Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, July 1, 2010

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இணைவோம் இதயத்தால்..

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இணைவோம் இதயத்தால்..

தோப்புத்துறை அ.முஹும்மது நூர்தீன்
அமெரிக்கா (USA)காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு)

இந்த உலகில் எப்படியும் வாழலாம் என்று இஸ்லாம் வழிமுறை சொல்லவில்லை. இப்படி தான் வாழ வேண்டும் என்ற உயாந்த கட்டுபாடுமிக்க மனிட சமுதாயதை உலகிற்கு அறிமுகப்படுத்திய மார்க்கம் தான் இஸ்லாம்.

இந்த புனிதமிக்க மாதமான ரமலானில் எப்போதும் இல்லாத வகையில் அல்லாஹுவின் இறைவசனங்கள் உலகம் முழுவதும் ஒலிக்க கண்டு நம் அனைவர்களும் மெய்சிலிர்த்து போய் இறைமறை தரும் வழியில் வாழ உறுதி எடுக்கும் மனநிலைக்கு வருகிறோம். இந்த உலகில் எத்தனையோ நிகழ்வுகள், வியக்கதக்க சம்பவங்கள், விஞ்ஞான பரிமான வளர்ச்சியின் வெளiபாடுகள் போன்றே எத்தனையோ பல அற்புதங்களை கண்டு வியந்து பரவசமடைந்து இருப்போம் அப்படி இருந்தும் இவைகளை அனைத்தையும் புறம் தள்ளiவிட்டு அதற்கு வழிகாட்டியாக, மனித அறிவிற்கு ஊக்கம் தரும் மருந்தாக சிறப்பான அருட்கொடையாக திகழ்வது எல்லாம் வல்ல அல்லாஹுவின் திருக்குர்ஆன் மட்டுமே.

இறைவனின் வேதம் மற்றும் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையை தன் வாழ்நாட்களiல் ஒவ்வொரு சிறிய, பெரிய காரியம் வரை இணைந்து வலிமைமிக்க சமுதாயமாக வாழ்ந்த முஸ்லிம் சமுதாயம் இன்று வலிமை குன்றிய நிலைக்கு சென்று தங்களiன் முகவரியை தேடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது பெறும் வேதனை தரும் விசயமாக உள்ளது.

அருள்மறையை நாம் என்றும் ஆராய்ந்து பார்ப்பதில்லை, அதில் இருக்கும் போதனையின்படி அன்றாடம் நாம் நடக்க முயற்சி செய்வதில்லை. இறைவேதத்தில் இருக்கும் அரிய பல விசயங்கள் உணர்வுப்புர்வமாய் ஏற்று நடப்பதில்லை அல்லது அப்படி நடந்து வருவதற்கு முயற்சியும் எடுப்பதில்லை.

இம்மைக்கும், மறுமைக்கும் நல்வழிப்படுத்த நபி(ஸல்) அவர்கள் மூலம் திருமறையை கொடுத்த இறைவன் நம் சமுதாயத்திற்கு ஈமான், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹுஜ் என்ற ஐம்பெரும் கடமையை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துள்ளான்.

சாந்தியும் சமாதானத்தை உலகம் முழுவதும் பரவ செய்யும் இஸ்லாம், சமுதாயத்தில் ஒற்றுமையை முன்நிறுத்துகிறது. உலகில் உள்ள பல்வேறு கோட்பாடுகளiலிருந்து தனிதன்மையாக இஸ்லாம் இருக்க காரணம் ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் இருப்பதால் தான்.

இந்த புனித ரமலான மாதத்தில் இறைவனுக்காக நோன்பு நோற்றோம், இறைவனை தொழுது வந்தோம் பிறகு குறிப்பிட்ட காலம் வரும் போது புனித யாத்திரை செல்லுகிறோம் இத்தனை வாழிப்பாடுகளையும் நாம் கூட்டாக ஒற்றுமையை முன்நிறுத்திதான் செயலாற்றுகிறோம், நமக்கு இந்த வாய்ப்புகளை கொடுத்த இறைவன் நன்மைகளை தராள மனதுடன் வாரி வழங்குகிறான். இறைவன் கொடுத்த கடமைகள் அனைத்தும் கூட்டு முயற்சி, உறவு என்ற கலவையில் ஒற்றைமை என்ற அடிப்படையுடன் உள்ளது.


இன்று இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக நம் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளல் குறிப்பாக இளைஞர்கள் அகப்பட்டு அதில் இஸ்லாத்திற்கு விரோதமாக சுழன்று கொண்டுள்ளோர்கள்.

சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள், வாய்ப்புகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் போக காரணம் நம்மிடையே பிணக்கு கொள்வது தான் நம் சமுதாயம் பெரிய அளவில் பலவீனமாக போய்விட்டது. இதுவே சமுதாய பின்னடைவிற்கு காரணம்.

பகட்டு வார்த்தைகள நம்பி பல்வேறு இயங்கம், அமைப்பு என்று சிதறிச் சென்று உங்களiன் உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொடுத்து பல இன்னல்களை பரிசாக பெற்ற சமுதாய உடன்பிறப்புகளே இனிவரும் காலத்தில் உங்களை நீங்களே முன்நிறுத்தி பார்த்து அமைதியாக எந்த வித விளம்பர தோரனையில்லாமல் சமுதாய வளர்ச்சியை மட்டுமே கவலை கொண்ட நம் தாய் சபை முஸ்லிம் லீக் என்ற பேரியக்கத்தில் உங்களை இணைத்து கொண்டு சமுதாய பணியாற்றிட வாருங்கள். சமுதாயத்தை சரியான பாதையில் ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ் வழிநடத்தவில்லையெனில் எதிர்காலத்தில் வரும் இஸ்லாமிய தலைமுறைகள் அடையும் பின்னடைவிற்கு நீங்களே காரணம் என்ற அவபெயர் பெறாதீர்கள், நாளை இறைவனிடம் சமுதாய ஒற்றுமையை பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்ற எச்சரிகையோடு சமுதாயம் எழுச்சி பெற விரைந்து வாருங்கள். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்து கொள்வதே சரியான தீர்வு -

கடந்த மாதம் இறுதியில் எழுச்சிமிக்க தலைவர் பேராசிரியர் அவர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் சமுதாய நாளதழ் மணிச்சுடர் மூலம் உன்னைத்தான் அழைக்கிறேன் உனக்குக் தான் அறிவிக்கிறேன் என் தலைப்பில் முஸ்லிம் லீக் சேர்ந்து சமுதாய பணியாற்றிட சமுதாய இளைஞர் பட்டளத்திற்கு அழைப்பு மடல் அனுப்பியிருந்தார்கள். இந்த அழைப்பையே ஒவ்வொரு சமுதாய கவலைக் கொண்டவர்களும் தனக்கு வந்த தனிஅழைப்பாக ஏற்று கொண்டு வாருங்கள் முஸ்லிம் லீக் தாயுள்ளத்துடன் அரவனைக்க காத்திருக்கிறது.

இஸ்லாம் பிற சமூகங்களுக்கு என்றைக்குமே முன்மாதிரி தான், அது நம் சமுதாயம் வாழ்ந்து காட்டும் ஒற்றுமை மற்றும் மக்களiடையே நல்லிணக்கமாக இருந்து வரும் நற்பண்புகளுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம் லீக் தாய் சபையில் ஒன்றுப்படுவோம். சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவோம். எழுச்சிமிக் தலைவர் மற்றும் இளைய சமுதாயம் கொண்ட மாநில நிர்வாகம் கீழ் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் புதிய எழுச்சி வரலாறு படைக்க வாருங்கள்…நமக்கு கிடைக்க வேண்டிய பொது மற்றும் அரசியல் அங்கீகாரத்தை உரிமையுடன் பெறுவோம். (இன்ஷா அல்லாஹு)

Thursday, April 1, 2010

கண்ணியத்திற்குரிய தலைவர்களால் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பாடசாலை முஸ்லிம் லீக்

கண்ணியத்திற்குரிய தலைவர்களால் அரசியல் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் பாடசாலை முஸ்லிம் லீக்
அபுதாபி, மார்ச் 29-

அபுதாபி அய்மான் சங்கம் 26.03.2010 வெள்ளிக் கிழமை மாலை ருசி உணவகத்தில் நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங் கேற்றார்.

இறைவசனங்கள் ஓதப் பட்ட பின்னர் நிகழ்ச்சி துவங்கியது. அய்மான் செயலாளர் லால்பேட்டை அப்துல் ரஹ்மான் வர வேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவைப் பொதுச்செய லாளர் ஏ. முஹம்மது தாஹா, முஸ்லிம் லீக் மேற்கொண்ட பல்வேறு சமுதாயப் பணிகளை விவரித்தார். பாராளுமன் றத்தில் பிஜேபியினர் மதரஸாக்கள் தீவிரவாதத் தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டினை கடுமை யாக எதிர்த்தவர் பேராசிரி யர் என்றார்.

பிறைமேடை மாதமிரு முறை இதழை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது பெற்றுக் கொண் டார். அதனை தொடர்ந்து பாவா ஹாஜி, அப்துல் கரீம், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி மைதீன், அழைப்புப் பணியாளர் ஜெய்லானி, அய்மான் சங்கப் பொரு ளாளர் முஹம்மது ஜமாலுதீன், காயல் நல மன்ற நிர்வாகி நூஹ{ சாஹிப் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தமது உரையில் அய்மான் சங்கத்தினரால் திருச்சியில் மகளிருக்காக நடத்தப் பட்டு வரும் அய்மான் கலை, அறிவியல் கல்லூரி யின் பட்டமளிப்பு விழா வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்லூரி யில் 95 சதவீத சமுதாய மாணவிகள் படிப்பது மகிழ்வினையளிக்கிறது. பெரும்பாலோர் முதல் வகுப்பினை சிறப்பு நிலை யில் தேறியுள்ளது பெரு மைக்குரியது.

கடல் கடந்து வந்து பணிபுரிவதோடு அல்லாது ஓய்வு நேரத்தில் சமுதாயப் பணிகளில் ஈடுபடும் உங் களைப் பாராட்டுகிறேன். இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனித நீதிப் பாசறை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப் புகள் பங்கு பெற்றிருப்பது மகிழ்வினையளிக்கிறது.

முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக் கும் பாணி.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் பல்வேறு இயற்கை பேரி டர் நிவாரணப்பணிகள் குறித்து நான் நன்கறிவேன். குஜராத் கலவரம், சுனாமி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்களது பங்கு முக்கியமானது. பல்வேறு இயக்கங்களும் இப்பணிகளில் ஈடுபட் டாலும் அதில் சிறப்பாக செய்தது ஜமாஅத்தே இஸ்லாமியே. அதற்கும் நாம் நிவாரணப்பணிக்காக நன்கொடை வசூலித்து அவர்களிடமே வழங்கி னோம்.

முஸ்லிம் லீக் பாரம் பர்ய இயக்கம். அதன் வழிமுறையினை நமது முன்னோர்கள் அங்குலம் அங்குலமாக அரசியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். அரசி யல் அரங்கில் ஏதேனும் தவறாக முடிவெடுத்தால் நூறு ஆண்டுகள் திரும்ப எழுந்து நிற்க இயலாத முடிவுக்கு தள்ளப்படுவர்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் தற்பொழுது வேலூர் எம்.பி.யாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் திடீரென முஸ்லிம் லீகிற்கு வரவில்லை. மாண வப் பருவத்திலிருந்தே முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்.

முஸ்லிம் லீக் தமிழ கத்தில் தி.மு.க.வுடனும், கேரளா மற்றும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி யில் உள்ளது. சமீபத்தில் கட்டாய திருமண சட்டம் குறித்த சமுதாயத்தினரின் ஐயப்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதில் சமுதாயத் திற்கு ஏற்ப மாற்றங்களை அமுல்படுத்த கோரியுள் ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

பல்வேறு சமுதாய அமைப்புகள், தலைவர்கள் பல்வேறு கால கட்டங் களில் இருந்து வந்தாலும் முஸ்லிம் லீகின் அணுகு முறை மாறுபட்டது. சமுதாயத்திற்கு நலன் பயக்கக்கூடிய வகையில் அது செயல்பட்டு வரு கிறது. அமீரகத்தில் பணி புரிந்து வரும் நீங்கள் இத்தகைய சமுதாய இயக்கமான முஸ்லிம் லீகிற்கு ஆதரவு அளிப்ப துடன் தாயகத்தில் இருந்து வரும் குடும்பத்தினரையும் இதன் பணிகளில் பங்கு பெறச்செய்யுங்கள் என் றார்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அல்மினார் அகாடமியின் அப்துல் ஹாதி ஹாஜியார் லால்பேட்டையில் பணி புரிந்த போது கேரள சிங்கம் சி.ஹெச். முஹம்மது கோயாவின் பேச்சினை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்தார்.

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைப்பு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றார், அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான்.

அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டர் தலைவர் பாவா ஹாஜி, நாகூர் பனியாஸ் ஹமீது மரைக்காயர் உள்ளிட் டோர் பேசினர். இரவாஞ் சேரி இக்பால் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

விழாவில் அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி, பேரவை நிர்வாகிகள், அய்மான் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது விழா மேடையில் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பலர் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.

Friday, July 24, 2009

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தாய்ச் சபை முஸ்லிம் லீக் மட்டுமே !

( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி அறிக்கை ! )

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்ற சமுதாயத்திற்கு வெற்றி, தோல்வியை சொன்னதோ ? இல்லையோ? தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு தெளிவான வெற்றியை சொல்லி விட்டது. அந்த வெற்றியை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலம் சொல்லி இருப்பது ஒவ்வொரு முஸ்லிம்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் எந்த அணியில் இடம் பெறுகிறதோ ! அந்த அணிக்குத்தான் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் படை திரண்டு ஆதரவை வழங்கி வருகிறது என்பதை 2006 சட்டமன்றத் தேர்தலும் 2009 நாடாளு மன்றத் தேர்தலும் உறுதிபடுத்தியுள்ளது. தாய்ச்சபை முஸ்லிம் லீக்கை விமர்சிப்பதன் மூலமே தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என நினைத்து வாரத்திற்கு ஒரு கட்சியையும், வாரத்திற்கொரு இயக்கங்களையும் உருவாக்கி கொண்ட லெட்டர் பேடு அரசியல் கோமாளிகளெல்லாம் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களின் முகத்தை காட்டுவதும் தேர்தலுக்குப்பின் காணாமல் போவதுமாய் காலம் ஓடிக் கொண்டிருந்தாலும் இத்தகைய போலிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை !

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் எங்கள் பின்னால் தான் என்ற குருட்டு நம்பிக்கையுடன் அவசர கோலத்தில் கட்சி ஆரம்பித்து தகுதிக்கு மீறிய வகையில் அரசியல் பேரம் நடத்தி அனைத்து கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியே இல்லாமலும் திறந்த கடையை மூட முடியாமலும் தனித்து நின்று தங்கள் பலத்தை காட்டப் போகிறோம் என்று சொல்லி முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்வதுமாய் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழக அரசியலையே புரட்டி போடப்போகிறது எங்கள் கட்சியின் செயல்பாடுகள் என ஆணவ போதையில் உளறி கொட்டிய வீராதி வீரர்கள் ? எல்லாம் தேர்தலுக்குப்பின் அவர்களின் நிலையையும், செல்வாக்கையும் கண்டு அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் விரக்தி அடைந்து இனியும் நாமெல்லாம் அவசர கோலத்தில் ஜனித்த கட்சியில் நீடிக்க வேண்டுமா ? என கேள்வி கேட்டு ஊர் தோறும் கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களுக்கான அரசியல் களம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்று உணர்ந்து தொடர்ச்சியாக தாய்ச்சபையில் இணைந்து வருவதை இப்போது கண்கூடாய் பார்க்கிறோம்.

தமிழக முஸ்லிம்களின் ஒட்டு மொத்த பார்வையும் தற்போது தாய்ச்சபையின் முஸ்லிம் லீக் பக்கம் திரும்பியுள்ளது வரலாற்று சாதனையாகும். சத்தியத்தை அழிக்க நினைக்கும் எந்த அசத்தியமும் நிலைகொண்ட தில்லை. என்பதற்கு முஸ்லிம் லீக்கிற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் தேய்வுகளே சாட்சியாகும்.

எந்த கொம்பனாலும் முஸ்லிம் லீக்கின் வரலாற்று நிழல்களை கூட அழிக்க முடியாது. காரணம் முஸ்லிம் லீக் இறையருள் பெற்ற இயக்கம். தன்னலம் கருதாமல் சமுதாயக் கவலை யுடன் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் களால் வழி நடத்தப்பட்ட பேரியக்கம். நல்லோர்களால் உருவாக்கப்பட்ட தூய்மையான இயக்கமாய் தமிழக அரசியலில் வலம் வரும் ஒரே இயக்கம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்பதை பெருமைபடக் கூறிக்கொள்வோம்.

தமிழக முஸ்லிம்களின் கண்ணியமும், பாரம்பரியமும் கட்டிக் காக்கப்பட அனைவரும் அரசியல் ரீதியாக தாய்ச்சபையில் தங்களை இணைத்துக் கொண்டு தொடர்ந்து வெற்றிகளை குவித்திட முன்வர வேண்டுமாய் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன்.

வாரீர் ஒன்றுபடுவோம் ! உயர்ந்திடுவோம் !!

Monday, May 4, 2009

அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அப்பட்டமான உண்மை!!!

அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அப்பட்டமான உண்மை!!!


* ராஜேந்திர சச்சார் கமிட்டி அமைத்து இந்தியா முழுவதிலுமுள்ள முஸ்லிம்களின் இன்றைய பொருளாதார நிலையை வெளியில் கொண்டு வர முதல் முக்கிய காரணமாக இருந்தவர்,

* மத்தியில் சிருபான்மையினருக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி வெற்றி கண்டவர்,

* மத்ரஸாக்களில் தீவிர வாதம் போதிக்கப் படுவதில்லை என்று வீர கர்ஜணை செய்ததுடன் நானும் அங்கிருந்து வந்தவன் தான் என்பதை பாராளுமன்றத்தில் பதிவு செய்தவர்,

* இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை ஆணித்தரமாக நடப்பு பாராளுமன்றத்திலேயே வைத்தவர்,

* மத்ரஸாக்களுக்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயுவை அதிக விலையாக மாற்றியதை கலைந்து உடனே அதே சலுகையை தர வேண்டும் என்று பாராளூமன்றத்தில் வாதிட்டவர்,

* பள்ளிவாசல்களில் கடைபிடிக்கப்படும் திருமண நிக்காஹ் (தஃப்தர்) பதிவேட்டை அரசுப் பதிவாக அங்கீகரிக்க வேண்டும்,இதை அரசின் சட்டமாக இயற்றுங்கள் என்ற வாதத்தை பாராளுமன்றத்தில் பதிய வைத்தவர்,

உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான்இவ்வளவு காரியங்களையும் விளம்பரத்தின் வெளிச்சமின்றி செய்து முடித்த சமுதாயத்தின் ஒப்ப்ற்றத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர்,கே.எம்.காதர் மொஹிதீனஅவர்கள்.அவரின்் ் மாணவராகவும்,அப்பழுகற்றத் தொண்டராகவும் திகழக்கூடிய சகோதரர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வெற்றி சமுதாயத்தில் மிகப் பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி,பெருமக்களின் துஆவும் பெருகியிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்,இதே பிரார்த்தனை இல்லங்கள் தோறும் ஒளித்துக் கொண்டிருக்கிரது.இந்த இனிய தகவளின்படி கடல் கடந்து வாழும் சமுதாய பந்தங்களும்,தாய்ச் சபை சொந்தங்களும்,தங்களின் பங்களிப்பாக துஆவோடு மட்டும் நின்று விடாமல்,தங்கள் அருகாமையில் பணிசெய்யக் கூடிய வேலூர் தொகுதியை சேர்ந்த பெருமக்கள் இருப்பார்களேயானால் அவர்களிடமும் நமது வேட்பாளரின் சார்பில் அவர்களின் குடும்ப வாக்குகளை பெற முயற்சிக்கவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அறுபது ஆண்டு கால அரசியல் வரலாற்றில் சமுதாயத்தின் சங்க நாதமாக ஒலிப்பது தாய்ச் சபை முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் தான் என்பது அப்பட்டமான உண்மை!

எல்லாவற்றையும் விவரிக்க இங்கு இடமுமில்லை அதற்க்குரிய நேரமும் இதுவல்ல என்பதனால் இன்றைய தாச் சபை எம்.பி யின் சேவையில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்திற்க்கு காண்பித்தோமே தவிர இது விளம்பரத்திற்காக அல்ல!

சின்னம் என்பது முஸ்லிம் லீக் பணிகளில் சிரமமாகவே இருந்ததில்லை என்பதை சிரஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப்,ஷம்ஷீரே மில்லத் அப்துல் லத்தீப் சாஹிப் போன்ற தலைவர்கள் நிரூபித்துச் சென்றதை இன்று முனீருல் மில்லத் பேராசிரியர் நடைமுறை படுத்திக் கட்டியிருக்கிரார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.

இதைக் கூட சொல்ல வேண்டிய நிர்பந்தம் தான்! கவனித்துக் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்க்காகத்தான் !!!
இப்னு ஷஃபீக்

Saturday, May 2, 2009

நடந்து முடிந்த தேர்தலும், முஸ்லிம்களின் நிலைபாடும்!

நடந்து முடிந்த தேர்தலும், முஸ்லிம்களின் நிலைபாடும்!
மரியாதைக்குரிய சிந்தனை சிற்பிகளான இளைஞர்களே ! இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …)!
இம்மடலை பொறுமையுடன் படித்து நடுநிலையோடு சிந்தித்து நல்லதொரு முடிவுக்கு வருவீர்களானால் … இன்ஷா அல்லாஹ் நாளைய வெற்றி நமது சமுதாயத்திற்கே! நமது நாட்டின் 15வது மக்களவை தேர்தல் சிலருக்கு வெற்றியும் பலருக்கு தோல்வியுமாய் முடிந்து விட்டது. தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் முஸ்லிம் லீக்கின் சார்பில் சகோதரர் N.M.அப்துல் ரஹ்மான் அவர்களும் காங்கிரஸ் சார்பில் J.M.ஹாரூன் அவர்களும் வெற்றி பெற்று தமிழக முஸ்லிம்களின் சார்பில் பாராளு மன்றத்தில் இடம் பிடித்து விட்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
தமிழகத்தில் செயல்படும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மட்டுமே ஒருவர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளார். மற்றவைகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் கிடைத்த அங்கீகாரத்தையும் பயன்படுத்த தவறிய தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சியை நினைத்து நெஞ்சம் வேதனைப்படுகிறது. தற்போதைய அரசியலில் வேகத்தை மட்டும் வைத்து களமிறங்காமல் விவேகத்தையும் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதுதான் கண் கூடான உண்மை!
இந்த வாய்ப்பைத்தான் முஸ்லிம் லீக் சமயோசிதமாய் செயல் படுத்தி ஒதுக்கப்பட்டது ஒரு தொகுதியானாலும் அதில் வெற்றி வாகை சூடி விட்டது. ஆனால் நேற்று கட்சி ஆரம்பித்து தங்களின் முழுமையான பலம் என்னவென்பதை (4 தொகுதியில் போட்டியிட்டு மொத்தமே 66 ஆயிரம் வாக்குகள் மட்டுமே ம.ம.கட்சி பெற்றிருந்தது) தெரிந்து கொள்ளாமலேயே எடுத்தேன், கவிழ்த்தேன் என தகுதிக்கு மீறிய வகையில் சீட் பேரம் நடத்தி முடிவில் கிடைக்க விருந்த ஒரு தொகுதியையும் இழந்தது மட்டுமல்லாமல் கையில் இருந்த வக்ஃபு வாரியத்தையும் பறி கொடுத்து விட்டு,தேர்தல் நாளன்று ஆளும் கட்சியினரோடு வன்முறை யிலும் ஈடுபட்டு அதில் நமது சகோதரர்கள் 6 பேர் இரத்தம் சிந்தியது, இந்த வன்முறையை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி அதில் ஆளும் கட்சியினரை அநாகரீகமாக வசை பாடியதன் மூலம் இராமநாதபுரத்தில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸ் வழக்குபதிவு செய்து தற்போது தேடப்படும் குற்றவாளிகளாக ஓடி ஒளிந்து வரும் நிலையை தொண்டர் களுக்கு ஏற்படுத்தியது போன்ற தமுமுகவின் அரசியல் செயல்பாடு அறிவுடையதா? அல்லது எந்த வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் கிடைத்த ஒரு இடத்தையும் யாரையும் வசைபாடாமல் கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ள முஸ்லிம் லீக்கின் அரசியல் செயல்பாடு அறிவுடையதா? என்பதை உங்களின் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன், நல்ல தீர்ப்பு வழங்குங்கள் !
பிற கட்சி சின்னத்தில் போட்டியிடுவதால் முஸ்லிம் லீக் தனது கெளரவத்தை இழந்து விடும் என நினைப்பது எவ்வகையில் நியாயம்? 100 ஆண்டு கண்ட நமது தாய்ச்சபை முஸ்லிம் லீக் இன்று வரைக்கும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனதற்கு யார் காரணம்? கேரளாவில் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், இரண்டு எம்.பிக்கள் என முஸ்லிம் லீக் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு யார் காரணம்? எல்லாம் உங்களை போன்ற இளைஞர்கள் தான்! காரணம்!! கேரளாவில் இயக்கங்கள் பல இருந்தாலும் அரசியல் என்று வரும்போது முஸ்லிம் லீக்கின் தலைமையில் அம்மக்கள் ஒன்று திரண்டு விடுகின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக்கில் ஒன்றிணையாமல் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து ஆளுக்கொரு கூட்டணியில் சேர்ந்து கொள்கின்றனர். இந்நிலை நீடித்தால் இன்னும் 100 ஆண்டு களானாலும் முஸ்லிம் லீக் மட்டுமல்ல எந்த இயக்கமும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு எந்த வெற்றியையும் பெற முடியாது!
தமிழக முஸ்லிம்களிடம் குறிப்பாக இளைஞர் களிடம் நான் மிகவும் பணிவோடு கேட்பதெல்லாம் நீங்கள் எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள். அதன்மூலம் சமுதாய பொது சேவையாற்றுங்கள். வரவேற்கிறோம்! ஆனால் தேர்தல் அரசியல் என்ற நிலை வரும்போது மட்டும் கேரளாவைப் போல இயக்கத்திற்கப்பால் முஸ்லிம் லீக் என்னும் ஒரே குடைக்குள் நுழைந்து விடுங்கள். பின்னர் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சியை பாருங்கள். தமிழகத்தின் அனைத்து அமைப்புகளின் சகோதரர்களும் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக்குடன் இணைந்து செயல்பட்டால் போதும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்துடன் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியையும் பெற்று விடலாம்!
சகோதர சமுதாயத்தின் நிலையை பாருங்கள், R.S.S, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முண்ணனி, பஜ்ரங்தளம், சிவசேனை போன்ற பல இயக்கங்களாய் செயல்பட்டாலும் தேர்தல் வரும் போதெல்லாம் ஒன்று திரண்டு பி.ஜே.பிக்கு ஆதரவு கொடுப்பதால் தான் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தாமரையாய் ஜொலித்தார்கள். இதைப் பார்த்தாவது நமது சமுதாயம் திருந்தாதா? இன்ஷா அல்லாஹ் திருந்தும் என்ற நம்பிக்கையோடு தான் இம்மடலை எழுதியுள்ளேன். படியுங்கள், சிந்தியுங்கள், தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களமாக முஸ்லிம் லீக் மட்டுமே இருக்கட்டும். எல்லோரும் முஸ்லிம் லீக்கில் இணைந்து ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்! நாளைய விடியல் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றியாக இருக்கட்டும். நமது சமுதாயத்தின் அரசியல் உயர்வையும், உரிமையையும் அடைவதற்காக “ஏணி” காத்திருக்கிறது. முஸ்லிம் லீக் என்னும் ஏணியில் ஏறி சிகரத்தை வெல்வோம். வாருங்கள் தாய்ச்சபைக்கு, இணையுங்கள் தாய்ச்சபை சகோதரர்களோடு இன்ஷா அல்லாஹ் நாளைய ஆட்சியும் அதிகாரமும் நம்முடையதாகட்டும்! ஆமின்!!


சமுதாயக் கவலையுடன்

மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

துபை

தொடர்புக்கு; Cell: 050-7959960

Wednesday, April 8, 2009

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Idhuthaan Arasial said...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பாதேர்தலில் ஒருபோதும் போட்டியிட மாட்டோம் என்று கூறி தமுமுகவுக்கு ஆள் சேர்த்த அதன் தலைவர்கள் தற்போது மாமா.கட்சி என்ற பெயால் கட்சி துவங்கி சீட்டுக்காக நாயாக அலைந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தொந்ததே! இந்த பேர்வழிகள் வழக்கமான அரசியல்வாதிகளை விட மிகக் கேவலமான அரசியல் நடத்துவதைக் கண்டு தமிழக மக்கள் காறித் துப்புவதும் அறிந்ததே! காங்கிரஸ் கூட்டணியில் ஒருபோதும் சேர மாட்டோம் என்று ஜவாஹிருல்லா அறிவித்த மூன்று நாட்களில் காங்கிரஸ் கூட்டணியான திமுகவிடம் போய் சீட் கேட்டு கெஞ்சத் துவங்கினார். அதிமுக திமுக கட்சிகளுடன் ஒரே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிபிசி தமிழோசை நிருபாடம் கூறி கேவலப்பட்டுக் கொண்டார்.

8 தொகுதிகளில் போட்டி என்று சென்னையிலும்
6 தொகுதிகளில் போட்டி என்று நேல்லையிலும்
3 தொகுதிகள் தந்தால் தான் கூட்டணி என்று திருச்சியிலும்
2 தொகுதி தந்தால் தான் கூட்டணி என்று பி.பி.சி. திசையில் புலம்பித் தள்ளிக்
கொண்டிருக்கின்றனர். உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறி மூன்று நாட்களைக் கடத்தினர்.அதன் பிறகு உயர்மட்டக்குழு முடிவெடுத்து விட்டதாகவும் 4.4.09 செயற்குழுவில் அறிவிப்பதாகவும் அது தமிழக அரசியலில் திருப்புமுனையை (?) ஏற்படுத்தும் என்றும் பத்திகை அறிக்கை விட்டனர்.தற்போது 4.4.09 செயற்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக பழையபடி ஆரம்பத்திலிருந்து துவக்குகின்றனா.அப்படியானால் இவ்வளவு நாளும் கூட்டணிக்காக தெருத்தெருவாக அலைந்ததற்கு யார் அதிகாரம் வழங்கினார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஏனென்றால்அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Thanks http://adiraixpress.blogspot.com/2009/04/blog-post_7098.html?showComment=1239225600000

சமுதாயம் என்ற பெயரில் அரசியல் வியாபாரம்

Anonymous has left a new comment on your post "ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜு...":

ஆடுதுறை காக்கா, சுலைமான் பாய் உரையாடலும் வெகு அருமை.

விமர்சனங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். தமுமுக தலைமை மற்றும் அதன் வால் மமக இதற்கு தலைமை இல்லை என்பதால் இன்று வரை யாருடன் கூட்டணி வைப்பது என்று தினமும் ஒரு செய்தியை போட்டு சமுதாய இளைஞர்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களiன் நாற்றம் பி.பி.சி வரை தெரிந்து விட்டது. சமுதாயம் என்ற பெயரில் அரசியல் வியாபாரம் செய்ய இருக்கிறோம் என்று இவர்களே பட்டவர்த்தமாக டி.வி., ரேடியோ பத்திரிகை என்று முழக்க செய்கிறார்கள் ஆனால் கடைசியில் இந்த தன்மான சிங்கம் திராவிட கட்சிகளiடம் அசிங்கப்பட்டு சிகப்பு லைட் கார் வலம் வந்ததையும் இழந்து நிற்கிறது. இப்போது பி.ஜே,பி தான் பாக்கி இவர்கள் கூட்டணிபேசுவதற்கு…இப்படி ஒருவர் என்னிடம் சொன்னார் அதற்கு நான் தமுமுக நிச்சயம் பி.ஜே.பிக்கு போக வாய்ப்பு இல்லை காரணம் அதில் அவர்களை எதிர்த்து போராடும் பி.ஜே பெயர் இருப்பதால் நாளை கூட்டணிசேர்ந்து தேர்தல் பிராச்சாரத்தின் போது பி.ஜெ பி.ஜெ என்று சொல்ல தமுமுகவினர்களுக்கு மன்னிக்கவும் மமக க்கு கஷ்டமாக இருக்கும். எனவே நமக்கு தெரிந்த கட்சி இப்போது பாக்கி சுப்பிரமணிசாமி அல்லது மாயவதி கட்சிக்கு வேண்டும் என்றால் மமக கூட்டணிவைத்து தேர்தலை சந்திக்கும் பிறகு தேர்தலில் டெபாசிட் இழந்தவுடன் சமுதாய கண்மணிகளே நாம் சேர்ந்த கூட்டணி தமிழகத்திற்கு புதியவர்கள் எனவே அடுத்த தேர்தலில் சரியான கூட்டணியை பெற வேண்டும் என்று அறிக்கை விடுவார்கள். அவர்களுக்கு இருக்கவே இருக்கு மமக கொள்கை பரப்பு வாரஇதழ் மக்கள் உரிமை அத்துடன் தினமும் இணையத்தில் சுடச் சுட செய்தி அறிவித்து அப்பாவி சமுதாய இளைஞர்களை திசை மாற்றுவார்கள். தமுமுக வின் இந்த திருவிளையாடல் எல்லாம் இந்த தேர்தலுடன் மூடுவிழா தான் மீண்டும் அல்லாஹுfவின் மீது சத்தியம் செய்து விட்டு யாரும் கேட்டால் ஒன்று இரண்டு சீட்டு வந்தால் நம் சமுதாயத்திற்கு எந்த வித நன்மையும் இல்லை என்று ஒப்புக்கு சொல்லி சமாளiப்புஸ் செய்வார்கள். இவர்களுக்கு இது ஒன்றும் பழக்கப்படாத விசயம் அல்ல. வார்த்தை ஜலங்கள் மூலம் சமுதாயத்தை அழிவு பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றே காலத்தை கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு அல்லாஹு தான் நல்ல புத்தியை கொடுக்கனும்.
Abu Mohammed Dubai



Posted by Anonymous to அமீரக காயிதெ மில்லத் பேரவை at April 8, 2009 7:31 PM

Sunday, April 5, 2009

தன்மானமா?வாரியமா?தள்ளாடும் ம ம க...!

தன்மானமா?வாரியமா?தள்ளாடும் ம ம க...!

அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தையே மறந்து அரசியல் கட்சி ஆரம்பித்த அதே நாளில் ஆரம்பித்த வீர வசனம் தொடர்ந்து ஆறு சீட்டு கோரிக்கையாக உறுவெடுத்தது.எங்களை தேடி வந்து கூட்டணி பேச வேண்டும் என்று கோரியவர்களை கூப்பிட்டோர் யாருமில்லை,ஆறு நான்கானது மூன்று இரண்டாகி கடைசியில் ஒன்றாகவே வந்து நின்றது.வந்ததை வாங்குவதிலும் வீராப்பு,ஒரு வாரத்தில் அரசியல் அதிர்வை ஏற்படுத்தும் முடிவெடுப்போம் என்றார்கள்,பின்னர் செயற்குழு கூடி பேசுவோம் என்றார்கள் பாவம் இன்று உயர் நிலைக் கூடி சொல்லும் என்று தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இல்லை இல்லை வாரியமா தன்மானமா என்று தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள்..காளி பெருங்காய டப்பாக்காரர்கள்...!

Monday, February 23, 2009

வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்

வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்
அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பேட்டி


வாணியம்பாடி,பிப்.23-

வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கே ஒதுக்கும்படி தி.மு.க. விடம் கேட்போம் என அப்துல்பாசித் எம்.எல்.ஏ. கூறினார்.

வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்துல்பாசித் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனி நல வாரியம்

சமீபத்தில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் இந்திய ïனியன் முஸ்லீம் லீக் சார்பில் உலமாக்களுக்கு என தனிவாரியம் அமைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் அமைத்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மதரசா பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கான மின்கட்டணம் சாதாரண வகையில் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளது. இவற்றிக்கு மர்கஸ் என்ற தலைமை அமைப்பு உள்ளது. இவ்வமைப்பை கலந்து பேசிய பின்பு வக்பு வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

எங்கள் கட்சிக்கு ஒதுக்க கேட்போம்

இலங்கை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் இலங்கை தமிழர்களுக்கு உதவும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் அரசை குறை கூறி வருகிறார். இது கண்டிக்க தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கும் மீண்டும் ஒதுக்ககோரி தி.மு.க. தலைமையிடம் கோருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, June 18, 2008

சென்னையில் முஸ்லிம் லீக் மாநாடு










சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு - ஜுன் 20 & 21 நடக்கிறது


இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜுன் 20 மற்றும் 21 தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ஜுன் 20 வெள்ளிக்கிழமை

ஜுன் 20 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் நிறைவேற்றியபின்னர் காயிதெ மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் ஃபாத்திஹா நடைபெறும் அதனைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத் நினைவிடத்துக்கு செல்லப்படும்.

துஆ மஜ்லிஸ்

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் அமையப்பெற்றுள்ள தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஸிலில் அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம் தலைமையில் துஆ மஜ்லிஸ் மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்விற்கு ஏ.கே. அப்துல் ஹலீம், ஆரூர் அப்துல் காலிக், எழுத்தரசு ஏ.எம். ஹனீஃப், எஸ்.எம். காதர் பாட்சா, எஸ்.எம். கோதர் முஹைதீன், பி.எஸ்.ஹம்ஸா, டாக்டர் இக்பால் பாஷா, வி.எஸ்.டி.ஷம்சுல் ஆல்ம், எஸ்.டி. நிசார் அஹ்மது, எம். ஜெய்னுல் ஆப்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநாடு வரவேற்புக் குழு கூட்டம்

காயிதெ மில்லத் மன்ஸிலில் மாலை 7.00 மணிக்கு மாநாடு வரவேற்புக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது, செய்யிது முஹம்மதலி ஷிஹாப் தங்கள், பி.கே.குஞ்ஞாலிக் குட்டி, பி.வி.அப்துல் வஹாப் எம்.பி, வழக்கறிஞர் அஹ்மது பக்‌ஷ், நயீம் அக்தர் தஸ்தகீர் ஆகா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

ஜுன் 21 சனிக்கிழமை

காயிதெமில்லத், சமுதாய ஒளிவிளக்கு, சிராஜுல் மில்லத் விருதுகள் வழங்கும் விழா

காலை 9.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

செய்யிது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துஆ ஓதுகிறார்.

அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம், மவ்லானா எம்.எஸ். உமர் பாரூக் மவ்லானா, டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், எஸ்.எம்.சேகு நூர்தீன், டாக்டர் காஜா கே. மஜீத், ஏ.ஜே. அப்துல் ரஜ்ஜாக், காக்கா முஹம்மது ஜுபைர், முஹம்மது யூனுஸ் ( எம்.ஐ.இ.டி ) வி.எம். அப்துல் ஜப்பார், கே.பி. இஸ்மத் பாட்சா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

வி.எம். செய்யது அஹ்மது, ஏ.அப்துல் ஹக்கீம், திருப்பூர் எம்.ஏ. சத்தார், மவ்லவீ என். ஹாமித் பக்ரீ, அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, எஸ்.எம். கனி சிஷ்தீ, எம்.பி. காதர் ஹுசைன், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிறப்பு மலர் வெளியீடு

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு சிறப்பு மலர் வெளியிட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ. ராசா முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

காயிதெ மில்லத் விருது

முஸ்லிம் லீகில் ஐம்பதாண்டு காலம் உழைத்து வரும் தியாகிகளுக்கு காயிதெ மில்லத் விருது வழங்கி சிறப்புரையினை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது நிகழ்த்துகிறார்.

தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், அப்துல் வஹ்ஹாப் எம்.பி, ஷைகுல் ஹதீஸ் மவ்லானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான், மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி உள்ளீட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சமுதாய ஒளிவிளக்கு விருது

கல்வியாளர்கள் மார்க்க அறிஞர்கள் மற்றும் சமுதாய புரவலர்களுக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபைதுல்லாஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் இரகுமான்கான், சென்னை மேயர் மா.சுப்பிரமணியம், ஜே.எம். ஹாரூன் எம்.பி, உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

சிராஜுல் மில்லத் விருது

சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், சிறுபானமை நலத்துறையின் வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்ட பெருமக்களுக்கு சிராஜுல் மில்லத் விருது வழங்கி தமிழக கல்வி அமைச்சர் க. அன்பழகனார் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயீல் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

கல்வி மேம்ப்பாடு, விழிப்புணர்வு, மகளிர் கருத்தரங்கம்

ஜுன் 21 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் மகளிர் கருத்தரங்கிற்கு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸஃப்பர் தலைமை தாங்குகிறார்.

கனிமொழி எம்.பி. ஜெயந்தி நடராஜன் எம்.பி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் ருக்கையா சல்மா, வழக்கறிஞர் அருள்மொழி, கமருன்னிசா அன்வர், நூர்பீனா ரசீத், பேராசிரியை நசீமா பானு உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மாபெரும் பிறைக்கொடி பேரணி

பிற்பகல் 3.30 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு வாலஜா சாலை, அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக தீவுத்திடலை அடைகிறது.

பேரணியை அப்துல் ரவூஃப் துவக்கி வைக்க ஹெச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிரார்.

ஜி.எம். ஹாஷிம், கே.எம். நிஜாமுத்தீன், எம்.எஸ். முஹம்மது ரஃபீக், வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், கே.எஸ். ஷேக் தாவூத், மவ்லவீ ஏ.எஸ். அப்துல் ரஹ்மான், முஸஃப்பர் அஹ்மத், ஏ.ஏ. ரஷீத் கான் உள்ளிட்டோர் பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்.

இசையரங்கம்

மாலை 4 மணிக்கு தீவுத்திடலில் இசையரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முகவை சீனி முஹம்மது, கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் குழுவினர் இயக்கப் பாடல்கள் பாடுகின்றனர்.

மாநாடு நிறைவு விழா

மாலை 6.30 மணிக்கு தீவுத்திடலில் நிறைவு விழா கே.டி.எம். அஹ்மது இப்ராஹிம் நுழைவு வாயிலில், அப்துல் வஹ்ஹாப் ஜானி சாஹிப் அரங்கில் நடைபெறும்.

விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. தீர்மானங்களை வாசிக்கிறார்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய அமைச்சர் இ.அஹ்மது, தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, அஸத்துத்தீன் உவைஸி எம்.பி, கர்நாடக அமீரே ஷரீஅத் மவ்லானா அஷ்ரப் அலி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

ஹெச்.அப்துல் பாசித் எம்.எல்.ஏ. அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், கவிஞர் ஜபருல்லாஹ், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், வழக்கறிஞர் ஜீவகிரிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார்.

தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூற மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லவீ தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துஆவுடன் மாநாடு நிறைவுறும்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

முஸ்லிம் லீக் மாநாடு - மகளிர் அணி நிகழ்ச்சிகள்


Friday, June 13, 2008

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி








இந்திய முஸ்லிம்களின் ஒரே அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களது பேட்டி 'வெளிச்சம் உங்கள் கையில்' ஜுன் 1-15 இதழில் வெளியாகியுள்ளது.