Thursday, April 8, 2010

அன்பு சமுதாய சகோதரர்களுக்கு,

அன்பு சமுதாய சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்)
கடந்த மாதம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹிதீன் சாஹிப் அவர்களை துபாயில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர்களுடன் 5 நாட்கள் கலந்துரையாடல்களிலும் பல சமுதாய கூட்டங்களிலும் கலந்துகொண்டேன்.

அவர்களுடன் இருந்த நேரங்களில் அரசியல் மற்றும் சமுதாயரீதியான என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் அருமையான முறையில் விடையளித்தார்.இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயம் என்னவேன்றல் இப்படி பெற்ற சமுதாய தலைவர் கிடைத்தது முஸ்லிம் லீக் மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் தான்.
இந்த சிறப்புமிக்க தலைவரை சந்திக்கும் வாய்பை எற்படுத்தி தந்த அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் குத்தலாம் லியாக்கத் அண்ணன் , பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹம்ம‌து தாஹா ,பொருளாள‌ர் கீழ‌க்க‌ரை ஹமீதுர் ரஹ்மான், ஊட‌க‌த்துறை செய‌லால‌ர் முதுவை ஹிதாயத் , செய‌லாள‌ர் ( உறுப்பின‌ர் சேர்க்கை ) கீழை ஹ‌மீது யாசின் மற்றும் அனைத்து முஸ்லிம் லீக் சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த நல்ல தலைமையை பயன்படுத்தி நாம் அனைவரும் அரசியல் ரீதியாக ஒன்று படவேண்டுமே தவிர ,தவறான தகவல்களை நம்பி ஏமாறாமல் இருக்க வென்றும் இதன் மூலம் அணைத்து சமுதாய நலன் கொண்ட சகோதரர்களுக்கும் அன்புடன்
தெரிவித்து கொள்கிறேன்.

என்றும் அன்புடன் ....
துபைலிருந்து
ஷா .ரியாஸ் அஹ்மத் மரைக்காய‌ர்
பரங்கிபேட்டை