தி.மு.க.பொதுக் குழு தீர்மானம்: முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் வரவேற்கிறது
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக் குழுவில் முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கைக்கு உரிய மதிப்பு அளித்து, திருமணச் சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஏற்பட் டுள்ள ஐயப்பாடுகளைக் களைவதற்கு உறுதி அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை நன்றியோடு வரவேற்கிறோம்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஏகக் குரலில் சமுதாயத்தின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றன.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
எனும் திருக்குறள் மந்திரத்துக்கு ஏற்ப, தி.மு.க., தனது பொதுக் குழு தீர்மானத்தின் மூலம் மத்திய மாநில அரசு பிரதிநிதிகள் முஸ்லிம் சமுதாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.
முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் சமுதாயப் பெருமக் களும் இந்தத் தீர்மானத்தை நன்றியோடு வரவேற்பர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டத் துக்கு பாதிப்பு ஏற்படும் என்று முஸ்லிம் சமுதாயம் ஐயப் பாட்டைத் தெரிவித்தவுடன் தி.மு.கழகம் தனது பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி முஸ்லிம்களின் உணர்வு களுக்கு உரிய மதிப்பளிப்பதையும் பார்க்கிறோம்.
அதே சமயத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னே நாட்டில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதை முஸ்லிம் சமு தாயம் கடுமையாக எதிர்த்தது.
தமிழகம் எங்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பெற்று பொதுச்சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக முஸ்லிம் சமுதாயம் தனது உணர்வை வெளிப்படுத்தியது.
அன்று முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, தனது அ.இ.அ.தி.மு.க., பொதுக் குழுவைக் கூட்டினார். நாட்டில் பொது சிவில் சட்டம் வந்தே ஆக வேண்டும்@ மத்திய அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். அடுத்த நாள் காலை நாளிதழின் முதல் பக்கத்தில் எட்டுக்காலம் செய்தியாக கொட்டை எழுத்தில் அது வெளிவந்தது.
அதையும் நினைக்கிறோம்@ இன்று தி.மு.க., நிறை வேற்றியுள்ள இதையும் நினைக்கிறோம். தமிழக முதல்வர் கலைஞருக்கு முஸ்லிம் சமுதாயம் காட்டும் நன்றிப்பெருக்கு இரட்டிப்பாகிறது.
திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் வரும்போது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் உள்ளம் ப+ரித்து நன்றி தெரிவித்து மகிழும்.
-பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன்
தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு மாநிலம்