Tuesday, April 27, 2010

நேர்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்

நேர்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்

சென்னை அரசியல் பயிலரங்கத்தில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேச்சு


சென்னை, ஏப்.27-

சென்னை நேர்மை அரசியல் பயற்சிக் கல்லூரி சார்பில் அரசியல் தலைமைப் பண்பு மேம் பாட்டுப் பயிற்சி வகுப்பு சென்னை எழும்ப+ர் ஐ.சி.எஸ்.ஏ. சென்டரில் 24-4-2010 அன்று நடை பெற்றது. தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத் தலைவர் ஜெகநாதன், செயலாளர் பொறியாளர் எஸ்.எம். அரசு, மனித உரிமை சட்ட ஆலோசகர் நபீஸ் அஹமது, பேராசி ரியர் ஜேம்ஸ் உள்ளிட் டோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். சிறப்பு விருந் தினராக பங்கேற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசியபோது குறிப்பிட்டதாவது-

இந்திய அரசியலமைப் புச் சட்டம், ஜனநாயகம், தேர்தல் முறை உள்ளிட்ட தலைப்புக்களில் இளை ஞர்களுக்கு பயிற்சியளிப் பது, அதிலும் நேர்மையான அரசியல் நெறிமுறைகளை கற்றுக் கொடுப்பது பாராட்டுக்குரிய விசயமா கும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை சேர்ந்த என்னையும் இங்கு அழைத் திருப்பது ஏதோ ஒரு வகையில் பொருத்தம் என்றே கருதுகிறேன். இந் திய அரசியலமைப்பு சட் டத்தை உருவாக்கிய டாக் டர் அம்பேத்கரை அன்று டெல்லி மேலவைக்கு அனுப்ப மகாராஷ்டிர காங்கிரஸ் மறுத்துவிட் டது. மேற்கு வங்க முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் ஆதரவோடு டாக்டர் அம் பேத்கரை தேர்வு செய்து இந்திய அரசியல் அமைப் புச் சட்டம் உருவாக காரணமாக இருந்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.

சட்ட அவையில் காயிதெ மில்லத், பேக்கர் சாகிப், கேடி.எம். அஹமது, இப்ராஹீம் சாஹிப் உள் ளிட்ட முஸ்லிம் லீக் தலை வர்கள் இடம் பெற்று நம் நாட்டின் அடித்தளம் உருவாவதற்கு முக்கிய பணிகளாற்றி இருக்கின் றனர். இன்று செம் மொழி மாநாடு நடைபெற இருக் கின்றது. 1948-ம் ஆண்டே இலக்கண, இலக் கிய வளமும், தொன்மை யும் நிறைந்த தமிழ் மொழியே இந்தியாவின் ஆட்சி மொழியாக தகுதி உடை யது என அரசியல் நிர்ணய சபையில் முழங் கியவர் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத். அச் சபையில் தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் இருந்த போதிலும் யாரும் தமிழுக்காக பேசவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை..

நேர்மை அரசியல் பயிற்சி வகுப்பு நடத்துவது இக் காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. லஞ்ச லாவண்ணியத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றுவ தென்று இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இப்படியே சென்றால் என்னவாகும்? லஞ்சம் கொடாதோராக வும், வாங்காதவராகவும் நாம் இருக்க முடியுமா? என்பதும் மிகப் பெரிய சவால். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரும். எந்த ஒரு விசயமும் உச்சத்திற்கு சென்று விட்டு கீழே தான் வர வேண்டும். அதேபோல் லஞ்சமும் அடியோடு அழியும் நிலை வரத்தான் செய்யும். சிறு கூட்டமாக இன்று புறப்பட்டிருக்கக் கூடிய நேர்மை அரசியல் பயிற்சி மாணவர்களும், லஞ்சம் கொடாதோர் இயக்கத்தினரும் துணி வோடு பணிகளாற்றி வருவது பாராட்டுக்குரியது. எங்கள் தலைவர் காயிதெ மில்லத் முதல் இன்றைய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வரை நேர்மை யான அரசியலுக்கு எடுத் துக்காட்டாக திகழ்ந்து எங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

முஸ்லிம் லீக் சார்பி லும், இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றோம். இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயக நடைமுறை, தேர்தல் விதிமுறைகள் மற்றும் எம்.பி.ஏ. போன்ற படிப்பு படித்த மாணவர் கள் தொழில்ரீதியாக பாராளுமன்ற - சட்டமன்ற தொகுதிகளின் முன்னேற் றத்திற்கு ஆய்வு செய்து பணியாற்றும் முறை குறித்தும் இங்கு வகுப்பு நடத்தப்பட்டது. இவ் வகுப்புகள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பிலும் நடத்தினால் மிகவும் பய னுள்ளதாக இருக்கும். அதற்காக முயற்சி மேற் கொள்வோம்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேசினார்.