காயல் பட்டினத்திற்கு ரூ. 30 கோடி கடையநல்லூருக்கு 21.40 கோடி
ரூ.1,800 கோடியில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி
சென்னை, ஏப்.27:
வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 1,800 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டே பணிகள் தொடங்கும் என்றும், ரூ. 168 கோடியில் திருவண் ணாமலை, கோவில் பட்டி, காயல் பட்டினம், கடைய நல்லூர் ஆகிய நகராட்சி களில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள் ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேர வையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித்துறை, நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங் கல் துறை மீதான விவாதத் துக்கு பதில் அளித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக் களை வெளியிட்டார்:
ரூ. 1,800 கோடியில் வேலூர் கூட்டுக் குடிநீர்
வேலூர் மாவட்டத்தி லுள்ள வேலூர் மாநக ராட்சி, 6 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 64 வழியோர குடியிருப்பு களுக்கு காவேரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட் டத்துக்காக விரிவான அறிக்கையை ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரி யம் தயாரித்தது.
விரிவான கலந்தாய்வுக் குப் பின்னர், நாளொன் றுக்கு 270 மில்லியன் லிட் டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத் துக்கு ரூ.1,500 கோடி வரை நிதி உதவி அளிக்க, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் இசைவு அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திட் டப் பணிகள் மேற்கொள் ளப்படும்.
ரூ. 168 கோடியில் நான்கு நகராட்சிகளில் குடிநீர்
திருவண்ணாமலை நகராட்சிக்கு சாத்தனூர் அணையை நீராதாரமாகக் கொண்டு, ரூ.36.66 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்துடன் புதிய குடி நீர் திட்டம் செயல் படுத் தப்படும்.
கடையநல்லூர் நகராட் சிக்கான புதிய குடிநீர் மேம் பாட்டுத் திட்டம், 2008 -2009ம் ஆண்டில் அறிவிக் கப்பட்டது. இந்த திட்டத் துக்கான ஆய்வுப் பணிகள் முடிந்தது. ரூ.21.40 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக் கப்பட்டு, ஜெர்மன் மேம் பாட்டு வங்கி நிதி ஆதாரத் துடன் செயல்படுத்தப் படும்.
காயல்பட்டினம் நகராட்சி
கோவில்பட்டி நகராட் சிக்கு ரூ.80 கோடி மதிப் பீட்டிலும், காயல்பட்டி னம் நகராட்சிக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டிலும் குடிநீர் திட்டம் செயல் படுத்த விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.
இத்திட்டங்களுக்கான நிதி ஆதாரம் இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. நிதி ஆதா ரம் இறுதி செய்யப் பட்ட வுடன் இத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி
முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல்வேறு நகராட்சி களில் புதிய குடிநீர் திட் டங்கள் இந்த ஆண்டே தொடங்குவதற்கு முடி வெடுத்த தமிழக அரசுக்கும் முதல்வர் கலைஞருக்கும், தமிழக சட்டப் பேரவையில் அறிவிப்புக் கள் வெளியிட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம் முஹம்மது அப+பக்கர் நன்றி தெரி வித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., நன்றி
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் ரூ.1,800 கோடி மதிப்பீட் டில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் அறிவித்தற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மிக முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டார்.
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்கு நன்றி
இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் திருச் செந்தூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ் ணனை சந்தித்து காயல் பட்டினம் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் தொடங்குவதற்கு முழு முயற்சி மேற்கொண்ட தற்கு நன்றி தெரிவித்தார்.