Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

Saturday, December 26, 2009

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு உரிய நடவடிக்கை எடுக்க மன்மோகன்சிங் உறுதியளித்திருப்பதாக இ.அஹமது தகவல்

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு உரிய நடவடிக்கை எடுக்க மன்மோகன்சிங் உறுதியளித்திருப்பதாக இ.அஹமது தகவல்


புதுடெல்லி, டிச.24-

நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ளோர் விடு விக்கப்பட வேண்டும் உள் ளிட்ட 14 கோரிக்கைகளு டன் அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.

அக்கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு உரிய நட வடிக்கைகள் எடுக்க மன் மோகன்சிங் உறுதியளித்த தாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், ரயில்வே இணையமைச்சருமான இ. அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அனைத் துக் கட்சி முஸ்லிம் உறுப் பினர்களான மத்திய இணையமைச்சர் இ. அஹமது, நாடாளு மன்ற மேலவைத் தலைவர் ரஹ் மான்கான், திருமதி மொஹ்சினா கித்வாய், மஹ்மூத் மதனீ, தாரிக் அன்வர், அஸாஸ{தீன் உவைஸி, முஹம்மது அதீப், அஹமது சயீது மலேகாபாடி, ஷபீர் அலி, டாக்டர் இஜாஸ் அலி, ஷபீகுர் ரஹ்மான் பர்க், முஹம்மது ஷபி ஆகிய எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 14 முக்கிய பிரச் சினைகளை நிறை வேற்றும்படி கோரிக்கை விடுத்தார்கள்.

அவை வருமாறு-

1. வக்ஃபுசொத்துக்கள் தொடர்பாக ஜே.பி.சி. அறிக்கையை நிறைவேற்ற வும், வக்ஃபு சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஹஜ் பயணம் தொடர்பாக போதிய சீர் தி ருத்தங்களை கொண்டு வர ஏற்கனவே ஒரு அமைச் சரவை குழுபரிந்துரை செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.

3. முஸ்லிம் சிறு பான்மையினருக்கான இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள் ளது. அவை தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் குறிப்பிடப் பட் டுள்ளது. கேரளா, தமிழ் நாடு, கர்நாடக மாநிலங் களில் முஸ்லிம் களுக்கு அனுமதிக்கப்பட் டிருக் கும் ஒதுக்கீட்டின் அடிப் படையில் இட ஒதுக்கீடு பிரச்சினை தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண் டும்.

4. ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

5. சச்சார் கமிட்டி அறிக் கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. பரிந் துரைகள் அமுல்படுத்து வதை கண்காணிக்க ஒரு மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும்.

6. முஸ்லிம் சிறு பான்மையினருக்கும் மற்றவர்களுக்கும் கல்வி வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும் சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

7. இஸ்லாமிய வங்கி முறையை அமுல்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள் ளது. அந்த முறை வங்கித் துறைக்கு பெரிய முத லீட்டையும் முஸ்லிம்கள் மத்தியில் சேமிப்பு பழக் கத்தையும் ஏற்படுத்தும்.

8. பிரதமரால் அறிவிக் கப்பட்ட 15 அம்ச திட்டம் நிறைவேறுவதை கண் காணிப்பது வலுப்படுத்தப் பட வேண்டும்.

9. பயங்கரவாத தொடர்பு ஐயப்பாடு கார ணமாக ஏராளமானவர்கள் எந்தவித விசாரணையு மின்றி நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் முடிக்கப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய் யப்படவோ வேண்டும்.

10. உத்தேசிக்கப்பட் டுள்ள மதரஸா வாரியத்தை அமைப்பதற்கு முன் முஸ்லிம் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், தலை வர்கள் ஆகியோரை அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.

11. முஸ்லிம்கள் தொடர்பான அமைப்பு களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் கட்டுப்பாடுகளும், தாமதமும் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

12. மத வன்முறை தடுப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

13. மற்ற தேசிய கமிஷன்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட அந்தஸ்தை சிறு பான்மை கமிஷனுக்கும் கொடுக்க வேண்டும்.

14. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ் லாமிய பல்கலைக்கழகங் களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண் டும்.

மேற்கண்ட கோரிக் கைகளை விரைவில் நிறை வேற்றித் தரும்படி வேண்டு கோள் விடுத்த எம்.பி.க்கள் சிறுபான்மை விவகாரத் துக்காக தனி அமைச்சரகம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தார்கள்.

பிரதமர் உறுதி

மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மன் மோகன்சிங் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து போதிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு செய்ய தேசிய அளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண் டியுள்ளது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு காணப்படும் என்று தெரி வித்தார்.

வக்ஃபு சொத்துக்களை மேம்படுத்துவது குறித்தும் அது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்தும் பிரதமர் குறிப்பாக தனது விருப்பத்தை வெளியிட் டார். அந்த சட்டம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் என் றார்.

ஹஜ் பயணம் தொடர் பான சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப் படும் என்றும் பிரதமர் கூறினார்.

வட்டியில்லாத வங்கித் தொழில் துறை குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசிப்பதாக பிரதமர் அறிவித்தார். நீண்டகாலமாக சட்ட விரோதமாக சிறையில் வாடுபவர்கள் குறித்து மிக விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்றும் பிரதமர் சொன்னார்.

சிறுபான்மை விவகாரம் கண்காணிக்க நியமிக்கப் பட்டிருக்கும் நிலைக்குழு தலைவர்களுடன் பேசி கண்காணிப்பு வேலை களை வலுப்படுத்தும் படியும் தீவிரப்படுத்தப் படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்த தூதுக்குழு உறுப் பினர்களுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் மத்திய ரயில் இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

Thursday, July 17, 2008

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.

குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.

குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.

சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.

ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.

கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.

ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

www.muslimleaguetn.com

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌ம் மாவ‌ட்ட‌ த‌லைமை அலுவ‌ல‌க‌த்தில் 15 ந‌வ‌ம்ப‌ர் 2008 ச‌னிக்கிழ‌மை காலை ந‌டைபெற்ற‌து.

மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌த்திற்கு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ஹாஜி எம்.எஸ். சௌக்க‌த் அலி த‌லைமை தாங்கினார். பேரையூர் ம‌வ்ல‌வி சாகுல் ஹ‌மீது அரூஸி இறைவ‌ச‌னங்க‌ளை ஓதினார்.

மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜ‌ஹான் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று தீர்மான‌ங்க‌ளை முன்மொழிந்தார். கூட்ட‌த்தில் ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. அவை வ‌ருமாறு :

மறைந்த‌ மாவ‌ட்ட‌ துணைத்த‌லைவ‌ர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.ப‌க்ருதீன் ம‌றைவுக்கு தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து. அன்னார‌து தியாக‌ மன‌ப்பான்மையை மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ள் நினைவு கூர்ந்த‌ன‌ர். அவ‌ருக்காக‌ துஆ ஓத‌ப்ப‌ட்ட‌து.

இராம‌நாத‌புர‌ம், விருதுந‌க‌ர், சிவ‌கெங்கை,க‌ன்னியாகும‌ரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய‌ மாவ‌ட்ட‌ங்க‌ள் ப‌ங்கேற்கும் ம‌ண்ட‌ல மாநாட்டினை இராம‌நாத‌புர‌த்திலேயே ந‌ட‌த்த‌ மாநில த‌லைமையினை கேட்டுக் கொள்வ‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ 31 பேர் அட‌ங்கிய‌ குழு ஏற்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌து. இக்குழு பிற‌ மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ளுட‌ன் க‌ல‌ந்துரையாட‌ல் செய்யும்.

டிச‌ம்ப‌ர் மாத‌ம் 26,27 ஆகிய‌ தேதிக‌ளில் உத்திர‌ பிர‌தேச‌ மாநில‌ம் ல‌க்ணோவில் ந‌ட‌க்கும் அகில‌ இந்திய‌ மாநாட்டில் மாவ‌ட்ட‌த்தில் இருந்து அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ப‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.

மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்ற‌வாளியை க‌ண்டுபிடித்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

இல‌ங்கைத் த‌மிழ‌ர் துய‌ர்துடைக்க‌ ஒத்துழைப்பு ந‌ல்கி வ‌ரும் அனைத்து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும் ந‌ன்றி தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

மேலும் இப்பிர‌ச்ச‌னையில் ஒரு குழுவை ஏற்ப‌டுத்த‌ பிர‌த‌ம‌ரை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் கேட்டுக் கொள்ள‌வேண்டும் என‌வும், அக்குழு இல‌ங்கை சென்று பிர‌ச்ச‌னைக‌ளை ஆராய்ந்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டது.
ராமேசுவ‌ர‌ம் தொட‌ர்வ‌ண்டிப்பாதை விரிவாக்க‌ப் ப‌ணி ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் அர‌சு அறிவித்த‌ப‌டி வ‌ட‌மாநில‌ங்க‌ளை இணைக்கும் வ‌ண்ண‌ம் தொட‌ர்வ‌ண்டிக‌ளை விட‌ அர‌சும், ர‌யில்வே நிர்வாக‌மும் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும்.

மாநில‌ பொருளாள‌ர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்ற‌றிக்கை கூட்ட‌த்தில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌யிற்சிப் பாச‌றைக‌ள் ந‌ட‌த்திய‌ ப‌னைக்குள‌ம், ம‌ண்ட‌ப‌ம், கீழ‌க்க‌ரை ந‌க‌ர‌ முஸ்லிம் லீக் கிளைக‌ளுக்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இதே போல் மாவ‌ட்ட‌த்தின் இத‌ர‌ ப‌குதிக‌ளிலும் ப‌யிற்சிப் பாச‌றையினை விரைந்து ந‌ட‌த்தி முடிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.
சென்னையில் ந‌டைபெற்ற‌ மாநில‌ மாநாட்டில் ஆர்வ‌த்துட‌ன் அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ற‌ அனைவ‌ருக்கும் பார‌ட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இம்மாநாட்டுக்காக‌ சீருடைக‌ளை தயாரித்து வ‌ழ‌ங்கிய‌ ப‌னைக்குள‌ம் ந‌க‌ர‌ முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. என்ப‌ன‌ உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

கூட்ட‌த்தில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை செய்தித் தொட‌ர்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ப‌னைக்குள‌ம் அபு முஹ‌ம்ம‌து, கீழ‌க்க‌ரை வ‌ரிசை முஹ‌ம்ம‌து ஹாஜியார், கீழ‌க்க‌ரை லெப்பைத்த‌ம்பி, ஆர்.எஸ்.ம‌ங்க‌ல‌ம் அமானுல்லாஹ், தேவிப‌ட்டிண‌ம் சித்திக், ம‌ண்ட‌ப‌ம் லியாக்க‌த் அலி, வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம், இராம‌நாத‌புர‌ம் சாதுல்லாஹ் கான், இராம‌நாத‌புர‌ம் ம‌ணிச்சுட‌ர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுள‌த்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.

வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம் துஆவுட‌ன் செய‌ற்குழுக் கூட்ட‌ம் நிறைவுற்ற‌து. கூட்ட‌த்திற்குப் பின்ன‌ர் மீன் பொறிய‌லுட‌ன் ம‌திய‌ உண‌வுக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )