இனிவேண்டாம் அயர்வு : வேண்டாம் தளர்ச்சி தாய்ச்சபைப் பெருமைகளை உரைப்போம்!
பிறைமேடை தலையங்கம் - மே 1-15, 2010
புறப்படு பிறைக் கொடியுடன்! முழங்கிடு தக்பீர் நாதத்துடன்!!
அன்புத் தம்பிக்கு!
இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!
பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும், வாரத்தில் ஐந்து நாட்கள் டில்லியிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டிலும் என்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். சென்ற இரண்டு வாரங்களில் கண்ட காட்சிகளையும், கொண்ட உணர்வுகளையும் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறபோது ஒரு அலாதி மகிழ்வு.
ஏப்ரல் 17 ரூ டெல்லியிலிருந்து சென்னை வந்து அரை மணி நேரத்திற்குள்ளாகத் தயாராகி ரயில் மூலம் திண்டுக்கல் பயணம். பொதுச் செயலாளர் அப+பக்கர் அவர்களும் பயணிக்க மறுநாள் காலை ஊழியர் கூட்டம். வழக்கம்போல் நிகழ்வுகள் ஒருபுறம் இருந்தாலும் கலந்து கொண்ட இளைஞர்களின் புத்துணர்வும், புதிய பொலிவும் அவர்களின் பேச்சால் மிளிர்ந்தன. நமது இதயங்கள் குளிர்ந்தன. செயல்திறன்மிக்க அவர்களின் உணர்வலைகள் அயர்ந்து இருந்தவர்களையும் உலுக்கின என்றுதான் சொல்ல வேண்டும். மாலை தேவதானப்பட்டி, தேனி வழியாகச் செல்லுகிற பாதையில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று கம்பத்திற்குள் நுழைகிறோம். அவ்வ+ரிலும் பல இடங்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்பட்டு இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். ஓய்வு பெற்ற காவல்துறை மேலதிகாரியும், நமது மாநில நிர்வாகிகளில் ஒருவருமாகிய அண்ணன் அப்துர் ரவ+ப் அவர்களின் சீரிய முயற்சியால் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் அவசியம், வலிமையுற செய்ய வேண்டிய அவசரம் குறித்து விரிவான உரைகள் வழங்கப்பட்டன.
மறுநாள் ஈரோடு காலையில் திருமண நிகழ்வு. பல்வேறு இடங்களில் கொடியேற்றம் என்று தொடர மாலை 5 மணிக்கு நகர மற்றும் புறநகர் ஊழியர்கள் கூட்டம் தலைவர் பேராசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் தாய்ச்சபை உணர்வுகள் மிகுதியாகக் காணப்பட்டாலும் செயல்பாடுகளில் கொண்ட அதிவேகத்தின் போக்கில் உருவாகியிருந்த சில கருத்து வேறுபாடுகள், மனம் திறந்து பேசிய காரணத்தினால் பனிபோல் கரைந்து போயின. மகிழ்ச்சிப் பெருக்கோடு அனைவரும் இரவு நடைபெற்ற ஈரோடு கல்வி மையத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கு திறம்பட உழைத்துவரும் நூறு பேர் கொண்ட அந்தச் சிறப்பான குழுவின் நிர்வாக பொறுப்பிலுள்ள டாக்டர் அபுல்ஹசன், சகோதரர் ரபீக் ஆகியோர் காட்டிய ஆர்வமும் தாய்ச்சபை முஸ்லிம் லீக்மீது கொண்டிருந்த ஆழமான ஆதங்கமும் பாராட்டுக்குரியவையாக இருந்தன. மாநிலம் தழுவிய அளவில் முஸ்லிம் லீகின் சார்பாக கல்வி மேம்பாட்டுக் குழு ஒன்றையமைத்து இவர்களைப் போன்றவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இடம் பெற்றால் சமுதாயத்தின் கல்விச் சேவைகளை மிகச் சிறப்பாக ஆற்ற முடியும் என்ற புதிய நம்பிக்கை பிறந்தது. இக்கருத்தை வெளிப்படையாக சொல்லிக் காட்டியபோது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வரவேற்பு கிடைத்தது. இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த கல்விக் குழு உருவாக வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். ஆவன செய்ய வேண்டும்.
மறுநாள் டில்லி வந்துவிட்டு ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை மீண்டும் சென்னை திரும்பி சென்னை வண்டலூர் புஹாரியா அரபிக் கல்லூரியின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றேன். சமுதாயப் புரவலர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அரபிக் கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி முகாம் அமெரிக்க தூதரகத்தால் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா அது. உலமாக்கள், இமாம்கள், அரபிப் பேராசிரியர்கள் என்று மார்க்க விஷயங்களை மக்களுக்கு எடுத்தியம்புகையில் ஆங்கில மொழி பயன்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை விளக்கமாக எடுத்துரைக்க இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியது எனலாம்.
அடுத்த நாள் ஆயங்குடி பயணம். பட்டதாரிகள் சங்கத்தார் நடத்திவரும் பள்ளிக்கூடத்தின் வெள்ளிவிழா மாநாடு. பெண்கள் ரூ ஆண்களுக்கு இணையாகத் திரண்டிருந்த காட்சி கல்வியில் பெண்கள் பெற்றிருக்கிற விழிப்புணர்வை விவரித்துக் காட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மாலையில் மீலாது முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம். சமுதாய கவலை உணர்வோடு தொடர்ந்து பாடுபட்டுவரும் முஸ்லிம் லீக் இயக்கத்தை கீழாக விமர்சனம் செய்தே வழக்கமாக்கிக் கொண்டு சுயநலத் தேவைகளுக்காக அவரவர் திட்டங்களுக்கேற்ப தொடங்கப்பட்ட கானல் நீர் அமைப்புகள் நடத்துவோர் முஸ்லிம் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகள் பல என்றாலும், நம்முடைய தெளிவான பாதையை விவரித்து உரையாற்றியபோது உள்ளத்தால் ஏற்று உவகைப் பெருக்கோடு நம்மை அணுகி சலாம் சொல்லி ~~முஸ்லிம் லீகின் உன்னத வழியில் இனி எங்களின் பயணம் இருக்கும்|| என்றுரைத்தனர் புதுமுகங்கள் பலர். இவர்கள் பல்வேறு முகாம்களில் இதுநாள் வரையிலும் தவறான புரிதலின் காரணத்தினால் பணி செய்தவர்கள். நம்மை நெருங்கியபோது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி அவர்களை அரவணைத்துக் கொண்டோம் ஆனந்த பெருக்கோடு! அல்ஹம்துலில்லாஹ்.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தாய்ச்சபை முஸ்லிம் லீகின் சீரான, தெளிவான கொள்கை விளக்கங்களையும், நேரிய நெறி சார்ந்த செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கும் எடுத்துரைத்துப் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்குண்டு. ~~இதனைச் சரிவர நாம் செய்கிறோமா?|| என்று நமக்குள்ளே ஒரு சுய கேள்வியாக கேட்டுக் கொண்டால் நம்முடைய பணிகள் மேலும் செம்மையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இளைஞர்களின் எழுச்சியை எங்கு நோக்கினும் காணுகிறோம்.
இளைய சமுதாயம் இனி கானல்நீர் திசையை நோக்காது.
இனிவேண்டாம் அயர்வு : வேண்டாம் தளர்ச்சி
அன்போடு அனைவரையும் அழைப்போம்.
தாய்ச்சபைப் பெருமைகளை உரைப்போம்!
அன்புத் தம்பியே!
புறப்படு பிறைக் கொடியுடன்@
முழங்கிடு தக்பீர் நாதத்துடன்@
தொடர்ந்திடு தாய்ச்சபைக் கொள்கையுடன்@
நாரே தக்பீர்! அல்லாஹ_ அக்பர்!
- எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
ஆசிரியர்