ஆயங்குடியில் மீலாது விழா முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்
ஆயங்குடி, ஏப். 27-
கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார் பில் மீலாது விழா மற்றும் முஸ்லிம் லீக் பொதுக்கூட் டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஹாஜி.ஏ.ஹெச். முஹம்மது ஹனீஃப் தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி.ஜலாலுத்தீன்,நகர துணைத்தலைவர் ஹாஜி முஹம்மது ஷரீஃப்,ஹாஜி எம்.ஐ.அப்துல் வதூது, இளைஞரணி செயலாளர் ஹாரூன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஜமா அத்துல் உலமா தலைவர் மௌலவி முஹம்மது மன்சூர் துவக்கவுரையாற் றினார். நகர பொருளாளர் ஹாஜி.முஹம்மது இக்பால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சர்வதேச காயிதெ மில்லத் பேரவை யின் ஒருங்கிணைப்பாளரு மான எம்.அப்துல் ரஹ் மான், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.மாவட்டத் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அப் துல் கஃப்பார், அபுதாபி மண்டல காயிதே மில்லத் பேரவைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் முஹம்மது அஃப்ஜல், பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ரஷீத் ஜான்,மாவட்ட இளைஞரணி கடலூர் முஸ்தஃபா,லால்பேட்டை நகரத் தலைவர் ஹாஜி கே .ஏ.முஹம்மது, துணைச் செயலாளர் முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் சுல்தான் மொய்தீன் நன்றி கூறினார்.