Thursday, April 22, 2010

தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி - பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு

தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி - பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு


http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1207



தேனி மாவட்ட முஸ்லிம் லீகில் எழுச்சி
பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபபூபக்கர் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பங்கேற்பு


திண்டுக்கல், ஏப்.21-

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடந்த 17-4-2010 சனிக்கிழமையன்று வந்து இறங்கிய மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகி யோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் நகர புதிய நிர்வாகிகள் தேர் தலை முடித்து விட்டு பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரையும், தேனி மாவட்ட முஸ்லிம்லீகின் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட் டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளாளர் எஸ். இமாம், துணைச் செய லாளர் ஆர்.எம். அப்துல் நசீர், பெரியகுளம் நகரத் தலைவர் எம். ஜான்பா, செயலாளர் யு.எம்.எஸ். நிஜாத் ரகுமான், பொரு ளாளர் யு.எம். முத்து மீரா ஷா, பி.பி. சுல்தான், சாதிக், அசன் முஹம்மது ஆகி யோர் தேனி மாவட் டத்திற்கு அழைத்து வந்த னர்.

தேனி மாவட்ட எல்லையான காட்ரோட் டில் கெங்குவார்பட்டி பிரைமரி நிர்வாகிகள் வரவேற்று தேவதானப்பட் டியில் நடந்த முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நிகழ்ச் சியில் கலந்து கொண்டனர். எம். அப்துல் ரஹ்மான் தக்பீர் முழங்க கொடி யேற்றி வைத்து அருகி லுள்ள ஜமாஅத் மண்டபத் தில் மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் ஏ.எம். சாயபு, பொருளா ளர் எஸ். இமாம் மற்றும் நகர நிர்வாகிகள் எம். அப்துல் லத்தீப் சிஷ்தி, எம்.எஸ். மீரா மைதீன், எம். அப்துல் பாசித், ஏ. அப்துல் சமது, எம். அப்துல் காதர், என். முஹம்மது அனிபா, ஜமால் மைதீன், ஆர்.எம். அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலை வகிக்க பொதுச் செயலாளர் கே.ஏ. முஹம் மது அப+பக்கரும், நாடா ளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசும் போது,

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் தலை மையில் இருந்து தொடர்ந்து வந்த தலை வர்கள் எல்லாம் எளிமை யாகவும், ஷரீஅத்தை முன் னிறுத்தி சகோதர சமுதாயத்துடன் இணக்கமாக வும், யாருடைய மனதை யும் புண்படுத்தாது மேடை களில் பேசியும், சந்திப்புகள் என்று வரும் போது அரசு அலுவலகங்கள் ஆனாலும், காவல் துறை ஆனாலும அமைச்சர்கள் என யாரை சந்தித்தாலும் கண்ணியம் பேணும் இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான் என குறிப்பிட்டார்.

மேலும், குறிப்பாக இளைஞர்கள் வெளிச்சம் கண்டு ஓடி விழும் விட்டில் ப+ச்சிகளைப் போல் இல்லாமல் சுதந்திரம் பெற்று தந்து, சுதந்திரத் திற்கு பின்னரும் கண்ணி யம், அமைதி, ஆர்ப்பரிப்பு இன்றி கட்டுப்பாட்டுடன் அமைதி வழியில் அறப் பணி ஆற்றி செயல்பட்டு வரும் பேரியக்கம் முஸ்லிம் லீக் என்பதை இளைஞர்களுக்கு எடுத் துக் கூறி, வழி தவறி ஆர்ப்பாட்டம், போர்ப் பாட்டம் என வாழ்க்கை யும், சக்தியையும் வீணடிக் காமல் ஷரீஅத்துடன் ஒன்றி செயல்படும் பேரி யக்கம் முஸ்லிம் லீகை பலப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அங்கிருந்து புறப்பட்டு மாவட்டத் தலைநகரான தேனியில் ஜனாப் டெக்ஸ் டைல்ஸ் அருகில் கொடி யேற்று விழாவிற்கு நகர நிர்வாகிகள் வரவேற்றனர். மதுரை சாலைகள் எல் லாம் பச்சிளம் பிறைக் கொடி பறக்க நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றினார். தலைவர் எஸ். முஹம்மது கனி வரவேற் புரையாற்ற தேசி நகரச் செயலாளர் கே. ஜவஹர் தீன், தேனி மற்றும் பழனி செட்டிப்பட்டி நிர்வாகிகள் முன்னிலையில் எம். அப்துர் ரஹ்மான் கொடி யேற்றி பேசும் போது, வேலூர் தொகுதியிலிருந்து நான் நாடாளுமன்றம் சென் றாலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பிரதிநிதி யாக நான் செயல்படுவேன்.

தமிழக அரசு ஆனா லும், மத்திய அரசானாலும் என்னால் இயன்ற பணி களை செய்து தருவேன் என குறிப்பிட்டார்.

சூறாவளி சுற்றுப்பயண மாக அடுத்து சீலையம் பட்டியிலும் கொடியேற்றி நிர்வாகிகள் நயினார், அப்துல் ஜப்பார், மாலிக் மற்றும் ஜமாஅத்தார் களையு சந்தித்தார். பின்னர் உத்தமபாளையம் பைபாஸ் பள்ளிவாசல் அருகில் பேராசிரியர் ஹிதாயத் துல்லா, அப்துல் கரீம், ஜமாஅத்தார்களின் கூட் டத்துடன் பிறைக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கம்பம் நகர் புதுப்பள்ளி வாசல் நகரத் தலைவர் ஐ.எம். ஷரீப், செயலாளர் சுரபி, ஐ. முஹம்மது ஷரீப், பொருளாளர் அப்பாஸ் மந்திரி, மாவட்ட நிர்வாகி கள் அப்துல் அஜீஸ், முஹம்மது இப்ராஹீம், எம்.கே. அப்துல் ரஜாக், இளைஞர் அணி சம்சுல் ஹ{தா, மிர்சா இஸ்மாயில், சலீம், அஜ்மல், ராஜிக், சேட், அமானுல்லா, ஷாஜ ஹான், வர்த்தக அணி ஷேக் ஒலி உட்பட ஜமாஅத் தார்களின் தக்பீர் முழக் கத்துடன் பிறைக் கொடியை ஏற்றிவிட்டு தொடர்ச்சியாக சுங்கம் தெரு, தாத்தப்பன் குளம் ஆகிய இடங்களிலும் பிறைக்கொடி ஏற்றினார் கள்.

நிறைவாக மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் கே.ஏ. அப்துல் ரவ+ப் அவர்களை தலைவராக கொண்ட கம்பம் இஸ்லாமிய சாலிஹீன் அறக்கட்டளை யின் சார்பாக நாடாளு மன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர், தமிழக அரசின் ஹகோட்டை அமீர்| விருது பெற்ற திண்டுக்கல் தோல் வணிகர் ஏ. மைதீன், சமுதாய ஒளிவிளக்கு விருது பெற்ற மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வரும், காலஞ்சென்ற மூத்த முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. பாஷாவின் மகளு மான டாக்டர் தஸ்ரின் ஜஹான் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஏற்புரை நிகழ்த்திட, அறக்கட்டளையால் பாராட்டுப் பத்திரமும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 11.30 மணிக்கு தொடர் நிகழ்வு கள் நிறைவு பெற்றது.

ஒரே நாளில் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் சூறாவளி சுற்றுப் பயணமாக முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டது சமு தாய நெஞ்சங்களில் மகிழ் வும், இயக்கத்தினரிடையே எழுச்சியையும் ஏற்படுத்தி யது.