ஈரோட்டு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்
தலைவர் பேராசிரியர் - மாநில பொதுச் செயலாளர் பங்கேற்பு
http://www.muslimleaguetn.com/
ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பிறைமேடை ஆசிரியரும் வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் பி.எஸ். ஹம்ஸா, மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீக்குர் ரஹ்மான் ஆகியோருக்கு ஈரோடு மாவட்டத் தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா தலைமை யில் மாவட்ட செயலாளர், ஜே.எம். ஹஸன் பாபு, மாவட்டப் பொரு ளாளர் யு.எஸ். ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாவட்ட, நகர, பிரைமரிகளின் நிர்வாகி கள், தொண்டர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர்.
திருமண விழா
முன்னாள் மாவட்ட தலைவர் மர்ஹ{ம் கே.எஸ். காதர் சாஹிப் இல்லத் திருமணத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். திருமண அரங்கில் தமிழ் நாடு மாநில அறிவுரை கழக உறுப்பின ரான நீதியரசர் .சித்தீக் அனைவரையும் வர வேற்றார். ஈரோட்டிற்கும் முஸ்லீம் லீகிற்குமுள்ள தொடர்புகளையும், முன்னோடிகள் செய்த சிறப்பான தொண்டினை யும் நினைவு கூர்ந்து, முஸ்லீம் லீக்கில் சேருவதன் அவசியத்தையும் எடுத்துக் கூறி அனைவரையும் முஸ்லீம் லீக்கில் சேர பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்தார்.
இந் நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர் வாகிகள் பங்கேற்றனர்.
கல்வி நிகழ்ச்சி
ஈரோடு நுமுஆ அப்துல் கனி மதரஸா இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் மாநிலத் தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ. ஏம். அப+பக்கர், நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகி யோருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைவர் யு.சிக்கந்தர் தலைமையில் திருநகர் பள்ளி முத்தவல்லி ஹசன் அலி செயலாளர் மு.மு. ஷாகுல் ஹமீது முன்னிலை யில் நடைபெற்றது. பள்ளி யின் தாளாளர் தாஜ் முகை தீன் தலைவர்களைப் பாராட்டி கல்வி நிலையங் கள் எதிர்கொள்ளும் நிலை மைகளைப் பற்றி கூறினார். வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நாடாளு மன்ற உறுப்பினர் அப்துல் ரஹ் மான் உரையாற்றினார்.
கொடியேற்று
விழாக்கள்
புதியதாக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள புதிய பிரை மரி காசி பாளையம், விவே கானந்தா நகரில் நகரத் தலைவர் அலாவுதீன் சேட் தலைமையில் நகர நிர்வாகி களின் முன்னிலையில் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் கொடியேற்றினார். மகளிர் அணியின் உறுப்பி னர்களிடம் கலந்துரை யாடினார்.
சூரம்பட்டி பிரைமரி, சங்கு நகரில் நகரத் தலைவர் நூர் முகம்மது சேட் தலை மையில் நகர நிர்வாகிகள் முன்னிலையில் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் கொடியேற்றினார். இளைஞர் அணி, மாணவர் அணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் கலந்துரையாடி னார்.
பெரிய சேமூர், பிரைமரி கனிராவுத்தர் குளத்தில் பிரைமரித் தலைவர், ஹாஜி. தஸ்லீம் நகர நிர்வாகிகள் மற்றும் செய லாளர் சேட்டு மாவட்ட பிரதிநிதி வசியுல்லா முன் னிலையில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கொடியேற்றினர்.
அனைத்து நிகழ்ச்சிக ளிலும் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் நாடாளுமன்ற உறுப்பினர், எம். அப்துல் ரஹ்மான், மாவட்டத்தலைவர். ஏ.ஆர். கலீபுல்லா, மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீக்குர் ரஹ்மான், மாவட்டச் செயலாளர் ஜே.எம். ஹஸன் பாபு, மாவட்டப் பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான், துணைச் செயலர் அப்துல் ஜப்பார், ஈரோடு நகரச் செயலாளர் அக்பர் அலி மஹல்லா ஜமாஅத் அமைப்பாளர் பாரூக் ஈரோடு நகரத் துணைத் தலைவர், துணைச் செய லாளர் முனாப் மற்றும் ரபீக் மற்றும் திருப்ப+ர் மாவட்டத்தலைவர் பி.எஸ். ஹம்ஸா, தாஜ், மாநகரத் தலைவர் சிக்கந்தர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பஜ்லுர் ரஹ்மான், மாவட்ட இளைஞர் அணி அமைப் பாளர் ஆரிப், சுதந்திரத் தொழிலாளர் அணி அமைப்பாளர் சுபான் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்
ஈரோடு மாவட்ட ஊழியர்கள் கூட்டம்
ஈரோடு மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் மாவட்ட தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா தலைமையில் மாவட்ட தலைமை நிலை யத்தில் நடை பெற்றது. நடைபெற உள்ள பிரைமரி கள் தேர்தல் குறித்து மாவட்ட தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா ஜே.எம். ஹஸன் பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஹாஜி தாஜ் மொஹிதீன், மௌலவி அப்துல் ரஹ்மான் காஸிமி, ஈரோடு இக்பால் மாவட்ட மாநகர தேர்தல் அதிகாரி மௌலவி உமர் பாரூக் தாவ+தி ஆகியோர் எடுத்து ரைத்தனர்.
உறுப்பினர் சேர்ப்பு, பிரைமரி தேர்தல்கள் குறித்து மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன், பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரை யாற்றினர்.
மாவட்ட, மாநகர மற்றும் பிரைமரிகளின் நிர் வாகிகளின் இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மாண வர் அணியின் நிர்வாகிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு எஜூகேஷனல் கருத்தரங்கம்
ஈரோடு எஜூகேஷனல் அகாடமி சார்பில் அகா டமி அலுவலகத்தில் அதன் தலைவர் கே.கே.எஸ். கே. ரபீக் தலைமையில் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு பொருளா தாரம் மற்றும் அரசியல் நிலை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. எஜூ கேஷனல் அகாடமி செய லாளர் டாக்டர் அபுல் ஹஸன் வரவேற்புரையாற்றி னார். இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழ் மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றி னர்.
பொருளாளர் ஆடிட் டர் அய்ய+ப் நன்றி கூறினார் அகாடமி குழுவினர்கள் ஷமீம், ய+சுப்தீன், ஜாபர் சாதிக் ஹாஜி ஹைதர் அலி ஈரோடு மாவட்ட தலைவர் ஹாஜி ஏ.ஆர். கலீபுல்லா செயலாளர் ஹஸன் பாபு பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான், மாநில பிரதிநிதி அப்துல் ரஹ்மான் காஸிமி, பாரூக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஜப்பார், ஈரோடு மாநரக செயலாளர் அக்பர் அலி, மற்றும் மாவட்ட, மாநகர, பிரைமரிகளின் நிர்வாகி களும் இஸ்லாமிய பெரு மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.