Showing posts with label ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது. Show all posts
Showing posts with label ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது. Show all posts

Tuesday, July 14, 2009

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்

சிராஜுல் மில்லத் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமது சாஹிப்
10 –ம் ஆண்டு நினைவு நாள் 11-04-09

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை

தொகுப்பு – ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன்


எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை உழைப்பை – தொண்டூழீயத்தை – கருணையோடு அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப் பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் வாழ்வைக் கொடுத்தருள் !
-எழுத்தரசு ஏ.எம்.ஹனீப்


சிறகில்லாமல் பறந்து போன
சிராஜுல் மில்லத் செம்மலே !
அறிவொளி பரப்பும் மணிச்சுடராக
அன்பை வழங்கிய வள்ளலே !
கபருஸ்தானில் மறைந்தபோதிலும்
கல்புஸ்தானில் வாழுகிறார்.
காதர் மொகிதீன் தலைமையிலே – நம்
கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்
-நாகூர் சலீம்

தலைவரே !
உங்களின்
தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு
எங்கள் செவிகளில்
மரணித்துவிட வில்லை ….
எங்களின்
அரசியல் பயணம்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
ஆம்!
உங்களின் வழிகாட்டுதல்
மரணித்துவிட வில்லை…..
-கவிஞர் இஸட். ஜபருல்லாஹ்


வாழிய சிராஜுல் மில்லத் !
வாழிய அமீனுல் உம்மத்
வாழிய அப்துஸ் ஸமது
வல்லவன் அருளைக் கொண்டே
ஊழியம் செய்து (உ) வந்த
உன்னத நெஞ்சே வாழ்வில்
நாழிகை தோறும் செய்த
நன்மையுள் என்றும் வாழ்க !
-ஏம்பல் தஜம்முல் முஹம்மது


அன்புப் பெட்டகமே
அறிவுக் கருவூலமே
சிராஜுல் மில்லத்தே
நும் நினைவில்
எம் பயணம்
என்றும் தொடரும்
-வடக்குகோட்டார் வ.மு. செய்யது அஹமது



சோபனச் சுரங்கமே ! – எங்கள் சொப்பன அரங்கமே
சேமச் சிகரமே ! சிராஜுல் மில்லத்தே !
இன்றைய அரசியலுக்கு நேற்றைய வழிகாட்டியே !
உங்கள் புகழ் நாரின் பூக்களல்ல
நட்சத்திரப் பூக்கள் என்றும் உதிராதவை உயர்ந்தவை !
-தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்


பிழை சேரா நபிவழியைத் தொடர்ந்தவர் ! – என்றும்
பிறைக்கொடியைப் புகழ்க் கொடியாய்
தலைநிமிர வைத்தார்
கலைநோக்கு கவிதைத் திறன் –
சொல்லாற்றல் மிக்கவர் ! – அப்துஸ்
ஸமதெனும் சமுதாய விளக்கு ! – இஸ்லாம்
அமுதக் கொள்கைகளே அன்னாரின் இலக்கு !
-கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி



பல்வேறு சாதனைகள்
படைத்திட்ட சாதனையாளர் !
நல்லோர்கள் நாவினிலே
நாளும் வாழும் சிராஜுல் மில்லத்
-சீர்காழி இறையன்பன்



மதுப்புதுவை மாநிலத்தில்
பிறந்தபோதும்
மதுவிலக்கு கொள்கையிலே
பிடித்திருக்கும் !
எது புதுமை என்பதிலே
தெளிவிருக்கும்
என் தலைவரின் புகழென்றும்
நிலைத்திருக்கும் !
-கவிஞர் கிளியனூர் அஜீஸ்



என்னவென்று எழுத்தில் சொல்ல
எப்படிதான் அழுது சொல்ல
பொன்னுடலை அடக்கம் செய்தோம்
பொறுமையுடன் பிரார்த்திப்போம் நாம் !
-கவிஞர் இக்பால் ராஜா