Tuesday, April 20, 2010

வெளியுறவுத்துறை அமைச்சக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. யின் பேச்சு

வெளியுறவுத்துறை அமைச்சக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. யின் பேச்சு

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1200

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்து வந்தவன் என்ற முறையில் எனக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிலை தெளிவாகத் தெரியும். அவர்கள் என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கின்றனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களில் மிகுதமானோர் கல்விகற்காத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாங்கித் தரும் ஏஜென்டுகளில் மற்றும் அந்நாட்டின் வேலை தரும் நிறுவனங்ளால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் அவர்கள் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. மேலும் சரிவர உதவியும் ஓத்துழைப்பும் கிடைப்பதில்லை. இந்திய தூதரகத்தினர் பல உதவிகள் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு தேவையான அளவில் அதிகாரிகள் பணியில் இல்லை. மிக குறைந்த அளவில் இரண்டு அல்லது நான்கு என்ற அளவில் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போதுமான உதவிகளும் ஒத்தாசைகளும் கிடைப்பதில்லை.

இந்திய அரசு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பணியாளர்களுக்காக இந்திய மக்கள் நலக்குழு ( INDIAN COMMUNITY WELFARE COMMITTEE ) என்ற பெயரில் நலக்குழுவை அமைத்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதுபோல மற்ற நாடுகளிலும் அமைத்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதுகாப்புடன் வாழ வழிவகுக்க வேண்டும். அது அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் மக்களின் நிலையை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நாடாளுமன்றக் குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். தமிழக அரசின் தகவலின் அடிப்படையில் இந்திய அரசால் இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக ரூபாய் 500 போடி அறிவிக்கப்பட்டு, ரூபாய் 90 கோடி ஒதுக்கப்பட்டும் வெறும் ரூபாய் 63 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருப்பது கவலைக்குறிய விசயமாகும். மாண்புமிகு வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணன் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அதுபோல சிங்கப்ப+ர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவிகளை இந்திய அரசு செய்ய வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் சொந்த மொழியில் புகார் அளித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி வகை செய்ய வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதை வரும் தேர்தலிருந்தே நடைமுறைபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் தொகை ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஹஜ் பயணத்துக்காக தமிழகத்துக்கு 3000துக்கு சற்று கூடுதலான இடங்கள் மட்டுமே ஓதுக்கப்பட்டுள்ளது. நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் வேலூர் தொகுதியில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேல் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் உள்ளனர். எனவே தமிழகத்துக்கு ஹஜ் பயண இடஓதுக்கீட்டை இரண்டு மடங்கு அதிகரிக்கும்படி மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மக்களவையில் எம். அப்துல் ரஹ்மான் பேசினார்.