ஆலிம் பெருமக்கள் ஆங்கிலம் கற்று இஸ்லாத்தின் பெருமைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும்
எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்
சென்னை, ஏப். 27-
ஆலிம் பெருமக்கள் ஆங்கிலம் கற்று இஸ்லாத் தின் பெருமைகளை உல கெங்கும் பரப்ப வேண்டும் என எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள் விடுத்தார்.
சீதக்காதி அறக் கட்டளை சென்னை வண்டலூரில் உள்ள கீழக் கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி இணைந்து தென் மாநில மத்ரஸா ஆசிரியர் களுக்கு ஆங்கிலப் பயிற்சி நடைபெற்றது. அதன் நிறைவு விழா கிரஸண்ட் பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சி பெற்றவர்க ளுக்கு சான்று வழங்கி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியதாவது-
சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வுக்காக கல்வி ஸ்தாபனங்கள் அமைத்து பல்வேறு அறச் செயல்கள் செய்து வரக்கூடிய சமுதா யப் புரவலர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் நிறுவனங்களின் ஒன்றான கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியில் அரபி ஆசிரியர்களுக்கான ஆங்கிலப் பயிற்சி முகாம் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வ தில் பெருமகிழ்ச்சியடை கிறேன்.
ஒரு சமுதாயம் முன்னே றுவதற்கு கல்வி வளர்ச்சி ஒன்றுதான் ஏதுவாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிலும் குறிப் பாக இஸ்லாமிய மார்க்க கல்வி அறிவு பெற்றிருக்கக் கூடிய உலமாக்கள் ஆங்கில அறிவை அதிகமாக பெறு வதில் பலதரப்பு மக்களுக் கும் கருத்துக்களை எடுத்து இயம்புவதற்கு ஏதுவாக இருக்க முடியும்.
ஒரு கால கட்டத்தில் சுதந்திர வேட்கையின் காரணமாக ஆங்கிலேயர் களின் அடிமைத்தனத்தில் இருக்கிறோமே என்ற காரணத்தால் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று அறிவிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. உலமா பெரு மக்கள் ஹராம் என்று சொன்னது ஒரு மொழிக்கு எதிரானது அல்ல. ஆங்கி லேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த காரணத்தால் அவர்கள் மீதிருந்த வெறுப்பை வெளிக்காட்டு வதற்காக இந்த அறி விப்பை வெளியிட்டார் கள்.
பலதரப்பட்ட மொழி களை அறிந்து கொள்வதில் உலகில் பல பாடங்களை படித்து அறிவை வளர்ப் பதில் இஸ்லாம் எங்கும் எதிலும் தடை விதிப்ப தில்லை. மாறாக அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில் பறந்து விரிந்திருக் கும் உலகத்தில் நீங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள். என்னு டைய ஆற்றலை உற்று நோக்குங்கள் என்று பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
ஹஹராம்| என்ற ஆங் கிலத்தைத்தான் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு உலமாக்கள் பயின்று உல கின் பல்வேறு நாடுக ளுக்குச் சென்று விளக்கிச் சொல்வதற்காக இந்த கல்லூரியில் அரபி ஆசிரி யர்கள் ஆங்கிலப் பயிற்சியை மேற்கொண்டி ருக்கிறார்கள்.
இங்கே உரையாற்றுகிற அமெரிக்க தூதரக அதி காரி இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளையும், இஸ்லாம் காட்டுகிற அமைதி மற்றும் சகோ தரத்துவத் தன்மைகளை யும் சுட்டிக் காட்டினார். இஸ்லாம் அமைதியையும், சகோதரத்துவத்தையும் போதிப்பது மாத்திரமல்ல. அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய எதனை யும் துணிந்து எதிர்க்கக் கூடிய துணிவு கொண்டது. இதனைத் தொடர்ந்துதான் இன்றைக்கு உலகளாவிய அளவில் மிகப் பெரும் சவாலாக இருக்கக்கூடிய தீவிரவாதத்தை இஸ்லாம் கடுமையாக எதிர்ப்பதை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கை கள் மூலமாகவும் இஸ்லா மிய மார்க்க அறிஞர்கள் பேச்சுக்கள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடி கிறது.
அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு நான் சொல்லிக் கொள்வேன். இஸ்லாம் அமைதியை போதிப்பது மாத்திரமல்ல. அமைதியை தன் பேரி லேயே கொண்டிருக்கக் கூடிய மகத்துவத்தையும் பார்க்க வேண்டும். உலகில் அமைதியையும், சாந்தியை யும் தன் பேரில் கொண் டுள்ள இஸ்லாம், யாரா வது தீவிரவாதத்தை கையி லெடுத்துக் கொண்டு எந்த நாட்டில் செயல்படுத்தி னாலும் அவர்கள் மனித இனத்திற்கு முற்றிலும் விரோதமானவர்கள் என பகிரெங்கப்படுத்துகிறது.
இப்படிப்பட்ட மார்க் கத்தை ஊடகத்துறையில் உள்ள சிலர் முஸ்லிம் தீவிர வாதிகள் என செய்தி போடுவது வேதனையளிக் கிறது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. எனவே, பயங்கரவாதத்தை குறிப் பிடும்போது, இந்து தீவிர வாதம் என்றோ, முஸ்லிம் தீவிரவாதம் என்றோ சொல்லிக் காட்டுவது ஏற்க முடியாத ஒன்று.
மதநல்லிணக்கத்தை மனித நேயத்தை உலகிற்கு எடுத்தியம்புவதில் இஸ்லாம் காட்டும் அணுகு முறை அனைவருக்குமே முன் மாதிரியானது. உலகத் தில் பிறந்த ஆண் பெண் அனைவரும் மனித குலத்து மாண்புடையவர்கள். வேறுபடுத்தி பிரிக்க முடி யாதவர்கள். அனைவரும் உற்ற உறவினர்கள் என்ற சகோதரத்துவத்தை இஸ்லாம் ஸ்திரத்தன்மை யுடன் நிலைநாட்டியிருக் கும் மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான் உலகின் பல்வேறு நாடுக ளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் இஸ் லாத்தை தழுவுகின்ற காட் சியை காண்கின்றோம்.
இஸ்லாத்தின் விழுமிய கருத்துக்களை உலகெங் கும் பரப்புவதற்கு ஆங்கில மொழி அறிவு உலமாக்க ளுக்கு அவசியம் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக சீதக்காதி அறக்கட்டளை யும், அமெரிக்கத் தூதரக மும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி பாராட்டத் தக்கது. அதனை சிரமேற் கொண்டு நடத்திக் காட் டிய சென்னை வண்ட லூரில் கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினர் பாராட் டுக்குரியவர்கள்.
இதுபோன்ற பணிகள் தொடர்ந்து நடத்திட மற்ற கல்வி நிறுவனங்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வேண்டு கிறேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.