Friday, July 31, 2009

ஆகஸ்ட் 1 குற்றாலம் - மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்

ஆகஸ்ட் 1 குற்றாலம் மாநில முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்


தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்டு 1-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் 25 சட்ட மன்ற தொகுதிகளை தேர்ந் தெடுத்து தீவிரப் பணிகளை செய்வது, தமிழகத்தில் நடை பெற உள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரப் பணி செய்ய முஸ்லிம் லீக் பிரச்சார குழு அமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் இக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படுகின்றன.

கடந்த 11-ம் தேதி சென்னை காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர் வாகிகள் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகளின்படி எதிர்வரும் ஆகஸ்டு 1-ம் தேதி சனிக்கிழமை திரு நெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது.

மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தென்காசி குற்றாலம் சாலை தாய்பாலா திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர்கள், அணிகளின் அமைப் பாளர்கள், மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர், பொருளாளர்கள், மாநக ராட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள் ளிட்ட 300 பேர் இக் கூட் டத்தில் கலந்து கொள்கின் றனர்.

என்றும் இல்லாத வகையில் இன்று முஸ்லிம் லீகில் ஏற்பட்டுள்ள மகத்தான எழுச்சியை மைய மாக வைத்து சமுதாயத்தின் நம்பிக்கையை முழு அள வில் நிறைவேற்றும் வகை யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புப் பணிகளை விரிவுபடுத்தவும், அதன் செயல்பாடு களை விரைவுபடுத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதை லட்சியமாகக் கொண்டு அதற் கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.

தமிழ்நாட்டில் மொத்த முள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களை அதிக மாக கொண்ட 25 சட்ட மன்ற தொகுதிகளை கண்டறிந்து அதில் தீவிர கவனம் செலுத்தி பணி களை விரைவுபடுத்த முடி வெடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் போட்டியிடும் தி.மு.க. - காங்கிரஸ் வேட்பாளர் களின் மகத்தான வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடு பட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பிரச்சார குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த இயக்க முடிவுகள் தவிர இக் கூட்டத்தில் பல அரசியல் தீர்மானங்களும் விவாதத்தில் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ கத்தின் கோவை, பாளை யங் கோட்டை உள்ளிட்ட மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் விசாரணை சிறைவாசி களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசிடம் வைக்க வேண் டிய கோரிக்கை தொடர் பாகவும், சிறுபான்மை கல்வி நிலையங்களில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கிடும் விஷயம் குறித்தும் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப் பட்ட பல்வேறு விஷயங் கள் குறித்தும் இக் கூட்டத் தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.

குற்றாலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடை பெறுவதையொட்டி திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மேலப்பாளையத்தில் பட்டமளிப்பு விழா

இச் செயற்குழுவில் பங் கேற்பதற்காக வருகை தரும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செயற்குழு முடிந்ததும் பிற்பகல் 3 மணிக்கு செய்தி யாளர்களை சந்தித்து பேசு கிறார்.

மாலை 5 மணிக்கு மேலப்பாளையம் புறப் பட்டுச் செல்லும் அவர் அங்குள்ள உஸ்மானியா அரபிக் கல்லூரியின் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு விழாப் பேருரை யாற்றுகிறார்.

கலந்தாய்வு கூட்டம்

மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்று வருகின்ற மாவட்ட முஸ்லிம் லீக் கலந்தாய்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வாவு பங்களாவில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் திருநெல்வேலி, தூத்துக் குடி, கன்னியாகுமரி மற் றும் விருதுநகர் மாவட் டங்களில் கலந்தாய்வு கூட்டம் நடை பெறுகிறது.

இக் கூட்டத்தில் இந்த நான்கு மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர் கள், நகர, பிரைமரி, தலைவர் - செயலாளர்கள் இந்த நான்கு மாவட்டங் களுக் குட்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் கள் பங்கேற்று இயக்க வளர்ச்சிக்கான கருத்துக்களை கூற உள்ளனர்.

இம் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் செயல் பாடுகள் ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட இருப்பதாக மாநில முஸ்லிம் லீக் தலைமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SIRAJUL MILLATH FORUM HONG KONG

SIRAJUL MILLATH FORUM HONG KONG

Hong Kong

Email : millathforum@gmail.com


Tel : 852 – 9262 4715


Date : 14th July 2009


Sub : Hearty Wish for our Newly Elected General Secretary of Tamil Nadu Indian Union Muslim League Janab Haji K.A.M.Mohamed Abubakr Sahib


Respected Brother Haji K.A.M.Mohamed Abubakr Sahib,


Assalamu Alaikum.


Al-Hamdulillah


On behalf of our Sirajul Millath Forum Hong Kong,


We congratulate on your appointment as the General Secretary of our Tamil Nadu Indian Union Muslim League and thanks to our Honourable President, members of the Executive Committee, State Committee, Management Committee & Steering Committee on selecting a very right candidate, a dedicated youth for the welfare of community, sacrifice his life for the unity among our community, he is our leader in the Muslim Students Federation during early 90’s, who has been one of the founders for various social,economical,educational organisations and so on…


We wish you always from our bottom of heart to work for our Community and strengthen our League’s presence in the heart of all Muslims in INDIA… especially in our state Tamil Nadu…


As we aware current election results clearly revealed that the so called “Muslims Party” worth for nothing.. It is a time for our IUML to organize more activities among the areas where the large presence of Muslims in INDIA…


In Hong Kong many youths and elders were realizing the importance of our IUML presence and necessity of our activities and they were conveying their support as well.


Insha Allah, the time is very nearing to bring all our brothers under our Indian Union Muslim League.


Our brothers here also joining their happiness and conveying their salaams to you and our beloved Leaders on your selection and appointment as the General Secretary of our Tamil Nadu IUML…


We pray Almighty ALLAH to guide all of us in HIS right path and shower HIS blessings towards us, amen.


Wassalam



VMT Mohamed Hasan

Organizer

On Behalf of SIRAJUL MILLATH FORUM HONG KONG

Thursday, July 30, 2009

Implement Sachar Committee recommendations: IUML

SIRAJUL MILLATH FORUM HONG KONG
tomillathforum@gmail.com
dateFri, Jul 31, 2009 at 8:05 AM
subjectImplement Sachar Committee recommendations: IUML
mailed-bygmail.com

hide details 8:05 AM (1 hour ago) Reply



DEAR BROTHERS,

ASSALAMU ALAIKUM.

AL-HAMDULILLAH THIS FINDS YOU ALL WHILE ENJOYING BEST OF HEALTH, WEALTH AND HIGH ISLAMIC SPIRIT..

PLEASE BROWSE THE BELOW WEBLINKS, WHICH IS THE SPEECH OF OUR RESPECTED MEMBER OF PARLIMENT JANAB HAJI M.ABDUR RAHMAN SAHIB REGARDING THE IMPLEMENT OF SACHAR COMMITTEE RECOMMENDATIONS AND ALSO REGARDING OTHER IMPORTANT ISSUES...


http://www.hindu.com/2009/07/19/stories/2009071955370300.htm

http://www.muslimleaguetn.com/news.asp?id=977


http://www.kayalpatnam.com/shownews.asp?id=3304

WASSALAM
SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா

பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா

ஆதிமனிதன் எங்கே தோன்றினான் எப்படித் தோன்றினான். மனிதன் படைக்கப்பட்டானா அல்லது குரங்கிலிருந்து பரிணாமம் பெற்று வந்தானா? நபி ஆதம் தோன்றியது எங்கே? அவர்களின் சந்ததிகள் வாழ்ந்தது எந்நிலத்தில்? நூஹ் நபி காலப் பிரளயம் எங்கு நடந்தது? ஷீது நபிக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு? முதல் மனிதன் பேசிய மொழி எது? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் ஆராய்ச்சிப் பூர்வமான பதில்களைத் தருகிறார். ஆசிரியர் மவ்லானா அவர்கள்.

மதிப்பிற்குரிய மவ்லானா அவர்களின் 25 வருட ஆய்வின் பலன் இது. பழுத்த கனியிது. பத்தாண்டுகளாக ‘பசுங்கதிர்’ ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

வரலாற்றுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், அகழ் வாராய்வுச் சான்றுகள், இதிகாசச் சான்றுகள், இறைமறைச் சான்றுகள் என அள்ளிக் கொட்டியிருப்பது அதிசயிக்கச் செய்கிறது.

ஷீது நதியின் பெயரிலிருந்து மருவிய சேது நிலப் பகுதி யிலிருந்து சிந்து சமவெளிவரை சடைவு ஏற்படாமல் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர். அந்தப் பாதை பலரால் மறைக்கப்பட்ட பாதை. எவரும் செல்லத் துணியாத புதிய பாதை.

இஸ்லாமியத் தமிழ்க் கண்ணுடன் ஆராய்ந்து எழுதப் பட்டுள்ள இந்நூல் ஓர் அரிய சாதனை அபார முயற்சி.

சில விஷயங்களில் சர்ச்சைகள் எழலாம்.எழட்டுமே அப்போது தானே தெளிவு பிறக்கும். எப்படியிருந்தாலும் ஆசிரியரின் கடுமையான உழைப்பு பாராட்டுக்குரியது. இந்த ஆய்வுத் திறனை ஊக்குவிப்பதும் உற்சாகப்படுத்துவதும் நமது கடமையாகும்.

சிராஜ் மாத இதழ் 1983 ஆகஸ்டில் எழுதிய விமர்சனம் இது. நூலின் பெயர் சேது முதல் சிந்து வரை 315 பக்கங்களில் 1982 இல் அந்த நூலை எழுதியவர் எம்.கே.ஈ.மவ்லானா.

இவர் இயற்பெயர் அஸ்ஸையிது ஷெய்குல் ஜிஃப்ரி. இஸ்லாமியச் சமுதாயச் சேவையில் ஆர்வங்கொண்டவர். முஸ்லிம் லீகில் பல பொறுப்புகளேற்றுச் சேவை செய்துள்ளார். ‘பிறைக்கொடி’ ‘பசுங்கதிர்’ ஆகிய இதழ்களின் ஆசிரியர். முஸ்லிம் பத்திரிகை ஆசிரியர் சங்கத் தலைவர், வேதபுரியின் ரகசியம், புர்தா காட்சிகள், இஸ்லாமும் இளந் தலைமுறையினரும், தாமிரப்பட்டணம், இஸ்லாமிய உலகின் திருப்புமுனை, கலப்பட மார்க்கங்கள், இரு மருத்துவர் கதை, பாலைவனத்து ரோஜா, செம்மண் திட்டு, வேரில் பூத்த மலர், வழிகாட்டும் வரைபடம் முதலிய பல நூலகளை இயற்றியுள்ளார். மேலும் கட்டுரைகள் பல எழுதி யுள்ளார். இவரின் ’சேது முதல் சிந்து வரை’ எனும் நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது. ஆறாவது உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். ’ஞானக் கவிச்சித்தர்’ எனும் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். சிறந்த பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், பேச்சாளர்.

1990 டிசம்பரில் கீழக்கரையில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டில் பொற்கிழி வழங்கிப் பாராட்டப்பட்டபோது கூறப்பட்ட வாசகங்கள் இவை.

இலக்கிய இதழில் முன்னோடிகளின் ஒருவரான எம்.கே.ஈ. மவ்லானா சாதனைத் தடம் பதித்தவர் சேது முதல் சிந்து வரை நூலை எழுதி வெளியிட்டதுமே அவருக்கு அங்கீ காரமும் விருதும் கிடைத்தன.

தனிச்சிறப்பு

1982 இல் தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வரலாற்றுத்துறை நூலுக்கான பரிசை ஆசிரியர் மவ்லானா அவர்களுக்கு வழங்கினார்.

நோவாவுக்குப் பாட்டன் சேது. முதல் மனிதனாகிய ஆதத்தின் புத்திரர்களில் ஒருவர் என்பதையும் ஆதமின் மற்றொரு புத்திரனாகிய ஹாபீல் என்பவன் அவன் சகோதரன் காபீல் என்பவனால் கொல்லப்பட்ட பிறகு பிறந்த குழந்தைக்கு சேது என்ற பெயரிட்ட வரலாற்றை பைபிள், இஸ்லாமிய இதிகாசம் ஆகியவைகளின் ஆதார விளக்கங் களுடன் கண்டோம். இன்றைக்கும் இந்த சத்புத்திரனாகிய சேதுவின் பெயரால் தமிழ்நாட்டின் ஒரு பகுதி இருந்து கொண்டிருப்பதையும் விளக்கினோம். கடல்கொண்ட குமரியின் வடபுலத்திற்கு ஆதிசேது என்பதும் பெயராகும்.

சேதுவையும் தாண்டி நாம் ஆதி மனிதனாகிய ஆதாமைக் காணச் சென்றபோது அவர், அவர் புத்திரர் ஹாபீல், காபீல், சேது முதலியவர்களுடன் இலங்கை உள்ளிட்ட இன்றைய தமிழகத்திலேயே வாழ்ந்ததற்கான காலடித் தடங்களையும் காண்கின்றோம். முதல் மனிதரின் புத்திரர்களாக ஹாபீல், காபீல், ஆபேல் காயின் என்ற பெயர் தாங்கிய இரு சமாதிகள் முதல் மனிதராகிய ஆதமும், அவர் மனைவி யாரும் எந்தப் பகுதியில் உலவித் திரிந்தனர் எனக் கருது கிறோமோ அந்தப்பகுதி – ராமேஸ்வரம் பகுதியில் இருக்கிறது.

முதல் மனிதராகிய ஆதம் ஹவ்வாவின் மற்றொரு புத்திரர் சேது. இதைத்தான் அரபி தனக்கு இசைவாக ஸீது எனக் கையாள்கிறது. அந்த சேது ஸீது – ஸத் புத்திரராக இருந்தார் என விவிலியமும், அவர் ஒரு நபி என இஸ்லாமும் கூறுகின்றன. இந்தச் சேதுவின் பெயரால் அந்த நிலப் பகுதியே ஹாபீல் – காபீல் சமாதி இருப்பதாகக் கருதப் படும் இடமும், ஆதாம் – ஹவ்வா வசித்ததாகக் கருதப்படும் இடமும் சேது நிலம் என அழைக்கப்படுகிறது.

நூஹ் நபிக்குப் பாட்டனாராக ஷீதின் (சேது) வரலாற்றைப் படம் பிடித்துள்ளார் மவ்லானா.

சேது முதல் சிந்து வரை ஓர் அரிய மனித இன ஆய்வு நூல். முன்னுரை, வாழ்த்துரை, மதிப்புரை, அணிந்துரை, பாராட்டுரைகளை அறிஞர்கள் வழங்கியுள்ளனர். இந்நூல் உலகத்தின் பூர்வ மனித இன ஆய்வாளர்களிடையே ஒரு புதுமையான சலனத்தை உண்டாக்கும் என்று நிச்சயமாக நம்புவதாக முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் 10.5.86 இல் நடைபெற்ற விவாதம் ஓர் எடுத்துக்காட்டு:

ஆ.கா.அ.அப்துஸ் ஸமது பேசினார்

சேது சமுத்திர திட்டத்தைப் பற்றிப் பேச வந்த திரு. குமரி அனந்தன், சீதை நாடு என்பதுதான் சேது எனத் திரிந்திருக்கக் கூடும் என்று சொன்னார்.

சொல்லாராய்ச்சியாளர்கள் ஒன்றை ஒத்துக் கொள்வார்கள். சேதுவுக்கும் சீதைக்கும் இருக்கும் நெருக்கத்தைவிட, சேதுவுக்கும் ஷீதுவுக்கும் நெருக்கம் அதிகம் உண்டு. அந்த நாட்டின் உண்மைப் பெயர் – தொன்மைப் பெயர் ’ஷீது நாடு’ என்பதுதான்.

ஷீது என்றால் யார்? என்ன? என பலர் கேட்கலாம். மனித இனத்தின் தொடக்கம் தென்னகத்தில்தான் நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள மலைச் சிகரத்தை சிவனடி பாதம் என இந்துக்கள் கூறுகிறார்கள். ஆதாம்ஸ் பீக் (ஆதாமின் சிகரம்) என கிறிஸ்தவர்கள் சொல்லுகிறார்கள். பாவா ஆதம் மலை என முஸ்லிம்கள் குறிப்பிடுகிறார்கள். ஆக ஆதி மனிதர் நடமாடிய இடம் அது தான் என்பதில் கருத்து ஒற்றுமை இருக்கிறது.

ஒரு காலத்தில் தென்னகத்தில் ஒரு பகுதியாகத்தான் இன்றைய இலங்கைத்தீவு இருந்தது. அந்த நிலப்பரப்பு எப்போது பிரிந்ததோ? எப்படிப் பிரிந்ததோ? தெரியவில்லை. அந்தப் பிரிவினை இன்றும் நமக்குப் பிரச்சினையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஆக, நான் சொல்ல வந்தது, ஆதிமனிதர் ஆதமின் மகன் நான் சீது என்பவர். அவர் பெயர் தான் அவர் நடமாடிய நாட்டின் பெயராயிற்று.

நாடு கடந்து இலங்கையில் பல ஆண்டுகள் வாழ்ந்ததால் பரந்த கண்ணோட்டத்தில் இலக்கிய வரலாற்று ஆய்வுகளில் மவ்லானா ஈடுபட்டார்.

வளர்ச்சி

கீழக்கரையில் முஹம்மது ஈசா சாஹிபு – பாத்திமா பீவி தம்பதியரின் புதல்வராகப் பிறந்தவர் மவ்லானா. பெற்றோர் சூட்டிய பெயர் அஸ்செய்யது ஷைகு ஜிஃப்ரி. உறவினர் ஒருவர் மவுலானா என்று அழைத்ததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. வாலிபப் பருவத்திலேயே இலங்கையில் மன்னார் பகுதிக்குச் சென்று முள்ளிக்குளம் கிராமத்தில் தமது தம்பியுடன் தங்கினார்.

’வேதபுரியான்’ எனும் புனைப்பெயரில் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்த மவுலானா வரலாற்று ஆய்வு களிலும் கவனம் செலுத்தி வந்தார். வேதபுரியின் இரகசியம் என்ற முதல் நூலை இலங்கையில் இருந்தபோதே வெளியிட்டார். 1964 ஆம் ஆண்டில் இலங்கையின் அப்போதைய பிரதமர் திருமதி பண்டார நாயக்கவின் அரசு எந்தக் காரணமுமின்றி தம்மை அங்கிருந்து வெளியேற்றி விட்டதாக எழுதியுள்ளார் மவ்லானா.

நாடு திரும்பிய அவர் கீழக்கரையில் இருந்தபடியே அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டார். தொய்வில்லாமல் எழுதி வந்தார். ஊராட்சி மன்ற உறுப்பினராக பல ஆண்டுகள் பங்காற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்து காயிதே மில்லத் இஸ்மாயிம் சாகிப் அவர்களின் பாசமிகு தொண்டராக விளங்கினார் மவ்லானா.

முகவை இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகப் பொறுப்பேற்றார். தி.மு.கழகம், சுதந்திர கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்த அந்தக் காலகட்டத்தில் ராஜாஜி, அண்ணா முதலானோர் கலந்து கொண்ட முஸ்லிம் லீக் மாநாட்டை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

பசுங்கதிர்

பல பத்திரிகைகளில் எழுதி வந்த எம்.கே.ஈ. மவ்லானா சொந்த இதழை நடத்த விரும்பினார். அதனால் சென்னைக்குக் குடியேறி ’பசுங்கதிர்’ பத்திரிகையை 1967 இல் தொடங்கினார். (முகவரி:43, முத்துமாரிச் செட்டித் தெரு, சென்னை -600001).

அபூ உமர் முதலான புனைப்பெயர்களும் அவருக்கு உண்டு. பசுங்கதிர் இதழுடன் பதிப்பகத்தையும் அதே பெயரில் நடத்தி பற்பல நூல்களை வெளியிட்டார். மவ்லானா அவருடைய இதழியல் இலக்கியப் பணிகளுக்கு சக பத்திரிகை ஆசிரியர் களும் அறிஞர்களும் ஊக்கமளித்து வந்தனர்.

பசுங்கதிர் இதழில் 15.1.1973 முதல் வெளிவந்த கட்டுரைத் தொடரை உன்னிப்பாகக் கவனித்துக் கண்காணித்து வந்தவர் களில் பிறை கவுரவ ஆசிரியர் எம். அப்துல் வஹ்ஹாப் சாகிப் முக்கியமானவர். அதை தாங்களாகவே ஆங்கிலத் திற்குப் பெயர்த்து உலக நூலாக அறிமுகப்படுத்த எண்ணு வதாகக் கூறிக் கொண்டிருந்தார். என எழுதுகிறார் மவ்லானா. இது
ஓர் எடுத்துக்காட்டு.

பசுங்கதிர் இதழில் அவர் எழுதிய பல தொடர் கட்டுரைகள் பசுமையாக நினைவில் நிற்கக் கூடியவை. உந்துலூசியாவின் (ஸ்பெயின்) தலைவன், வித்திரியா விருந்து ஆகியவை அவற்றில் அடங்கும்.

சிறுகதை

எம்.கே.ஈ மவ்லானா சிறுகதை இலக்கியத்தில் உரிய இடம் பெற்றவர். தமது காலகட்டத்திற்கேற்ப அவர் சிறுகதைகளை எழுதியதால் பல கதைகள் மிக நீளமானவை.

இறைவனின் அருளால் பெற்ற அருளைப் பயன்படுத்திப் புனையும் அற்புதமான கற்பனைகளால் சிறந்த சிந்தனை யாளர்கள், கற்பனைகளால் கற்பனைக் கதைகளைத் தொகுத்து விடுகிறார்கள். உண்மையில் இது பாராட்டுக் குரியதுதான்.

எனினும், நம் கண்முன்னாலேயே நடைபெறக் கூடிய சில நிகழ்ச்சிகள் அந்தக் கற்பனையாளர்களின் கற்பனைகளை விடவும் சிறப்பானவையாகவும் ஆச்சர்யத்துடன் நெற்றியில் சுருக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடியவைகளாகவும் நிகழ்ந்து விடுகின்றன. அப்படிப்பட்ட நிகழ்வுகள் ஆங்காங்கே நாடோடிச் செய்திகளாக மக்கள் மனதில் பேசவும் படுகிறது.

பேசப்படும் அந்தச் செய்திகளுக்கு வடிவம் கொடுத்து தொகுத்துத் தரப்படும் பொழுது மக்களுக்கு அவை இனிப்புச் செய்திகளாக அமைவதோடு, அவற்றில் பல அறவழிப் போதனைகளாகவும் அமைகின்றன. அந்த வழிப்பட்டதே இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு.

பசுங்கதிர் பதிப்பாக வெளியீடாக 1982 நவம்பரில் வந்த கல்லறை விழா சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை வரிகள் இவை.

இதில் முதற்கதையான ’வசிய மருந்து’ பாரஸீகத்தில் பேசப்படும் நாடோடிக் கதை. நூலுக்குப் பெயரிட்டு இருக்கக் கூடிய கல்லறை விழா அரபு நாட்டு வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஓர் உண்மை நிகழ்ச்சி.

மூன்றாவது தலைப்பாகிய ’காதலில் தோல்வியுற்ற ஒரு காளை’ பாகிஸ்தான் பிரிவினையின் போது நிகழ்ந்த விரும் பத்தகாத ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒன்று.

நான்காவது கதையாகிய ‘பன்றிவித்த பணமும் ஹஜ் யாத்திரையும்’ பலரும் அறியாமலோ அல்லது அறிந்தோ பலரிடத்தும் மிக்க நாசூக்காக ஒன்றி நிற்கும் முறைகெட்ட வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாகும்.

ஐந்தாம்படைப்பு பற்பல இடங்களில் இன்றும் தொழிலாளர் களைச் சுரண்டி முதலாளிகள் வாழ்வதாகக்கூறி அந்தத் தொழிலாளிகளுக்கு வெறியை ஊட்டி இந்தத் தொழிலாளி களையே சுரண்டி வாழக்கூடிய எத்தர்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகும்.

சிறுகதைகளின் பின்னனியும் சாரமும் இவை. மவ்லானாவின் நடைக்கு ஓர் எடுத்துக்காட்டு. பன்றிவித்த பணமும் ஹஜ் யாத்திரையும் ஒரு குறிப்புரையுடன் தொடங்குகிறது.

கண்ணுக்குமுன் நல்லதாகத் தெரியக்கூடிய சில காரியங் களை ஒவ்வொருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் செய்து விடுகிறோம். அதற்குள் நமக்குத் தெரியாமலே நஞ்சு கலந்திருப்பதை நாம் அறிந்துக் கொள்வதில்லை. பிறர் யாராவது எடுத்துச் சொல்லும்போதே சில உண்மைகள் தெரிய வருகின்றன. அப்படிப்பட்ட ஓர் உண்மைச் சம்பவத் தைத்தான் தொகுத்துத் தரப்படுகிறது.

அவர் அந்தக் கிராமத்தின் பெரிய தனக்காரர். அந்தக் கிராமத்தில் மட்டுமென்ன? அடுத்துள்ள ஐந்தாறு கிராமங் களில் கூட அவருக்கு நிகரான பொருளாதார வசதி படைத்தவர் வேறு எவரும் இல்லை. இத்தனைக்கும் விவசாயமே அவரது உடலும் உயிரும்.

கிராமத்தில் ஏறக்குறைய முக்கால் பங்குக்கு மேற்பட்ட நிலம் அவருக்கே சொந்தம். உழவு மாடுகள், பண்ணை ஆட்கள் ஏராளம். அண்மையில் உழவு மிஷினாகிய டிராக்கடர்கூட ஒன்று வாங்கி விவசாயத்தை முழு மூச்சாகக் கவனித்து வருகிறார்.

அந்தக் கிராமம் தோன்றி எத்தனை நூற்றாண்டுகள் ஆகி இருக்குமோ தெரியாது. ஆனால் அது தோன்றி பல நூற்றாண்டுகள் ஆகி இருக்கும். என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் அந்தக் கிராமத்தைத் தொடர்புபடுத்திக் கூறப் படும் கதைகள் அப்படித்தான் எண்ணச் செய்கின்றன.

கிராமம் தோன்றிய காலம் முதல் அங்கிருந்து எவரும் ஹஜ்ஜுக்குப் போனதாக வரலாறு இல்லை. இந்த நிலைமை யில்தான் கிராமத்தின் பெரிய தனக்காரராகிய அவர் ஊரவர் பலரின் பணிவான தூண்டுதலின் காரணமாக அந்த வருசம் ஹஜ்ஜுக்குப் போக முடிவு செய்தார்.

முடிவு செய்ததும் அடுத்த கட்டமாக எனக்கு ஆள் அனுப்பி வரச் சொல்லிவிட்டார். நான் கிராமத்தில் கொஞ்சம் விவர மானவன் என்று பெயர் பெற்றவன். அரசாங்க அலுவல்கள் உட்பட எல்லா விவரங்களும் தெரிந்தவன் என்ற மதிப்பும் பெற்றவன்.

அழைப்பு வந்ததும் இதோ வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு கையிலிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு அவர் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தேன். என்றை யையும் விட அன்று மிக்க மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று இருக்கச் சொன்னார். நான் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்ததும் அவர் இந்த வருசம், தான் ஹஜ்ஜுக்குப் போக முடிவு செய்திருப்பது பற்றிக் கூறினார்.

இந்தச் செய்தியை அவர் கூறியதும் நான் உண்மை யிலேயே மிக்க மகிழ்ச்சியோடு பெருமிதம் கொண்டேன். ஏனெனில், ஒரு கிராமத்தின் சரித்திரமே மாறப் போகிற தல்லவா? கதை தொடர்கிறது. படித்துச் சுவைத்து படிப்பினை பெறலாம்.

பதிப்பாளர்

பசுங்கதிர் மவ்லானாவின் பதிப்புத்துறை பணிகள் பதிவு செய்யத்தக்கவை. அவர் இருபதுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றி பதிப்பித்துள்ளார்.

கவிஞராகவும் திகழ்ந்த அவர் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு – எதிர்நீச்சல், உலகப்பெரும் மேதை உமர் கையாம், முஸ்லிம்களின் ஒருதலை ராகம், எல்லாம் இன்ப மயம் – பயணக்கட்டுரை, முஹம்மதெனும் பெருஞ்சித்தர் முதலாக அவருடைய நூல் பட்டியலில் அடங்கும்.

வேரில் பழுத்த பலா நூலை நெல்லை பாலாஜியுடன் இணைந்து எழுதி வெளியிட்டார் எம்.கே.ஈ.இஸ்லாத்தைத் தழுவிய கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலை தமிழில் ’தீர்க்க தரிசனம் நிறைவேறுகிறது’ என்ற தலைப்பில் வெளியிட்டார்.

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் (புதினம்) எது என்ற சர்ச்சை தொடர்வதை அறிவோம். தாமிரப்பட்டணம் முதல் நாவல் என்ற கருத்தை நிலைநாட்ட உதவியவர் மவுலானா. கீழக்கரை மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரபுத் தமிழில் எழுதிய ‘மதீனத்துன்னுஹாஸ்’ நூலை ‘தாமிரப் பட்டணம்’ எனும் பெயரில் பசுங்கதிரில் தொடராக வெளியிட்டு நூலாக்கினார். அவர்.

1859 இல் எழுதப்பட்ட புதினம் அது. கீழக்கரை லெ.செ. நூஹ் தம்பி மரைக்காயரிடமிருந்து அந்த நாவல் பிரதியைப் பெற்று 23 அத்தியாயங்களாக வெளியிட்டு பின்னர் நூலாக வெளியிட்டார். இதன் அரபுத்தமிழ்ப் பதிப்பு இலங்கையிலும், தமிழகத்திலும் 1990 – 1903 ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பிக்கப்பட்ட குறிப்பையும் எம்.கே.ஈ. மவ்லானா முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் மதிக்கத்தகுந்த பெருமைக்குரியதும் புதையுண்ட உலக மனிதகுல வரலாற்றை வெளிப்படுத்துவதுமான சிறப்பைச் சுமந்திருக்கிறது என்று வாசகர்கள் கருதுவார் களானால், அந்த மதிப்பு, பெருமை, சிறப்பு அத்தனையும் ‘மாதிஹுஸ் ஸிபத்தைன்’ – மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கே உரித்தாகும். அவர்களுக்கு மாபெரும் ஞானத்தையும். தீட்சண்யத்தையும் அருளிய அல்லாவுக்கே புகழனைத்தும் உரித்தாகும். – இதுவும் முன்னுரை.

வாசகம்

தமிழ்மொழியின் முதல் நாவலாசிரியர் ’கமலாம்பாள் சரித்திரம்’ எழுதிய பி.ஆர்.ராஜம் அய்யர் என்று சொல்லப் படுவதுண்டு. ஆனால், அது தவறு. ‘ஹஸன் பே சரித்திரம்’ என்னும் தமிழ் நாவலை எழுதிய சித்தி லெப்பை அவர்களே முதல் நாவலாசிரியர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே, ‘தாமிரப் பட்டணம்’ நாவல் எழுதப்பட்டுவிட்டது. ஆகையால் அதுவே முதல் நாவல் எனவும் தமிழ்மொழியின் முதல் நாவலாசிரியர் மாப்பிள்ளை ஆலிம் அவர்களே எனவும் இப்போது உறுதியாகிறது. அறபி லிபியில் எழுதப்பட்டாலும் அந்நாவலின் மொழி தமிழே ஆகும்.

மதுரை பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் பீ.மு. அஜ்மல்கானின் ஆய்வுரை இது.

நற்பணிகள்

முன்னோடி பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா அவர்களின் பன்முனைப் பணிகள் விரிவானவை. தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக அவர் விளங்கினார். 10.9.1989 இல் திருச்சியில் நடைபெற்ற அச்சங்கத்தின் செயற் குழுக்கூட்டத்தில் அவருடைய மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் ஏ.எம்.யூசுப், தூத்துக்குடி முஸ்தபா ஹுசைன், பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன், கனி சிஷ்தி முதலானோர் அணிதிரண்ட நிகழ்ச்சி மறக்க முடியாதது.

எழுத்தாற்றலுடன் பேச்சுத் திறனும் பெற்றவர் மவ்லானா. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர வேட்கையை எழுப்பும் மேடைப் பேச்சுக் கலையைக் கற்றுக் கொண்டார். மேடைச்சிங்கம், பிரசங்கி எனப் பெயர் பெற்றார்.

ஆக, கலை, இலக்கியம், அரசியல், ஆன்மீகம், வர்த்தகம், பேச்சுத் திறன், வாகனம் ஓட்டுதல், துப்பாக்கிச் சுடுதல், சமையல், சமரசம் என எல்லாத் துறைகளிலும் ஈடுபாடுள் ளவர், கீழக்கரை தந்த இந்த முன்னோடி. கல்விக்கூடம் சென்று கற்காதவர் மார்க்கக் கல்வியைப் பெற்றவர். முனைவர்பட்டம் தர லண்டன் தமிழ்ச்சங்கம் முன்வந்த போது அதைப் புறக்கணித்தார்.

மவ்லானா கீழக்கரையில் 1970 டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் அங்கம் வகித்தார். அவருக்கு நிறைவு விழாவில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி வழங்கிப் பாராட்டினார்.

எம்.கே.ஈ. மவ்லானாவுக்கு அதுவே நிறைவு நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.

பொற்கிழியுடன் துயிலச் சென்ற அவர் கண் விழிக்காமல் அன்றிரவே உலகைத் துறந்து இலக்கியப் பசுங்கதிர் ஆகிவிட்டார்.


நன்றி :

சமநிலைச் சமுதாயம்
ஜுன் 2009

Jamal / Minjamal
Dr Himana Syed ,
dateThu, Jul 30, 2009 at 10:58 AM
subjectRe: பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..


சமநிலைச் சமுதாயம், ஜுன் 2009 இதழில் வெளிவந்த கட்டுரையில்

அதில் குறிப்பிட்டிருந்த தவறான தேதியினைத் தெளிவுபடுத்திய டாகடர். ஹிமானா செய்யது அவர்களுக்கு மிக்க நன்றி.

டாக்டர் ஸாஹிப் அவர்களின் விளக்கத்தை இந்த மடலில் பதிவு செய்துள்ளேன்.

அன்புடன்,
சகோ. ஜமால் முஹம்மது.


=====================================================

மவ்லானா கீழக்கரையில் 1990 டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் அங்கம் வகித்தார். அவருக்கு நிறைவு விழாவில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி வழங்கிப் பாராட்டினார்.

-This is the corrected version.

I was A MEMBER OF the PRO OF THE SAID CONFERENCE.
MOULANA PASSED AWAY A FEW DAYS AFTER THE CONFERENCE
MOULANA'S SON EESA LIVES IN SINGAPORE . HE HAS CORRECTED THE DATE IN SAMANILAI SAMUTHAAYAM JULY ISSUE LETTERS TO EDITOR COLUMN -

DR.HIMANASYED

Wednesday, July 29, 2009

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!

அறிவுச் செல்வங்களே! அன்பின் சிகரங்களே! வருக!

http://www.muslimleaguetn.com/news.asp?id=976

www.mudukulathur.com


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- துருக்கி சுல்தான்களின் இஸ்லாமிய ஆட்சிகளின் கடும் வீழ்ச்சியால் உலகெங்கும் ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டது.
நம் இந்திய நாட்டிலும் முகலாய மன்னர்களின் ஆட்சியின் வீழ்ச்சியினா லும் இஸ்லாமிய கலாச் சாரத்தை பேணுவதிலும், பின்பற்றுவதிலும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மிகப்பெரும் சோதனையும், வேதனையும் ஏற்பட்டது.

இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் இஸ்லாமியர் களின் கல்வி, கலாச்சாரம், தனித்தன்மை இவைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் ஆங்கிலேயர்கனினால் நடந்து கொண்டிருந்தது
முஸ்லிம் சமுதாயத்தினரிடையே ஒருவகையான அச்சமும், வேதனையும் நிலவிய காலக் கட்டத்தில் தான். அல்லாஹுத்த ஆலா வின் மீது அச்சம் கொண்ட தியாகச் சீலர்கள் உருவானார்கள்.

இருளே போ! போ! என்று கோஷமிட்டுக் கொண்டிருப்பதை விட இருள் சூழ்ந்திருந்த இடத் தில் ஒரு விளக்கை ஏற்றி விட்டால் இருள் தானாக போய் விம். அந்த நல்ல நோக்கில் - தியாக நோக்கில் சத்திய சீலர்களான சங்கைமிகு உலமாக்களால் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக் கப்பட்டது. வலிமை மிகுந்த பிரிட்டிஷ் அரசை கடுமையாக எதிர்த்து 1857-ம் ஆண்டில் ஷாமிலி மைதானத்தில் தியாகச் சீலர் மவ்லானா இம்தாதுல்லா தலைமை யில் நடைபெற்ற கடுமையான போராட் டத்தில் கலந்து கொண்டு தியாகமிகு சேவையாற்றிய, தேவ்பந்த், தாருல் உலூம் கல்லூரியின் நிறுவனர் காஸிம் நானோத் தவி அவர்களின் பெயரும் மற்றும் மார்க்க மேதைகளின் பெயர்களும் இடம் பெற்றிருந் தது. இவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சிறைப் பிடித்து சித்திரவதை செய்து தண்டிக்க வேண்டு மென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிதும் கங்கணம் கட்டிக் கொண்டு, தேடுதல் வேட்டையாடிய காலக் கட்டத்தில்தான்.

புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றிருந்த மார்க்க மேதை - தியாகச்சீலர் மவ் லானா காஸிம் நானோத் தவி தலைமையில் மக்காவின் மிகப் பெரும் இந்திய நாட்டு உலமாக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்துடன் வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும். வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா உருவாக வேண்டும். இஸ்லாமிய கலாச்சா ரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், இஸ்லா மியர்களின் உரிமைகளில் - அவர்களின் மார்க்க சட்டத்தை பேணிப் பின்பற்றுவதில் யாருடைய குறுக்கீடும் இருக்கக் கூடாது என்ற நோக்கில்தான் நாடெங்கும் மதரஸாக்கள் தோற்றுவிக்கப்பட்டன.
ஊர்களில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தினரும், சமுதாயப் பிரமுகர்களும், உலமாக்களும் ஒன்று சேர்ந்து மதரஸாக்களை உருவாக்கினார்கள். நாடெங்கும் நடை பெற்று வரும் மதரஸாக்களிலி ருந்து வருடந்தோறும் மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்றவர்கள், பட்டயங் கள் பெற்றவர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தருகிறார் கள். அதுபோல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்களும், காரி பட்டம் பெற்றவர்களும் வருகை தருகிறார்கள்.

இதேபோல் பெண்கள் மதரஸாக்களிலிருந்தும் ஆலிமா பட்டம், முபல்லிகா பட்டம் பெற்ற பெண் மகனும் வருகை தந்து நாட் டுக்கும், சமுதாயத்துக்கும் சிறப்பான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். அடியார்கள் மீது அன்பு ஆதரவு அண்டை வீட்டாரிடமும் அன்பான உறவு முறை - உறவினர்களிடம் நேசமுடனும், பாசமுடனும் நடந்து கொள்ளும் அன்பான முறை இத்தகைய மனிதநேயத்தை பேணிப்பின்பற்றி போதித்து வரும் அன் பார்ந்த வாழ்க்கை முறையை மதரஸாக்களிலி ருந்து கற்றுத் தேறி பட்டங்கள், பட்டயங்கள் பெற்று வரும் அனைவர்களையும் அன்புடனும், மகிழ்வுடனும் வருக என வாழ்த்துகிறோம்.
இந்திய நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், உ.பி. மாநிலத்திலுள்ள உலகப் புகழ் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா வுக்கு சென்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் உலமாக்கள் நம் நாட்டுக்கு செய்த சேவை விடுதலைப் போராட்டத் தில் உலமாக்கள் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது. இன்றும் அவர்களின் சேவையை நினைக்கும் போது என் நெஞ்சம் நெகிழ்கிறது என்று இந்திய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் சொன்ன செய்தி சரித்திர செய்தியாகும். புகழ்பெற்ற லக்னோ நத்வத்துல் உலூம் மதரஸா வின் பட்டமளிப்பு விழா சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாட்டு உலமாக்கள் செய்த சேவை இந்திய விடுத லைப்போரில் உல மாக்கள் ஆற்றிய பங்கு மிக மகத்தானது என்று அவர் நிகழ்த்திய உரை மறக்க முடியாததாகும். தென்னகத்தின் தாய் மதரஸாவான வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரை யாறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் பேசுகையில் மனித சமுதாயத்தை புனித சமுதாயமாக ஆக்கி வருவது மதரஸாக்கள் என்று குறிப்பிட்ட செய்தி நமக்கு இன்றும் நினைவில் நிற்கிறது.

சிறப்புமிகு லால்பேட்டை மதரஸா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு நூற்றாண்டு விழாவுக்கு தலைமை வகித்து உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் சங்கை மிகு உலமாக்கள், கண்ணியமிகு - சத்தியமிகு நபிமார்களின் வாரிசுகளாக திகழ் கிறார்கள். புனித நபிமார்கள் செய்தப் பணியை சங்கைமிகு உலமாக்கள் செய்து வருகிறார்கள் என்று உலமாக்களின் சேவையை பாராட்டி பேசியுள்ளார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் லிபியா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தலைவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்று பேசுகையில் உண்மைகளை - நன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் என் இந்திய நாட்டு உலமாக்கள் மிகச் சிறந்தவர்கள் என்று தலைவர் பேசிய செய்தி உலக செய்திகளில் மீடியாக்களில் வெளிவந்தது. மணிச்சுடரி லும் வந்தது.

மவ்லவி ஆலிம் பட்டம் பெற்ற வெண்புறாச் சேனைகளே மவ்லவி ஃபாஜில் பட்டம் பெற்ற சமாதான புறாக்களே வருக, ஹாபிழ் பட்டம் பெற்ற அன்பின் சின்னங்களே வருக, ஆலிமா பட்டம் பெற்ற சமுதாயச் செல்வங்களே வருக.

முபல்லிகா பட்டம் பெற்ற சமுதாயக் கண் ணொளிகளே வருக வருக என உங்களை வாழ்த்தி வரவேற்று உங்கள் சேவை சிறக்க துஆ செய்கிறோம்

- மவ்லவி தளபதி ஷபீகுர் ரஹ்மான்
மாநில மார்க்க அணிச் செயலாளர்,
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Friday, July 24, 2009

கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை

கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை

திருநெல்வேலி, ஜூலை 18: கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளித்து ஜமாஅத் பதிவு முறை தொடர தமிழக அரசு வழி செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

தமிழ்நாட்டில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம். ஐந்து தொகுதிகளிலும் எந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவது போலவே எண்ணி அவர்களது வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம்.

திருமண பதிவுச் சட்டம்: தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க முதல்வரிடமும், துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

முஸ்லீம்கள் இதுவரையில் தங்களது திருமணங்களை அவர்கள் சார்ந்துள்ள ஜமாஅத்துகளில் பதிவு செய்து வருகின்றனர். அந்த பதிவு ஆவணங்கள் நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இப்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு என்பது, ஜமாஅத் பதிவு முறையை குலைத்துவிடும் என அஞ்சுகிறோம். எனவே, ஜமாஅத் பதிவு முறை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். நடப்பு சட்டப் பேரவைக் கூட்டம் முடிவடைந்த உடன் இந்த பிரச்னைக்கு நல்லதொரு அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.

சச்சார் கமிட்டி பரிந்துரைகளில் குறைந்தபட்ச பரிந்துரைகளை அமல்படுத்தக்கூட தற்போது அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதாது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கை, லிபரான் ஆணைய அறிக்கை ஆகியவற்றை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் நம்புகிறோம்.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டில் தற்போது 3080 பேருக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இது கடந்த 1991 ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் ஆனது. இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.

எங்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 1-ல் குற்றாலத்தில் நடைபெற உள்ளது. அதில், கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் பாராட்டப்பட உள்ளனர் என்றார் அப்துர் ரஹ்மான்.

பேட்டியின்போது, மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம். அபுபக்கர், மாநில துணைத் தலைவர் கோதர்மைதீன், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாநகர் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். மில்லத் இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தாய்ச் சபை முஸ்லிம் லீக் மட்டுமே !

( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி அறிக்கை ! )

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்ற சமுதாயத்திற்கு வெற்றி, தோல்வியை சொன்னதோ ? இல்லையோ? தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு தெளிவான வெற்றியை சொல்லி விட்டது. அந்த வெற்றியை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலம் சொல்லி இருப்பது ஒவ்வொரு முஸ்லிம்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் எந்த அணியில் இடம் பெறுகிறதோ ! அந்த அணிக்குத்தான் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் படை திரண்டு ஆதரவை வழங்கி வருகிறது என்பதை 2006 சட்டமன்றத் தேர்தலும் 2009 நாடாளு மன்றத் தேர்தலும் உறுதிபடுத்தியுள்ளது. தாய்ச்சபை முஸ்லிம் லீக்கை விமர்சிப்பதன் மூலமே தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என நினைத்து வாரத்திற்கு ஒரு கட்சியையும், வாரத்திற்கொரு இயக்கங்களையும் உருவாக்கி கொண்ட லெட்டர் பேடு அரசியல் கோமாளிகளெல்லாம் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களின் முகத்தை காட்டுவதும் தேர்தலுக்குப்பின் காணாமல் போவதுமாய் காலம் ஓடிக் கொண்டிருந்தாலும் இத்தகைய போலிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை !

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் எங்கள் பின்னால் தான் என்ற குருட்டு நம்பிக்கையுடன் அவசர கோலத்தில் கட்சி ஆரம்பித்து தகுதிக்கு மீறிய வகையில் அரசியல் பேரம் நடத்தி அனைத்து கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியே இல்லாமலும் திறந்த கடையை மூட முடியாமலும் தனித்து நின்று தங்கள் பலத்தை காட்டப் போகிறோம் என்று சொல்லி முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்வதுமாய் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழக அரசியலையே புரட்டி போடப்போகிறது எங்கள் கட்சியின் செயல்பாடுகள் என ஆணவ போதையில் உளறி கொட்டிய வீராதி வீரர்கள் ? எல்லாம் தேர்தலுக்குப்பின் அவர்களின் நிலையையும், செல்வாக்கையும் கண்டு அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் விரக்தி அடைந்து இனியும் நாமெல்லாம் அவசர கோலத்தில் ஜனித்த கட்சியில் நீடிக்க வேண்டுமா ? என கேள்வி கேட்டு ஊர் தோறும் கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களுக்கான அரசியல் களம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்று உணர்ந்து தொடர்ச்சியாக தாய்ச்சபையில் இணைந்து வருவதை இப்போது கண்கூடாய் பார்க்கிறோம்.

தமிழக முஸ்லிம்களின் ஒட்டு மொத்த பார்வையும் தற்போது தாய்ச்சபையின் முஸ்லிம் லீக் பக்கம் திரும்பியுள்ளது வரலாற்று சாதனையாகும். சத்தியத்தை அழிக்க நினைக்கும் எந்த அசத்தியமும் நிலைகொண்ட தில்லை. என்பதற்கு முஸ்லிம் லீக்கிற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் தேய்வுகளே சாட்சியாகும்.

எந்த கொம்பனாலும் முஸ்லிம் லீக்கின் வரலாற்று நிழல்களை கூட அழிக்க முடியாது. காரணம் முஸ்லிம் லீக் இறையருள் பெற்ற இயக்கம். தன்னலம் கருதாமல் சமுதாயக் கவலை யுடன் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் களால் வழி நடத்தப்பட்ட பேரியக்கம். நல்லோர்களால் உருவாக்கப்பட்ட தூய்மையான இயக்கமாய் தமிழக அரசியலில் வலம் வரும் ஒரே இயக்கம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்பதை பெருமைபடக் கூறிக்கொள்வோம்.

தமிழக முஸ்லிம்களின் கண்ணியமும், பாரம்பரியமும் கட்டிக் காக்கப்பட அனைவரும் அரசியல் ரீதியாக தாய்ச்சபையில் தங்களை இணைத்துக் கொண்டு தொடர்ந்து வெற்றிகளை குவித்திட முன்வர வேண்டுமாய் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன்.

வாரீர் ஒன்றுபடுவோம் ! உயர்ந்திடுவோம் !!

Parliamentary speech and Ranganath Misra Commission

Dear all,

Please refer to the following in both Parliamentary speech and Ranganath Misra Commission .

http://twocircles.net/2009jul19/muslim_mps_speak_out_loudly_parliament.html

Thanks.

Abdul Rahman

தங்கம் தகடாக மாராது

தங்கம் தகடாக மாராது
ஏ.எஸ்.அப்துல் ரஹமான்,அபுதாபி.


என்ன கிடைக்கும்?
முஸ்லிம் லீகையும்,முஸ்லிம் லீக் தலைவர்கலையும்
வறுத்தெடுத்து விமர்ச்சிக்க...
ஆஹா கிடைத்ததே!
தின மலத்தின் ஒரு நாள் மலம்,
படம் போட்டு தந்தோமே சமுதயத்திர்க்கு...

சந்தயில் எடுப்பட்டது
சமுதயத்திர்க்கு சந்தேகமும் ஏர்ப்பட்டது
சான்ருகள் கிடைத்ததும் சமாதானம் ஆனது.

ஆம்...!
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால்
சாமியாருக்கு முன்பாக கையில் எலுமிச்சை பழம்,
அதே படத்தில் கையில் இன்று ஆப்பிள்....

பாவம்...!
திருடர்களுக்கு தப்பிக்க தெரிய வில்லை
தின மலத்தை கன்டித்து தலைவர் சொன்ன
அறிக்கயில் உண்மை வெளிவந்ததும்
உருகுலைந்து போனார்கள் உளவாளிகள்!

வேறு என்ன கிடைக்கும்?
கிடைத்ததே! இட ஒதிக்கீடு
உண்மைகளை தொலைத்துக்கட்ட...

ஒரு வார்த்தையில் ஒருவர் சொன்னார்!
இட ஒதுகீட்டிர்க்காக முஸ்லிம் லீக்
எதுவுமே செய்ய வில்லை என்று...

அவர்களுக்குத் தெரிய வில்லை
முஸ்லிம் லீகில் வரலாறு எழுத்திலும் இருக்கும்,
படத்திலும் இருக்கும்,உயிறுடன் நடமாடும்
,எழுத்தரசு,போன்ற பல்கலை கழகஙலிலும் இருக்குமென்று.

பாவம்....
வாயடைத்துப் போனார்கள்
ஆதாரங்களின் அணிவகுப்பை அடுக்கிய போது..,

சிராஜுல் மில்லத்தின் கண்டிப்பான வேண்டுகோளையும்
முதல்வரின் கனிவான பதிலையும்,
இறுதியிலே நன்றி கூறும் வார்த்தைகளை உள்ளடக்கிய
படத்தை பார்த்து...படபடத்து போனர்கள்...

இது தவிர வேறு என்ன கிடைக்கும்?
கிடைக்கும் எது கிடைத்தாலும்
சமுதாயத்தின் வலிமையான் கோரிக்கைகள்
வரலாறாக கிடைக்கும்...!

ஆம்..!
வரவு செலவு கணக்கில் சிக்கி
வம்பில் மாட்டியவர்கள் இல்லை...!

வாலிபர்களின் உண்ர்வுகளைத் தூண்டி
வருடக் கணக்கில் வழக்குகளில் சிக்க
வைத்த பெருமைக்குரியவர்களும் இல்லை...!

மானம்,மரியாதை உள்ள சமுதாயத்தை
இன்றும் கண்ணியதோடும் கவுரவத்தோடும்
வழி நடத்திச் செல்லும்
வரலாற்று நாயகர்கள்...!

தங்கம் தகடாக மாறாது
தாய்ச் சபையின் தலைவர்கள்
அன்றும்....
இன்றும்....
என்றும்...தங்கத் தலைவர்கள்...!


அதனாலே தான்...!
நூறாண்டு வரலாறு கொண்ட இயக்கத்தின்
தலைவர்கள் வரலாற்றில் மின்னிக்கொண்டிருக்கிரார்கள்
(அல்ஹம்துலில்லாஹ்)

Abdul rahman

Thursday, July 23, 2009

இளைஞர் பட்டாளத்தில் இன்றைய முஸ்லிம் லீக்!!!

இளைஞர் பட்டாளத்தில் இன்றைய முஸ்லிம் லீக்!!!

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.

முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் மாற்றுகட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் சமுதாயப் பிரச்சினைகளை பேச முடியாது,முஸ்லிம் லீக் என்ற பெயரைக் கேட்டாலே அடிவயிற்றில் புளி கரையும் அளவிற்க்கு நடுங்கக்கூடியவர்கள் பரப்பி வந்த விஷம் இது.

இன்றைய நிலை என்ன என்பதை நாடே அறிந்து ஆச்சரியப்படுகிறது!

பதவியேற்று நடைபெறும் முதல் பாறாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே பட்டவர்த்தனமாக பேசி சமுதாயத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும்,அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம் .அப்துல் ரஹ்மான் என்பது வெளி உலகிற்க்கு வெளிச்சமாக தெரிந்து விட்டது.

இவர் என்ன பேசினார்?

*இந்திய இஸ்லாமியர்களின் அவல நிலை நீங்கி,உயர்வடைய அகில அளவிலும் உள்ள இட ஒதுக்கீடு தேவை!

*வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறை தேவை!

*கல்வி ,பொருளாதாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏற்றம் தேவை!


இவ்வாறாக அடுக்கடுக்கான வாதங்களை பாறாளுமன்றத்தில் மிடுக்காக பேசியது மட்டுமில்லாமல்,தான் ஒரு முஸ்லிம் லீகன் என்பதையும் பதிய வைத்திருக்கின்றார்.


இந்திய வரலாற்றிலேயே இஸ்லாமிய வங்கி முறை தேவை என்ற முழக்கத்தை பாராளு மன்றத்தில் ஒளித்த பெருமை முஸ்லிம் லீகைத் தவிர வேறு எந்த இயக்கத்திற்க்கும் கிடையாது!


ஓரு வேளை ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்பு இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவினால் அதன் நன்மையும்,சரித்திர பெருமையும் முஸ்லிம் லீகிற்க்குத்தான் என்பதை இங்கு ஆணித்தரமாக பதிய வைக்கிறோம்.
இட ஒதுக்கீடு விஷயத்திலும் இதுதானே நடந்தது?


அகில இந்துய அளவில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் பொழுது அந்த பெருமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்க்குத்தான் என்பதை திடமாக எதிர்கால சமுதாயத்திற்க்கு திட்டவட்டமாக சொல்லி வைப்போம்!!

இவர் இப்படி என்றால்,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராக ,மத்திய அமைச்சராக வலம் வரும் பெரந்தலைவர் இ.அஹ்மது அவர்களின் சாதனையை இன்று இந்திய இஸ்லாமிய சமுதாயம் அனுபவிக்கத்தொடங்கியிருக்கிறது.

*இரயில்வே துறையில் இஸ்லாமியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்!

*மத்ரஸா மாணவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் இரயில் பயணம்!

இதுவும் இந்திய வரலாற்றில் முஸ்லிம் லீகால் ஏற்படுத்தப்பட்டதுதான்!


உலகம் உள்ளவரை இது போன்ற காரியங்களை முஸ்லிம் லீகால் மட்டும்தான் செய்ய முடியும் என்பதைசமுதாயம் உணரத் தொடங்கியிருக்கிறது,அதனாலேயேத்தான் இளைஞர்கள் பட்டாளமும் முஸ்லிம் லீகை நோக்கி படையெடுக்க துவங்கியிருக்கிறது.

ஆம்!முஸ்லிம் லீக் வரலாற்றில் முதன் முறையாக இளைய தலைமுறைக்கு பொதுச் செயளாலர் பொருப்பு! இதை ஏற்றிருக்கும் இளவல் கே.ஏ.எம்.அபுபக்கர் இயற்க்கையாகவே சமுதாய தொண்டுள்ளம் கொண்ட நல்லுள்ளம் உடையவர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் இளைய தலைமுறையினர் என்ற பரிணாமத்தை கண்டு இஸ்லாமிய சமுதாயம் ஆச்சிரியத்தோடு முஸ்லிம் லீகை நோக்குகிறது!

இனிய இஸ்லாமிய இளவல்களே!
தூரமாக நின்று பார்க்காதீர்கள்,அருகில் வந்து அணி சேருங்கள்,தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றுக் கோண்டிருக்கும் மாவட்ட முஸ்லிம் லீக் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்துக் கொள்ளுங்கள்!

கடல் கடந்து வாழும் இளைஞர்களே!
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம்,சவூதி அரேபியா,குவைத்,ஹாங்காங்,அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் இளவல்கள் அங்கு இயங்கி வரும் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற காயிதே மில்லத் பேரவையினருடன் தொடர்பு கொண்டு,தய்ச் சபையை வலுப்படுத்த தயாரகுங்கள்!


இதுவரை உங்கள் வசூலை மகசூலாக பார்த்தவர்கள் செய்த காரியங்களை கடந்த தேர்தலில் தெளிவாக கண்டுகொண்டீர்கள்,
இனி நீங்கள் தெளிவடைய வரலாற்றுப் பேரியக்கம் அழைக்கிறது அணி திரள்வீர்!

முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வலிமையான தலமையில் வளமான சமுதாயம் காண சபதமேற்ப்போம் வாரீர்!!!

lalpetrahman@gmail.com

Wednesday, July 22, 2009

நிமிர்ந்தது முஸ்லிம் லீக் எனும் நெற்பயிர்

நிமிர்ந்தது முஸ்லிம் லீக் எனும் நெற்பயிர்

தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

பொத்தல்கள் இருப்பதெல்லாம் புல்லாங்குழலாவதில்லை

பொது நலங்கள் பேசுபவையெல்லாம் முஸ்லிம் லீக் ஆவதில்லை

சமுதாயத் தொண்டு முஸ்லிம் லீகிற்கு விளம்பரப் பதாகையல்ல – விடியல் விளக்கு

கூட்டத்தைக் கூட்டிக் காட்டிக் குதூகலிக்க – முஸ்லிம் லீக், மோடி வித்தைக்காரன் அல்ல

சமீபகால சலசலப்புப் பேர்வழிகள் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாக சில அனாமதேயங்கள் அங்கலாயிக்கின்றன

உண்மை பயிரை விடக் களைகள் அதிகம் வளர்வது வாடிக்கை. அதை வேடிக்கை பார்க்காது ஊர் கண்டிப்பாக களைகளைப் பிடுங்கி விடும். இதுதான் சமீப அரசியல் அரங்கில் நடந்துள்ளது.

முஸ்லிம் லீக் என்பது நெற்பயிர் அதன் வளர்ச்சி ’மெல்ல’ எனினும் ஊர் ’சொல்ல’ – ’வாழ்ந்த’ உயர்வாக இருக்கும்.

முஸ்லிம் லீக் எடைபோடுவது நிகழ்கால யதார்த்தங் களையே அன்றி பழைய பதார்த்தங்களை அல்ல.

துடுக்குத்தனம் முஸ்லிம் லீகிற்கு எப்போதும் இருந்த தில்லை. அதனால்தான் அரசில் தோழமைக்கு அணி சேர்த்து வருகிறது.

அந்த அணியின் கனிதான் அப்துல் ரஹ்மான் வேலூரில் விளைந்தார்.

வெப்பமான வேலூர் தென்றலான அப்துல் ரஹ்மான் அவர் களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

அதுவும் உலகு மெச்சும்படி, வாக்குகளில் உச்சப்படி

அல்லாடிப் போன – தள்ளாடிப் போன சிலர் சொல்லாடிப் பார்த்தார்கள். முடிவில் சோர்ந்து போனார்கள் !

அமைதியாக இருந்தார் தலைவர் முனீருல் மில்லத் கே.எம்.கே அவர்கள்.

அல்லாஹ், உடன் இருப்பது பொறுமையாளர் பக்கம் தானே !

சமுதாயச் சாலையில் வீராப்புக் காட்டி வந்த வெற்று வேட்டுகள் – புற்றீசல்கள், பொழுதுக்குள் வீழ்ந்து பொசுங்கிப் போனார்கள் !

பொய்யான மனிதநேய வேடம் போட்டதில்லை முஸ்லிம் லீக்!

மெய்யான அதன் கீர்த்தியை சமுதாயம் இன்று மெருகேற்றி வைத்திருக்கிறது !

காயிதே மில்லத் எனும் கண்ணியப் பூங்காவை ஊரார் உணர்ந்தே உள்ளனர்.

அந்தப் பூங்காவில் ஒளிரும் முஸ்லிம் லீக் எனும் வெளிச்சத்தைத் தேடி வந்து சமுதாயம் இளைப்பாறும் – களைப்பாறும். இன்றும் – என்றும் !



மணிச்சுடர் 28/29 மே 2009

Sunday, July 19, 2009

Vellore MP. Mr. Abdurrahmaan’s maiden speech in Indian parliament

Vellore MP. Mr. Abdurrahmaan’s maiden speech in Indian parliament

The maiden speech of Vellore MP Mr. Abdurrahmaan in Indian Parliament is significant one and to be appreciated. His speech clearly shows his interest not only for his own constituency but for the welfare of whole nation. I really applaud his speech and appreciate him for talking about Islamic Banking system in India. In one word, Indian Parliament needs persons like Mr. Abdurrahmaan and every Member of Parliament should work in the interest of the nation.

May Allaah bless Mr. Aburrahmaan and I pray Allaah, the Almighty, that Mr. Abdurrahmaans speech fell on every decision makers of the nations,

Y.A.Ghulam Mohamed,
Dar Al Fatah
Sharjah

050 628 1347

திமுக கூட்டணி வெற்றிக்கு முஸ்லிம் லீக் பாடுபடும் - அப்துல் ரகுமான் எம்பி

திமுக கூட்டணி வெற்றிக்கு முஸ்லிம் லீக் பாடுபடும் - அப்துல் ரகுமான் எம்பி

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19, 2009, 12:12 [IST]


நெல்லை: சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும் என்று வேலூர் எம்பி அப்துல் ரகுமான் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் பேசியதாவது...

தமிழகத்தில் ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும். தொடர்ந்து அந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். தற்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு திருமண சட்டத்தை வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் இதுவரை கன்னியமாகவும், முறையாகவும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்படும் முஸ்லிம் திருமணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் உள்ளது.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சட்டமன்ற கூட்ட தொடருக்கு பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் யாத்திரை செல்ல முஸ்லிம்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும்.

கட்சியை பலப்படுத்த மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி குற்றாலத்தில நடைபெறுகிறது. மேலும் கட்சி எழுச்சி பெற்றுள்ளதால் ஏராளமான இளைஞர்களும், பல முஸ்லிம் அமைப்புகளும் கட்சியில் சேருகின்றனர் என்றார்.

Saturday, July 18, 2009

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

http://www.muslimleaguetn.com/news.asp?id=955

http://www.mudukulathur.com/indnews.asp?id=306

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற முதல்வர் கலைஞரின் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர வேண்டும்.

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் தொடங்க வேண்டும்


நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேலூர் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுகையில் குறிப்பிட்டதாவது.

மாண்புமிகு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த அவையில் தாக்கல் செய்த 2009- 2010-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்த எனது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்த மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கை சந்தேகத்திற்கிட மில்லாத வகையில் நடைமுறைப்படுத்தக் கூடிய பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது.

நாட்டில் அனைத்து தரப்பு மக்களுடைய உளப்பூர்வமான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக் களின் அடிப்படையில் நமது நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிதி நிலை அறிக்கையில் பசுமைப் புரட்சிக்கான புதிய சகாப்தம் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை நான் உளமாற பாராட்டுகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 2014-ம் ஆண்டிற்குள் பாதியாக குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயமே இந்த நாட் டின் முதுகெலும்பாக திகழ்கிறது. விவசாய உற்பத்தி வருடத்திற்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. 2014-ம் ஆண்டிற்குள் கூடுதல் முதலீடு 9 சதவீதம் உயர்த்தப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார போட்டியின் சவால்களை சந்திக்க இந்திய தொழில்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய உறுதி கூறப்பட்டுள்ளது.

விவசாயக் கடன் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி யாக உயர்த் தப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு 3 லட்ச ரூயாய் 7 சதவீத வட்டியின் கீழ் கடன் கொடுக்கப்படு கிறது. தவறாமல் கடனைத் திருப்பி செலுத்துகின்றவர்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. இவைகளெல்லாம் வரவேற்கத்தக்க விஷயங்கள்.

விவசாய - நெசவாளர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மேல் உள்ள நிலம் உள்ளவர்கள் கடன் தவணைகளை இந்த வருடம் டிசம்பர் 31-க்குள் 75 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என குறிப்பி டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள வர்கள் நிலை என்ன? என்பதை அறிய விரும்புகிறேன். நமது நாட்டில் சிறிய விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். நான் சொல்ல விரும்புவது அந்த சிறிய விவசாயிக ளையும் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மாதத்திற்கு 25 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வாங்க லாம் என அறிவித்துள் ளீர்கள். அது பாராட்டுக்குரியது. அதேசமயம், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்ற திட்டத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப் பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த திட்டத்தை மத்திய அரசு ஏன் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டில் கைத்தறி பூங்கா அமைப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை பாராட்டி வரவேற்கிறேன்.

நமது நாட்டில் மிக குறைந்த அளவில்தான் பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். அது மிக மிகப் பெரிய சவாலாக உள்ளது. தற்போது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய மகளிர் கல்வி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள் ளது. வேலூர் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டை சுற்றி 60 கி-மீட்டர் சுற்றள விற்குள் மகளிர் கல்லூரிகளே இல்லை. அந்த குறையை போக்கிடும் வகையில் அங்கு மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவ அரசை வேண்டுகிறேன்.

உயர்கல்விக்காக 200 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட குடியாத்தத்தில் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி கற்பதற்கு கல் லூரி அமைத்துத் தருமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோல் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் என தொழில் செய்கின்றவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் பெரிய அளவில் தொழிற் சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புக்கள் அமைக்கப்பட வேண்டும்.

இந்த நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினரின் பல நோக்கு முன்னேற்றத் திட்டத்துக்கு ரூ.1740 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது போதுமானதல்ல. நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பரிதாப நிலைகளில் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி போதாது. இதற்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத் தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் உள்ளிட்டோர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீரமிக்க குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இந்த சமுதாயங்களின் உயர்வுக்காக அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்காக இந்த அவையில் குரல் எழுப்பியதை நான் நினைவு கூர விரும்புகிறேன்.

மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலத்தின் மலப்புரத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலா சாலையில் புதிய கிளைகள் ஆரம் பிக்கப்பட ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன்.

உலகப் பொருளாதாரம் 1.3 சதவீதம் இந்த வருடத் தில் உயரும் என சர்வதேச நிதி ஆணையம் அறிவித் துள்ளது. இதில் இந்தியா வின் பொருளாதாரம் ஏப்ரல் 2009லேயே 4.5 சதவீத வளர்ச்சியை எட்டி விட் டது. 5.4 சதவீதம் வரை இது உயரும் என சொல்லப்பட் டுள்ளது. எதிர்கால இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கி றது என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.

வங்கிகளுக்கு சாதகமான பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது. வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம்.

சமீபத்தில் ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உலக இஸ்லாமிய வங்கி அமைப்போடு ஒருங்கி ணைப்புச் செய்ய இந்திய அரசு விரும்பினால் நான் அதற்காக இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அவர்களை அழைத்து வருவதாக இருந்தாலும் கலந்தாய்வு செய்வதாக இருந்தாலும் அதற்கு நான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன்.

உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது.

எனவே, இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவ நான் வலியுறுத்து கிறேன்.

இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டார்.

Wednesday, July 15, 2009

மே 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அமைப்புகள்

மே 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அமைப்புகள்


1. ஜி. சுபஹான்,
பொதுச்செயலாளர்
இந்திய ஜீவா கம்யூனிஸ்டு கட்சி
தமிழ் மாநிலக் குழு

2. அ. அந்தோணி ஆரோக்கிய ராஜ், பொதுச்செயலாளர்
கிறிஸ்தவ தமிழர் கழகம்
122, வன்னியர் தெரு, சூளைமேடு,
சென்னை – 94.

3, உசேன் தெரு, கிருஷ்ணாபுரம்
அம்பத்தூர்
சென்னை 600 053.

4. டி.ஜான்பால், மாநிலத்தலைவர்
தேசிய கிறிஸ்தவ மக்கள் இயக்கம்
144, இண்டேன் கேஸ் கம்பெனி 2- வது மாடி
1-வது ஹால், சம்பத் நகர்,
ஈரோடு – 638 011.


5. தீக்சீத் ஆதித்யா, தலைவர் (தமிழ்நாடு)
அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ்

6. கோவைத்தம்பி, பச்சைமுத்து
பார்கவகுல சங்கம்

7. கே. ரங்கநாதன், தலைவர்
தமிழக தாய் காங்கிரஸ் கமிட்டி
53/23, 86-வது தெரு, அசோக்நகர்,
சென்னை – 600 083.

8. திண்டிவனம் க. அன்பரசு,
தலித் மாணவர் கூட்டமைப்பு
நிறுவனர் – தலைவர்,
60/60, எம்.எஸ்.நகர், 2-வது பிரதான சாலை,
சேத்துப்பட்டு,
சென்னை – 600 031.

9. மரு.துரை. பாலகுரு, பொதுச்செயலாளர்
அருந்ததியர் மக்கள் நல சங்கம்
6/ஏ, பட்டக்கால் தெரு, இஞ்சிக்குடி,
பேரளம் – 609405
நன்னிலம், திருவாரூர் மாவட்டம்.


10. ஜெயம் இ. புஷ்பராஜா, பொதுச் செயலாளர்
அகில இந்திய தலித் சிறுபான்மை
இளைஞர்கள் சமூக நீதிப் பேரவை
16, வி.பி. கோவில் தெரு,
சென்னை – 600 081.


11. அ. வடிவேல், தமிழ் மாநில பொதுச் செயலாளர்
ஜீவா கம்யூனிஸ்டு கட்சி (லெனின்)
பிளாட். 57, எம்.எம்.நகர், திருப்பாலை,
மதுரை – 625014


12. எம். பழனி மோசஸ், நிறுவனம் – தலைவர்
புதிய தலைமுறை மக்கள் கட்சி
1/206, பெரியார் நகர், திரிசூலம்,
சென்னை – 600 043.


13. நாகை ஆ. மணி, பொதுச் செயலாளர்
அனைத்துலக எம்.ஜி.ஆர். தி.மு.க
88/ 2, ரத்தினா நகர், நாலுகால் மண்டபம்,
கீழ்காவாகுடி – 610 002, திருவாரூர் மாவட்டம்


14. ஜெ. நாகபூஷணம், தலைவர்
அம்பேத்கார் ஜனநாயக பேரவை
13/7, பூத பெருமாள் 1-வது சந்து, அண்ணாசாலை,
சென்னை – 600 002.


15. சி.கலிய மூர்த்தி, பொதுச் செயலாளர்
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) – தமிழ் மாநில குழு
17, நாராயணப்பா தெரு, மண்ணடி,
சென்னை – 600 001.


16. இ.முத்துசாமி, நிறுவனர் – மாநில தலைவர்
தமிழக மக்கள் வாழ்வுரிமை கட்சி
16/28, கம்பர் தெரு, தேவ நேசர் நகர், பீர்க்கன்கரணை
சென்னை – 600 033.


17. கோ.ச. தேவராஜன், நிறுவனர்
தமிழக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
23, மூகாம்பிகை நகர், டி.என். பாளையம்
கோபிசெட்டிபாளையம்
ஈரோடு – 638506


18. கவிஞர் சேலம் சிங்காரவேல், தலைவர்
அகில இந்திய அம்பேத்கார் மக்கள்
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்
5/128, சண்முக நிலையம்,
பாலப்பட்டி – 637017
ப. வேலூர் வட்டம், நாமக்கல் மாவட்டம்

19. எம்.ஏ.ராஜ், பொதுச்செயலாளர்
தமிழ்நாடு அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி
8ஏ, 2- வது புதுத்தெரு, ஏ.கே.நகர்,
சங்கரன் கோவில் – 627 756 (நெல்லை மாவட்டம்)


20. எம்.ஆர். கந்தசாமி, நிறுவனர் - தலைவர்
தமிழக பசவர் முன்னேற்றக் கழகம்
1/84, ஆத்தூர் மெயின் ரோடு,
மங்களபுரம் – 638202
(நாமக்கல் மாவட்டம்)


21. ஜி.கமருதீன், பொதுச்செயலாளர்
காயிதே மில்லத் லீக்
தானிப்பாடி (தண்டராம்பட்டு வட்டம்)
திருவண்ணாமலை மாவட்டம்.


22. எம்.எச்.அஹமது மரைக்காயர், நிறுவனர் – தலைவர்
அகில இந்திய ஜனநாயக கட்சி
15/17, நூரிஷா தைக்கால் தெரு,
நாகூர் – 611 002.


23. T.G.S PAUL, CHAIRMAN
SOUTH INDIA CHRISITIAN COUNCIL (R)
DR. DANIEL JESUDASS – GEN. SECRETARY
35,6th MAIN ROAD, BANASWADI,
BANGALORE – 560043


23. கா முருகேசன், மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு விஸ்வ கர்ம (ஆசாரியார்)
இளைஞர் முன்னேற்ற பேரவை
இராசிங்கபுரம், (போடி வட்டம் – தேனி மாவட்டம்)


24. ஆர். ரமேஷ், பொதுச் செயலாளர்
தமிழ்நாடு மாநில கட்டிட உழைப்பாளிகள் மற்றும்
அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
4/117,ஆறகழூர், ஆத்தூர் வட்டம் (சேலம் மாவட்டம் )


25. சி. ராஜேந்திரன், நிறுவனத் தலைவர்
உழைப்பாளி மக்கள் முன்னேற்ற கட்சி
153/147, ஆற்றோரம் கிழக்கு தெரு, குகை,
சேலம் – 636006


26. கோ. வைரபாண்டியன், பொதுச்செயலாளர்
அம்பேத்கார் மக்கள் முன்னணி
1/47, பாரதி தெரு, டாக்டர் அம்பேத்கார் பவன்,
சிறுநாகலூர் – 603 319. (மதுராந்தகம் வட்டம்)


27. இ. செல்வம், நிறுவனத் தலைவர்,
மக்கள் காங்கிரஸ் கட்சி
35, பராசக்தி கட்டிடம்,
நெல்லை – 627001.


28. செய்யூர் இரா. மாமல்லன், நிறுவனர் – தலைவர்
ஆதி திராவிடர் முன்னேற்றக்கழகம்
2, வடக்கு செய்யூர்,
செய்யூர் – 603 202
காஞ்சிபுரம் மாவட்டம்.


29. தீப்பொறி பாண்டியன், பொதுச்செயலாளர்
அகில இந்திய முக்குலத்தோர்
மக்கள் முன்னேற்றக் கட்சி
16/25, குமரப்பன் தெரு, ஏழுகிணறு,
சென்னை – 1.


30. ஏ. டி. விஸ்வநாத், நிறுவனத் தலைவர்
அம்பேத்கார் ஜனசக்தி
94, கண்ணகப்பட்டு, ராஜீவ்காந்தி சாலை,
திருப்போரூர் – 603 110. (காஞ்சி மாவட்டம்)


31. டி.கே. ஜார்ஜ், நிறுவனத் தலைவர்
எம்.ஜி.ஆர் தொண்டர்கள் கட்சி
புதிய எண்.11, பள்ளித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை,
சென்னை – 2.


32. திருச்சி என்.எஸ்.திலிப் குமார், மாநிலத் தலைவர்
மாணவர் முன்னேற்ற கழகம்
எஸ்.வி.வி.வி. காம்ப்ளக்ஸ், பெரிய மிளகு பாறை,
திருச்சி – 1.


33. இரா. அதியமான், நிறுவனர்
ஆதித் தமிழர் பேரவை
அ-7, சக்தி அடுக்ககம், மாவீரர் நகர், வடவள்ளி,
கோவை – 641041.


34. வி.என்.ஆர். ரங்கநாதன், பொதுச்செயலாளர்
அகில இந்திய கட்டிட தொழிலாளர்
மத்திய சங்கம்
170, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி,
சென்னை – 600 005


35. என்.ஆர். தனபாலன், தலைவர்
தமிழ்நாடு நாடார் பேரவை
என்.ஆர்.டி. டவர்ஸ், 11, ஜவஹர்லால் நேரு சாலை
(100) அடி சாலை), அசோக் நகர்,
சென்னை -83.


36. கே. ராகவன், நிறுவனர் – தலைவர்,
தமிழ்நாடு பாரதீய குடியரசு கட்சி
2, துலுக்கானம் தெரு,
பேர்ணாம்பட்டு – 635810
குடியாத்தம் வட்டம்.

துபாயில் வேலூர் எம்.பி.க்கு வரவேற்பு - மணிச்சுடர் செய்தி

துபாயில் வேலூர் எம்.பி.க்கு வரவேற்பு - மணிச்சுடர் செய்தி


Tuesday, July 14, 2009

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்
10 –ம் ஆண்டு நினைவு நாள் 11-04-09

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை

தொகுப்பு – ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன்


எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை உழைப்பை – தொண்டூழீயத்தை – கருணையோடு அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் வாழ்வைக் கொடுத்தருள் !
-எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்


சிறகில்லாமல் பறந்து போன
சிராஜுல் மில்லத் செம்மலே !
அறிவொளி பரப்பும் மணிச்சுடராக
அன்பை வழங்கிய வள்ளலே !
கபருஸ்தானில் மறைந்தபோதிலும்
கல்புஸ்தானில் வாழுகிறார்.
காதர் மொகிதீன் தலைமையிலே – நம்
கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்
-நாகூர் சலீம்

தலைவரே !
உங்களின்
தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு
எங்கள் செவிகளில்
மரணித்துவிட வில்லை ….
எங்களின்
அரசியல் பயணம்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
ஆம்!
உங்களின் வழிகாட்டுதல்
மரணித்துவிட வில்லை…..
-கவிஞர் இஸட். ஜபருல்லாஹ்


வாழிய சிராஜுல் மில்லத் !
வாழிய அமீனுல் உம்மத்
வாழிய அப்துஸ் ஸமது
வல்லவன் அருளைக் கொண்டே
ஊழியம் செய்து (உ) வந்த
உன்னத நெஞ்சே வாழ்வில்
நாழிகை தோறும் செய்த
நன்மையுள் என்றும் வாழ்க !
-ஏம்பல் தஜம்முல் முஹம்மது


அன்புப் பெட்டகமே
அறிவுக் கருவூலமே
சிராஜுல் மில்லத்தே
நும் நினைவில்
எம் பயணம்
என்றும் தொடரும்
-வடக்குகோட்டார் வ.மு. செய்யது அஹமது



சோபனச் சுரங்கமே ! – எங்கள் சொப்பன அரங்கமே
சேமச் சிகரமே ! சிராஜுல் மில்லத்தே !
இன்றைய அரசியலுக்கு நேற்றைய வழிகாட்டியே !
உங்கள் புகழ் நாரின் பூக்களல்ல
நட்சத்திரப் பூக்கள் என்றும் உதிராதவை உயர்ந்தவை !
-தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்


பிழை சேரா நபிவழியைத் தொடர்ந்தவர் ! – என்றும்
பிறைக்கொடியைப் புகழ்க் கொடியாய்
தலைநிமிர வைத்தார்
கலைநோக்கு கவிதைத் திறன் –
சொல்லாற்றல் மிக்கவர் ! – அப்துஸ்
ஸமதெனும் சமுதாய விளக்கு ! – இஸ்லாம்
அமுதக் கொள்கைகளே அன்னாரின் இலக்கு !
-கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி



பல்வேறு சாதனைகள்
படைத்திட்ட சாதனையாளர் !
நல்லோர்கள் நாவினிலே
நாளும் வாழும் சிராஜுல் மில்லத்
-சீர்காழி இறையன்பன்



மதுப்புதுவை மாநிலத்தில்
பிறந்தபோதும்
மதுவிலக்கு கொள்கையிலே
பிடித்திருக்கும் !
எது புதுமை என்பதிலே
தெளிவிருக்கும்
என் தலைவரின் புகழென்றும்
நிலைத்திருக்கும் !
-கவிஞர் கிளியனூர் அஜீஸ்



என்னவென்று எழுத்தில் சொல்ல
எப்படிதான் அழுது சொல்ல
பொன்னுடலை அடக்கம் செய்தோம்
பொறுமையுடன் பிரார்த்திப்போம் நாம் !
-கவிஞர் இக்பால் ராஜா

Saturday, July 11, 2009

காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள்

காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள்

தொகுப்பு : ஆலிமான் R.M. ஜியாவுதீன்

தொன்மையும், இலக்கியச் செறிவும், இலக்கணப் பொலிவும் நிரம்பிய மொழி, நாடாண்ட மொழி தமிழ்தான் இந்தியப் பொது மொழியாக இருக்க வேண்டும் என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து அந்தத் தமிழ் மொழிதான் என் தாய் மொழி என்று அரசியல் நிர்ணய சபையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தவர் காயிதெ மில்லத்.

-சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத்


காயிதெ மில்லத் ஆழமான மத உணர்வுகளும், உறுதியான இறை நம்பிக்கையும் மிக்கவர். ஆனால் அவர் வகுப்புவாத உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. மத உணர்வுக்கும் – வகுப்புவாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அது வேறு இதுவேறு. தாம் சார்ந்துள்ள மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அதே நேரத்தில் அனைத்து மதங்களின் மக்களையும் அவர் மதித்தார் – நேசித்தார் – சகோதர உணர்வுடன் பழகினார்.

-ஜி.எம். பனாத்வாலா


உணர்ச்சிகளை தூண்டும் அரசியல்போக்குகள் சமுதாயத்துக்கு நன்மை பயக்காது. காயிதெ மில்லத் காட்டிய அமைதி வழியே வெல்லும் வழியாகும்.

-பேராசிரியர் கே.எம்.கே


சிறுபான்மை பிரிவுக்கு மட்டுமின்றி இந்து பெரும்பான்மை சமூகம் என்று மாறுபாடு இன்றி சகோதர வாஞ்சையுடன் அனைத்துத் தலைவர்களுடனும் அரவணைத்துச் சென்றவர் காயிதெ மில்லத்.

-கி.வீரமணி


அரசியல் நிர்ணய சபை தேசியமொழி குறித்து ஆய்வு செய்தபோது முன்னை பழமைக்கும் பின்னை புதுமைக்கும் இலக்கிய இலக்கணத்திற்கும் உட்பட்டு என்றும் மாறாத தமிழ் மொழியை பரிந்துரை செய்தவர் காயிதெ மில்லத்.

-இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்


காயிதெ மில்லத் என்பதற்கு முஸ்லிம்களின் வழிகாட்டி என்று பொருள். நான் அவரை அறிந்த வரை அவர் முஸ்லிம் களுக்கு மட்டும் வழிகாட்டி அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

-முன்னாள் சபாநாயகர் க. இராசாராம்


உலகத் தமிழ் மாநாட்டின் ஏழாம் நாள் கருத்தரங்கில் தமிழின் பொற்காலம் என்ற நிகழ்ச்சிக்கு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் தலைமையேற்று பேசும் போது…
வேறு மொழிகளைப் போல் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றிய மொழி தமிழ். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு பொற்காலம் தோன்றி விட்டது என்று தமிழ்மொழியின் பெருமையையும் தமிழ் இலக்கியச் சிறப்புக்களையும் எடுத்துரைத்தார்.

-பேராசிரியை சா.நசீமா பானு



காயிதெ மில்லத்தைப் பொறுத்த அளவில் அவருடைய தலைமை மும்முகப்புகளுடன் இலங்கியது. அவர் தலை சிறந்த தேசியவாதி – அதே சமயம் நல்ல தமிழர் – அது போலவே உண்மையான முஸ்லிம். பாகிஸ்தான் பிரிந்த பிறகு முஸ்லிம் லீகை இந்தியர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள். அத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை நெறிப்படுத்தி, இந்திய நீரோடையில் ஓர் அங்கமாக மாற்றிய பெருமை காயிதெ மில்லத்துக்கே உரியது. மதத்தால் முஸ்லிமாக இருந்தபோதிலும் உள்ளத்தால் இந்தியனாக வாழ வேண்டு மென்பதை வலியுறுத்தி வந்தவர் அவர்.

-’தினமணி’ தலையங்கத்திலிருந்து …..

Thursday, July 9, 2009

மேலும் வர வேண்டும்! தோளும் தர வேண்டும்! தத்துவக்கவிஞர் இ. பதுருத்தீன் ( 94442 72269 )

மேலும் வர வேண்டும்! தோளும் தர வேண்டும்! தத்துவக்கவிஞர் இ. பதுருத்தீன் ( 94442 72269 )

http://www.muslimleaguetn.com/news.asp?id=935

தாய்ச்சபை முஸ்லிம் லீக் குடிக்கக் குழாய் நீராகவும், குளிக்க குற்றால நீராகவும் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது.
அதன் தோற்றம் கண்ணியமானது!
அதன் ஏற்றம் புண்ணியமானது!

தேர்தல் எனும் தீப்பந்தத்தை அது ஏந்தியது -
ஊர் வெளிச்சம் பெறவே அன்றி, பெயர் வெளிச்சம் பெற அல்ல!

அதன் மனிதநேயம் - தேர்தலுக்காகத் தீர்மானிக்கப் பட்டதல்ல-எந்தத் தேடலுக்காகவும் திடப்பட்டதல்ல.
அது, கல் தடுக்கி விழாமல் கைத்தாங்கும்
காருண்ய நோக்குடையது!

எனவே, அதன் பயணம், நேற்றும் தொடர்ந்தது- இன்னும் தொடர்கிறது-நாளையும் தொடரும்
எவருக்காகவும் அது நிற்காது-எதற்காகவும் அது தயங்காது!

நட்சத்திரத்தைப் பிடுங்கி பிறையை நட்டுப் பார்த்தார்கள் சிலர்!
பிறை, நட்சத்திரம் இரண்டையும் பிழை செய்து, கறுப்பு - வெள்ளை எனக் கர்வத்துடன் பார்த்தார்கள் வேறு சிலர்!

இந்தக் கண்மூடித் தனங்கள் மண்மூடிப் போயின. மூன்றாவதாக முளைத்தவர்கள் பச்சை நிறத்தைக் கூடச் சேர்த்துக் கொடி கண்டார்கள்.
எனினும் பச்சிளம் பிறைக் கொடியின் நிழலைக்கூட இவர்கள் நெருங்க முடியவில்லை....

நாலூரில் நின்றவர்கள் நடுத் தெருவில் நிற்க - வேலூரில் நின்ற முஸ்லிம் லீக் வெற்றியூரில் இன்னும் உலா வந்து கொண்டிருக்கிறது!

புத்துணர்வோடு இன்றும் என்றும் சமுதாயப் பூந்தோட்டக் காவல்காரனாக முஸ்லிம் லீக் தன்னைப் புதுப்பித்தே வருகிறது!

நோன்பைப் பிடிக்கவும் விடுக்கவும் பிறையைப் பார்க்கும் சன்மார்க்கம்!
நன்மையைக் கொடுக்கவும் - தீமையைத் தடுக்கவும் இளம்பிறைக் கொடியையே பார்க்கிறது சமுதாயம்.

அரிசிகள் பல. அரசியல் கட்சிகளும் பல. எனினும் பிரியாணி விருந்துக்கென்றே ஓர் அரிசி இருப்பது போல - இருந்து சிறப்பது போல - அரசியல் இயக்க முஸ்லிம் லீகே சமுதாயப் பசிக்கு விருந்தாகவும் - மருந்தாகவும் இருந்து வருகிறது.

காரணம் - இது கண்ணியகு காயிதெ மில்லத்தின் கால்வழி வந்தது; சிராஜுல் மில்லத்தின் தோள் வழி வந்தது; முனீருல் மில்லத்தின் கண் வழி, விழிப்புணர்வு டன் விளங்கி வருவதே!

எடுபிடிக்கும், அடிதடிக்கும் இளைய சமுதாயத்தை அழைக்காத முஸ்லிம் லீக்-
கெடுபிடிக்கும் பழிவழிக்கும் உட்படுத்தாத முஸ்லிம் லீக் - கடைப்பிடிக்கும் ஒரே வழி கண்ணியமே!

புதிய இளைய தலைமுறையினர், தாய்ச்சபை லீகைத் தாங்கவும், அதன் நெறி ஓங்கவும் கைகோர்க்க மேலும் வர வேண்டும்; தோளும் தர வேண்டும்!

Wednesday, July 8, 2009

த‌மிழ‌க‌ அர‌சின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு :


த‌மிழ‌க‌ அர‌சின் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்ட முன்வடிவு :
மறுபரிசீலனை செய்ய முஸ்லிம் லீக்கின் த‌லைமையில் ச‌முதாய‌ அமைப்புக‌ள் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் திருமணங் கள் அனைத்தையும் கட்டா யமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் களின் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டுமென முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொண்டு முஸ்லிம் அமைப்புகள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

திருமணங்களை கட் டாயமாக பதிவு செய்வ தற்கு வழிவகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக முஸ்லிம்களிடையே எழுந் துள்ள அச்ச உணர்வை போக்கவும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு அதனை கொண்டு செல்ல வும் ஒருமித்த கருத்தை பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் 7-7-09 செவ்வாய் மாலை 5.30 மணிக்கு சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள ஹோட்டல் பிரசி டெண்டில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் ஏற்பாட்டில் நடை பெற்ற இக் கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் ஆம்பூர் எச். அப்துல் பாஸித், சட்ட மன்ற முன்னாள் இந்திய தேசிய லீக் உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், மாநில பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், அணிகளின் அமைப்பா ளர்கள் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், என். ஹாமித் பக்ரீ, கே.எம். நிஜாமுத்தீன், மில்லத் இஸ்மாயில், தமிழ் நாடு வக்ஃபு வாரிய உறுப் பினரும், தமிழ்நாடு மாநில தேசிய லீக் பொதுச் செயலாளருமான திருப்பூர் அல்தாப், த.மு.மு.க. மாநிலச் செயலாளர் ஏ.எஸ். முஹம்மது ஜுனைது, த.மு.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் பி.எல்.எம். யாசின்,

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொறுப்பாளர் அப்போலோ முஹம்மது ஹனீபா, சென்னை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினருமான எம். முஹம்மது சிக்கந்தர், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலாளர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச. உமர் பாருக், ஐக்கிய சமாதான அறக்கட்டளை பொறுப்பாளர் சி. அபூபக்கர் சித்திக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை செய்தித் தொடர்பாளர் கே.எம். இல்யாஸ் ரியாஜி, சுன்னத் ஜமாஅத் ஆன்மீக பேரவை தலைவர் தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, ஜமாஅத்தெ இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் எஸ். என். சிக்கந்தர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர், தமிழக சட்டமன்ற முன்னாள் இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம். நாகூர் மீரான், பேராசிரியர் டாக்டர் சையத் ரபீக் அஹமது, பேராசிரியர் ஆர்.என். இக்பால் அஹமது ஆகியோர் கருத்துக்களை வழங்கினர்.

இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு-

தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களை யும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.

தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப்பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.

நடைபெற்ற நாடாளு மன்ற தேர்தல் அறிக்கை யில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த தி.மு.க. பாடுபடும் என்று டாக்டர் கலைஞர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரி சீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம் களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து பின் னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக வட சென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் என். ஜெய்னுல் ஆபிதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மவ்லவி ஹாமித் பக்ரீ இறைமறை ஓதினார்.

இக் கூட்டத்தில் மாநில முஸ்லிம் லீக் விவசாய அணி துணை அமைப் பாளர் திருச்சி வி.எம். பாரூக், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, செயலாளர் ப+வை எம்.எஸ். முஸ்தபா, வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் ஏ.எச். இஸ்மாயில், மாநில முஸ்லிம் லீக் கல்வி மேம் பாட்டு துணை அமைப் பாளர் ஏ. ஷேக் மதார், யு. முஹம்மது சலீம் சித்தீக், கே.எம். ஹசன் சேக், வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. எம். ரஃபி, பூவை காதர், டி.எம்.கே. ஹாஜா நஜ் முத்தீன், திருவான்மியூர் காஜா, சுன்னத் ஐக்கிய ஜமாஅத் பேரவை கிருஷ் ணாம்பேட்டை கிளை செயலாளர் எம்.ஏ. முஹம் மது இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹ், ஜமாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மவ்லவி சலீம் சிராஜி துஆ ஓதினார்.

Sunday, July 5, 2009

Railway Budget 2009



Railway Minister Mamata Banerjee alongwith MoS for Railways (L-R) E.Ahammed and K.H.Muniappa on her way to present the Railway Budget in New Delhi on Friday. Photo: R.V. Moorthy
JULY 2009

முஜாஹிதேமில்லத் – நினைவுகள்

முஜாஹிதேமில்லத் – நினைவுகள்
( திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர் )
இன்று
ஜுன் இருபத்தைந்து
இதே நாளில்தான்
ஒரு மாமனிதர்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்
என்று நான் சொல்லமாட்டேன் !
அவர்
தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் !


கடைசி தருணத்தில்
அவர் உயிருக்காக போராடினார்
என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் !
“அவர் கடைசி மரணம் வரை
உரிமைக்காக போராடினார்”
“மக்களின்
உரிமைக்காக போராடினார்”
என்று மனிதத்துவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள் !


ஆம்
குலாம் மஹ்மூத் பனாத்வாலா
மூமின் எனப் பொருள்படும்
”மேமன்” சமூகத்துப் போராளி
மூமின்களுக்காக பாடுபட்டார் !
ஆகஸ்ட் பதினைந்தில்
(ஆயிரத்து தொள்ளாயிரத்து
முப்பத்து மூன்றில்) பிறந்த அவர்
முழு இந்திய மக்களின்
உரிமைக்காகவும் பாடுபட்டார் !


இளமைப்பருவத்தில்
சமூக சேவை செய்தது
அவரின் வழமையாகும் !
இந்த இனியமாமனிதர்
படித்த படிப்பு வணிகமாகும் !

ஆசிரியர் பேராசிரியர்
என அரும்பணி செய்தார் !
முஸ்லிம் லீக்கில் இணைந்து
நாட்டுக்கு
பெரும்பணி செய்தார் !

சொந்த தொகுதியில்
மந்திரிகள் கூட
அடுத்த தடவை வென்றதில்லை !

இந்த மனிதர்
வந்த தொகுதியில்
அடுத்தடுத்து ஏழுதடவையும்
தோற்றதில்லை !

மலையாளம்
தெரியா விட்டாலும்
தங்களின் தொகுதியின்
அடையாளமாக
அவரையே தேர்ந்தெடுத்தனர் !

பொன்னானி மக்கள்
அவருக்கே தங்கள்
பொன்னான வாக்குகளை
கொடுத்தனர் !

கேள்வியே கேட்காமல்
உங்கள் எம்பி
இருந்தார் என்று
நீங்கள் சொல்லலாம் !
எப்போது
இவர் கேள்வி கேட்காமல் இருந்தார்
என்று இவரைப் பற்றி நீங்கள் கேட்கலாம் !


அவரை நான்
பார்த்ததில்லை !
படித்திருக்கிறேன் !
அவர் பேசக் கேட்டதில்லை
அவரைப் பற்றி
பேசியதை கேட்டிருக்கிறேன் !

சிராஜுல் மில்லதின்
மணிச்சுடர் எனக்கு
முஜாஹிதே மில்லதை
அறிமுகப்படுத்தியது !

காயிதே மில்லதின்
வழிவந்த அவரின் கருத்துக்கள்
என்னை ஒருமுகப்படுத்தியது !

இந்திய முஸ்லிமாகிய
நாம்
இந்த மாமனிதரை
தெரிந்திருக்க வேண்டும் !


ஆம்
பனாத்வாலாவை
அறிந்திருக்க வேண்டும் !


சிறுபான்மையான
இந்த சமூகம்
நாட்டிற்கு தன்னை
பெரும்பான்மையாக
தியாகம் செய்திருக்கிறது !

எனினும் – நாடு
முன்னேற்றத்தின் போது
முஸ்லிம்
சமூகம் பின்தள்ளப்பட்டது !
புள்ளி விபரங்களோடு
பார்லிமெண்டில் – இவர்
எடுத்து வைத்தார்


நாற்பத்தேழிற்கு
பின் எவ்வளவோ
சோதனை
எனினும்
எண்பத்து ஐந்தில்
பெரும் சோதனை !


அப்போதுதான்
மலர்ந்தது
பனாத்வாலாவின் சாதனை !
ஆம்
ஷரீஅத் சட்டத்தை
சங்பரிவார்கள் எதிர்த்தார்கள்

பொது சிவில்
சட்டம் வேண்டும் என்று
குதித்தார்கள் !


இன்று
ஜஹீரா ஷேக்குகளுக்காக
கவலைப் படாதவர்கள் !
அன்று
ஷாபானுக்களுக்காக
கதறினார்கள் !


ஒரு
ஜீவன் கொலை செய்யப்படும் போது
சிரிப்பவர்கள்
ஒரு பெண்ணுக்கு
ஜீவனாம்சம் வேண்டுமென்றார்கள் !

சந்திர சூட்கள்
ஷரீஅத்தை தெரியாமல்
இருந்தது தவறல்ல !
ஆரிப் முகமதுகான்கள்
ஷரீஅத்தை அறியாமல்
இருந்ததே தவறாகும் !

மாற்றுக் கட்சிகளில்
முஸ்லிம்கள் என காட்டப்பட்டவர்கள்
தங்களை
முஸ்லிம்கள் என முகம் காட்டவே
மறுத்தார்கள் !



ஷரீஅத்தை எதிர்த்தார்கள் !
இஷ்டப்பட்டால்
மாற்றுவது மனிதச்சட்டம் !
மாற்ற முடியாதது
புனித ஷரீஅத் சட்டம் !

அரசனிடம்
நீதியை எடுத்து சொல்லுவது
ஜிஹாதாகும் !
ஆம்
நீதிமிக்க ஷரீஅத் சட்டத்தை
அன்று அரசிடம்
விளக்கியது பனாத்வாலா
என்ற முஜாஹிதாகும்


அல்லாஹ்வின் வேதம்
நபி மொழி நின்று
ஷரீஅத் சட்டத்தை – பார்லிமெண்டில்
விளக்கினார்

ஆம்
பொது சிவில் சட்டம்
அமுலாவதை பனாத்வாலா
விலக்கினார் !


அவரைப் பற்றி
கூற நிறைய இருக்கிறது !
கூற
நேரம் குறையதான் இருக்கிறது !
பனாத்வாலாவை
அனைவருக்கும்
அறிமுகப்படுத்துங்கள் !

பாரதத்தில்
முஸ்லிம் லீக்கில்
அனைவரையும்
ஒருமுகப்படுத்துங்கள் !

( துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை நடத்திய முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் நினைவு தினத்தில் வாசிக்கப்பட்ட கவிதை )

திருச்சி ஏ முஹம்மது அபுதாஹிர்
050 4760775
thahiruae@gmail.com

Thursday, July 2, 2009

“Non-Resident Tamils (NRT)

From: Abdul Salam Mohamed Ansari (ADMA DD)
Subject: FW: ABU DHABI - 13/06/2009
To: "'rahmanexec@yahoo.com'" <'rahmanexec@yahoo.com'>
Cc: "'avai.ansari@ymail.com'"
Date: Tuesday, June 16, 2009, 8:30 AM


Dear Br. Janab M. Abdul Rahman MP,

It was a great memorable day in my life (13/06/2009). I wanted to speak some words at the stage but due to time limit, I could not able to do it . It is OK- There is no words to express my inner feelings about yourself even I’m not very close to you… GOD is Great ! Alhamdullilah!!

Brother, I kindly request your consideration on the following two important issues. The first one is related to NRI- Tamils and the other to expose and expand our IUML party …. The request are as follows:

a) To initiate and form an organization for our expatriate tamilians as “Non-Resident Tamils (NRT) similar to our neighbour state (Kerala) Non-Resident Karalites (NRK)

b) Expand IUML to all the areas through more charity and social works which should start from villages in order to strengthen the party. Also through giving the clear explanation on our rights/ commitments to the current and for the further generation in all areas.

Inshah Allah, I will do support and work with you to achieve our goal !. (I do pay Allah to show the perfect way …Ameen)

Regards,
A.S. Mohamd Ansari
Abu Dhabi
Mobile: + 971-50-5463510
Email: mansari@adma.ae