Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Saturday, August 7, 2010

முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க மறுக்கக் கூடாது நாடாளுமன்றத்தில் எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை

முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க மறுக்கக் கூடாது நாடாளுமன்றத்தில் எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை

குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் முஸ்லிம் மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க மறுக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் எம். அப்துர்ரஹ்மான் கோரிக்கை வைத்தார்.
நாடாளுமன்ற மக்கள வையில் 377-வது விதியின் கீழ் அவசர மற்றும் அவ சிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மீது வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியபோது குறிப்பிட்ட தாவது-
சிறுபான்மை மாண வர்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருப் பதாக ஆங்கிலப் நாளிதழ் களில் இன்று விரிவான செய்திகள் வெளி வந்துள் ளன.
ஒரு லட்சத்துக்கும் மேற் பட்ட முஸ்லிம் மாணவர் கள் குறைந்த பட்சத் தொகை இருப்பில் இல்லா மல் (ஜீரோ பேலன்ஸ்) கணக்கு தொடங்க முடி யாது என மறுக்கப்பட்டுள் ளதாகவும் இவர்களில் மிக அதிகம் பேர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி 2005-ல் வெளியிட்ட அறி விப்பின்படி எந்த வங்கி யிலும் சிறுபான்மை சமு தாய மாணவர்கள் குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் வங்கி கணக்கு திறக்க அனுமதி மறுக்க கூடாது என தெளிவாக அறிவித்தி ருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை மீறி, பல வங்கி களில் கணக்கு தொடங்க தடுப்பதாக தெரிய வருகி றது.
இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, 2007-2008-ம் நிதியாண்டில் வங்கி கணக்கு தொடங்கப் பட்டது 84 சதவீதமாக இருந்தது என்றும், ஆனால் 2008-09-ல் அது வெறும் 4 சதவீதம் தான் என்றும் சொல்கிறது. 2009-ம் ஆண்டு சிறு பான்மை மாணவர்கள் 4 விழுக்காடு மட்டும்தான் வங்கிக் கணக்கு தொடங் கியுள்ளனர் என்பது வேதனைக் குரியதாகும்.
எனவே, அரசு இதுவிஷயத்தில் உடனடி யாக கவனம் செலுத்தி இந்த ரிசர்வ் வங்கியின் அறிவுரை களை அமல்படுத்தி சிறு பான்மை மாணவர்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மாண வர்களுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லாமல் குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் (ஜீரோ பாலன்ஸ்) வங்கி கணக்கு தொடங்க வாய்ப் பளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

Thursday, August 5, 2010

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

http://muslimleaguetn.com/news.asp

நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக புலம் பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்கள் தொடர்பான எனிமி பிராபர்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது நிறுத்தப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏராளமானோர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தா னுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். அப்படி அவர்கள் புலம் பெயர்ந்தபோது தங்கள் சொத்துக்களை அப்படி அப்படியே விட்டுச் சென் றனர். அந்த சொத்துக்களை புலம் பெயர்ந்தோரின் வாரிசுகள் மற்றும் உறவி னர்கள் அனுபவித்து வந் தனர். இந்த சொத்துக் களில் பல அறக்கட்டளை களாகவும், முஸ்லிம்களின் நலனுக்கு பயன்படக் கூடியதாகவும் இருந்து வந் துள்ளன.
எனிமி பிராபர்டீஸ் பில்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்கள் விட்டுச் சென்ற இந்த சொத்துக் களை அரசே கையகப் படுத்த வகை செய்யும் மசோதா நடப்பு நாடாளு மன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட இருந் தது. இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் உச்சநீதி மன்றம் உள்ளிட்ட இந்தி யாவின் எந்த ஒரு நீதி மன்றமும் இந்த விவகாரத் தில் தலையிட முடியாது என்றும், எந்த விசாரணையு மின்றி அரசே இதை கையகப்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில் என்ற இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டால் பஞ்சாப், மகாராஷ் டிரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும், தென் னகத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்படு வர் என்பதை உணர்ந்த முஸ்லிம் தலைவர்கள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
முஸ்லிம் எம்.பி.க்கள் ஆலோசனை
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் ஆலோ சனை கூட்டம் நாடாளு மன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான்கான் இல்லத்தில் நேற்று மாலை (ஆக‌ஸ்ட் 3-ம் தேதி) நடைபெற்றது. பிரதமரை சந்தித்து முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங் களவை துணைத் தலைவர் ரஹ்மான்கான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது, மத்திய மரபுசாரா எரி சக்தித் துறை அமைச்சர் பருக் அப்துல்லா, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச் சர் சல்மான் குர்ஷித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 26 முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில்| என்ற பெயரில் கொண்டு வரப்பட உள்ள இந்த மசோதா தேவையற்ற சர்ச் சைகளையும், விளைவு களையும் உருவாக்கும். புலம் பெயர்ந் தோர் விட்டுச் சென்ற சொத்துக்களை எனிமி பிராப்பரிட்டீஸ் என அழைக்கப்படுவது தேவையற்றது.
இதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்கவில்லை என்றும் எனவே, இதனை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரதமர் உத்தரவு
நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கோரிக் கைகளை கவனமாகக் கேட்ட பிரதமர் உடனடி யாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை தொடர்பு கொண்டு எனிமி பிராப் பரிட்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை நிறுத்த கேட்டுக் கொண் டார்.
பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப் படுவது நிறுத்தப்பட்டது. இது நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் ஒட்டுமொதத முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

Sunday, August 1, 2010

பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு

பயங்கரவாதத்தில் முஸ்லிம்கள் தடுப்பதற்கு சிறப்பு மாநாடு


http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=603&cat=32

Thursday, July 1, 2010

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இணைவோம் இதயத்தால்..

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இணைவோம் இதயத்தால்..

தோப்புத்துறை அ.முஹும்மது நூர்தீன்
அமெரிக்கா (USA)காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு)

இந்த உலகில் எப்படியும் வாழலாம் என்று இஸ்லாம் வழிமுறை சொல்லவில்லை. இப்படி தான் வாழ வேண்டும் என்ற உயாந்த கட்டுபாடுமிக்க மனிட சமுதாயதை உலகிற்கு அறிமுகப்படுத்திய மார்க்கம் தான் இஸ்லாம்.

இந்த புனிதமிக்க மாதமான ரமலானில் எப்போதும் இல்லாத வகையில் அல்லாஹுவின் இறைவசனங்கள் உலகம் முழுவதும் ஒலிக்க கண்டு நம் அனைவர்களும் மெய்சிலிர்த்து போய் இறைமறை தரும் வழியில் வாழ உறுதி எடுக்கும் மனநிலைக்கு வருகிறோம். இந்த உலகில் எத்தனையோ நிகழ்வுகள், வியக்கதக்க சம்பவங்கள், விஞ்ஞான பரிமான வளர்ச்சியின் வெளiபாடுகள் போன்றே எத்தனையோ பல அற்புதங்களை கண்டு வியந்து பரவசமடைந்து இருப்போம் அப்படி இருந்தும் இவைகளை அனைத்தையும் புறம் தள்ளiவிட்டு அதற்கு வழிகாட்டியாக, மனித அறிவிற்கு ஊக்கம் தரும் மருந்தாக சிறப்பான அருட்கொடையாக திகழ்வது எல்லாம் வல்ல அல்லாஹுவின் திருக்குர்ஆன் மட்டுமே.

இறைவனின் வேதம் மற்றும் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையை தன் வாழ்நாட்களiல் ஒவ்வொரு சிறிய, பெரிய காரியம் வரை இணைந்து வலிமைமிக்க சமுதாயமாக வாழ்ந்த முஸ்லிம் சமுதாயம் இன்று வலிமை குன்றிய நிலைக்கு சென்று தங்களiன் முகவரியை தேடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது பெறும் வேதனை தரும் விசயமாக உள்ளது.

அருள்மறையை நாம் என்றும் ஆராய்ந்து பார்ப்பதில்லை, அதில் இருக்கும் போதனையின்படி அன்றாடம் நாம் நடக்க முயற்சி செய்வதில்லை. இறைவேதத்தில் இருக்கும் அரிய பல விசயங்கள் உணர்வுப்புர்வமாய் ஏற்று நடப்பதில்லை அல்லது அப்படி நடந்து வருவதற்கு முயற்சியும் எடுப்பதில்லை.

இம்மைக்கும், மறுமைக்கும் நல்வழிப்படுத்த நபி(ஸல்) அவர்கள் மூலம் திருமறையை கொடுத்த இறைவன் நம் சமுதாயத்திற்கு ஈமான், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹுஜ் என்ற ஐம்பெரும் கடமையை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துள்ளான்.

சாந்தியும் சமாதானத்தை உலகம் முழுவதும் பரவ செய்யும் இஸ்லாம், சமுதாயத்தில் ஒற்றுமையை முன்நிறுத்துகிறது. உலகில் உள்ள பல்வேறு கோட்பாடுகளiலிருந்து தனிதன்மையாக இஸ்லாம் இருக்க காரணம் ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் இருப்பதால் தான்.

இந்த புனித ரமலான மாதத்தில் இறைவனுக்காக நோன்பு நோற்றோம், இறைவனை தொழுது வந்தோம் பிறகு குறிப்பிட்ட காலம் வரும் போது புனித யாத்திரை செல்லுகிறோம் இத்தனை வாழிப்பாடுகளையும் நாம் கூட்டாக ஒற்றுமையை முன்நிறுத்திதான் செயலாற்றுகிறோம், நமக்கு இந்த வாய்ப்புகளை கொடுத்த இறைவன் நன்மைகளை தராள மனதுடன் வாரி வழங்குகிறான். இறைவன் கொடுத்த கடமைகள் அனைத்தும் கூட்டு முயற்சி, உறவு என்ற கலவையில் ஒற்றைமை என்ற அடிப்படையுடன் உள்ளது.


இன்று இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக நம் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளல் குறிப்பாக இளைஞர்கள் அகப்பட்டு அதில் இஸ்லாத்திற்கு விரோதமாக சுழன்று கொண்டுள்ளோர்கள்.

சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள், வாய்ப்புகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் போக காரணம் நம்மிடையே பிணக்கு கொள்வது தான் நம் சமுதாயம் பெரிய அளவில் பலவீனமாக போய்விட்டது. இதுவே சமுதாய பின்னடைவிற்கு காரணம்.

பகட்டு வார்த்தைகள நம்பி பல்வேறு இயங்கம், அமைப்பு என்று சிதறிச் சென்று உங்களiன் உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொடுத்து பல இன்னல்களை பரிசாக பெற்ற சமுதாய உடன்பிறப்புகளே இனிவரும் காலத்தில் உங்களை நீங்களே முன்நிறுத்தி பார்த்து அமைதியாக எந்த வித விளம்பர தோரனையில்லாமல் சமுதாய வளர்ச்சியை மட்டுமே கவலை கொண்ட நம் தாய் சபை முஸ்லிம் லீக் என்ற பேரியக்கத்தில் உங்களை இணைத்து கொண்டு சமுதாய பணியாற்றிட வாருங்கள். சமுதாயத்தை சரியான பாதையில் ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ் வழிநடத்தவில்லையெனில் எதிர்காலத்தில் வரும் இஸ்லாமிய தலைமுறைகள் அடையும் பின்னடைவிற்கு நீங்களே காரணம் என்ற அவபெயர் பெறாதீர்கள், நாளை இறைவனிடம் சமுதாய ஒற்றுமையை பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்ற எச்சரிகையோடு சமுதாயம் எழுச்சி பெற விரைந்து வாருங்கள். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்து கொள்வதே சரியான தீர்வு -

கடந்த மாதம் இறுதியில் எழுச்சிமிக்க தலைவர் பேராசிரியர் அவர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் சமுதாய நாளதழ் மணிச்சுடர் மூலம் உன்னைத்தான் அழைக்கிறேன் உனக்குக் தான் அறிவிக்கிறேன் என் தலைப்பில் முஸ்லிம் லீக் சேர்ந்து சமுதாய பணியாற்றிட சமுதாய இளைஞர் பட்டளத்திற்கு அழைப்பு மடல் அனுப்பியிருந்தார்கள். இந்த அழைப்பையே ஒவ்வொரு சமுதாய கவலைக் கொண்டவர்களும் தனக்கு வந்த தனிஅழைப்பாக ஏற்று கொண்டு வாருங்கள் முஸ்லிம் லீக் தாயுள்ளத்துடன் அரவனைக்க காத்திருக்கிறது.

இஸ்லாம் பிற சமூகங்களுக்கு என்றைக்குமே முன்மாதிரி தான், அது நம் சமுதாயம் வாழ்ந்து காட்டும் ஒற்றுமை மற்றும் மக்களiடையே நல்லிணக்கமாக இருந்து வரும் நற்பண்புகளுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம் லீக் தாய் சபையில் ஒன்றுப்படுவோம். சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவோம். எழுச்சிமிக் தலைவர் மற்றும் இளைய சமுதாயம் கொண்ட மாநில நிர்வாகம் கீழ் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் புதிய எழுச்சி வரலாறு படைக்க வாருங்கள்…நமக்கு கிடைக்க வேண்டிய பொது மற்றும் அரசியல் அங்கீகாரத்தை உரிமையுடன் பெறுவோம். (இன்ஷா அல்லாஹு)

Monday, June 28, 2010

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் தமிழை வளர்த்தனர் செம்மொழி மாநாடு சமய கருத்தரங்கில் தலைவர் பேராசிரியர் பேச்சு

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் தமிழை வளர்த்தனர் செம்மொழி மாநாடு சமய கருத்தரங்கில் தலைவர் பேராசிரியர் பேச்சு

தமிழ் மொழியை - அதன் நெறியை உலகளாவிய அளவில் கொண்டு சேர்க் கும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை முதல்வர் கலைஞரையே சேரும் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் தமிழ றிஞர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள் ளனர் - இன்றும் பாடுபட்டு வருகின்றனர் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் தெரிவித்தார். பேராசி ரியரின் பேச்சை முதல்வர் கலைஞர் கைதட்டி ரசித் தார்.
கோவையில் நடை பெற்று வரும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று சமயம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் இஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசி ரியர் கே.எ. காதர் மொகி தீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது-
தமிழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர் கள் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை நடத் துவதன் மூலமாக உலக மொழிகள் எல்லாம் சேய் மொழிகள் தமிழ் மொழியே அனைத்துக்கும் தாய் மொழி என்ற சிந் தனை உலகளாவிய அள வில் எடுத்து செல்லப்பட் டுள்ளது.
உலக மொழிகளின் வரலாற்றில் ஒரு மொழிக் கென்று இவ்வளவு பெரிய விழா - அதுவும் செம் மொழித் தமிழுக்கு இப்படி யொரு விழா இதற்கு முன்பும் நடந்ததில்லை. இனியும் நடை பெறுவ தற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அளவுக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற் பாடு செய்து நடத்துவதன் மூலமாக, இலங்கைத் தமிழறிஞர் சிவத்தம்பி அய்யா கூறியது போன்று உலகத் தமிழ் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராக முதல்வர் கலைஞர் உயர்ந் துள்ளார். அத்தகைய தலைவரின் வழிகாட்டு தலின்படி இந்த மாநாட் டின் ஒரு பகுதியாக சமயம் வளர்த்த தமிழ் என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து அதில் ஹஇஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை எனக்கு தந்த மைக்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் இஸ்லாம்
தமிழகத்தை பொறுத்த அளவில் இஸ்லாமிய மார்க்கம் கடல் மார்க்க மாகவே வந்துள்ளது, வட இந்தியாவில் முகலாய மன்னர்கள் வந்த பிறகே இஸ்லாம் பரப்பப்பட்டுள் ளது. ஆனால், தென்னகத் தைப் பொறுத்த அளவில் கடல் மார்க்க மாக நீர் வழியாக இஸ்லாம் அறி முகமானது.
நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பதற்கு பல ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத் தோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அரபிகள் சிலர் தமிழகத்திலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து இஸ்லாமிய பிரச் சாரம் நடைபெற்ற காலத்தி லேயே அரபிய வணிகர்கள் மூலமாக தமிழக கடற் கரையோரங்களில் வாழ்ந்த அரபிகள் இஸ்லாம் மார்க் கத்தை ஏற்று முஸ்லிமாக மாறி வாழத் துவங்கி விட் டனர். அவர்கள் அந்த நெறியை தமிழகத்தின் பிற சமூக மக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் தமிழை கற்று கொண்டனர். இதன் காரணமாக ஹஅரபுத் தமிழ்| என்ற புதிய மொழி தமிழ கத்திற்கு அறிமுகமானது.
அரபுத் தமிழ் இலக்கியங்கள்
ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட அரபுத் தமிழ் இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் படைத்து அளித்துள்ளனர்.
டாக்டர் அஜ்மல்கான் பேராசிரியர் சாயபு மரைக் காயர், அறிஞர் எம்.ஆர். எம். அப்துல் ரகீம் போன்ற பெருமக்களின் ஆய்வின் மூலமாக மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை தமிழ் முஸ்லிம் புலவர்கள் இயற்றி தந்துள்ளனர்.
புதிய வகை இலக்கியங்கள்
கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, நொண்டி நாடகம் போன்ற புதிய வகை இலக்கியங்கள் பல வற்றையும் தமிழுக்கு முஸ்லிம் பெருமக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழ் வளர்த்த இஸ்லாமும் இஸ்லாம் வளர்த்த தமிழும்
முஸ்லிம் புலவர்கள் தமிழை வளர்த்தனர். அதேபோல் தமிழால் இஸ்லாம் வளர்ந்தது என்ற கோணத்தை ஆராயும் போது தமிழ்நெறியே இஸ் லாமிய நெறியாக பரிண மித்துள்ளது.
இஸ்லாமிய நெறி ஏகத் துவ அருவ வழிபாட்டை அடிப்படையாக கொண் டது. இதில் எத்தகைய விட்டு கொடுத்தலையும் ஏற்று கொள்ளாத நெறி யாக நிலை கொண்டுள் ளது.
தமிழக சமய நெறிகளை நாம் ஆராய்கின்ற போது அருவ வழிபாடு - உருவ அருவ வழிபாடு - உருவ வழிபாடு என அமைந்தி ருப்பதை காண முடிகிறது.
இதில் அருவ வழிப் பாட்டை அடிப்படை யாக கொண்டே இஸ்லாம் அமைந்துள்ளது.
இறைவனை உருவமற்ற வனாக வழிபடுவதும், இலைமறை காயாக மறைந் திருக்கும். உண்மையை அருவம் என்றால் மறைந் திருப்பது - மறைந்திருக்கும் உண்மைகளை உளமாற ஏற்று பணிந்து உலகுக்கு அறிவிப்பதும், அதை நிலை நாட்டியதும் இஸ்லாமிய நெறியாகும்.
தமிழக இறை சிந்தனை
தொல்காப்பியம் காலம் முதல் இறை குறித்த சிந்தனை தமிழகத்தில் இருந்து வருகிறது. இறை வன் தானே சுயமாக உரு வாகி பற்றுக்கோடு எதுவும் இல்லாமல் தோன்றி தானே அருவமாகி மறைந்தி ருக்கும் தத்துவம் கடந்த பொருளுக்கு - ஹதந்தள| என்ற வார்த்தைக்கு நச்சி னார்க்கினியர் பொருள்.
இந்த இறைவனை ஆயிரக்கணக்கான பெயர் களில் போற்றுகின்ற பழக்க மும் தமிழகத்தில் இருக் கிறது.
திருவாசகத்துக்கு இஸ்லாமே விளக்கம்
ஒரு நாமம் - ஓருருவம் ஒன்றிலார்க்கு ஆயிரம் திருநாமம் கூறி தன் நிலை போன்றோரே - என்ற திருவாசகம் பாடுகின்ற பாடலின் உண்மையான பொருள் - இஸ்லாமிய நெறியை கொண்டே விளக்கமளிக்க முடியும். அப்படிப்பட்ட இஸ்லாமிய கோட் பாட்டை தமிழில் - தமிழ் இலக்கியங்களில் கொண்டு சென்று இலக்கியம் படைத்த பெருமை முஸ்லிம் புலவர்களுக்கு உண்டு.
அன்று முதல் இன்று வரை
இயல் தமிழ் - இசைத் தமிழ் - நாடகத் தமிழ் - சமயத் தமிழ் இன்னும் சொல்லப் போனால் அறிவியல் தமிழ். இன் றுள்ள கணினித் தமிழ் என அனைத்து துறைகளிலும் அன்று முதல் இன்று வரை தமிழின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் சேவையாற்றி கொண்டுள்ளனர்.
அன்றிலிருந்து இன்று வரை பார்க்கும் போது கவிக்கோ அப்துர் ரஹ்மானை எடுத்துக் கொண் டால் தமிழில் அவர் துறை சார்ந்த கவிஞர்களுக்கு புதுக்கவிதை| என்ற வடிவத்தை உருவாக்கி அதற்கு இலக்கணம் வகுத்து கொடுத்துள்ளார்.
3 ஆயிரம் இலக்கியங்கள்
அதுபோன்றே கிஸ்ஸா, முனாஜத், நொண்தி நாடகம் போன்ற புதுப் புது இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத் திய பெருமை முஸ்லிம் தமிழ் புலவர்களுக்கு உண்டு. இப்படி இஸ்லா மிய நெறியை ஏற்றுக் கொண்ட மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் தமிழின் மூலமாக இஸ்லாமிய நெறியை வளர்த்துள்ளனர்.
தமிழ் நெறியே காரணம்
இத்தகைய சிறப்புக் குரிய தமிழ் மொழி இன்று உலகளாவிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக் கிறதென்றால் அதற்கு காரணம் தமிழ் மொழி யில் உள்ள நெறியே ஆகும்.
தமிழ் நெறியே காரணம் ஆகும்
இந்த மாநாட்டை ஏற் பாடு செய்துள்ள முதல்வர் கலைஞர் அவர்கள், மாநாட்டு மைய நோக்கு பாடலாக எழுதியுள்ள வரிகள் தமிழ் நெறியை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் வரிகளாக அமைந்திருக்கின்றன.
அந்த பாடல் வரிகள் தான் தமிழ் நெறியின் உயிர் துடிப்பு. உலகெல்லாம் எடுத்து செல்லும் வாய்ப்பு இந்த மாநாட்டின் வாயி லாக அமைந்திருக்கிறது.
ஒன்றே குலம்@ ஒருவனே தேவன்@
யாதும் ஊரே@ யாவரும் கேளிர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
என்ற அடிப்படையான தத்துவங்கள். அதோடு,
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக என்ற தத்துவம்,
நல்லார் ஒருவர் உளரேல்,
உண்டலமே இவ்வுலகம் - இதுபோன்ற தத்துவங் களை வாழ்வியல் கோட் பாடுகளை கொண்டது தான் தமிழ் நெறி. அந்த நெறிதான் செந்நெறி.
செந்நெறியில் ஒழுக செய்தல் மன்னன் கடமை
எந் நெறியாயினும் இறைவன் தன் மக்களை செந் நெறியின் மேல் இருந்து செய்ய வேண்டும் - என்ற பழமொழி இலக்கி யத்தின் பாடல். அது வலியுறுத்துகின்ற முறை யில் செந்நெறியாம் தமிழ் நெறியில் மக்களை இருக்க செய்யும் வகையில் நாட் டின் ஆட்சியாளராகிய முதல்வர் கலைஞர் அவர்கள் நாட்டு மக்களை தமிழ் நெறியின்பால் இருக்க செய்யும் வகையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளார்.
மதம் கடந்த - சாதி கடந்த உலகளாவிய தமிழ் நெறியை - செந்நெறியை - பொன்னெறியை - நன் னெறியை - இந்த ஒரே நெறியை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல இந்த மாநாட்டினை நடத் தியமைக்காக அவருக்கு நாமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம்.
தலைவர் வாழ்க@ காலமெல்லாம் வாழ்க@ நாளெல்லாம் வாழ்க@ அவர் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் தமிழ் வளரும் நாளாகும் என்பதை தெரி விப்பதோடு,
சமயங்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு! முரண்பாடுகள் உண்டு! அதேபோல் உடன்பாடு களும் உண்டு, வேறுபாடு களை மறந்து விட்டு முரண் பாடுகளை ஒதுக்கி விட்டு, உடன்பாடுகளையே நெறிப்படுத்துகின்ற மொழி யாக தமிழ் மொழி இருக் கிறது. தமிழ் நெறி இருக் கிறது.
அந்த நெறியை உலகளா விய அளவில் கொண்டு செல்வதன் மூலம் நன்மை கள் விளையும் என்பதை உணர்ந்து கலைஞர் காட்டு கின்ற வழியில் செல்வோம்! வெல்வோம்! என்று கூறி முடிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
முதல்வர் கைதட்டி ரசித்தார்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பேசிக் கொண்டி ருக்கும் போதும், பேசி முடித்த போதும் பார்வை யாளர்கள் கை தட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் கலைஞரும் மிகவும் ரசித்து கைதட்டி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநிலச் செயலாளர்கள் காயல் மகப+ப், கமுதி பஷீர், மில்லத் இஸ்மாயில், இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் ஹமீது, கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்ற னர்.

Tuesday, June 22, 2010

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன் கோவைக்கு நான் சென்றிருந்தேன்.
கோவை சிறையில் பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் சிறைவாசிகளின் குடும்பத்தார் பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஏராளமானோர் என்னை வந்து சந்தித்தனர். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருவதாகவும், அவர்களை விடுவிக்க முதல்வர் கலைஞரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து கண்ணீர் விட்டனர்.
இந்த இளைஞர்களெல் லாம் சிறையில் வாடுவதற்கு யார் காரணம்? ஏன் இத் தகைய நிலை ஏற்பட் டது? அவர்களுக்கு தவறாக வழிகாட்டியவர்கள் யார்? சிறை சென்றதால் என்ன பெருமை ஏற்பட்டு விட்டது? இதைப் பற்றியெல்லாம் சிறையில் இருப்பவர்களும், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந் நிலைமை இனி ஒருபோதும் ஏற்பட்டு விடக் கூடாது. முஸ்லிம் லீகைச் சார்ந்த எந்த ஒரு தொண்டர் மீது ஹநிய+சென்ஸ்| வழக்குகூட ஏற்பட்டு விடக் கூடாது என கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அவர் காட்டிய வழியில் தான் நாங்களெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
குடும்பத்தின் ஆண்கள் சிறையில் இருப்பதால் அந்த குடும்பங்கள் படுகின்ற வேதனையும், இழப்புகளும் சொல்லிக் காட்ட இயலாதவை. அதனால் இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிளை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் கலைஞர் அவர்களையும், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் நாங்கள் சந்தித்து கோரிக்கை வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படக் கூடியவர்கள் அவர்கள். இதிலும் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் நமக்கு உண்டு.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எதையும் அமைதி வழியிலும், ஜனநாயகரீதியிலும் தான் செயல்படுத்தும். அந்த வழிதான் வெல்வதற்கு உண்டான வழி.
சமூகங்களிடையே இணக்கமாக வாழ்வதற்கு இந்த வழியைத்தான் இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வழியில் செல்வதற்கு முன் வருகின்ற இளைஞர்களை வாருங் கள் என வரவேற்கிறோம்.
(- சென்னை லாயிட்ஸ் சாலையில் ஜூன் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆற்றிய உரையிலிருந்து......)

Sunday, June 13, 2010

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகின் அரசியல் அணுகுமுறைகளையே சமுதாயம் அங்கீகரிக்கிறது

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகின் அரசியல் அணுகுமுறைகளையே சமுதாயம் அங்கீகரிக்கிறது

கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைவர் பேராசிரியர் பேச்சு


சென்னை, ஜூன்.11-

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களை உண்மையில் மதிக்கக் கூடியவர்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்பட மாட்டார் கள், அப்படி செயல்படக் கூடியவர்களுக்கு காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பேசும் தகுதியும், உரிமையும் கிடையாது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எடுக்கும் அரசியல் அணுகுமுறை களையே சமுதாயம் அங் கீகரித்து வருகிறது என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

கரூர் மாவட்டம் பள்ள பட்டியில் நடை பெற்ற ஹகல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைமை வகித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதா வது-

காயிதெ மில்லத் பிறந்தநாள்

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவினை ஆண்டு தோறும் கல்வி உதவி வழங் கும் விழாவாக முஸ்லிம் லீக் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம் லீக் பிரைமரிகள் சார்பில் அந்த தினத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளும், இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித்தொகை போன்றவற்றை வழங்குவது வழக்கமாக நடந்து வரு கிறது.

இந்த ஆண்டு மாநில அளவில் இது ஹகல்வி விழிப்புணர்வு மாநாடாக| ஏற்பாடு செய்யப் பட்டு மிகச் சிறப்பாக நடை பெற்று கொண்டிருக்கி றது. மாநாட்டு வர வேற்பு குழுத் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான நமது அருமைக்குரிய எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர் களுடன் இணைந்து கரூர்மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவ ரும் சிறப்பாக இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார் கள்.

முதல்வர் கலைஞர்,

துணை முதல்வர் வாழ்த்து

நமது மரியாதைக்குரிய தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு தங்க ளது வாழ்த்துச் செய்தி களை அனுப்பி வைத்து நம்மை யெல்லாம் பெருமைப் படுத்தியிருக் கிறார்கள். நமது தேசியத் தலைவர் இ.அஹமது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்நாள், முன் னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், கல்வி யாளர்களும் பல மாவட் டங்களிலி ருந்தும் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகள், பெற்றோர் கள், ஆசிரியர்கள் என பலரும் கூடி சிறப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர் களின் வாழ்க்கையானது இந்திய சிறுபான்மை சமு தாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்க ளுக்கு வழிகாட்டுதலும், படிப்பினையும் நிறைந்த தாக அமைந்திருக்கிறது. காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் பாட மாக இருந்தது. அதில் இடம் பெற்ற ஒரு சம்பவம் நம்மில் பலரும் படித்திருக் கலாம்.

ஒரு முறை காயிதெ மில்லத் அவர்கள் அவ ரது தாயார் இரவு உறங்கும் போது அவரது கால் மிகவும் வலிக்கிறது என் றும், சற்று நேரம் காலை பிடித்து விடுமாறும் காயிதெ மில்லத் அவர்களி டம் கூறியுள்ளார். தாயின் ஆணைப்படி காயிதெ மில்லத் அவர்கள் அவ ருக்கு பணிவிடை செய்துள் ளார். சற்று நேரத்தில் தாயார் உறங்கி விட்டார். ஆனாலும், காயிதெ மில்லத் அவர்கள் தாயா ரின் காலை பிடித்தபடியே இருந்திருக்கிறார். அதி காலை கண்விழித்தபோது காயிதெ மில்லத் உறங்கா மல் தனது காலை பிடித் துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது தாயார் ஏன் மகனே நீ உறங்கவில் லையா? என்று கேட்டுள் ளார். அதற்கு காயிதெ மில்லத் அவர்கள், ஆமாம் அம்மா, தாங்கள் போதும் என்று சொல்லவில்லையே? அதனால்தான் நான் தாங்கள் இட்ட கட்ட ளையை தொடர்ந்து செய் தேன் என்று கூறினார். இந்த அளவுக்கு அவர் தாயாருக்கு பணிவிடை செய்தார் என்றால் நிச்சய மாக அவர் இறைவனுக்கு மிகவும் நேசமானவராக திகழ்ந்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சம்பவத்தை மார்க்க அறிஞர்கள் நமக்கு சொல் லிக் காட்டியிருக்கிறார்கள். ஒருமுறை காட்டில் மழைக்காக ஒரு குகையில் ஒதுங்கிய 3 நபர்கள் குகை வாயில் மூடிக் கொள்ள சிக்கிக் கொண்டனர். அந்த குகையை ஒரு மிகப் பெரிய பாறை மூடிக் கொண்டு விட்டது. அந்த குகையி லிருந்து மீள்வதற்கான எந்த வழிவகையும் அவர்களுக்கு தென்படவில்லை

அப்போது அவர்கள் மூவரும் தாங்கள் கடந்த காலத்தில் இறைவனுக்கு அஞ்சி செய்த காரியங் களை நினைவுப்படுத்தி அதன் பொருட்டால் இறைவன் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.

இறைவன் மீது அச்சம்

ஒரு நபர், ஹஇறைவா நான் வயது வந்த என் பெற்றோருக்கு பணி விடை செய்தது உனக்கு அஞ்சிய காரணத்தால் தான் ஏழையான நான் தின மும் ஆட்டுப் பாலை கறந்து வந்து அதனை பெற் றோருக்கு அருந்தக் கொடுத்தேன். பெற்றோர் அதனை அருந்திய பிறகே எனது மனைவி, பிள்ளைக ளுக்கு கொடுத்து பிறகு தானும் உண்பதை வழக்க மாக கொண்டேன். அப் படி ஒரு முறை பெற்றோருக்காக பால் கொண்டு வந்தபோது, அவர்கள் இருவரும் உறங்கி விட்டார்கள். அவர்கள் விழிக் கும் வரை காத்திருந்து அவர்கள் அருந்திய பிறகே நானும், எனது குடும்பமும் அருந் தினோம். இதற்கு காரணம் இறைவன் மீதான அச்ச உணர்வே என்று கூறி, இதன்பொருட்டால் தங் களை சூழ்ந்துள்ள ஆபத் திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த் தித்தார். வாயிலை அடைத் திருந்த பாறை கொஞ்சம் விலகியது.

அதேபோன்று இரண் டாம் நபர் தனது நெருங் கிய உறவுக்கார பெண்ணி டம் தனிமையில் இருந்த போது, எனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன். அவள் மறுத்த போதும் நான் பலாத்காரத்திற்கு முற்பட்ட போது அந்த பெண் ஹஅல்லாஹ்வுக்கு அஞ்சி என்னை விட்டு விடு| என கூற, நானும் இறை வனின் அச்சத்தால் அந்த பாவகாரியத்தை செய்யா மல் விலகி விட்டேன் என்பதை கூறி அதன் பொருட்டால் தங்களை சூழ்ந்த ஆபத்திலிருந்து விடுவிக்கும்படி இறைவ னிடம் பிரார்த்தித்தார். பாறையும் இன்னும் அதிகம் விலகியது.

மூன்றாம் நபர், இறைவா, என்னிடம் ஒரு நபர் ஒரு ஆட்டைத் தந்து பின்னர் அதனை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். அந்த ஒரு ஆடு பல ஆடுகளாக பெருகி பெரிய மந்தையாகி விட் டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வந்து தான் கொடுத்த ஆட்டை கேட் டார். நான் அந்த மந் தையை காட்டி அது உன்னுடையது, எடுத்துக் கொள் என்றேன். நான் ஒரு ஆடுதானே தந்தேன் என்று அவர் சொன்ன நேரத்தில் அந்த ஒரு ஆட்டிலிருந்து பெருகியதுதான் இந்த மந்தை. அது உனக்கே சொந்தம் என்றேன். இறைவா உன் மீது உள்ள அச்சத்தின் காரணமாகத் தான் நான் இவ்வாறு சொன்னேன். அதன் பொருட்டால் இந்த ஆபத் திலிருந்து நீ எங்களை காப் பாற்று என்று பிரார்த்தித் தார்.

பாறை முழுவதுமாக விலகி மூவரும் குகையிலி ருந்து வெளிவர அல்லாஹ் உதவினான்.

நாம் செய்யக் கூடிய ஒவ் வொரு காரியமும் அல்லாஹ்வின் பொருத்தத் திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண் டும்.

சமுதாய வழிகாட்டி

காயிதெ மில்லத்தை இந்த சமுதாயம் ஏற்று போற்றுகிறதென்றால் அவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி செய்த காரியங்க ளால்தான்.

காயிதெ மில்லத் என்ற சொல்லுக்கு சமுதா யத்தின் வழிகாட்டி என் பது பொருள். காய்து என்றால் ஒட்டகத்தை வழி நடத்திச் செல்பவர் என்று பொருளாகும். சாய்து என்றாலும் அதுதான் பொருள். ஆனால் சாய்து என்னும்போது ஒட்டகத் தின் மீது ஏறி அதனை ஓட்டிச் செல்பவர் என்றும், காய்து என்றால் ஒட்ட கத்தின் மூங்கணாங்கயிறை பிடித்துக் கொண்டு கற் களும், முட்களும் படாத வகையில் கவனமாக வழி நடத்துபவர் என்றும் பொருள்படும் என்று மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக் கெல்லாம் சொல்லிக் காட்டியுள்ளார்கள்.

இந்திய சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்தை எந்த துன்பமும், துயரமும் தாக்கிடா வண்ணம் கவன மாக இந்த சமு தாயத்தை வழி நடத்துபவர் என்ப தால்தான் காயிதெ மில்லத் என்ற பெயரால் அவரை அழைக்கிறோம்.

தகுதியும்-உரிமையும்

இன்று காயிதெ மில்லத் அவர்களை பற்றி அனைத் துக் கட்சியினரும் பேசு கின்றனர். நமது சமு தாயத்தில் பல அமைப்பு களும் காயிதெ மில்லத்தின் பெயரை, படத்தை பயன் படுத்துகின்றனர். காயிதெ மில்லத்திற்கு தாங்கள் மரியாதை செலுத்துவதாக சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் காயிதெ மில் லத்தை மதிக்கக் கூடியவர் கள் அவரது கொள்கை களை, லட்சியங்களை கடைபிடிக்கக் கூடியவர்க ளாக அதனை பிரச்சாரம் செய்யக் கூடியவர்களாக அந்த லட்சியம் நிறைவேற பாடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்தக்கூடியவர்களாக வளர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்படக்கூடியவர்கள், கேடுபாடுகள் விளைவிக்கக் கூடியவர்கள் அதன் பணிக்கு - பயணத்திற்கு, வளர்ச்சிக்கு இடைய+று செய்யக் கூடியவர்களுக்கு நிச்சயம் காயிதெ மில்லத் குறித்து பேசும் தகுதியோ, உரிமையோ இருக்க முடியாது

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் நிலைபாடுகளைத் தான் இந்த சமுதாயம் ஏற்று அங்கீகரிக்கிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முடிவுகளை - தீர்மானங் களை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. அப்படியிருக்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எவரும் அரசியல் கற்றுத் தர வேண்டிய அவசிய மில்லை. எப்படி தீர்மானங் கள் எழுத வேண்டும் என்று எவரும் எங்களுக்கு சொல்லிக் காட்ட ஆசைப் படக் கூடாது.

இனி

பொறுக்க மாட்டோம்

முஸ்லிம் லீகின் குரலுக்கு எதிரான குரலை ஒலிப்பார்களானால் அதனை இனிமேல் அனும திக்க முடியாது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக எவராவது கையை தூக்குவார்களானால் இனி மேல் அவ்வாறு தூக்கும் கையை இறக்கும் பணியை நாம் செய்தாக வேண்டும். இவ்வளவு நாட்களாக நாம் இந்த விஷயங்களில் பொறுமை காத்தோம். ஆனால், நமது பொறு மையை - சகிப்புத் தன் மையை நமது சமுதாயம் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார் கள். சமுதாய உணர்வுக்கு மதிப்பளித்து நாமும் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம்.

இந்த மாநாடு அதற் கான துவக்கமாக அமைந் திருக்கிறது. இங்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பல வகையி லும் பணியாற்றிய சான் றோர் பெருமக்களுக்கு காயிதெ மில்லத் பெயரால் விருதுகளும், பரிசளிப்புக ளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச் சான் றிதழும், பரிசளிப்பும் செய் யப்பட்டு கவுரவிக்கப்பட் டுள்ளனர். இதன் மூலம் இன்னும் பலர் சமுதாய முன்னேற்ற காலங்களில் அக்கறை செலுத்த வேண் டும். ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இவையெல்லாம் நடைபெறுகின்றன.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் பேசினார்.

Thursday, April 29, 2010

முஸ்லிம்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

முஸ்லிம்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பேச்சு


ராமநாதபுரம், ஏப்.29-

ராமநாதபுரம் மாவட் டம் வாணி கிராமத்தில் 28-4-2010 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு வாணி கிளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் யூ. லியாகத் அலி தலைமை ஏற்றார். வாணி ஜமாஅத் தலைவர் எ. செய்யது அபு தாஹீர், மலேசியா எ. சவுக்கத் அலி, பொருளா ளர் இ. அப்துல் கரீம் முன்னிலை வகித்தனர்.

வாணி பள்ளிவாசல் பேஷ் இமாம் முஜிபுர் ரஹ்மான் கிராஅத் ஓதி னார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரும், மாவட்டச் செயலாளருமான எம்.எஸ். ஏ. ஷாஜஹான் கொடியேற்றி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது.

சுதந்திர இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய இஸ்லாமியர் களின் அரசியல் இயக்க மாக செயல்பட்டு வருகி றது. இந்திய அரசியல் சாசனத்தில் வழங் கப்பட்டுள்ள இஸ்லாமியர் களின் உரிமைகளை ஆட்சி யாளர்களாலும், மதவாத சக்தியாலும் பாதிப்புகள் ஏற்படும்போதெல்லாம் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் அதை எதிர்த்து இன்றளவு குரல் கொடுத்து வந்து கொண்டிருக்கிறது

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இஸ் லாமியர்களின் ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமான மசோதாக்கள் வரும் போதெல்லாம், அதை எதிர்த்து குரல் கொடுத்து நம்முடைய தனித் தன்மையை பாதுகாத்து வரக்கூடிய இயக்கம். இந்த இயக்கம் நூறாண்டு வர லாற்றைப் பெற்றிருக்கும் இயக்கமாகும். இன்று இந்த இயக்கத்தின் கொடி ஏற்றி வைத்து தங்களை இயக் கத்தில் இணைத்துக் கொண்ட பொது மக்கள் ஒரு வரலாற்றுப் பாதையில் தங்களை இணைத்துக் கொண்ட பாக்கியம் பெற் றவர்களாக ஆகிறார்கள்.

அல்லாஹ்வுடைய நாமத்தையும், நபிகளாரின் வாழ்க்கை நெறியையும் பாதுகாத்து நடைபோட் டுக் கெண்டிருக்கும் இயக் கத்தில் தங்களை இணைத் துக் கொண்டது அல் லாஹ்வின் அன்பிற்குரிய வர்களாகவும் ஆகிக் கொண்டார்கள். உங்களு டைய பணி தொடர்ந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிப் பாதையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எம்.எஸ்.எ. ஷாஜஹான் குறிப்பிட் டார்.

செயலாளர் உபை துல்லா, மலேசியா முஹம் மது ஈசா, உப தலைவர் எம். ஜமால் முஹம்மது, பாத்திமா கனி ஹஜ் சர்வீஸ் அப்துல் அஜீஸ், மலேசியா வாணி முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அமீர் அம்சா, மாவட்ட துணைச் செய லாளர் லியாகத் அலி, மாவட்ட துணைச் செய லாளர் அப்துல் ஹமீது, நகரப் பொருளாளர் ஆர். முஹம்மது யாகூப் ஆகி யோரும் ஜமா அத்தார் களும், பொது மக்களும் கலந்து கொண்ட னர். பி.ஏ. ஹாஜா நஜீமுதீன் நன்றி கூறினார்.

Tuesday, April 20, 2010

முஸ்லிம் பள்ளிகளில் உருது மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம் பள்ளிகளில் உருது மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஷரீஅத் விளக்க மாநாடு

கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா ஷரீஅத் விளக்க மாநாடு விருத்தாசலம் நவாப் பள்ளிவாசலில் நடந் தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். விருத்தாசலம் முத்தவல்லி நவாப் ஜாமிஆ மஸ்ஜித் அப்துல் மஜீது, டவுன் ஜீம்ஆ மஸ்ஜித் சையது முகம்மது, ஷேக்கவுஸ்மியான், அப்துல் ஹமீது, சத்தார்பாஷா, சையது இப்ராஹீம், முகம்மது ஜவ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமா அத்துல் கடலூர் மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் வரவேற்றார். விருத்தாசலம் நகர செய லாளர் முகம்மது சாலிஹ், இஸ்மாயில் நாஜி, முகம்மது இஸ்ஹாக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட தலைவர் நூருல் அமீன் தொடக்க உரை யாற்றினார்.

திண்டுக்கல் ïசுபிய்யா அரபிக்கல்லூரி கலீல் அகமது மாநில துணைத் தலைவர் சலாஹீத்தீனும், மாநில பொதுச்செயலாளர் அப்துல்காதிர், சதீதுத்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாநாட்டில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய முறைப்படி...
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-
*சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலமாக முஸ்லிம்களின் உருது பள்ளிகளில் தாய் மொழியான உருதை விருப்ப பாடமாக்கப்படும் போது 2-ம் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே முஸ்லிம்களின் நலன் கருதி உருது பள்ளியில் உருது மொழியை கட்டாய பாட மாக்கப்பட வேண்டும்.

*ஆடு, மாடுகளை இஸ்லா மிய முறைப்படி நேரடியாக அறுப்பதை தொடர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.


*புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் புனி ஹஜ் கடமையை சரிவர நிறைவேற்றிட, அவர்களுக்கு சட்டங்களை தெளிவாக்கி, கடமை முழுமை பெற விமானத்திற்கு ஒரு ஆலிமை வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்.

வரதட்சனை வாங்காமல்...

*விருத்தாசலம் பகுதிகளில் பெண்கள் கலைக்கல்லூரி நிறுவ வேண்டும்.

*கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் சுமூகமாக பேசி உறவை தொடர வேண்டும். முடியாத பட்சத்தில் கணவன் ஒரே ஒரு தலாக்கை மட்டும் பயன்படுத்தி கணவன்- மனைவி உறவை முறித்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 3 தலாக் விடுவது அல்லாவின் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே இஸ்லாமியர்கள் இது போன்ற செயல்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.

*அல்லாவின் கட்டளைக்கு ஏற்ப வரதட்சனை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் முடிப்போம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

அரசுக்கு நன்றி

*சமீபத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய திருமண பதிவு சட்டத்தில், பள்ளிவாசலில் பதிவு செய்யப் படும் பதிவு நகலை சிறிய மாற்றத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஜமாஅத்துல் உலமா பேரவையின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு இம்மா நாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

முடிவில் பொருளாளர் அப்துர்ரஜ்ஜாக் நன்றி கூறினார்.

http://lalpetexpress.blogspot.com/2010/04/blog-post_1551.html
--
லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
http://lalpetexpress.blogspot.com/

Tuesday, February 23, 2010

தி.மு.க.பொதுக் குழு தீர்மானம்: முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் வரவேற்கிறது

தி.மு.க.பொதுக் குழு தீர்மானம்: முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் வரவேற்கிறது


தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக் குழுவில் முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கைக்கு உரிய மதிப்பு அளித்து, திருமணச் சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஏற்பட் டுள்ள ஐயப்பாடுகளைக் களைவதற்கு உறுதி அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை நன்றியோடு வரவேற்கிறோம்.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஏகக் குரலில் சமுதாயத்தின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றன.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

எனும் திருக்குறள் மந்திரத்துக்கு ஏற்ப, தி.மு.க., தனது பொதுக் குழு தீர்மானத்தின் மூலம் மத்திய மாநில அரசு பிரதிநிதிகள் முஸ்லிம் சமுதாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் சமுதாயப் பெருமக் களும் இந்தத் தீர்மானத்தை நன்றியோடு வரவேற்பர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டத் துக்கு பாதிப்பு ஏற்படும் என்று முஸ்லிம் சமுதாயம் ஐயப் பாட்டைத் தெரிவித்தவுடன் தி.மு.கழகம் தனது பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி முஸ்லிம்களின் உணர்வு களுக்கு உரிய மதிப்பளிப்பதையும் பார்க்கிறோம்.

அதே சமயத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னே நாட்டில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதை முஸ்லிம் சமு தாயம் கடுமையாக எதிர்த்தது.

தமிழகம் எங்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பெற்று பொதுச்சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக முஸ்லிம் சமுதாயம் தனது உணர்வை வெளிப்படுத்தியது.

அன்று முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, தனது அ.இ.அ.தி.மு.க., பொதுக் குழுவைக் கூட்டினார். நாட்டில் பொது சிவில் சட்டம் வந்தே ஆக வேண்டும்@ மத்திய அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். அடுத்த நாள் காலை நாளிதழின் முதல் பக்கத்தில் எட்டுக்காலம் செய்தியாக கொட்டை எழுத்தில் அது வெளிவந்தது.

அதையும் நினைக்கிறோம்@ இன்று தி.மு.க., நிறை வேற்றியுள்ள இதையும் நினைக்கிறோம். தமிழக முதல்வர் கலைஞருக்கு முஸ்லிம் சமுதாயம் காட்டும் நன்றிப்பெருக்கு இரட்டிப்பாகிறது.

திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் வரும்போது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் உள்ளம் ப+ரித்து நன்றி தெரிவித்து மகிழும்.

-பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன்

தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

தமிழ்நாடு மாநிலம்

Monday, February 1, 2010

திருமண கட்டாய பதிவுச் சட்டம் முதல்வரை சந்தித்து முஸ்லிம்களின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்வோம்

திருமண கட்டாய பதிவுச் சட்டம் முதல்வரை சந்தித்து முஸ்லிம்களின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்வோம்
தலைவர் பேராசிரியர் அறிவிப்பு


இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட இயக்கங் களிலிருந்து விலகி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஆயிரக்கணக்கானோர் இணைந்த நிகழ்ச்சியில் அவர்களை வரவேற்று பேசுகையில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது:

இன்று திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை வைத்து சிலர் அரசியல் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத் திற்கும், தமிழக அரசிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்.

நான் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இரண்டு வருட காலமாகவும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம். இஸ்லாமிய திருமணங்கள் காலம் காலமாக பள்ளிவாசல் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு பத்திரமாக பராமரிக்கப் படுகின்றன.

அரசு இதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதுதான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு. திருமணங்கள் காஜிகளாலும், அவரது சார்பிலான நாயிப் காஜிகளாலும் நடத்தப்படுகின்றன. இந்த முறைகளால் ஜமாஅத்துக்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்க முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

தற்போது, திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டு சர்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என சொல்லப்படுகின்ற நேரத்தில் அந்த பதிவிற்காக சில சான்றாவணங்கள் இணைக்கப்படும் விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் சந்தேகங்களை கொண்டுள்ளது. இது ஷரீஅத் சட்டத்திற்கு பாதகத்தை ஏற்படுத்திவிடுமோ? என்ற ஐயப்பாடு உள்ளது.

எனவே, இதுபற்றி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்து முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்லி பள்ளிவாசல்களில் பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் அந்த பதிவேட்டை அரசு அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம். இதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் வரக்கூடிய எந்தவொரு செயலையும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொறுத் துக்கொள்ளாது. அதனுடைய நூற்றாண்டுக்கால வரலாறே இதற்கு சாட்சி.

1937லேயே வக்ஃபு சட்டத்தை கொண்டுவந்தவர் முஹம்மதலி ஜின்னா, ஷரீஅத் சட்டத்திற்காக அரசியல் நிர்ணய சபையில் வாதாடியவர் காயிதெ மில்லத், ஷரீஅத் சட்டம் காப்பாற்றப்பட நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா. இவர்களெல்லாம் முஸ்லிம் லீகுடைய தலைவர்கள்.

புதிதாக புறப்படுகின்றவர்கள் வரலாறு தெரியாமல் முஸ்லிம் லீகைப்பற்றி புறம் பேசி அலைகிறார்கள்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரையில் மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் பேச்சை இந்த சமுதாயம் கண்ணை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் என்று சொல்லிவரக் கூடியவர்கள். காரணம், 1400 ஆண்டுகளாக குர்ஆன் வழியில், நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்த நடைமுறையில் உரிய வழிகாட்டுதலை செய்து வரக் கூடியவர்கள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்.

மார்க்க விஷயங்களில் உலமா பெருமக்கள் சொல்வது தான் சரியானது. தெருவில் மேடைபோட்டு வியாக்கியானம் செய்வதை இது விஷயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, மார்க்கம் என்று வருகிறபோது உலமாக்கள் சொல்வதை கேளுங்கள். அரசியல் என்று வருகிறபோது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சொல்வதை கேளுங்கள்.

அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு செயல்பாடும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காகவே இருக்கும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

Friday, January 22, 2010

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: பொதுமக்களின் ஆதரவை திரட்டுவோம்

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: பொதுமக்களின் ஆதரவை திரட்டுவோம்
பெங்களூரு தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தேசிய தலைவர்இ.அஹமது முழக்கம்


பெங்களூரு, ஜன,16-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 2நாள் தேசிய பிரதி நிதிகள் மாநாடு கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சாதாப் மஹால் வளாகத்தில் நேற்று எழுச்சியுடன் துவங்கி யது.

நேற்று மாலை 4.30 மணி யளவில் துவங்கிய மாநாட்டில் பெங்களூரு சாதாப் பள்ளி வாசல் இமாம் மௌலானா முஹம்மது ரஹ்மத்துல்லா கிராஅத் ஓதினார்.

மறைந்த தலைவர்கள், குலாம் மஹ்மூத் பனாத் வாலா, பாலக்காடு ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட முஸ்லிம் லீகினரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சிறப்பு துஆ ஓதப்பட்டது.

கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் துஆ ஓதினார். தேசிய செயலாளர் தஸ்தகீர் ஆகா வரவேற்புரை யாற்றினார்.

தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமுhன பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே இணை யமைச்சருமான இ.அஹமது பயங்கரவாத நடவடிக்கைகளில் எந்த முஸ்லிமும் பங்கேற்க முடி யாது என்றும், இஸ்லாமிய கொள்கைகள் நவீன தொழில் நுட்பத்திற்கு எதி ரானவை அல்ல என்றும் தெரிவித்தார்.

இ.அஹமது தனது உரையில் குறிப்பிட்டதா வது-

பாராளுமன்றம் தொடங்கிய காலத்திலி ருந்து நமது கட்சி அங்கே பிரதிநிதித்துவம் வகித்து வருகிறது. 1952லிருந்து 57 வரை காலஞ்சென்ற ஜனாப் பி. போக்கர் சாஹிப் பாராளுமன்றத்தில் ஏகப் பிரதிநிதியாக பணியாற்றி னார். அவர் ஒரு ஆளாக இருந்தாலும் மலபாரை சேர்ந்த அந்த பாரிஸ்டர் தனது மிருதுவான ஆனால் உறுதியான குரல் மூலம் தேசத்தின் முக்கியமான சட்டங்கள் நிறைவேற் றும் போது முக்கிய பணியாற்றி யிருக்கிறார். அதன் பிறகு மக்களவையில் காயிதெ மில்லத் முஹம்மது இஸ் மாயில் சாஹிப், இப்ரா ஹீம் சுலைமான் சேட் சாஹிப், சி.எச். முஹம்மது கோயா சாஹிப், எஸ்.எம்,. ஷரீப் சாஹிப், ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், அபுதாலிப் சவுத்ரி, ஜி.எம். பனாத் வாலா, பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் போன்ற நமது தலைவர்கள் மக்கள வையில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

அல்லாஹ்வின் அரு ளால் மக்களவைக்கு நான் 6 முறை தேர்ந்தெடுக்கப் பட்டி ருக்கிறேன். தற்போது மக்களவையில் எனது கூட் டாளிகளாக பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட இ.டி. முஹம்மது பஷீர், வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம். அப்துர் ரஹ்மான் ஆகி யோர் பணியாற்றி வருகி றார்கள்.

தற்போது மக்களவை யில் நாங்கள் 3 பேர் உறுப் பினர்களாக இருக்கிறோம்.

ராஜ்ய சபாவை பொறுத்தவரை காலஞ் சென்ற காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட் சாஹிப். ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், ஏ.கே. ரிபாயி சாஹிப், காஜா மொய்தீன், பி.வி. அப்துல் கோயா சாஹிப், ஹமீத் அலி ஸாம்நாத் சாஹிப், எம்.பி. கொரம்பயில் அஹமது ஹாஜி மற்றும் அப்துல் அலி சம்நாத் சாஹிப், எம்.பி. அப்துஸ் ஸமத் ஸமதானி போன்றோர் பல் வேறு கால கட்டங்களில் உறுப்பினர்களாக பணி யாற்றியிருக்கிறார்கள்.

தற்போது கேரளாவைச் சேர்ந்த பி.வி. அப்துல் வஹாப் சாஹிப் உறுப்பி னராக இருக்கிறார்.

தற்போதைய நிர்வாகிகள்

தற்போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் நிர்வாகிகளாக இருப்பவர் கள் வழக்கம்போல் சிறப் பாக பணியாற்றி வருகி றார்கள் என்பதை தேசியத் தலைவர் என்ற முறையில் நாம் மிகவும் நம்பிக்கை யோடு பார்க்கிறேன். நமது பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப், பொரு ளாளர் தஸ்தகீர் ஆகா, துணைத்தலைவர்கள் அஹமது பக்ஷ், இக்பால் அஹமது, செயலாளர்கள் அப்துல் ஸமத் ஸமதானி சாஹிப், நயீம் அக்தர், இஸ்மாயில் பனாத்வாலா, தாஹிம்ஷா ஜஹாங்கீர் மற்றும் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் அடங்கிய அணிக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது மாநிலத் தலைவர் களுடன் இணைந்து நமது இயக்கத்தை எல்லா மட்டங்களிலும் உயர்த்த அல்லாஹ் அருள்பாலிப் பானாக.

கேரள மாநிலத்தில் ஹைதர் அலி சாஹிப் தங்ஙள் மற்றும் பி.கே.குஞ் ஞாலிக்குட்டி ஆகியோரின் தலைமையின் கீழ் இயக்கம் மிகப் பெரிய வாய்ப்பை பெற்று வருகிறது. அங்கே கம்ய+னிஸ்டு கட்சியின் புனிதமற்ற கூட்டணியின் செயல்களையும் மீறி 2 பாராளுமன்ற தொகுதி களை நாம் கைப்பற்றியி ருக்கிறோம். அங்கே மாநில சட்டப்பேரவைக்கும், ஊராட்சி மன்ற அமைப்பு களுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது வலுவை யு.டி. எஃப். கூட்டணிக்கு பல மாக அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் மற்றும் இளமைத் துடிப் புள்ள கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் ஆகியோ ரின் தலைமையின் கீழ் கட்சி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. துணை யுடன் நமது வேட்பாளர் அப்துர் ரஹ்மான் சாஹிப் வெற்றி பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நமது தமிழ்நாட்டு கிளை தஞ்சை யில் நடத்திய 3 நாள் பயிற்சி முகாம் மிக்க பயனை நல்கி யுள்ளது.

பி.ஜே.பி.

கடந்த தேர்தல்களில் பி.ஜே.பி. கட்சி கண்ட மோசமான பின்னடைவை நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது நிலைப்பாடு அவர்களுக்கு இனிமேல் உதவிகரமாக இருக்காது. பிராந்திய மத உணர்வு களை தூண்டி விட்டு நமது மக்களிடம் வெற்றி பெற முடியாது என்பது சமீ பத்திய உற்சாகமான பொது மக்களின் நிலைப்பாடா கும்.

2004-ல் நடைபெற்ற தேர்தலை வைத்து கணிக் கும் போது பி.ஜே.பி. 3.6 சதவீத வாக்குகளை இழந் திருக்கிறது. மத சிறு பான்மையினர்களை பொருத்தவரை இது மன ஊக்கத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு நிலையாகும். நமது நாட்டின் பன்முக கலாச்சாரத்தை அச்சுறுத் தக்கூடிய சங்பரிவாரின் தீவிர பாசிச மத நிலைப் பாட்டை நாம் தோலுரித் துக் காட்ட வேண்டும்.

சி.பி.எம்.

தங்களை ஏழை எளிய மக்களின் சாம்பியனாக தம்படடம் அடித்துக் கொள்ளும் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக சி.பி. எம். கட்சி உண்மையான நிலவரத்தை சமீபத்தில் சந்தித்துள்ளன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மீது விஷத்தை உமிழ்ந்து நமது இயக்கத்தின் அடித் தளத்தை பலவீனப்படுத்த முயற்சித்த சி.பி.எம். மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் தோல்வி களை தழுவியது. அங்கெல் லாம் முஸ்லிம் வாக்குகளை கைப்பற்ற அவர்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் பலனிக்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கும் அவர் கள் நன்மை செய்யவில்லை என்ற உண்மை நிலவரத்தை சச்சார் கமிட்டி வெளிப் படுத்தியுள்ளது.

மேற்குவங்காளத்தில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக் கிறது. அவர்களின் துன்பங் களை துடைப்பதற்கு மாநில அரசிலும் எந்த செயல் திட்டமும் இல்லை.

கேரளாவில் கூட முஸ்லிம் லீக் வலுவாக இருந்தும் சி.பி.எம். தலை மையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசால் சிறுபான்மை யினர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் திட்டங் களை நிறைவேற்ற முடிய வில்லை. சச்சார் கமிட்டி யின் பரிந்துரைகளின் மீது நடவடிக்கைகள் எடுப்ப தற்கு பதிலாக அவர்கள் பலோலி கமிட்டியை நியமித்தார்கள். இது அவர் கள் கட்சியிலும்கூட அதி ருப்தியை விளைவித்தது. சி.பி.எம். தலைவர்களின் உணர்வுப்ப+ர்வமற்ற நட வடிக்கைகளை வெளிப்ப டையாக காணலாம்.

பயங்கரவாதம்

நமது தேசம் மற்றும் நமது சமுதாய விவகாரங் கள் குறித்து ஆய்வு செய்ய இங்கே குழுமியிருக்கும் நாம் பல உண்மைகளை கவனிக்க வேண்டியுள்ளது. பயங்கரவாத நிகழ்வுகள் மற்றும் அது ஏற்படுத்திய சமூக மோதல்கள் நமது சமுதாயத்தை ஒரு மோச மான நிலையில் வைத் துள்ளது. ஒன்றுமறியாத அப்பாவி மக்களை கொல்லுகிற தீவிரவாத நடவடிக்கைகள் எதிலும் ஒரு முஸ்லிம் கூட பங் கேற்க முடியாது. ரத்தம் சிந் தும் வன்முறை தவிர்க்கப் பட வேண்டும்.

இஸ்லாம் அமைதியை யும், சமாதான சகவாழ் வையும் போதிக்கிறது. வாழ்க்கையை நிலை குலையச் செய்கிற எந்த முயற்சியும், நமது நம்பிக் கைக்கும், வாழ்க்கை முறைக்கும் எதிரானதாகும். நாம் ஜனநாயக வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். மக்களிடையே பிளவுகளையும், ப+சல் களையும் ஏற்படுத்தும் செயல்களில் நாம் பங்கேற்க முடியாது.

இந்திய முஸ்லிம்கள் என்பதில்

பெருமை கொள்வோம்

ஹநாம் முஸ்லிம்கள். அதேநேரத்தில் நாம் இந்தி யர்கள். நாம் நமது உன்னத மான நம்பிக்கையோடு ஒத்து போகும் வகையில் வாழ வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில், நாம் இந்த உன்னத தேசத்தின் மதிப்புக் குரிய குடிமக்களுமா வோம். நாம் பிரச்சினை களை தீர்க்க வேண்டிய நேரத்திலும் நெருக் கடிகளை தாண்ட வேண் டிய நேரத்திலும் அந்த நெருக்கடிகளையும் பிரச்சி னைகளையும் தீர்க்க முடி யாமல் செய்து அதிகரிக்கச் செய்கிற உத்திகளை கையா ளக் கூடாது.

உணர்ச்சிகளுக்கும், மனக் கொந்தளிப்புகளுக் கும் ஆட்பட்டு கிளர்ந் தெழுந்தால் அது கால ஓட்டத்தில் நம்மை பலவீ னப்படுத்தும். அதே நேரத்தில் முஸ்லிம்களின் மேன்மையை கெடுக்கும் முயற்சிகளுக்கும் சில பிற் போக்கு சக்திகள் நம்மை உலகின் கண்களில் சந்தே கப்படும் வகையில் மேற் கொள்ளும் நடவடிக்கை களை நாம் தடுத்தே ஆக வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதி ராக பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது.

கமிட்டிகளின் பரிந்துரைகள்

தற்போதைய தேசிய அரசியல் நிலவரத்தைப் பார்ப்போம். மதத் துவே ஷத்தை கிளப்பி பதவியை பிடிக்க சங்பரிவார் அமைப்புகளின் கொடிய விய+கங்களை லிபரான் கமிஷன் அறிக்கை வெளிப் படுத்தியதை நாம் அறி வோம். நான்கு நூற்றாண்டு களாக வழிபாட்டுத் தல மாக விளங்கிய பாபரி மஸ்ஜிதை இடித்த குற்ற வாளிகள் தண்டிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

தற்போது ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை மத்திய அரசிடம் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறுபான்மை மக்களுக்கும், வறுமைக்கோட்டுக் கீழே உள்ள மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புவோமாக.

நாடு முழுவதும்

பொதுமக்களின்

ஆதரவை திரட்டுவோம்

சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை களின் பரிந்துரைகள் நிறைவேற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொது மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், கட்டு மான மேம்பாட்டில் பங் கேற்பு போன்ற துறைகளில் முஸ்லிம்களும் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தின ரும் போதிய அளவில் கண்ணுக்குத் தெரியும் வகையில் வளர்ச்சியை அடைய அரசுகள் பொருத்தமான நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.

கல்வியில் முன்னேற்றம் அடையவும், சமூகரீதியில் வளர்ச்சியடையவும் முஸ்லிம் சமுதாயம் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஒரு முன்னேற்றமான மற் றும் துடிப்பான சமுதாய மாக விளங்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடுமையாக உழைக்கிறது. பழைய பின்னடைவுகளிலி ருந்து விடுவித்துக் கொண்டு தனித்தன்மையுடன் விளங் கத் தொடங்கியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நமது சமூகம் அரசியல் அழுத்தங் களை கொடுத்து கடந்த காலத்தை விட தன்னை மேன்மைபடுத்த வருகிறது.

ஒரு பக்கம் இந்துத் துவா அமைப்புகள் தொடர்ந்து நம் மீது எதிர்ப்பைக் காட்டு கின்றன. பல முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக சாட் டப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் மத்தியி லே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஒடுக்கப்பட்ட சமுதாய மான முஸ்லிம்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உறுதியான நட வடிக்கைகள் காரணமாக அந்த இடர்ப்பாடுகளை முறியடிக்க நம்பிக்கையு டன் பார்க்கிறார்கள்.

மொத்தத்தில் ஒட்டு மொத்த நிலவரம் ஆரோக் கியமானதாக இல்லை. தொடர்ந்து நிகழ்ந்து வரும் பயங்கரவாதத்தால் நமது சமுதாயம் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கிறது. முஸ்லிமுக்கு எதிரான சக்தி கள் நம்மை ஆளுமையி லிருந்து விலக்க பாடுபடு கின்றன. இதை சில பகுதி களில் முஸ்லிம்க ளுக்கு வீடுகள் கொடுக்க மறுப்ப திலிருந்தும், நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதிலி ருந்தும் தெரிந்து கொள்ள லாம்.

இந்த பரிதாப நிலைக்கு நமது சமுதாயத்துக்குள் இருக்கும் ஒரு சிறு குழுவினரே காரணம். அந்தப் பிரிவனர் முஸ்லிம் சமுதாயத்தினரை அரசியல் மற்றும் சமூகரீதியில் மேம் படுத்துவதற்கும் ஏழ்மையி லிருந்து விடுபடுத்திக் கொள்வதற்கும் அரசு மற்றும் வேலைவாய்ப்பில் மேம்படுத்திக் கொள்வதற் கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அவர்கள் உணர்ச்சிப்ப+ர்வமான அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களில் சுயலாபத் திற்காக ஈடுபடுகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எதி ரான சக்திகள் பலப் படும் வகையில் தீவிரவாதிகள் தங்கள் பங்களிப்பை செய் கிறார்கள். அவர்களின் நட வடிக்கைகளை புனிதக் குர்ஆனின் கொள்கை களால் ஏற்றுக் கொள்ள முடியாது. புனிதக் குர்ஆன் அதிசயித்தக்க வகையில் ஆச்சரியமான, விசாலமான சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மைக்கு துணை நிற்கிறது. மற்ற மத நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளாத ப+ஜ்ஜிய சகிப் புத்தன்மை உண்மையான கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தாது. இப்படிப்பட்ட சூழ்நிலை உறுதியான அரசியல் நட வடிக்கைகள் மற்றும் மதச் சார்பற்ற சக்திகளின் துணை ஆகியவற்றின் மூலம் தான் தீர்க்க முடியும் என்று முஸ்லிம் லீக் உறுதியாக நம்புகிறது.

நிகழ்கால அரசியலில் நாம் முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம டைந்து 60 ஆண்டுகள் ஆகியும் பெரிய சிறு பான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு முழு அளவில் அரசாங்கத்தில் பிரதி நித்துவம் கிடைக்க வில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு உண்மை யாகும். குறிப்பாக, சச்சார் கமிட்டி அறிக்கையின் அறிக்கைகள் வெளியிட்ட பிறகு சிறுபான்மை முஸ் லிம் சமுதாயத்தின் சமூக மற்றும் அரசியல் அந் தஸ்து தேசிய ரீதியில் வேகமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமா கும்.

சச்சார் கமிட்டி தனது பரிந்துரைகளை வெளிப் படுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென் றால், இந்துத்துவத்தை அடிப்படையாக் கொண்ட சங்பரிவார் அமைப்புகள் அவற்றின் அரசியல் கரமான பி.ஜே.பி., தொடர்ந்து காங்கிரசை முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கில் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றன. முஸ்லிம் சமுதாயம் அரசி யல்ரீதியிலும், சமூகரீதியி லும் தேச விரோதமானது என்று அவர்களுக்கு எதி ராக தொடர்ந்து பல பகுதி களிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சச்சார் கமிட்டியின் பிரதான நோக்கம் முஸ்லிம்களின் அடையாளம், பாதுகாப்பு, மற்றும் சமவாய்ப்பு ஆகிய வற்றை ஆய்வு செய்யலாம். பிரதானமாக சமவாய்ப்பில் அதிக முக்கியத்துவம் காட் டப்படுகிறது. மேலே சொன்ன இரண்டு விஷயங் களை அதாவது அடையா ளம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ஐக்கிய முற்போக்கு அரசு சிறப் பான நடவடிக்கை களை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், சமவாய்ப்பை பொறுத்தவரை இன்னும் அது ஒரு தடுப்பாகவே இருந்து வருகிறது. சம வாய்ப்பு சமுதாயத்தில் சமத்துவம் அல்லது சம வாய்ப்பு ஒரு முக்கியமான தூணாகும்.

ஒரு பன்முக சமுதா யத்தில் அனைத்து சமூகத் தினருக்கும் அரசிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பை வழங்குவது அவசியமாகும். ஆனால், புள்ளி விவரங்கள் அப்ப டிப்பட்ட ஒரு இலக்கை தேசம் அடையவில்லை என்பதை காட்டுகிறது. பல்வேறு அறிக்கைகளின் மூலம் தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவீதம் என்பதை காட்டுகின்றன. ஆனால், அரசாங்கத்தில் அவர்களுக்கான வேலை வாய்ப்போ 4.9ஆகவே உள்ளது.

முஸ்லிம்கள் பெரிய அளவில் சிறுபான்மையின ராக இருக்கும் மாநிலங் களுக்குக்கூடி இந்த நிலை நீடிக்கிறது. மேற்கு வங்காள மக்கள் தொகை யில் 25.5 சதவீத மக்களாக இருக்கும் முஸ்லிம் சமு தாயம் தேசிய வேலை வாய்ப்பு அளவான 4.9ஐ விட குறைவாக உள்ளது.

நாடு முழுவதும்

சிறைகளில் வாடும்

அப்பாவி முஸ்லிம்கள்

நாம் அவசரமாக கவ னம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம் என்ன வென்றால் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் இளைஞர்கள் நியாயமற்ற முறையில் நெடுங்காலமாக சிறைகளில் வாடுவதாகும்.

மகாராஷ்டிர மாநிலத் தில் முஸ்லிம்களின் எண் ணிக்கை 10.6 சதவீதமாகும். ஆனால், அங்கே சிறைக ளில் வசிக்கும் மொத்த கைதிகளில் 32.4 பேர் முஸ்லிம்கள் ஆவர். நிகழ்த் தப்பட்டிருக்கும் குற்றங் களை நியாயமில்லை என்று நிரூபிக்கப்பட்ட பிறகு முஸ்லிம்கள் இந்த அளவுக்கு புள்ளி விவரம் ஏன் என்பதை ஆராய வேண்டும்.

குஜராத் மாநிலத்தின்

கொடூர சட்டங்கள்

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் களிடையே குற்ற விகிதாச் சாரம்அதிகமாக இருப் பதற்கு பல கவலை அளிக் கும் காரணங்கள் இருந்தா லும் காவல் துறை மற்றும் புலனாய்வுத் துறை ஆகி யோருடன் உள்ள பாகு பாடு மனப்பான்மையும் காரணமாகும். குஜராத்தில் நடைமுறையில் உள்ள கொடுமையான சட்டங்க ளும், முஸ்லிம்களின் கைது எண்ணிக்கை அதிகரிப்ப தும் காரணமாகும். பெரும் பான்மையான முஸ்லிம் இளைஞர்களுக்கு தங் களை பாதுகாத்துக் கொள் வதற்கு நல்ல வழக்கறி ஞர்கள் கிடைப்பதில்லை. பல இளைஞர்கள் ஆண் டுக்கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். சித்திர வதை மற்றும் மனித உரிமை மீறல்கள் நடவ டிக்கைகள் மூலம் அவர் கள் வாழ்க்கை நரகமாக்கப் பட்டிருக்கிறது.

அப்பாவி சிறைவாசிகள்

விடுவிக்கப்பட வேண்டும்

இந்த நிலையில், முஸ்லிம் லீகின் கோரிக்கை என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டுள்ள எல் லோருக்கும் நியாயமான விசாரணை கிடைக்க வேண்டும் என்பதும் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறைகளில் வாடுபவர் களை விடுவிப்பது என்பது தான்.

வன்முறை, சட்டமீறல், தேச விரோத நடவடிக் கைகள் ஆகியவற்றை முஸ்லிம் லீக் ஒருபோதும் ஆதரிப்பதும் இல்லை. ஆனால் அதேநேரத்தில் குற்ற சாட்டப்பட்டிருப்ப வர்களுக்கு நேர்மையான விசாரணை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

சட்டத்துக்கு புறம்பாக நீண்ட காலமாக சிறைச் சாலைகளில் வைக்கப் பட்டிருக்கும் இளைஞர் களிடம் துவேஷ உணர்வு துளிர் விடுகிறது.

வளர்ச்சித் திட்டங் களை ஈடுபட முடியாமல் இருப்பது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மிக மோச மான பிரச்சினையாகும். மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் அரசு சார்பான திட்டங் களாகவே உள்ளன.

நவீன தொழில்நுட்பத் துக்கு முஸ்லிம் சமுதாயமும் அவர்களின் மதரீதியிலான கொள்கைகளும் ஏற்புடை யவை அல்ல என்று நீண்ட காலமாக ஒரு தவறான எண்ணம் முஸ்லிம் எதி ரான சக்திகளால் சொல்லப் படுகிறது. இது எந்த வகையிலும் உண்மையல்ல. வரலாற்றுரீதியாக பார்த் தால் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு அவர்கள் முன்னணியில் இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

நவீன தொழில்நுட் பத்தில் அவர்கள் தங்களை ஐக்கியப்படுத்தியிருப்பதை காணலாம் இந்த உண் மையை கேரளா, கர்நா டகா மற்றும் மகாராஷ்டி ராவில் வெளிப்படையாக காணலாம். ஆனால் வட நாட்டில் துரதிருஷ்டவச மாக இந்த நிலை இல்லை.

புதிய தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பத் தின் உலகளாவிய நிலை ஆகியவற்றில் முஸ்லிம்கள் எவ்வளவுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார் களோ அந்த அளவுக்கு அந்த சமூகத்தின் சக்தி மற்றும் ஆற்றல் வெளிப் படும்..

தொழில்நுட்பங்களில் வலிமை பெறுவதுதான் அதிகாரத்தில் பிரதிநித் துவம் அடைவதற்கு வழி வகுக்கும். புதிய தொழில் நுட்பத்தை நாம் கை கொள்ளாவிட்டால் பழமையான சமுதாயமா கவும், ஒதுக்கப்பட்ட சமு தாயமாகவும் தொடர்ந்து இருக்கக் கூடிய நிலமை ஏற்படும்.

புனித குர்ஆன் விரும்புவதுபோல் நமது சமுதாய மக்களுக்கு சரி யான பாதையை காட்டு வதும், சிறந்த சமுதாயமாக அவர்கள் விளங்குவதற்கு உதவி செய்வதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மேலான கடமையாகும்.

இவ்வாறு இ.அஹமது தெரிவித்தார்.

Saturday, December 26, 2009

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு உரிய நடவடிக்கை எடுக்க மன்மோகன்சிங் உறுதியளித்திருப்பதாக இ.அஹமது தகவல்

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு உரிய நடவடிக்கை எடுக்க மன்மோகன்சிங் உறுதியளித்திருப்பதாக இ.அஹமது தகவல்


புதுடெல்லி, டிச.24-

நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ளோர் விடு விக்கப்பட வேண்டும் உள் ளிட்ட 14 கோரிக்கைகளு டன் அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.

அக்கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு உரிய நட வடிக்கைகள் எடுக்க மன் மோகன்சிங் உறுதியளித்த தாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், ரயில்வே இணையமைச்சருமான இ. அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அனைத் துக் கட்சி முஸ்லிம் உறுப் பினர்களான மத்திய இணையமைச்சர் இ. அஹமது, நாடாளு மன்ற மேலவைத் தலைவர் ரஹ் மான்கான், திருமதி மொஹ்சினா கித்வாய், மஹ்மூத் மதனீ, தாரிக் அன்வர், அஸாஸ{தீன் உவைஸி, முஹம்மது அதீப், அஹமது சயீது மலேகாபாடி, ஷபீர் அலி, டாக்டர் இஜாஸ் அலி, ஷபீகுர் ரஹ்மான் பர்க், முஹம்மது ஷபி ஆகிய எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 14 முக்கிய பிரச் சினைகளை நிறை வேற்றும்படி கோரிக்கை விடுத்தார்கள்.

அவை வருமாறு-

1. வக்ஃபுசொத்துக்கள் தொடர்பாக ஜே.பி.சி. அறிக்கையை நிறைவேற்ற வும், வக்ஃபு சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஹஜ் பயணம் தொடர்பாக போதிய சீர் தி ருத்தங்களை கொண்டு வர ஏற்கனவே ஒரு அமைச் சரவை குழுபரிந்துரை செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.

3. முஸ்லிம் சிறு பான்மையினருக்கான இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள் ளது. அவை தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் குறிப்பிடப் பட் டுள்ளது. கேரளா, தமிழ் நாடு, கர்நாடக மாநிலங் களில் முஸ்லிம் களுக்கு அனுமதிக்கப்பட் டிருக் கும் ஒதுக்கீட்டின் அடிப் படையில் இட ஒதுக்கீடு பிரச்சினை தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண் டும்.

4. ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

5. சச்சார் கமிட்டி அறிக் கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. பரிந் துரைகள் அமுல்படுத்து வதை கண்காணிக்க ஒரு மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும்.

6. முஸ்லிம் சிறு பான்மையினருக்கும் மற்றவர்களுக்கும் கல்வி வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும் சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

7. இஸ்லாமிய வங்கி முறையை அமுல்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள் ளது. அந்த முறை வங்கித் துறைக்கு பெரிய முத லீட்டையும் முஸ்லிம்கள் மத்தியில் சேமிப்பு பழக் கத்தையும் ஏற்படுத்தும்.

8. பிரதமரால் அறிவிக் கப்பட்ட 15 அம்ச திட்டம் நிறைவேறுவதை கண் காணிப்பது வலுப்படுத்தப் பட வேண்டும்.

9. பயங்கரவாத தொடர்பு ஐயப்பாடு கார ணமாக ஏராளமானவர்கள் எந்தவித விசாரணையு மின்றி நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் முடிக்கப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய் யப்படவோ வேண்டும்.

10. உத்தேசிக்கப்பட் டுள்ள மதரஸா வாரியத்தை அமைப்பதற்கு முன் முஸ்லிம் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், தலை வர்கள் ஆகியோரை அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.

11. முஸ்லிம்கள் தொடர்பான அமைப்பு களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் கட்டுப்பாடுகளும், தாமதமும் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

12. மத வன்முறை தடுப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

13. மற்ற தேசிய கமிஷன்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட அந்தஸ்தை சிறு பான்மை கமிஷனுக்கும் கொடுக்க வேண்டும்.

14. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ் லாமிய பல்கலைக்கழகங் களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண் டும்.

மேற்கண்ட கோரிக் கைகளை விரைவில் நிறை வேற்றித் தரும்படி வேண்டு கோள் விடுத்த எம்.பி.க்கள் சிறுபான்மை விவகாரத் துக்காக தனி அமைச்சரகம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தார்கள்.

பிரதமர் உறுதி

மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மன் மோகன்சிங் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து போதிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு செய்ய தேசிய அளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண் டியுள்ளது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு காணப்படும் என்று தெரி வித்தார்.

வக்ஃபு சொத்துக்களை மேம்படுத்துவது குறித்தும் அது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்தும் பிரதமர் குறிப்பாக தனது விருப்பத்தை வெளியிட் டார். அந்த சட்டம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் என் றார்.

ஹஜ் பயணம் தொடர் பான சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப் படும் என்றும் பிரதமர் கூறினார்.

வட்டியில்லாத வங்கித் தொழில் துறை குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசிப்பதாக பிரதமர் அறிவித்தார். நீண்டகாலமாக சட்ட விரோதமாக சிறையில் வாடுபவர்கள் குறித்து மிக விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்றும் பிரதமர் சொன்னார்.

சிறுபான்மை விவகாரம் கண்காணிக்க நியமிக்கப் பட்டிருக்கும் நிலைக்குழு தலைவர்களுடன் பேசி கண்காணிப்பு வேலை களை வலுப்படுத்தும் படியும் தீவிரப்படுத்தப் படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்த தூதுக்குழு உறுப் பினர்களுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் மத்திய ரயில் இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

Friday, July 24, 2009

கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை

கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி, ஜூலை 18: கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளித்து ஜமாஅத் பதிவு முறை தொடர தமிழக அரசு வழி செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

தமிழ்நாட்டில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம். ஐந்து தொகுதிகளிலும் எந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவது போலவே எண்ணி அவர்களது வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம்.

திருமண பதிவுச் சட்டம்: தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க முதல்வரிடமும், துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

முஸ்லீம்கள் இதுவரையில் தங்களது திருமணங்களை அவர்கள் சார்ந்துள்ள ஜமாஅத்துகளில் பதிவு செய்து வருகின்றனர். அந்த பதிவு ஆவணங்கள் நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இப்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு என்பது, ஜமாஅத் பதிவு முறையை குலைத்துவிடும் என அஞ்சுகிறோம். எனவே, ஜமாஅத் பதிவு முறை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். நடப்பு சட்டப் பேரவைக் கூட்டம் முடிவடைந்த உடன் இந்த பிரச்னைக்கு நல்லதொரு அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.

சச்சார் கமிட்டி பரிந்துரைகளில் குறைந்தபட்ச பரிந்துரைகளை அமல்படுத்தக்கூட தற்போது அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதாது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கை, லிபரான் ஆணைய அறிக்கை ஆகியவற்றை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் நம்புகிறோம்.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டில் தற்போது 3080 பேருக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இது கடந்த 1991 ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் ஆனது. இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.

எங்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 1-ல் குற்றாலத்தில் நடைபெற உள்ளது. அதில், கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் பாராட்டப்பட உள்ளனர் என்றார் அப்துர் ரஹ்மான்.

பேட்டியின்போது, மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம். அபுபக்கர், மாநில துணைத் தலைவர் கோதர்மைதீன், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாநகர் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். மில்லத் இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தாய்ச் சபை முஸ்லிம் லீக் மட்டுமே !

( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி அறிக்கை ! )

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்ற சமுதாயத்திற்கு வெற்றி, தோல்வியை சொன்னதோ ? இல்லையோ? தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு தெளிவான வெற்றியை சொல்லி விட்டது. அந்த வெற்றியை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலம் சொல்லி இருப்பது ஒவ்வொரு முஸ்லிம்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் எந்த அணியில் இடம் பெறுகிறதோ ! அந்த அணிக்குத்தான் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் படை திரண்டு ஆதரவை வழங்கி வருகிறது என்பதை 2006 சட்டமன்றத் தேர்தலும் 2009 நாடாளு மன்றத் தேர்தலும் உறுதிபடுத்தியுள்ளது. தாய்ச்சபை முஸ்லிம் லீக்கை விமர்சிப்பதன் மூலமே தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என நினைத்து வாரத்திற்கு ஒரு கட்சியையும், வாரத்திற்கொரு இயக்கங்களையும் உருவாக்கி கொண்ட லெட்டர் பேடு அரசியல் கோமாளிகளெல்லாம் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களின் முகத்தை காட்டுவதும் தேர்தலுக்குப்பின் காணாமல் போவதுமாய் காலம் ஓடிக் கொண்டிருந்தாலும் இத்தகைய போலிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை !

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் எங்கள் பின்னால் தான் என்ற குருட்டு நம்பிக்கையுடன் அவசர கோலத்தில் கட்சி ஆரம்பித்து தகுதிக்கு மீறிய வகையில் அரசியல் பேரம் நடத்தி அனைத்து கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியே இல்லாமலும் திறந்த கடையை மூட முடியாமலும் தனித்து நின்று தங்கள் பலத்தை காட்டப் போகிறோம் என்று சொல்லி முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்வதுமாய் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழக அரசியலையே புரட்டி போடப்போகிறது எங்கள் கட்சியின் செயல்பாடுகள் என ஆணவ போதையில் உளறி கொட்டிய வீராதி வீரர்கள் ? எல்லாம் தேர்தலுக்குப்பின் அவர்களின் நிலையையும், செல்வாக்கையும் கண்டு அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் விரக்தி அடைந்து இனியும் நாமெல்லாம் அவசர கோலத்தில் ஜனித்த கட்சியில் நீடிக்க வேண்டுமா ? என கேள்வி கேட்டு ஊர் தோறும் கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களுக்கான அரசியல் களம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்று உணர்ந்து தொடர்ச்சியாக தாய்ச்சபையில் இணைந்து வருவதை இப்போது கண்கூடாய் பார்க்கிறோம்.

தமிழக முஸ்லிம்களின் ஒட்டு மொத்த பார்வையும் தற்போது தாய்ச்சபையின் முஸ்லிம் லீக் பக்கம் திரும்பியுள்ளது வரலாற்று சாதனையாகும். சத்தியத்தை அழிக்க நினைக்கும் எந்த அசத்தியமும் நிலைகொண்ட தில்லை. என்பதற்கு முஸ்லிம் லீக்கிற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் தேய்வுகளே சாட்சியாகும்.

எந்த கொம்பனாலும் முஸ்லிம் லீக்கின் வரலாற்று நிழல்களை கூட அழிக்க முடியாது. காரணம் முஸ்லிம் லீக் இறையருள் பெற்ற இயக்கம். தன்னலம் கருதாமல் சமுதாயக் கவலை யுடன் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் களால் வழி நடத்தப்பட்ட பேரியக்கம். நல்லோர்களால் உருவாக்கப்பட்ட தூய்மையான இயக்கமாய் தமிழக அரசியலில் வலம் வரும் ஒரே இயக்கம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்பதை பெருமைபடக் கூறிக்கொள்வோம்.

தமிழக முஸ்லிம்களின் கண்ணியமும், பாரம்பரியமும் கட்டிக் காக்கப்பட அனைவரும் அரசியல் ரீதியாக தாய்ச்சபையில் தங்களை இணைத்துக் கொண்டு தொடர்ந்து வெற்றிகளை குவித்திட முன்வர வேண்டுமாய் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன்.

வாரீர் ஒன்றுபடுவோம் ! உயர்ந்திடுவோம் !!

Saturday, May 2, 2009

நடந்து முடிந்த தேர்தலும், முஸ்லிம்களின் நிலைபாடும்!

நடந்து முடிந்த தேர்தலும், முஸ்லிம்களின் நிலைபாடும்!
மரியாதைக்குரிய சிந்தனை சிற்பிகளான இளைஞர்களே ! இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …)!
இம்மடலை பொறுமையுடன் படித்து நடுநிலையோடு சிந்தித்து நல்லதொரு முடிவுக்கு வருவீர்களானால் … இன்ஷா அல்லாஹ் நாளைய வெற்றி நமது சமுதாயத்திற்கே! நமது நாட்டின் 15வது மக்களவை தேர்தல் சிலருக்கு வெற்றியும் பலருக்கு தோல்வியுமாய் முடிந்து விட்டது. தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் முஸ்லிம் லீக்கின் சார்பில் சகோதரர் N.M.அப்துல் ரஹ்மான் அவர்களும் காங்கிரஸ் சார்பில் J.M.ஹாரூன் அவர்களும் வெற்றி பெற்று தமிழக முஸ்லிம்களின் சார்பில் பாராளு மன்றத்தில் இடம் பிடித்து விட்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
தமிழகத்தில் செயல்படும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மட்டுமே ஒருவர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளார். மற்றவைகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் கிடைத்த அங்கீகாரத்தையும் பயன்படுத்த தவறிய தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சியை நினைத்து நெஞ்சம் வேதனைப்படுகிறது. தற்போதைய அரசியலில் வேகத்தை மட்டும் வைத்து களமிறங்காமல் விவேகத்தையும் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதுதான் கண் கூடான உண்மை!
இந்த வாய்ப்பைத்தான் முஸ்லிம் லீக் சமயோசிதமாய் செயல் படுத்தி ஒதுக்கப்பட்டது ஒரு தொகுதியானாலும் அதில் வெற்றி வாகை சூடி விட்டது. ஆனால் நேற்று கட்சி ஆரம்பித்து தங்களின் முழுமையான பலம் என்னவென்பதை (4 தொகுதியில் போட்டியிட்டு மொத்தமே 66 ஆயிரம் வாக்குகள் மட்டுமே ம.ம.கட்சி பெற்றிருந்தது) தெரிந்து கொள்ளாமலேயே எடுத்தேன், கவிழ்த்தேன் என தகுதிக்கு மீறிய வகையில் சீட் பேரம் நடத்தி முடிவில் கிடைக்க விருந்த ஒரு தொகுதியையும் இழந்தது மட்டுமல்லாமல் கையில் இருந்த வக்ஃபு வாரியத்தையும் பறி கொடுத்து விட்டு,தேர்தல் நாளன்று ஆளும் கட்சியினரோடு வன்முறை யிலும் ஈடுபட்டு அதில் நமது சகோதரர்கள் 6 பேர் இரத்தம் சிந்தியது, இந்த வன்முறையை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி அதில் ஆளும் கட்சியினரை அநாகரீகமாக வசை பாடியதன் மூலம் இராமநாதபுரத்தில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸ் வழக்குபதிவு செய்து தற்போது தேடப்படும் குற்றவாளிகளாக ஓடி ஒளிந்து வரும் நிலையை தொண்டர் களுக்கு ஏற்படுத்தியது போன்ற தமுமுகவின் அரசியல் செயல்பாடு அறிவுடையதா? அல்லது எந்த வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் கிடைத்த ஒரு இடத்தையும் யாரையும் வசைபாடாமல் கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ள முஸ்லிம் லீக்கின் அரசியல் செயல்பாடு அறிவுடையதா? என்பதை உங்களின் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன், நல்ல தீர்ப்பு வழங்குங்கள் !
பிற கட்சி சின்னத்தில் போட்டியிடுவதால் முஸ்லிம் லீக் தனது கெளரவத்தை இழந்து விடும் என நினைப்பது எவ்வகையில் நியாயம்? 100 ஆண்டு கண்ட நமது தாய்ச்சபை முஸ்லிம் லீக் இன்று வரைக்கும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனதற்கு யார் காரணம்? கேரளாவில் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், இரண்டு எம்.பிக்கள் என முஸ்லிம் லீக் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு யார் காரணம்? எல்லாம் உங்களை போன்ற இளைஞர்கள் தான்! காரணம்!! கேரளாவில் இயக்கங்கள் பல இருந்தாலும் அரசியல் என்று வரும்போது முஸ்லிம் லீக்கின் தலைமையில் அம்மக்கள் ஒன்று திரண்டு விடுகின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக்கில் ஒன்றிணையாமல் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து ஆளுக்கொரு கூட்டணியில் சேர்ந்து கொள்கின்றனர். இந்நிலை நீடித்தால் இன்னும் 100 ஆண்டு களானாலும் முஸ்லிம் லீக் மட்டுமல்ல எந்த இயக்கமும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு எந்த வெற்றியையும் பெற முடியாது!
தமிழக முஸ்லிம்களிடம் குறிப்பாக இளைஞர் களிடம் நான் மிகவும் பணிவோடு கேட்பதெல்லாம் நீங்கள் எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள். அதன்மூலம் சமுதாய பொது சேவையாற்றுங்கள். வரவேற்கிறோம்! ஆனால் தேர்தல் அரசியல் என்ற நிலை வரும்போது மட்டும் கேரளாவைப் போல இயக்கத்திற்கப்பால் முஸ்லிம் லீக் என்னும் ஒரே குடைக்குள் நுழைந்து விடுங்கள். பின்னர் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சியை பாருங்கள். தமிழகத்தின் அனைத்து அமைப்புகளின் சகோதரர்களும் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக்குடன் இணைந்து செயல்பட்டால் போதும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்துடன் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியையும் பெற்று விடலாம்!
சகோதர சமுதாயத்தின் நிலையை பாருங்கள், R.S.S, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முண்ணனி, பஜ்ரங்தளம், சிவசேனை போன்ற பல இயக்கங்களாய் செயல்பட்டாலும் தேர்தல் வரும் போதெல்லாம் ஒன்று திரண்டு பி.ஜே.பிக்கு ஆதரவு கொடுப்பதால் தான் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தாமரையாய் ஜொலித்தார்கள். இதைப் பார்த்தாவது நமது சமுதாயம் திருந்தாதா? இன்ஷா அல்லாஹ் திருந்தும் என்ற நம்பிக்கையோடு தான் இம்மடலை எழுதியுள்ளேன். படியுங்கள், சிந்தியுங்கள், தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களமாக முஸ்லிம் லீக் மட்டுமே இருக்கட்டும். எல்லோரும் முஸ்லிம் லீக்கில் இணைந்து ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்! நாளைய விடியல் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றியாக இருக்கட்டும். நமது சமுதாயத்தின் அரசியல் உயர்வையும், உரிமையையும் அடைவதற்காக “ஏணி” காத்திருக்கிறது. முஸ்லிம் லீக் என்னும் ஏணியில் ஏறி சிகரத்தை வெல்வோம். வாருங்கள் தாய்ச்சபைக்கு, இணையுங்கள் தாய்ச்சபை சகோதரர்களோடு இன்ஷா அல்லாஹ் நாளைய ஆட்சியும் அதிகாரமும் நம்முடையதாகட்டும்! ஆமின்!!


சமுதாயக் கவலையுடன்

மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

துபை

தொடர்புக்கு; Cell: 050-7959960

Friday, August 29, 2008

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு



வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிக இழப்புக்கு ஆளாவது முஸ்லிம்களே என்று காவல்துறை ஆய்வாளர் விப+தி நாராயணனின் ஆய்வு காட்டுகிறது என்று டாக்டர் ஹபீப் முஹம்மது கூறினார்.

இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னை காமராசர் அரங்கில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஸரத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.எம். செய்யது அப்துல் காதர், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், டெல்லி சிறுபான்மை ஆணையத் தலைவர் கமார் பரூகி, வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர், எஸ்.எம்.ஹிதாயதுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பவுண்டேசன் டிரஸ்டு இணைச் செயலாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேசியதாவது-

இன்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் பயங்கரவாதம் தோன்ற பல காரணங்கள் உள்ளன. ஜாதியவாதம், வகுப்புவாதம், ஏகாதிபத்தியம் போன்ற காரணங்களால்தான் பயங்கரவாதம் தலை தூக்குகின்றன. எந்த வடிவிலானாலும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் விஷ சக்கரம் போன்றது. அது என்றைக்காவது ஒரு நாள் ஏவுகணையை தாக்கி அழித்து விடும்.

நோய்க்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கும் மருந்தே உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடக்கூடாது.

பயங்கரவாதம் ஆபத்தான மருந்தாகும். அது நோயை தீர்ப்பதற்கு பதிலாக ஆளையே கொன்றுவிடும் என்பதில் கவனம் வேண்டும். இந்த நாட்டில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் பிறந்த நாளை தியாகிகள் தினமாக கொண்டாட மத்திய - மாநில அரசுகள் அனுமதி வழங்குகின்றன. ஆனால் இந்த நாட்டிற்காக அணுஅணுவாக உழைத்த முஸ்லிம் சமுதாயம் சுதந்திரதின பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதுபோன்ற பாகுபாடுகளை அரசுகள் கைவிட வேண்டும்.

வகுப்புவாதம் குறித்து விரிவான ஆய்வு ஒன்றினை விப+தி நாராயணன் என்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தார். அந்த ஆய்விலே வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிகமான இழப்புகளுக்கு ஆளாவவது முஸ்லிம் சமுதாயம் என்றும், அதிக அளவில் தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் சமுதாயமே சிறைகளிலும் அதிக அளவில் அடைக்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சமுதாயத்துக்கு அரசுகள் ஆதரவு காட்டுவதற்கு பதிலாக அவர்களை குற்றவாளிகளாக சிறையில் அடைத்து தண்டிப்பது இந்தியாவில் நடைபெறுகிறது. ஏன் இத்தகைய அநீதியை அரசுகள் இழைக்கின்றன? ஊடகத் துறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இன்றையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் ஊடகத் துறையில் அதிக அளவில் ஈடுபட வேண்டும். அதனை கடமையாக கருத வேண்டும். ஊடகத்துறை மூலமே நம் மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைக்க முடியும்.

இவ்வாறு ஹபீப் முஹம்மது பேசினார்.