Tuesday, June 22, 2010

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன் கோவைக்கு நான் சென்றிருந்தேன்.
கோவை சிறையில் பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் சிறைவாசிகளின் குடும்பத்தார் பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஏராளமானோர் என்னை வந்து சந்தித்தனர். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருவதாகவும், அவர்களை விடுவிக்க முதல்வர் கலைஞரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து கண்ணீர் விட்டனர்.
இந்த இளைஞர்களெல் லாம் சிறையில் வாடுவதற்கு யார் காரணம்? ஏன் இத் தகைய நிலை ஏற்பட் டது? அவர்களுக்கு தவறாக வழிகாட்டியவர்கள் யார்? சிறை சென்றதால் என்ன பெருமை ஏற்பட்டு விட்டது? இதைப் பற்றியெல்லாம் சிறையில் இருப்பவர்களும், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந் நிலைமை இனி ஒருபோதும் ஏற்பட்டு விடக் கூடாது. முஸ்லிம் லீகைச் சார்ந்த எந்த ஒரு தொண்டர் மீது ஹநிய+சென்ஸ்| வழக்குகூட ஏற்பட்டு விடக் கூடாது என கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அவர் காட்டிய வழியில் தான் நாங்களெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
குடும்பத்தின் ஆண்கள் சிறையில் இருப்பதால் அந்த குடும்பங்கள் படுகின்ற வேதனையும், இழப்புகளும் சொல்லிக் காட்ட இயலாதவை. அதனால் இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிளை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் கலைஞர் அவர்களையும், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் நாங்கள் சந்தித்து கோரிக்கை வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படக் கூடியவர்கள் அவர்கள். இதிலும் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் நமக்கு உண்டு.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எதையும் அமைதி வழியிலும், ஜனநாயகரீதியிலும் தான் செயல்படுத்தும். அந்த வழிதான் வெல்வதற்கு உண்டான வழி.
சமூகங்களிடையே இணக்கமாக வாழ்வதற்கு இந்த வழியைத்தான் இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வழியில் செல்வதற்கு முன் வருகின்ற இளைஞர்களை வாருங் கள் என வரவேற்கிறோம்.
(- சென்னை லாயிட்ஸ் சாலையில் ஜூன் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆற்றிய உரையிலிருந்து......)