மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் துபாய் வருகை
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் 09.04.2010 வெள்ளிக்கிழமை அதிகாலை துபாய் வருகை புரிந்துள்ளார்கள். கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் துபாய் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையினால் கௌரவிக்கப்பட்டார். மௌலானாவின் புதல்வர்கள் துபாயில் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் இரண்டு மாதம் அவர்கள் துபாயில் இருப்பார்கள்.
அதன் புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு இதோ :
மவ்லானா பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம்
இராமநாதபுரம் ஜில்லா பார்த்திபனூர் பரளையில் 1944ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பக் கல்வி பயின்று 1957 ஆம் ஆண்டு ஈஸநத்தம் மதரஸாவில் மவ்லவி ஆலிம் பட்டம் பெற கல்வி கற்க ஆரம்பித்தார். வேலூர் அஃலா ஹஜ்ரத்திடம் நேரடியாக கல்வி பயின்ற மீரா ஹுசேன் ஹஜ்ரத்திடம் நான்கு ஜும்ராக்கள் கல்வி பயின்றார்.
1961 ஆம் ஆண்டு லால்பேட்டை அரபிக் கல்லூரியில் 3 ஆண்டுகள் கல்வி பயின்று 1964 ஆம் ஆண்டு மவ்லவி ஆலிம் பட்டம் பெற்றார். அமானி ஹஜ்ரத்திடன் நன்கு பேசக் கூடியவர், அரசியல் செய்திகளை சேகரித்து சொல்லக் கூடியவர், செய்தி தொடர்பாளர். அமானி ஹஜ்ரத் கரங்களாலேயே பட்டம் பெற்றவர்.
1958 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் லீக் பற்றி அரபிக் கல்லூரி மாணவர்களிடம் பேசக் கூடியவர். 1964 ஆம் ஆண்டிலிருந்து மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர்களிடம் நன்கு பழகியவர். 1990 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட முஸ்லிம் லீக்கின் துணைத்தலைவராக கமாலுத்தீன் ஹாஜியரால் அறிவிக்கப்பட்டவர்.
மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எஸ். கமாலுத்தீன் அவர்கள் வஃபாத்தானதையடுத்து 05.01.2007 ந் தேதி மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் எம்.பி. அவர்களால் அறிவிக்கப்பட்டார். 29.01.2007 ஆம் தேதி மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு பேராசிரியர் அறிவிப்பை அங்கீகரித்து தலைவராக தேர்ந்தெடுத்தது.
1980 ஆம் வருடம் மறைநேசன் என்ற மாதந்திர பத்திரிக்கையை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நடத்தி வந்தார். மாமேதை மவ்லானா அபுல்ஹஸன் அலி நத்வியின் கருத்துக்களை பத்திரிக்கையில் எழுதி வந்தார். ஜும் ஆ பயான்களிலும் மாமேதைய்ன் கருத்துக்களையே அழகாக பிரதிபலித்து உரை நிகழ்த்துவார்.
முஸ்லிம் லீக் பற்றியே பிரச்சாரம் செய்து வருகிறார். நீண்ட காலமாக முஸ்லிம் லீக் இயக்கத்திலேயே இருந்து வருகிறார்.