சாஹிப் பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுவர்.