Saturday, April 17, 2010

மணிச்சுடரை வளர்ப்போம் தோழா !

மணிச்சுடரை வளர்ப்போம் தோழா !

( இக்பால் ராஜா )

உத்தேசித் தபத்து லட்சம்

உருவாகும் உறுப்பி னர்கள்

மத்தாப்பாய் ஒளிசிந் தாமல்

மணிவிளக்காய் பிரகா சிப்போம் !

வித்தாகும் தலைமு றைக்கும்

வித்தகர்நம் முனீருல் மில்லத்

அத்தாட்சி வழங்கும் வண்ணம்

அறிவார்ந்த பணிதொ டர்வோம் !



’தரவரிசை இதழ்க ளுக்கு

தகுந்தவாறு இடம்அ மைக்க

அறமுரசு மணிச்சுடர்’ ராய் !

அடிச்சுவடு அமைந்த பாங்கு

திரண்டசமு தாயத் தில்நம்

தானைத்தலைவர் சிராஜுல் மில்லத்

அரவணைத்த நேர்த்தி கண்டு

அதிசயத்து வியந்தோம் தோழா !



’வீடுவீடாய் மணிச்சுடர்’ ரை

வழங்குகின்ற முகவர் மூலம்

வீடுசென்று விநியோ கித்தும்

வீறுகொண்டு வலிமை சேர்க்க

கூடுகின்ற பெரும்கூட் டங்கள்

கூவிவிற்க வழிவ குப்போம் !

ஏடுதந்த சிராஜுல் மில்லத்

எப்படிநாம் மறப்போம் தோழா ?



தாய்சபைக்கு காயிதெ மில்லத்

தலைமைஏற்ற மகத்து வத்தை

வாய்மணக்க சிராஜுல் மில்லத்

வழிமொழிந்து சொல்லக் கேட்டோம் !

வாய்மையுடன் முனீருல் மில்லத்

வழிநடத்தும் தலைமை எண்ணி

வாய்ப்பினிலே மணிச்சுடர்’ ரை

வம்சத்தில் வளர்போம் தோழா !





( மணிச்சுடர் 15/16 மார்ச் 2010 நாளிதழிலிருந்து )