Thursday, April 29, 2010

பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்

பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்

ஹெச். அப்துல் பாசித் எம்.எல்.ஏ., கோரிக்கை


தமிழ்நாடு சட்டப்பேரவையில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹெச் அப்துல் பாஸித் பேசியபோது ,

பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில்ஏராளமான பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்துறையில் ஓய்வூதியம் பெற 20 ஆண்டு கள் பணிபுரிய வேண்டும், குடும்ப வருமானம் ரூபாய் இருபதாயித்திற்கும் மேல் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட ஆறு விதிகள் இருப்பதால், இத்துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

பத்திரிகையாளராக இருந்து அவர்கள் நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் முதல்வர் கலைஞர் பத்திரிகை நண்பர்களின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்துவிட்டு, கேரளாவில் வழங்குவதைப்போன்று ஓய்வு பெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எந்த நிபந்தனையுமின்றி மாதம் குறைந்த அளவு ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.