தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இணைவோம் இதயத்தால்..
தோப்புத்துறை அ.முஹும்மது நூர்தீன்
அமெரிக்கா (USA)காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு)
இந்த உலகில் எப்படியும் வாழலாம் என்று இஸ்லாம் வழிமுறை சொல்லவில்லை. இப்படி தான் வாழ வேண்டும் என்ற உயாந்த கட்டுபாடுமிக்க மனிட சமுதாயதை உலகிற்கு அறிமுகப்படுத்திய மார்க்கம் தான் இஸ்லாம்.
இந்த புனிதமிக்க மாதமான ரமலானில் எப்போதும் இல்லாத வகையில் அல்லாஹுவின் இறைவசனங்கள் உலகம் முழுவதும் ஒலிக்க கண்டு நம் அனைவர்களும் மெய்சிலிர்த்து போய் இறைமறை தரும் வழியில் வாழ உறுதி எடுக்கும் மனநிலைக்கு வருகிறோம். இந்த உலகில் எத்தனையோ நிகழ்வுகள், வியக்கதக்க சம்பவங்கள், விஞ்ஞான பரிமான வளர்ச்சியின் வெளiபாடுகள் போன்றே எத்தனையோ பல அற்புதங்களை கண்டு வியந்து பரவசமடைந்து இருப்போம் அப்படி இருந்தும் இவைகளை அனைத்தையும் புறம் தள்ளiவிட்டு அதற்கு வழிகாட்டியாக, மனித அறிவிற்கு ஊக்கம் தரும் மருந்தாக சிறப்பான அருட்கொடையாக திகழ்வது எல்லாம் வல்ல அல்லாஹுவின் திருக்குர்ஆன் மட்டுமே.
இறைவனின் வேதம் மற்றும் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையை தன் வாழ்நாட்களiல் ஒவ்வொரு சிறிய, பெரிய காரியம் வரை இணைந்து வலிமைமிக்க சமுதாயமாக வாழ்ந்த முஸ்லிம் சமுதாயம் இன்று வலிமை குன்றிய நிலைக்கு சென்று தங்களiன் முகவரியை தேடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது பெறும் வேதனை தரும் விசயமாக உள்ளது.
அருள்மறையை நாம் என்றும் ஆராய்ந்து பார்ப்பதில்லை, அதில் இருக்கும் போதனையின்படி அன்றாடம் நாம் நடக்க முயற்சி செய்வதில்லை. இறைவேதத்தில் இருக்கும் அரிய பல விசயங்கள் உணர்வுப்புர்வமாய் ஏற்று நடப்பதில்லை அல்லது அப்படி நடந்து வருவதற்கு முயற்சியும் எடுப்பதில்லை.
இம்மைக்கும், மறுமைக்கும் நல்வழிப்படுத்த நபி(ஸல்) அவர்கள் மூலம் திருமறையை கொடுத்த இறைவன் நம் சமுதாயத்திற்கு ஈமான், தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹுஜ் என்ற ஐம்பெரும் கடமையை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துள்ளான்.
சாந்தியும் சமாதானத்தை உலகம் முழுவதும் பரவ செய்யும் இஸ்லாம், சமுதாயத்தில் ஒற்றுமையை முன்நிறுத்துகிறது. உலகில் உள்ள பல்வேறு கோட்பாடுகளiலிருந்து தனிதன்மையாக இஸ்லாம் இருக்க காரணம் ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தும் மார்க்கமாக இஸ்லாம் இருப்பதால் தான்.
இந்த புனித ரமலான மாதத்தில் இறைவனுக்காக நோன்பு நோற்றோம், இறைவனை தொழுது வந்தோம் பிறகு குறிப்பிட்ட காலம் வரும் போது புனித யாத்திரை செல்லுகிறோம் இத்தனை வாழிப்பாடுகளையும் நாம் கூட்டாக ஒற்றுமையை முன்நிறுத்திதான் செயலாற்றுகிறோம், நமக்கு இந்த வாய்ப்புகளை கொடுத்த இறைவன் நன்மைகளை தராள மனதுடன் வாரி வழங்குகிறான். இறைவன் கொடுத்த கடமைகள் அனைத்தும் கூட்டு முயற்சி, உறவு என்ற கலவையில் ஒற்றைமை என்ற அடிப்படையுடன் உள்ளது.
இன்று இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக நம் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு பிரிவினைகளல் குறிப்பாக இளைஞர்கள் அகப்பட்டு அதில் இஸ்லாத்திற்கு விரோதமாக சுழன்று கொண்டுள்ளோர்கள்.
சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள், வாய்ப்புகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் போக காரணம் நம்மிடையே பிணக்கு கொள்வது தான் நம் சமுதாயம் பெரிய அளவில் பலவீனமாக போய்விட்டது. இதுவே சமுதாய பின்னடைவிற்கு காரணம்.
பகட்டு வார்த்தைகள நம்பி பல்வேறு இயங்கம், அமைப்பு என்று சிதறிச் சென்று உங்களiன் உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொடுத்து பல இன்னல்களை பரிசாக பெற்ற சமுதாய உடன்பிறப்புகளே இனிவரும் காலத்தில் உங்களை நீங்களே முன்நிறுத்தி பார்த்து அமைதியாக எந்த வித விளம்பர தோரனையில்லாமல் சமுதாய வளர்ச்சியை மட்டுமே கவலை கொண்ட நம் தாய் சபை முஸ்லிம் லீக் என்ற பேரியக்கத்தில் உங்களை இணைத்து கொண்டு சமுதாய பணியாற்றிட வாருங்கள். சமுதாயத்தை சரியான பாதையில் ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ் வழிநடத்தவில்லையெனில் எதிர்காலத்தில் வரும் இஸ்லாமிய தலைமுறைகள் அடையும் பின்னடைவிற்கு நீங்களே காரணம் என்ற அவபெயர் பெறாதீர்கள், நாளை இறைவனிடம் சமுதாய ஒற்றுமையை பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்ற எச்சரிகையோடு சமுதாயம் எழுச்சி பெற விரைந்து வாருங்கள். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்து கொள்வதே சரியான தீர்வு -
கடந்த மாதம் இறுதியில் எழுச்சிமிக்க தலைவர் பேராசிரியர் அவர்கள் உங்கள் ஒவ்வொருவரையும் சமுதாய நாளதழ் மணிச்சுடர் மூலம் உன்னைத்தான் அழைக்கிறேன் உனக்குக் தான் அறிவிக்கிறேன் என் தலைப்பில் முஸ்லிம் லீக் சேர்ந்து சமுதாய பணியாற்றிட சமுதாய இளைஞர் பட்டளத்திற்கு அழைப்பு மடல் அனுப்பியிருந்தார்கள். இந்த அழைப்பையே ஒவ்வொரு சமுதாய கவலைக் கொண்டவர்களும் தனக்கு வந்த தனிஅழைப்பாக ஏற்று கொண்டு வாருங்கள் முஸ்லிம் லீக் தாயுள்ளத்துடன் அரவனைக்க காத்திருக்கிறது.
இஸ்லாம் பிற சமூகங்களுக்கு என்றைக்குமே முன்மாதிரி தான், அது நம் சமுதாயம் வாழ்ந்து காட்டும் ஒற்றுமை மற்றும் மக்களiடையே நல்லிணக்கமாக இருந்து வரும் நற்பண்புகளுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம் லீக் தாய் சபையில் ஒன்றுப்படுவோம். சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்துவோம். எழுச்சிமிக் தலைவர் மற்றும் இளைய சமுதாயம் கொண்ட மாநில நிர்வாகம் கீழ் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் புதிய எழுச்சி வரலாறு படைக்க வாருங்கள்…நமக்கு கிடைக்க வேண்டிய பொது மற்றும் அரசியல் அங்கீகாரத்தை உரிமையுடன் பெறுவோம். (இன்ஷா அல்லாஹு)