இளைஞர் பட்டாளத்தில் இன்றைய முஸ்லிம் லீக்!!!
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.
முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் மாற்றுகட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் சமுதாயப் பிரச்சினைகளை பேச முடியாது,முஸ்லிம் லீக் என்ற பெயரைக் கேட்டாலே அடிவயிற்றில் புளி கரையும் அளவிற்க்கு நடுங்கக்கூடியவர்கள் பரப்பி வந்த விஷம் இது.
இன்றைய நிலை என்ன என்பதை நாடே அறிந்து ஆச்சரியப்படுகிறது!
பதவியேற்று நடைபெறும் முதல் பாறாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே பட்டவர்த்தனமாக பேசி சமுதாயத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும்,அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம் .அப்துல் ரஹ்மான் என்பது வெளி உலகிற்க்கு வெளிச்சமாக தெரிந்து விட்டது.
இவர் என்ன பேசினார்?
*இந்திய இஸ்லாமியர்களின் அவல நிலை நீங்கி,உயர்வடைய அகில அளவிலும் உள்ள இட ஒதுக்கீடு தேவை!
*வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறை தேவை!
*கல்வி ,பொருளாதாரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏற்றம் தேவை!
இவ்வாறாக அடுக்கடுக்கான வாதங்களை பாறாளுமன்றத்தில் மிடுக்காக பேசியது மட்டுமில்லாமல்,தான் ஒரு முஸ்லிம் லீகன் என்பதையும் பதிய வைத்திருக்கின்றார்.
இந்திய வரலாற்றிலேயே இஸ்லாமிய வங்கி முறை தேவை என்ற முழக்கத்தை பாராளு மன்றத்தில் ஒளித்த பெருமை முஸ்லிம் லீகைத் தவிர வேறு எந்த இயக்கத்திற்க்கும் கிடையாது!
ஓரு வேளை ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்பு இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவினால் அதன் நன்மையும்,சரித்திர பெருமையும் முஸ்லிம் லீகிற்க்குத்தான் என்பதை இங்கு ஆணித்தரமாக பதிய வைக்கிறோம்.
இட ஒதுக்கீடு விஷயத்திலும் இதுதானே நடந்தது?
அகில இந்துய அளவில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் பொழுது அந்த பெருமையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்க்குத்தான் என்பதை திடமாக எதிர்கால சமுதாயத்திற்க்கு திட்டவட்டமாக சொல்லி வைப்போம்!!
இவர் இப்படி என்றால்,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராக ,மத்திய அமைச்சராக வலம் வரும் பெரந்தலைவர் இ.அஹ்மது அவர்களின் சாதனையை இன்று இந்திய இஸ்லாமிய சமுதாயம் அனுபவிக்கத்தொடங்கியிருக்கிறது.
*இரயில்வே துறையில் இஸ்லாமியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்!
*மத்ரஸா மாணவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் இரயில் பயணம்!
இதுவும் இந்திய வரலாற்றில் முஸ்லிம் லீகால் ஏற்படுத்தப்பட்டதுதான்!
உலகம் உள்ளவரை இது போன்ற காரியங்களை முஸ்லிம் லீகால் மட்டும்தான் செய்ய முடியும் என்பதைசமுதாயம் உணரத் தொடங்கியிருக்கிறது,அதனாலேயேத்தான் இளைஞர்கள் பட்டாளமும் முஸ்லிம் லீகை நோக்கி படையெடுக்க துவங்கியிருக்கிறது.
ஆம்!முஸ்லிம் லீக் வரலாற்றில் முதன் முறையாக இளைய தலைமுறைக்கு பொதுச் செயளாலர் பொருப்பு! இதை ஏற்றிருக்கும் இளவல் கே.ஏ.எம்.அபுபக்கர் இயற்க்கையாகவே சமுதாய தொண்டுள்ளம் கொண்ட நல்லுள்ளம் உடையவர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் இளைய தலைமுறையினர் என்ற பரிணாமத்தை கண்டு இஸ்லாமிய சமுதாயம் ஆச்சிரியத்தோடு முஸ்லிம் லீகை நோக்குகிறது!
இனிய இஸ்லாமிய இளவல்களே!
தூரமாக நின்று பார்க்காதீர்கள்,அருகில் வந்து அணி சேருங்கள்,தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றுக் கோண்டிருக்கும் மாவட்ட முஸ்லிம் லீக் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்துக் கொள்ளுங்கள்!
கடல் கடந்து வாழும் இளைஞர்களே!
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம்,சவூதி அரேபியா,குவைத்,ஹாங்காங்,அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வாழும் இளவல்கள் அங்கு இயங்கி வரும் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற காயிதே மில்லத் பேரவையினருடன் தொடர்பு கொண்டு,தய்ச் சபையை வலுப்படுத்த தயாரகுங்கள்!
இதுவரை உங்கள் வசூலை மகசூலாக பார்த்தவர்கள் செய்த காரியங்களை கடந்த தேர்தலில் தெளிவாக கண்டுகொண்டீர்கள்,
இனி நீங்கள் தெளிவடைய வரலாற்றுப் பேரியக்கம் அழைக்கிறது அணி திரள்வீர்!
முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வலிமையான தலமையில் வளமான சமுதாயம் காண சபதமேற்ப்போம் வாரீர்!!!
lalpetrahman@gmail.com