Wednesday, December 31, 2008

காயல்பட்டணத்தில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்!

காயல்பட்டணத்தில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்!

http://www.muslimleaguetn.com/news.asp

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழுக் கூட்டம், 27.12.2008 சனிக்கிழமை காலை 11 மணியளவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெற்றது.

துவக்கமாக மவ்லவீ தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் கிராஅத் ஓதினார்.

காயல்பட்டணத்தைச் சார்ந்த ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், நஹ்வி எம்.எம்.முத்துவாப்பா ஆகியோர் அரபி கீதம் பாடினர்.

தொடர்ந்து தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார். உரையின் துவக்கமாக, அண்மையில் மறைந்த முஸ்லிம் லீக் முக்கியஸ்தர்களின் பிழைபொறுப்புக்காக துஆ ஓதப்பட்டது. தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் துஆ ஓதினார்.

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

அரசியல் தீர்மானம் 1 - மும்பை தாக்குதல்:-
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோழைத்தனமான இந்த தாக்குதலில் அநியாயமாக 184 பேர் உயிரிழந்தனர். இவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை உணர்த்துகிறோம்.

உயிரிழந்தவர்களில் 44 பேர் முஸ்லிம்கள் என்பதிலிருந்து தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசக்கூடாது என்ற உண்மை நிரூபணமாகியுள்ளது.

மும்பை சம்பவம் இந்திய மக்களை ஒன்றுபடச் செய்துள்ளது. இது தீவிரவாதிகளுக்கு கிடைத்த மாபெரும் தோல்வி.

தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்களனைவரும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தனது வேண்டுகோளை வெளிப்படுத்துகிறது.

தீர்மானம் 2 - மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - ஹேமந்த் கர்கரே மரணம்:-
நாட்டில் எங்கே வெடிகுண்டு சம்பவங்கள் நடந்தாலும், அவற்றுக்கெல்லாம் முஸ்லிம்களே காரணம் என பிரச்சாரம் செய்யப்பட்டது.

மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள், டெல்லி ஜாமிஆ நகர் போலி என்கவுண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லிம்களின் மனவருத்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையைக் கண்டறிய நேர்மையான – முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் வைக்கப்பட்டது.

அதன் தேசிய தலைவர் மாண்புமிகு இ.அஹமது, தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாக காந்தியை சந்தித்து முறையிட்டனர். பாரதப் பிரதமரிடம் இதுபற்றி பேசி, உடனடி நடவடிக்கை எடுப்பதாக Nசுhனியாவும் உறுதியளித்தார்.

இதன்பின், மராட்டிய மாநில தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே தலைமையில் முறையான விசாரணை நடைபெற்றது.

மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாத்வி பிரக்யாசிங் தாகூர் என்ற இந்து பெண் துறவி, தயானந்த பாண்டே என்ற மடாதிபதி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும்,

அபிநவ் பாரத், பஜ்ரங்தள், வி.எச்.பி. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும், உபாத்யாயா போன்ற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும், ஸ்ரீகாந்த பிரசாத் புரோகித் போன்ற ராணுவ லெப்டினெண்ட் கர்னல்களும் கைது செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கும், தலைமை அதிகாரி கர்கரே-க்கும் கொலை மிரட்டல் வந்தது.

மலேகான் குண்டுவெடிப்பு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்த நிலையில், மும்பை தீவிரவாத சம்பவத்தில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.

அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்தியர்கள் அனைவரின் இதயங்களில் இடம்பெற்றுவிட்ட அவரது தியாகத்தைப் போற்றிப் புகழ்கிறோம். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துகிறோம்.

ஹேமந்த் கர்கரே மரணத்தோடு மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை கிடப்பிற்கு போய்விடக் கூடாது. தகுதியானவர்கள் கர்கரேயின் வழியைப் பின்தொடர்ந்து, விசாரணையை முடுக்கிவிட்டு, அதிலுள்ள முழு உண்மைகளையும் அம்பலப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். அநியாயமாக ஒரு சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 - தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு:-
நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியம்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட, பல்வேறு இயக்கங்கள் அரசுக்குக் கோரிக்கை எழுப்பி வந்துள்ளன.

அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்@ அதற்கு முன்னோட்டமாக புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது@ மதுக்கடைகளின் விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என அறிவிப்புச் செய்துள்ளார். இதனை இப்பொதுக்குழு வரவேற்று, முதல்வர் கலைஞர் அவர்களைப் பாராட்டுவதோடு ஆட்சேபனைக்குரிய வகையில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவிடவும் வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் 4 - திருமங்கலம் இடைத்தேர்தல்:-
நடைபெறவுள்ள திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டாக்டர் கலைஞர் தலைமையிலான நல்லாட்சி, அனைத்து தரப்பு மக்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற அரசாக உள்ளது.

இந்த நல்ல சேவைகளுக்கு நற்சான்று தருகின்ற வகையில் அமையப் போகின்ற திருமங்கலம் இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தரும் என்ற நம்பிக்கை உண்டு.

இத்தேர்தலில் திரு.மு.க.அழகிரி தலைமையிலான தேர்தல் பணிக்குழுவின் வழிகாட்டுதலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பணி செய்ய இப்பொதுக்குழு வேண்டுகிறது.

இயக்கத் தீர்மானம் 5 - முஸ்லிம் லீக் மாநாடுகள்:-
இந்திய முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தந்த மாநிலங்களில் முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநாடுகள் நடைபெறுகின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய மாநாடு உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 2009 பிப்ரவரி 21,22இல் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் பங்கேற்க வேண்டும். இதற்காக தனி ரயில் ஏற்பாடு செய்யப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் அனைத்தும் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று மண்டல மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்மண்டல மாநாடு ராமநாதபுரத்தில் ஜனவரி 24ஆம் தேதியும், மத்திய மண்டல மாநாடு தஞ்சாவூரில் பிப்ரவரி 14ஆம் தேதியும், வடமண்டல மாநாடு மார்ச் 14இல் வேலூரிலும் நடைபெறுகிறது.

இந்த மண்டல மாநாடுகள் பற்றி அனைத்து ஜமாஅத் மற்றும் ஊர்களிலும் பிரச்சாரம் செய்ய எல்லா ஊர்களிலும் முஸ்லிம் லீக் கிளைகளை அமைக்க வேண்டும்.

இஸ்லாத்தின் சிறப்புகளில் ஒன்றான மஹல்லா ஜமாஅத் கண்ணியத்தைக் காப்பாற்றவும், அதன் ஒற்றுமையைப் பேணவும், உரிமைகளை நிலைநாட்டவும் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மஹல்லாக்களும், பள்ளிவாசல் இமாம்களும், முத்தவல்லிகளும், அறக்கட்டளை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளும் பங்கேற்கின்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டை, வரும் ஜனவரி 31ஆம் தேதி தலைநகர் சென்னையில் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அனைத்து மஹல்லாக்களும், முத்தவல்லிகளும், இமாம்களும் பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அனைத்து மாவட்ட பிரைமரி அமைப்புகளையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5 - வக்ஃப் வாரியத் தலைமை:-
தமிழ்நாட்டிலுள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள்.

இந்த கொள்கை மற்றும் நடைமுறைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமைப் பொறுப்பில் இருப்பதால், ஜமாஅத் மற்றும் பள்ளிகளில் தேவையற்ற குழப்பங்களும், வீண் பிரச்சினைகளும் ஏற்படுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்தப் போக்கு மாறவில்லையெனில், வக்ஃப் வாரிய தலைவர் பதவியிலிருந்து தற்போதைய தலைவரை மாற்றக் கோரி முஸ்லிம் லீக் போராட்டத்தில் இறங்கும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் 6 - காயிதெ மில்லத் பேரவை:-
கடல் கடந்த நாடுகளில் வாழும் இந்திய முஸ்லிம்களை ஒருங்கிணைத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த, இந்திய முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் காயிதெ மில்லத் பேரவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் காயிதெ மில்லத் பேரவை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தற்போது சவூதி அரேபியாவில் அமைக்கப்பட்டுள்ளது. பேங்காக், கத்தார், குவைத் நாடுகளில் அமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை எல்லா நாடுகளிலும் அமைக்கவும், அந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், அவற்றின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு முற்றிலும் கட்டுப்பட்ட அமைப்பாக இதைச் செயல்படச் செய்யும் காயிதெ மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவாக அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகமும், அந்தக் குழுவின் தலைவராக முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் அவர்களும் செயல்பட இப்பொதுக்குழு அங்கீகாரமளிக்கிறது.

இயக்க தீர்மானம் 7:-
ஒன்றாக இருந்த கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு, புதிய திருப்பூர் மாவட்டத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, ஒன்றாக இருந்த கோவை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கோவை, திருப்பூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திற்கு திருப்பூர் பி.எஸ்.ஹம்ஸா அவர்களும், கோவை மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையம் முகம்மது குட்டி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டும், கோவை நகரத்தில் உள்ள மாவட்ட முஸ்லிம் லீக் கட்டிடத்தை இரு மாவட்டங்களும் பிரித்துக் கொள்வதென்றும் 24.12.2008 அன்று நடைபெற்ற கோவை மாவட்ட செயற்குழு எடுத்த முடிவை இப்பொதுக்குழு அங்கீகரிக்கிறது.

தீர்மானம் 8 - கிழக்கு கடற்கரை சாலை:-
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், தொலைதூரத்திலுள்ள இப்பகுதி மக்களின் நலனுக்காகவும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே வாக்களித்த ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை காயல்பட்டணம் கடற்கரை வழியிலான கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தர இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9 - புதிய ரயில்பாதை திட்டம்:-
கன்னியாகுமரி - தூத்துக்குடியை கடற்கரை மார்க்கமாக இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை திட்டத்தை அமைத்துத் தருமாறு மத்திய ரயில்வே அமைச்சகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tuesday, December 30, 2008

தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்!



தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்!


கடந்த 27-12-08 அன்று காயல்பட்டணம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு தீர்மானங்கள்:

1. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை கிடப்பிற்கு போய்விடாமல் தொடர்ந்து விசாரணை நடத்திட வேண்டும். மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதில் உயிரிழந்தவர்களில் 44 பேர் முஸ்லிம்கள். எனவே தீவிரவாதத்திற்கு மதச் சாயம் பூசக் கூடாது.

2. நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்திட வேண்டும்.

3. திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க.விற்காக தேர்தல் பணியாற்றுவது

4. ஜமாஅத் மற்றும் பள்ளிகளில் தேவையற்ற குழப்பங்கள் முற்றும் வீண் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே வக்பு வாரிய தலைவர் பதவியிலிருந்து தற்போதைய தலைவரை மாற்றக் கோரி முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவது

5. ராமேசுவரம்-கன்னியாக் குமரி வரை போடப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையை காயல்பட்டணம் வழியாக போட தமிழக அரசை வற்புறுத்துவது.

இக் கூட்டத்தில் அப்துல்பாசித் வாணியம்பாடி எம்.எல்.ஏ.,கலிலுற்றஹ்மான்-அரவக்
குறிச்சி எம்.எல்.ஏ., பொருளாளர் வடக்குக்கோட்டையார், மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.ஏம்அபுபக்கர், கமுதி பஷர், நெல்லை மஜித்,அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அப்துற் றஹ்மான்,பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, செயலாளர் ஏ.முஹம்மது தாஹா, அமெரிக்க காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் முஹமம்து நூர்தீன் உட்பட 483 பொதுக் குழு உறுப்பினர்கள் உட்பட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

http://www.kayalpatnam.in/index.php?option=com_content&view=article&id=419:2008-12-28-131951&catid=1:latest-news&Itemid=246

Thursday, December 25, 2008

துபாயில் காயிதெமில்ல‌த் பேர‌வை நிர்வாகிக‌ள் கூட்ட‌ம்

துபாயில் காயிதெமில்ல‌த் பேர‌வை நிர்வாகிக‌ள் கூட்ட‌ம்

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை (http://quaidemillathforumuae.blogspot.com ) நிர்வாகிக‌ள் கூட்ட‌ம் துபாய் தேரா த‌மிழ் உண‌(ர்)வ‌க‌த்தில் அமைய‌ப்பெற்ற‌ காயிதெமில்ல‌த் அர‌ங்கில் ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

கூட்ட‌த்திற்கு அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேரவை த‌லைவ‌ர் எம்.அப்துல் ர‌ஹ்மான் த‌லைமை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

பேர‌வை த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் க‌ட‌ந்த‌ தியாக‌த் திருநாளையொட்டி ரியாத் காயிதெமில்ல‌த் பேர‌வை ஏற்பாடு செய்திருந்த‌ நிக‌ழ்ச்சியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அகில‌ இந்திய‌ பொதுச்செய‌லாள‌ராக‌ பொறுப்பேற்ற‌ பின்ன‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி. அவ‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ முத‌ல் வெளிநாட்டு நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். ரியாத்தில் காயிதெமில்ல‌த் பேரவையின‌ர் மிக‌வும் ஆர்வ‌த்துட‌ன் ஏற்பாடு செய்திருந்த‌ நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌ப் பெரும‌க்க‌ள் ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்திருந்த‌ன‌ர். த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ம‌ட்டும‌ல்லாது கேர‌ள‌ மாநில‌ ச‌கோத‌ர‌ர்க‌ளும் பேராசிரிய‌ரின் வ‌ருகையினையொட்டி ப‌ல்வேறு சிற‌ப்பு நிக‌ழ்ச்சிக‌ளுக்கு ஏற்பாடு செய்திருந்த‌ன‌ர்.

ச‌வுதிக்கான‌ இந்திய‌ தூத‌ர் எம்.ஓ.எச். ஃபாரூக் ம‌ரைக்காய‌ர் அவ‌ர்க‌ளை ச‌ந்தித்து உரையாடிய‌து, தொழிலாள‌ர் முகாம்க‌ளுக்குச் சென்று உத‌விப்பொருட்க‌ள் வ‌ழ‌ங்கிய‌து, ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ ம‌க்க‌ளைச் ச‌ந்தித்த‌து உள்ளிட்ட‌ நிக‌ழ்வுக‌ளை விவ‌ரித்தார்.

மேலும் காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் ந‌டைபெறும் பொதுக்குழு குறித்தும், அதில் முஸ்லிம் லீக் வ‌ர‌லாற்று நூல் வெளியிட‌ப்ப‌ட இருப்ப‌து, ம‌ண்ட‌ல‌ மாநாடுக‌ள் குறித்தும் எடுத்துரைத்தார்.

ராம‌நாத‌புர‌த்தில் ந‌டைபெற்ற‌ முஸ்லிம் லீக் செய‌ற்குழுவில் ப‌ங்கேற்ற‌ ஹிதாய‌த்துல்லா அந்நிகழ்வு குறித்தும் ராம‌நாத‌புர‌த்தில் ம‌ண்ட‌ல‌ மாநாடு ந‌டைபெற‌ இருப்ப‌து குறித்தும் விவ‌ரித்தார்.

கூட்ட‌த்தில் செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி, கோட்ட‌க்குப்ப‌ம் ர‌ஹ்ம‌த்துல்லா, ஹ‌மீதுர் ர‌ஹ்மான், ஹ‌ம்சா உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாற்று நூல் வெளியீடு

காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாற்று நூல் வெளியீடு

தூத்துக்குடி மாவ‌ட்ட‌ம் காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் டிச‌ம்ப‌ர் 27 ஆம் தேதி ந‌டைபெற‌ இருக்கும் முஸ்லிம் லீக் பொதுக்குழுவினையொட்டி முஸ்லிம் லீக் மாநில‌ துணைத்த‌லைவ‌ர் எழுத்த‌ர‌சு ஏ. எம். ஹனீஃப் சாஹிப் அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ முஸ்லிம் லீக் வ‌ர‌லாறு முத‌ற்பாக‌ம் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌த்தின் சார்பில் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கும் இந்நூலினை இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அகில‌ இந்திய‌ பொதுச்செய‌லாள‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி., அவ‌ர்க‌ளாள் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

முத‌ல் பிர‌தியினை இல‌ங்கையின் துறைமுக‌ம் ம‌ற்றும் க‌ப்ப‌ல் போக்குவ‌ர‌த்து துறை முன்னாள் அமைச்ச‌ரும், இல‌ங்கை முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ருமான‌ ர‌வூஃப் ஹ‌க்கிம் பெற‌ இருக்கிறார்.

இத்த‌க‌வ‌லை இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைமை நிலைய‌ச் செய‌லாள‌ர் காய‌ல் கே.ஏ.எம். முஹ‌ம்ம‌து அபூப‌க்க‌ர் தெரிவித்தார்.

http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=29

காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மற்றும் காயிதெமில்லத் காலனி திறப்புவிழா!

காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மற்றும் காயிதெமில்லத் காலனி திறப்புவிழா!



தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் 27.12.2008 அன்று காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வரும் ஜனவரி மாதத்தில், ராமநாதபுரத்தில் தென்மண்டல மாநாடும், சென்னையில், தமிழகம் தழுவிய அளவில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் நடைபெறவுள்ளன.

இம்மாநாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதற்காக காயல்பட்டணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை சார்பில் வரும் 26.12.2008 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு காயல்பட்டணம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகரத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கவும், உரையாற்றவும் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் தமிழ்நாடு மாநில செயலாளர் டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார், பொருளாளர் வடக்குகோட்டையார், அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் தலைமையில், மாவட்ட - நகர நிர்வாகிகள், மாணவர் அணியினர் செய்து வருகின்றனர்.

முன்னதாக, 26.12.2008 அன்று மாலை 5 மணியளவில் காயல்பட்டணம் சீதக்காதி நகரில் அமைந்துள்ள, காயல்பட்டணம் முஸ்லிம் லீகிற்குச் சொந்தமான காயிதெமில்லத் காலனி மற்றும் காயல்பட்டணத்தின் முதல் பட்டதாரி பி.ஏ.காக்கா, மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.எம்.கே.மஹ்மூது லெப்பை ஆகியோர் பெயரில் அமைந்துள்ள மன்ஜில்கள் திறப்பு மற்றும் தியாகி பி.ஹெச்.எம்.அப்துல் காதிர் பெயரில் அமையவுள்ள மன்ஜில் ஆகியவற்றை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. திறந்து வைக்கிறார்.

ஈரோடு முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுக் கூட்டம்!

ஈரோடு முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுக் கூட்டம்!



ஈரோடு மாநகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகக் கூட்டம் மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்.ஏ. உமர் பாரூக் தலைமையில் மாவட்ட தலைமையகத்தில் 21.12.08 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் மாநகர தலைவர் எம். சிக்கந்தர், செயலாளர் ஏ. அக்பர் அலி, துணைத் தலைவர்கள் பி. அப்துல் ரஹ்மான், டி.ஷபியுல் லாஹ், துணைச் செயலாளர்கள் என்.ஷாநவாஸ்தீன், கே. முனாப், பொருளாளர் மௌலவி மூஸா தாவுதி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் என்.இனாயத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகரத் தலைவர் வரவேற்றார் முடிவில் இனாயத்துல்லாஹ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நடைபெறவுள்ள முஸ்லிம் லீக் மாநாடுகளை கருத்தில் கொண்டு தாய் சபை ஊழியர்கள் அதிக அளவில் பங்குபெற செய்கின்ற வகையில் மாவட்ட முஸ்லிம் லீகின் முழு ஒத்து ழைப்போடு ஈரோடு மாநகர பகுதியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து பிரைமரி கிளைகள் விரைவில் அமைப்பதென்றும் மாநாடு குறித்து விளம்பரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், சுவரொட்டி, பேனர், நோட்டீஸ் போன்றவற்றை விளம்பரப்படுத்தி, மாநாட்டிற்கு வலிமை சேர்ப்பது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

வார்டு பிரைமரிகளை முறைப்படுத்துவதென்றும் செயல்படாத நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து இயக்க வளர்ச்சிக்கு வலிமை கூட்டுகின்ற நடவடிக் கையை மேற்கொள்ள மாநகர நிர்வாக குழுவின் முழு ஒத்துழைப்போடு மாநகர தலைவர் செயலாளர், செயல்பட இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.

மாநகர முஸ்லிம் லீக் நிர்வாகத்தின் அனைத்து சட்ட திட்டங்கள் அறிவுரைகள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றிற்குகட்டுப்பட்டு செயல்படவேண்டும். அப்படி செயல்படாதவர்கள் மாநில, மாவட்ட மாநகர தலைமைக்குக் கட்டுப்படாதவர்கள் கட்சிக்குள் குழப்பத்தையும் இயக்க வளர்ச்சிக்கு விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பற்றிய தகவல் வருமானால் கட்சியின் நலன் கருதி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் முடிவு செய்கிறது.

புதிய மாவட்ட நிர்வாகம் அமைக்கப்பட்டதற்கு பின் மிகவும் சிறப்பான செயல்பாட்டில் முன்னணியில் உள்ளது என்பதையும் ஒவ்வொரு பிரைமரிகளையும் தூண்டி பணி வாங்குவதிலும் முதன்மை மாவட்டமாக திகழும் ஈரோடு மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்கு மாநகர முஸ்லிம் லீக் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி ஆதரிக்கும் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

ஒரு பிரைமரிக்கு 7 நிர்வாகிகள் 18 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட வார்டு நிர்வாகமே முறையான அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகமாகும். இந்த நிலையில் அமைக்கப்படாத வார்டு நிர்வாகங்கள் தற்காலிக நிர்வாக குழு என்ற அளவிலேயே செயல்படும். அவர்களை முறைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஏற்படுத்தும் வரை அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்று முடிவு செய்கிறது.

மாநகர நிர்வாகிகள் மாத சந்தா ரூ 100 செலுத்துவது என்று முடிவு செய்கிறது. மாநகர அளவில் ஒவ்வொரு சார்பு அணியில் 11 பேர் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவு செய்கிறது.

உறுப்பினர் படிவத்தில் மாநகர தலைவர், செயலாளர் கைஒப்பம் இல்லாத படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பல காலமாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகிறது. அதற்கு மாற்றாக பழைய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியிலிருந்து கருங்கல்பாளையம் காவேரி ரோடு இணைப்பு வரை தொலை தூரம் அரை கிலோ மீட்டர் அளவில் வரும் புதிய புறவழிச் சாலையை ஏற்படுத்தித் தர மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் பெரும் பள்ளம், ஓடைபாலம் பணிகளை துரிதப்படுத்தி பொது மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்து விட ஆவண செய்யுமாறு மாநாகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மாநகரத்தில் நாய்களின் தொல்லைகள் குறைந்த பாடில்லை. இதனால் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை அப்புறப்படுத்த இக்கூட்டம் வலியுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.

தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கம் முஸ்லிம் லீக்! -கே.எம்.நிஜாமுதீன்

தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கம் முஸ்லிம் லீக்! -கே.எம்.நிஜாமுதீன்



சென்னை புளியந்தோப்பு தாதா ஷா மக்கானில் இந்திய ய+னியன் முஸ்லிம்லீக் - வட சென்னை சார்பாக பயங்கரவாத எதிர்ப்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்று உலகம் திகைத்துக் கொண்டிருக்கிறது. பதைபதைத்து கொண்டிருக்கிறது. எதனால் திகைக்கிறது? ஏன் பதைபதைக்கிறது?

தீவிரவாதச் செயல்கண்டு திகைக்கின்றோம். பயங்கரவாத அட்டூழியம் கண்டு பதை பதைக்கின்றோம்.

இன்று நாட்டில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் நூற்றாண்டு வரலாறு உடைய ஒரே இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் சமுதாய உரிமைகளுக்காகவும் - பிரச்சினைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் - சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. மக்கள் மன்றத்திலும் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்., தீவிரவாதம் எங்கு தலைதூக்கினாலும் அதனை எதிர்க்கின்ற இயக்கம் முஸ்லிம் லீக்.

தீவிரவாதம் - பயங்கரவாதம் இரண்டுமே தடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறவே இன்று இந்த தெருமுனை கூட்டம் தாதா ஷா மக்கா னில் இளைஞர் பட்டாளம் விடுமுறை நாளிலும் பெருவாரியாக கூடியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமுதாயத்தின் சார்பாக நன்றியினை கூறிக்கொள்கிறேன்.

இம் மாத முதல் வாரத்தில் மும்பையில் நடைபெறும் பயங்கரவாத - தீவிரவாத செயல் கண்டு உலகமே திகைத்து போய் இருக்கிறது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பாக மலேகானில் குண்டு வெடிப்பு கண்டு நாமெல்லாம் பதை பதைத்து போனோம்.

பார்த்தால் பசு போல அதிகாரியும் இன்னும் சிலரும் மலேகான் பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு மற்றும் சில தீவிரவாத செயல்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஹேமந்த கர்கரே, தீவிரவாத நோயை கண்டு பிடித்து - அந்த தீவிரவாத நோய்க்கு மருந்து கொடுக்க போகும் போது - மும்பை பயங்கரவாத அட்டூழியத்தால் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டார்.

இந்த பயங்கரவாதிகள் செயலுக்கு காரணம் எது வென்றாலும் - நாடு விட்டு நாடு சென்று நடத்திய கொடுஞ்செயலாக இருந்தாலும் கண்டிக்கவே நமது இந்த பொதுக் கூட்டம்.

ஹேமந்த கர்கரே போன்ற உண்மையான அதிகாரிகள் லட்சத்தில் ஒருவர். அவருடைய உண்மையான உழைப்புக்கு, இந்திய மக்கள் அனைவரும் மரியாதை செலுத்துகிறார்கள். அவர் கொல்லப்பட்டதில் பலருக்கும் ஐயப்பாடுகள் உண்டு. நம்முடைய மும்பை முன்னாள் முதல் அமைச்சரும் - மத்திய அமைச்சருமான ஏ.ஆர். அந்துலே கூட பாராளு மன்றத்தில் இது குறித்து மும்பை பயங்கரவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது - தாஜ் - ஓப்ராய் ஹோட்டலுக்கு செல்லாமல் - காமா ஓட்டலுக்கு கர்கரேயை போக சொன்னது யார்? இந்த கேள்வி மாண்புமிக மத்திய அமைச்சர் ஏ.அர். அந்துலே, பாராளுமன் றத்தில் வினா எழுப்பியது இன்றைக்கு நாட்டு மக்களுக்கு உள்ள ஐயப்பாடு களாகும். இதற்கு ப+ர்வாங்க நீதிவிசாரணை தேவை என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா - நாகசாகி, ஆகிய நகரங்களின் மீது அமெரிக்க அணு குண்டை வீசியது உலகின் முதல்பெரு பயங்கரவாதம்.

இன்னும் ஈராக் நாட்டை அழித்தது - ஆப்கன் நாட்டை அடிமைப்படுத்தியது எல்லாம் அமெரிக்காவின் பயங்கரவாத செயலின் தொடர்ச்சியாகும்.

இந்தியாவில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் 400 ஆண்டு பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜிதை இடித்தது., இந்தியாவில் நடைபெற்ற முதல் பயங்கரவாதம்.

இதனை நடத்தியவர் கள்தான் பி.ஜே.பி. தலைவர் களான அத்வானி - முரளி மனோகர் ஜோஜி - உமா பாரதி ஆகியோர்.

பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் மத்திய அரசு கட்டித்தர வேண்டும் என்பதுதான். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலையாய கோரிக்கையாகும்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சட்டத்தை மதிக்கிறது. இந்திய இறையாண்மையை . தேசிய ஒருமைப்பாட்டை - சமய நல்லிணக்கத்தை - சமய ஒற்றுமையை ஆகிய வற்றை கருத்தில் கொண்டுதான் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கத் தயார் என்று தனது நிலையை பாராளுமன்றத்திலும் - சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் ஆணித்தரமாக கூறி வருகின்றார்கள். எங்களது ஒப்பற்ற தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், கரத்தை பலப்படுத்தும்விதமாக இளைஞர்கள் அனைவரும் முஸ்லிம் லீகில் சங்கமித்து சமுதாய பணியாற்ற வாருங்கள் என அழைத்து புலந்தரீ ஸஃபா ஸே நஹி ஹீலா
கலந்தரீ ஸஃபா ஸே ஹீலா

என்ற அல்லாமா இக்பால் கூறியதை போல - இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டவில்லை - மாறாக அன்பு - அறம் - தர்மம் இவற்றால் வளர்ந்தது என்பதை தெரிவித்து எம்பெருமானான் ரசூல் கறீம் (ஸல்) அவர்களின் சுன்னத்தை பேணியவர்களாக எல்லோருடனும் சமய நல்லிணக்கத்தோடு வாழ்வோம் என கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன் பேசினார்.

வட சென்னையில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்!

வட சென்னையில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்!

சென்னை தாஷாமக்கானில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்ட 39வது வட்டம் சார்பில், தீவிர பயங்கரவாத எதிர்ப்பு தெருமுணைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிறப் புரையாற்றிய, கோவை மாநகர முஸ்லிம் லீக் தலைவரும் மாநில விவசாய அணி அமைப்பாளரு மான நாவலர் கோவை நாஸர் எம்.சி., பேசும்போது குறிப்பிட்டதாவது:-

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என சொல்கிறார்களே, தென்காசியில் ஒரு இடத்தில்-தொப்பியும்-கைப்பையும் வைத்துவிட்டு, யாரோ சென்றுவிட்டார்கள். பிறகு, வெடிவைப்பு நடக்கிறது. நடந்த வெடிவைப்பு சம்பவத்தை அந்தப் பகுதி போலீஸ் கமிஷனர் தலைமையில் உள்ள குழு முதன் முதலில் கண்டுபிடித்து, இந்த வெடி வைப்பு-சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்த சதி என்று சொன்னாரே.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்துவிட்டு, பிறகு இந்தச் செயல்களை முஸ்லிம் மக்கள்தான் செய்தார்கள், என்று முஸ்லிம்கள் மேல் பழிசுமத்தி, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறீர்களா? இந்தச் செயல்களெல்லாம் நியாயம்தானா?

அரபிக் கல்லூரிகளில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்று நாட்டின் உயரிய மதிப்புமிக்க மன்றத்திலே சொன்னார்கள். இந்தியத் துணைக்கணடத்தில் உள்ள ஆயிரக் கணக்கான அரபிக் கல்லூரிகளை அரசு அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு கல்லூரியில்கூட தீவிரவாதம் போதிக்கப்படவில்லை என்று சோதனையிட்ட அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டார்களே இப்போது எங்கே தீவிரவாதம் இருக்கிறது தெரியுமா?

இன்று இந்தியாவிலே புகழ்பெற்ற மடங்களிலே அதன் மடாதிபதிகள் மடத்திலேயே தன் இனத்தைச் சேர்ந்தவர்களையே கொன்று குவித்து இன்று சிறைக்கூடங்களிலே-நீதி மன்றங்களிலே அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பெண் சாமியார்கள் கூட விதிவிலக்கல்ல.

யார் என்ன செய்தாலும், அது முஸ்லிம்கள்தான் செய்கிறார்கள் என்று சொல்லக்கூடிய நிலை மாறிக்கொண்டிருக்கிறது. நியாய ரீதியாக உள்ள கோரிக்கைகளை நாம் நிச்சயம் யார் ஆட்சியாளராக இருந்தாலும் நாம் கேட்போம். எங்கு கேட்கப்படவேண்டுமோ அங்கு உரத்த குரலிலே கேட்போம். எந்த ஆட்சியிலே நாம் பங்கு கொண்டிருந்தாலும் ஆட்சியாளரிடம் கேட்போம். உதாரணமாக பாராளுமன்ற உரையிலே பி.ஜே.பி. உறுப்பினர் மல்ஹோத்ராவின் வாதத்திற்கு பாராளுமன்றத்திலேயே பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., இப்படியும் இருக்கிறதா? என்று மன்ற உறுப்பினர்கள் வியந்தனரே இது போன்ற காரியங்களை முஸ்லிம் லீக் ஒன்றுதான் செய்ய முடியும்.

இவ்வாறு கோவை நாசர் பேசினார்.

வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் பேசும்போது கூறியதாவது:-

இன்று மும்பையில் நடைபெற்ற தீவிரவாத-பயங்கரவாதத் தாக்குதல் களினால் நாடே திணறிக்கொண்டிருக்கிறது. இதுகூட முஸ்லிம்கள்தான் செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பு நடந்த மலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அன்று எல்லோரும் ஒருமித்த கருத்திலே சொன்னார்கள் பத்திரிக்கைகளின் விஷமப் பிரச்சாரமும் அதுதான்.

இந்த விஷமப் பிரச்சாரத்தில் துளியளவும் முஸ்லிம்களுக்கு சம்பந்தமில்லை என்று, கண்டு பிடிக்க, மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்டிருந்த காரணத்தால் நமது பெருந்தலைவர் பேராசிரியர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்த காரணத்தால் மலேகான் சம்பவம் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொன்ன காரணத்தால் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் சங்பரிவார், அமைப்புகள், பெண் துறவி பிரக்யாசிங் தாக்கூர், சாமியார் பாண்டே, போன்றவர்கள் மலேகான் நிகழ்வுக்கு காரணம் என்று மஹாராஷ்டிரா மாநில புலனாய்வுத்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரே, மற்றும் உயர் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் அறிவித்தவுடன், ஒரு சம்பவத்தை நிகழ்த்தி மூன்று அதிகாரிகளையும் சம்பந்தமில்லாத இடத்திற்கு வரவழைத்து அவர்கள் மூன்று பேர்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்து பாருங்கள்.

இவ்வாறு வடசென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் பேசினார்.

முன்னதாக எஸ்.எம். கனி சிஷ்தி, எஸ்.கே. அப்துர் ரஹ்மான், ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ், இஸ்மாயில் மற்றும் பலர் பேசினர். முடிவில் ஜலால்தீன் கவிதை வாசிக்க, எஸ். சலீம்கான், நன்றி கூறினார்.

கவிதை: மது ஒழிப்பு!

கவிதை: மது ஒழிப்பு!

http://www.muslimleaguetn.com/news.asp?id=489

அடுப்படி வாழ, படிப்படி விலக்கு!
உருப்படியாக மக்கள் வாழ, படிப்படியாக மதுக்கடை குறைப்பு!

மதுவால் மக்கள் வாழ்வு போகும்
விலக்கால் அரசுக்கு வரிகள் போகும்!

வரி பறிபோனால் வழி பல உண்டு
வாழ்வு பறிபோனால், மறுவாழ்வு, உண்டோ?

மதுக்கடை கூட்டம் மனதில் பதைப்பு
பொதுக்கடை, ஆக்கியது பண்பாட்டு சிதைப்பு!

வெட்கம் இல்லாமல், வீதியில் திரிவது போல்
பக்கம் பாராமல் தெருவிலே குடிப்போர்கள்.

இளைய பாரதமே பாழ்பட்டு போகும் நிலை
இந்தியா முழுவதும் வரவேண்டும் விலக்கு நிலை!

தமிழர் நலனையே தன்னலமாய் கொண்ட
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்!

படிப்படியாக மதுவை விலக்கிடும் ஆரம்பம்
பூரணமாகும் நாள் தூரமாய் இருக்காது!

இறைவன் கூட மது விலக்கை
படிப்படையாகவே கட்டளையாக்கினான்!

கெடுபடியாகும் நாள்
அமுலுக்கு வரும் முன்னே ஒரேயடியாகவே
மதுவை ஒழிப்போம்!

மனிதனை மனிதன்
தீண்டாமை குற்றம்தான்!

மனதாலும் மதுவை
தீண்டாமை குற்றமல்ல!




-வடக்குகோட்டையார்
பொருளாள‌ர்
த‌மிழ் மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்
சென்னை

Wednesday, December 17, 2008

தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது! -நாடாளுமன்றத்தில் பேராசிரியர்

December 17, 2008
தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது! -நாடாளுமன்றத்தில் பேராசிரியர்

தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் இணைத்துப் பேசக்கூடாது. தீவிரவாதம் குறித்த வெள்ளை அறிக்கை, ஒன்றினை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என தலைவர் பேராசிரியர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

அஸ்ஸாம் மாநில வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே. எம். காதர்மொகிதீன் பேசியதாவது:-

அஸ்ஸாம் மாநில வெடிகுண்டு சம்பவம் தொடர்பான இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு முதலில் மகிழ்ச்சியை தெரிவித்துகொள்கிறேன்.

தீவிரவாதம் என்பது நமது இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும், சர்வதேச அளவிலும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. மனித நேயத்திற்கு எதிரான, செயலாக அது இருந்து வருகிறது.

குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த அக்டோபரில் 4 மாவட்டங்களில் நடைபெற்ற கார் மற்றும் மோட்டார் வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்., இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உடனடியாக இந்த சம்பவத்திற்கு முஸ்லிம்களே காரணம் என முஸ்லிம் சமுதாயத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இஸ்லாமிய பயங்கரவாதம், என்ற சொல்லாடல், கையாளப்பட்டது.

உண்மையில் பயங்கரவாதம் எந்த மதத்துடனும் தொடர்புடையதல்ல. பயங்கரவாதம் என்பதே ஒரு தனி மதமாகத்தான் இருந்து வருகிறது.

நாம் முஸ்லிம் பயங்கரவாதம் என்றோ அல்லது இந்து பயங்கரவாதம் என்றோ அல்லது கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றோ, சீக்கிய பயங்கரவாதம் என்றோ அழைக்கக் கூடாது. பயங்கரவாதம் என்பதை ஒரு தனி இனமாக - மதமாக அடையாளப்படுத்த வேண்டும்.,

பயங்கரவாதம் ஒரு குற்றம் சார்ந்த மதம். மனித நேயமற்ற மதம் மற்றும் அது ஷைத்தானுடைய மதம். அந்த பயங்கரவாத மதத்தை மற்ற எந்த மதங்களுடனோ அல்லது சமுதாயத்துடனோ ஒப்பிடக்கூடாது.

சமீபத்திலே மலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாத தொடர்பான விசாரணையில் இந்து மத, துறவிகளும், பெண் துறவிகளும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், நாம் அவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று அழைக்கவில்லை. அப்படி அழைப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்து பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம், கிறிஸ்துவ - சீக்கிய பயங்கரவாதம், இது போன்ற வார்த்தை பிரயோகங்களை ஆட்சேபிக்கிறேன்.

அஸ்ஸாம் மாநிலத்தில் நாம் கவனம் செலுத்தும்போது, சுமார் 1500 சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. அதில் மிக முக்கியமானதாக இந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் அமைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம்தான் மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியான மில்லி கெஜட் என்ற பேப்பரிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் நமது நாட்டில் மட்டுமே 174 குழுக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு-கஷ்மீரில் 32ஆம், பஞ்சாபில் 12ஆம், மணிப்பூரில் 40ஆம், அஸ்ஸாமில் -36ஆம், திரிபுராவில் 30ஆம், நாக்பூரில் 3ஆம், மேகாலயாவில் 4ஆம் மிசோரமில் 2ஆம், அருணாச்சலப்பிரதேசத்தில் 1ஆம் பயங்கரவாத அமைப்புகளாக கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நமது மேன்மை தங்கிய உள்துறை அமைச்சர் பயங்கரவாதம் குறித்த விவாதத்தின் போதெல்லாம், மனிதநேயத்தை நாம் வளர்க்க வேண்டும் (அப் லிஃப்ட் ஆப் ஆம் ஆத்மி) என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், இன்றைய முக்கியத் தேவை நாட்டிலிருந்து வெடிகுண்டு கலாசாரத்தை வேரோடு பிடுங்கி எறிவதே ஆகும். (அப்ரூட் தி ஷபாம் ஆத்மி).

பயங்கரவாதம் தொடர்பான விவாதத்தின்போதெல்லாம் நான் ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி கேட்கிறேன். நமது நாட்டிலுள்ள பயங்கரவாத குழுக்கள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்யவேண்டும்.

அந்த பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? அவர்கள் நமது நாட்டில் எங்கெல்லாம் உள்ளார்கள்? என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது குறித்த அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்., அப்போதுதான் மக்கள் அவர்கள் யார் மற்றும் எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளம் காண முடியும்.

அஸ்ஸாம் என்றால் அரபி மொழியின்படி ஷமரணம் என்று அர்த்தம். ஆனால், இன்று அஸ்ஸாம் பிணங்களின் குவியல் அறையாகவே மாறி காட்சியளிக்கிறது. அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புகளின் காரணங்களால் ஏராளமான பொது மக்கள் செத்து மடிந்துள்ளார்கள்.

இந்த வெடிகுண்டு தாக்குதலை நமது இந்திய மண்ணிலிருந்து வேரோடு, பிடுங்கி எறிந்தே ஆக வேண்டும்.,

நமது இந்திய தேசம் பல மொழி, இன, மத, கலாசாரங்களை உள்ளடக்கிய பன்மைத்துவ சமுதாயமாக திகழ்ந்து வருகிறது. அனைத்து, மதத்தைச் சேர்ந்தவரும், அனைத்து, இனத்தவரும் சங்கமித்து வாழும் தேசமாக உள்ளது.

இங்குள்ள ஒவ்வொருவரும் இந்தியாவுக்கு சொந்தமானவர்களே. அஸ்ஸாம் மாநிலத்தை பொறுத்தவரை அங்குள்ள முஸ்லிம்களை குறித்த ஒரு தவறான பிரச்சாரம் நெடுங் காலமாக பரப்பப்பட்டு வருகிறது., நாம் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் பெங்காலி மொழி பேசுவதன் காரணமாக அவர்கள் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் மற்றும் அந்நியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வந்த இந்த 4 ஆண்டு காலத்தில் பலமுறை அஸ்ஸாம் முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

இங்கே உள்ள அஸ்ஸாம் முஸ்லிம்கள், ஒவ்வொருவரும் இந்த தேசத்தை சார்ந்தவர்கள் தான். அவர்களை, நாம் நமது இந்திய குடிமக்களாகவே நடத்திட வேண்டும். அந்த மக்கள் வேற்று நாட்டினர் அல்ல. வெளியிலிருந்து அவர்கள் குடியேறவில்லை. அவர்களை அந்தியர்களாக சித்தரிப்பதும், அப்படி நடத்துவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

நான் இன்னமும் உறுதியாக சொல்வேன். அந்த மக்கள் (அஸ்ஸாமியர்) நமது நாட்டின் மற்ற மக்களிடமிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் இல்லை.

அஸ்ஸாம் முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது துணை போயிருக்கலாம். அவர்களை நாம் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டுமே தவிர அதற்காக அஸ்ஸாம் முஸ்லிம்கள், அனைவரையுமே பயங்கரவாதிகள் என்றோ அல்லது பயங்கரவாதத்திற்கு துணை போகிறார்கள் என்றோ அல்லது அந்நியர்கள் என்றோ சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் மிகவும் வலி யுறுத்தி கூறும் இந்த முக்கிய விஷயத்தை ஒவ்வொருவரும் சற்று உற்று கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நமது நாட்டில் உள்ள எந்த ஒரு நபரையும், எந்த ஒரு குடிமகனையும் அந்நியர்களாகவோ, வந்தேறிகளாகவோ நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நமது அரசுக்கு மிக முக்கியமான கடமை ஒன்று உண்டு. நமது நாட்டில் எவரெல்லாம் வெளிநாட்டினர், எவரெல்லாம் வந்தேறிகள் என்பதை கண்டறிந்து அடையாளப்படுத்த வேண்டும். நான் மறுபடியும் வலியுறுத்துகின்றேன். இது நமது அரசின் உரிமைசார்ந்த, முக்கியமான ஒன்றாகும்.

உலகில் உள்ள தேசங்களிலெல்லாம் மிகச்சிறந்த உன்னதமான தேசம் நமது இந்திய தேசம் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.

பேராசிரியர், உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சுமார் 8 முறை எதிர்க்கட்சியினர் குறுக்கீடு செய்து இடையூறு விளைவித்தனர். ஆனாலும், பேராசிரியர், தொடர்ந்து தனது ஆணித்தரமான கருத்துக்களை பதிவு செய்தார்.

மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!

Wednesday, December 17, 2008
மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!

மதநல்லிணக்கத்தை உருவாக்கி வளர்க்கும் வகையில் மத்திய அரசு (ஹார்மனி இந்திய யூனிவர் சிட்டி) மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம், ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

வெள்ளியன்று (12-ந் தேதி) நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்திற்கு பின்னர் பூஜ்ஜிய நேரத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:-

நமது இந்தியத் திருநாட்டில் மதநல்லிணக்கத்தை நல்ல முறையில் வளர்க்கும் விதமாக மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம் ஒன்றினை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இப்படி அமையும் மத நல்லிணக்க இந்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து மதங்களிலும் உள்ள மத நல்லிணக்கம் அமைதி பற்றிய பொதுவான தத்துவங்கள் தொகுக்கப்பட்டு போதிக்கப்படவேண்டும்.

பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களில் அடங்கியுள்ள பொதுவான தத்துவங்கள் அனைத்தையும் பாடங்களாக பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட வேண்டும்., இதன் மூலம் நமது நாட்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் தத்துவங்களை - போதனைகளை நல்ல முறையில் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தவும் - மரியாதை செலுத்தவும் வாய்ப்பு அமையும்., இதன் மூலம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் தழைத்தோங்கும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.

டிச.20இல் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு மற்றும் ஊழியர் கூட்டம்!

டிச.20இல் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு மற்றும் ஊழியர் கூட்டம்!



வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக் குழு மற்றும் ஊழியர்கள் கூட்டம் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், தெர்பசயனம் ரோட்டில் உள்ள பாசிப்பட்டரை தெரு, முஸ்லிம் ஜமாஅத்திற்கு சொந்தமான மதரஸாவில் மாவட்ட தலைவர் எம்.எஸ். சவுக்கத் அலி தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதில் மாவட்டத்தைச் சேர்ந்த, அனைத்து பிரைமரி, பகுதி இயக்க ஊழியர்கள் இளைஞர்களை அழைத்து வந்து ஆலோசனை வழங்க வேண்டும்.

1. இராமநாதபுரத்தில் நடத்த உள்ள தென் மண்டல மாநாடு சம்பந்தமாக ஆலோசனை. 2. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள

; மாநில முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீது சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 16, 2008

மும்பை பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துள்ளது! -டெல்லியில் பேராசிரியர்

மும்பை பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துள்ளது! -டெல்லியில் பேராசிரியர்



மும்பையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உடல் ப+ர்வமாக இல்லாவிட்டாலும் உணவுப்ப+ர்வமாக இணைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு கூறி வந்த அந்த உணர்வுப்ப+ர்வமான ஒருமைப்பாடு நிகழ்ந்துள்ளது என்று மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் டெல்லியில் கருத்து தெரிவித்தார்.

நேற்று நடந்த முதல்நாள் பாராளுமன்ற கூட்டத்தில் மும்பை தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்பட பலர் பேசினார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் பேசினார்கள். பின்னர் மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தானை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல் நாள் நிகழ்ச்சி குறித்து பாராளுமன்ற தொலைக்காட்சித் துறையினர் பேராசிரியர் கே.எம்.கே.விடம் நேர்காணல் நிகழ்ச்சியை மேற்கொண்டார்கள்.



அப்போது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேராசிரியர் கூறியதாவது:-

சமீபகாலமாக பாராளுமன்ற நிகழ்ச்சி இடைய+று இல்லாமல் நடைபெறவில்லை. எதிர்பார்த்த அளவு கூட்டம் முழுமையாக நடைபெற முடியாமல் அவை பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளை கடந்தகால பாராளுமன்ற வரலாறு கண்டிருக்கிறது. ஆனால், இன்றையதினம் புதிய வரலாறு ஏற்பட்டிருக்கிறது அவை ஒரே குரலில் ஒலித்தது. இதுவரை, ஆயுத ராணுவம் (யசஅ யசஅல) பற்றி விவாதித்த அவை தற்போது வெடிகுண்டு படை (டிஅ யசஅல) பற்றி விவாதித்தது.

அவை ஒருமித்த குரலில் ஒலித்ததற்கு காரணம் பயங்கரவாத தாக்குதல் என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவப்படும் போர் ஆகும். அது முழுமையாக அகற்றப்பட வேண்டும். உலகில் எங்கிருந்தாலும் அது அகற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை அனைவரும் ஆதரிக்கிறார்கள் - ஏற்றுக்கொள்கிறார்கள்.

பாராளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார் - பாராட்டினார். இதற்கு காரணம் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மேலும் அவை சரியான நடவடிக்கைகளாகும்.

பயங்கரவாதத்திற்கு இந்திய மண்ணில் இடமில்லை என்பதை பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டம் நிரூபித்துள்ளது.

இந்தியா ஒரு முழுமையடைந்த பாராளுமன்ற ஜனநாயக நாடு. எனவே, பயங்கரவாதம் தொடர்பாக மற்ற நாடுகளுடன் நாம் செயல்படும்போது முதுமையடைந்த ஜனநாயக முறைகளில் நாம் செயல்பட முடியும்.

ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல. அங்கே ஒரு நொண்டி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அவர்கள் பேசுவது ஒன்றும், செயல்படுவது ஒன்றுமாக கடந்த காலத்தில் இருந்திருப்பதை வரலாறு கண்டிருக்கிறது.

எனவே, அப்படிப்பட்ட ஒரு நாட்டுடன் நாம் நேரிடையாக சில நடவடிக்கைகளை அறிவுறுத்த முடியாது. அதனால்தான் ஐ.நா. சபை மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவும், நிர்ப்பந்தம் செய்யவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். நமது மத்திய அரசின் கொள்கையும் அதுதான்.



பயங்கரவாத தாக்குதல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஏதோ எதிர்பாராமல் நடக்கக்கூடிய நிகழ்வல்ல. இன்றைய தினம்தான் இந்த இடத்தில்தான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திடீர் என்று அது நடக்கும் என்று இந்திய மக்கள் அனுபவப்ப+ர்வமாக பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின்போது அனைத்து தரப்பினர்களிடமும் ஒற்றுமையும், பலமும், தைரியமும் காணப்பட்டது.

அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் திடமனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். அது பயங்கரவாதத்திற்கு எதிராக, விடுக்கப்படும் ஒரு செய்தியாகும்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளச் செய்திருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களிடையே விழிப்புணர்வை வெளிப்படுத்துவதுதான். இந்த வெளிப்புணர்வு மும்பை தாக்குதலின்போது காணப்பட்டது, மும்பை தாக்குதல் இந்திய மக்களை ஒருங்கிணைத்திருக்கிறது. உடல்ப+ர்வமாக இல்லாவிட்டாலும், உணர்ச்சி ப+ர்வமாக இந்திய மக்களை அது ஒருங்கிணைத்திருக்கிறது. ஒரு உணர்வு ஒருமைப்பாடு உண்டாக்கியிருக்கிறது. காலஞ்சென்ற பண்டித ஜவஹர்லால் நேரு கனவு கண்ட உணவுப்ப+ர்வ ஒருமைப்பாடு மும்பை குண்டுவெடிப்பால் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியர்கள் அனைத்து பாகுபாடுகளையும் நீக்கிவிட்டு ஒற்றுமையையும், உணர்வுப்ப+ர்வமாக, ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தியிருக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்

ரியாத் காயிதெ மில்லத் பேரவை நடத்திய கருத்தரங்கம்





ரியாத் காயிதெ மில்லத் பேரவை நடத்திய கருத்தரங்கம்

ரியாத் காயிதெ மில்லத் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் மையம் ஆகியவை இணைந்து மாபெரும் கருத்தரங்கத்தினை ரியாத் பத்தா கிளாசிக் ஆடிட்டோரியத்தில் 07-12-2008 ஞாயிறு மாலை நடத்தியது.

இக்கருத்தரங்கிற்கு ரியாத் காயிதெமில்லத் பேரவை தலைவர் எம்.டி. ஹஸ்புல்லாஹ் தலைமை வகித்தார். எஸ். அப்துர் ரஹ்மான், பி. முஸ்தபா கமால், பி.எம். ரஹ்மத்துல்லாஹ், காஜா நவாஸ், பண்ருட்டி எம். ஜக்கரிய்யா, வி.ஏ.எம். இக்பால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

லால்பேட்டை முஹம்மது நாஸர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், குவைத் காயிதெமில்லத் பேரவை தலைவர் டாக்டர் அன்வர் பாஷா, ரியாத் கேரளா முஸ்லிம் கலாச்சார மைய பொதுச்செயலாலர் அஷ்ரப், ரியாத் மர்கஸ் இஸ்லாஹி செண்டர் செயலாளர் மௌலவி அப்துர் ரஸாக் பாகவி, எஸ்.வி. அர்ஷுல் அஹமது, எஸ்.ஏ. அப்துல் மாலிக், ஏ. இம்தியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.

என்.டி. சதக்கத்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார்.

Friday, December 12, 2008

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்


http://www.muslimleaguetn.com/news.asp?id=452


ஐந்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பல்வேறு உணர்வுகளை - அதிர்ச்சி, ஆனந்தம், எமாற்றம், வெற்றி, தோல்வி - என அனைத்து உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவது, பாராளுமன்றத்தையே கைப்பற்றுவது போல் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும். ஆனால் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மக்களின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது. டெல்லி மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதுதான் சங்பரி வாரங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாகும்.

கடந்த தேர்தலில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 56 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் இம்முறை 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் 2003 - தேர்தலில் 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஏறக்குறைய இருமடங்காக 71 இடங்களை கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறை 37 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஒன்று கூடுதலாகி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலேறுகிறது.

டெல்லி மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் சென்ற முறை பா.ஜ.க.வின் ஆளுகையில் இருந்தவை. இவற்றில் மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அம்மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வாக்குகளின் சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு மாற்றம். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் இருந்த பா.ஜ.க. 42 சட்டமன்ற தொகுதிகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. முன்னிறுத்தியது நாடெங்கும் நடக்கும் தீவிரவாத - பயங்கரவாத தாக்குதல்களைத்தான். பயங்கரவாத செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்யவில்லை என்றும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கடுமையான சட்ட ஷரத்துகளோடு கொண்டு வந்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியுமென்றும் பசப்பியது. காங்கிரஸ் கட்சி கையாலாகாத கட்சி என்றும், தேச பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையே இல்லையென்றும், பா.ஜ.க. மட்டுமே தேச நலனைப் பற்றி சிந்திக்கும் - பாடுபடும் தேசபக்தி மிக்க கட்சி என்றும் தம்பட்டமடித்தது.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் இந்த பசப்பு வார்த்தை காரர்களுக்கு புரியவைத்துவிட்டது. படுதோல்வி கண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேயின் வார்த்தைகளில் கூறுவதென்றால், ~~மக்கள் எப்போதுமே அறிவாளிகள். அவர்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைத்தான் அறிவாளிகள் என்கிறார். அப்படியெனில் பா.ஜ.க-விற்கு வாக்களித்த வர்களை முட்டாள்கள் என சொல்லாமல் சொல்கிறாரா?

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தீவிரவாத - பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி மக்களைக் கவரவில்லை. காரணம், மலேகான் குண்டுவெடிப்பு சதிகளில் பா.ஜ.க.வின் நடவடிக்கை - அதன் தேசபக்த முகமூடியைக் கிழித்து, அதன் பயங்கரமான பாசிச முகத்தை - ரத்த வெறி கொண்ட சங்பரிவார முகத்தை - அழுகிப்போன இந்துத்துவா முகத்தை - மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மக்களும், தங்களின் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து இந்தியராக ஒன்றுபட்டு எழுந்து நின்று தீவிரவாதத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த நேரத்தில், மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முயன்றது பா.ஜ.க. அதன் மலிவான தேர்தல் உத்தியை மக்கள் இனம் கண்டு நிராகரித்துவிட்டனர் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

மலேகான் சதிகாரர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வக்காலத்து வாங்கி பேசியதுடன், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை மிகவும் இழிவாகப் பேசியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் உளுத்துப் போன ~இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஊளையை, மலேகான் சதித்தனம் அடையாளம் காட்டி விட்து. பா.ஜ.க.வின் ஊசிப் போன தேசபக்தியை மக்கள் நம்பவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இனி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., புதிய முகங்களையும், புதிது புதிதாக முகமூடிகளையும் மாட்டிக்கொண்டு வரும்போது மக்கள் அதன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அறைய தயாராகிவிடுவார்கள்.

- வெ. ஜீவகிரிதரன்
மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் அணி,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் இ.அஹ்மத் ஆற்றிய உரை!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் இ.அஹ்மத் ஆற்றிய உரை!

http://www.muslimleaguetn.com/news.asp

தீவிரவாத தாக்குதல் நடத்தி பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புகளை குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் ஜமாத்-யுத்-தாவா அமைப்புகளை சட்டவிரோதமான அமைப்புகள் என்று ஐ.நா. சபை அறிவிக்குமாறு இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான, இ.அஹமது கேட்டுக்கொண்டார்.



ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ~பயங்கரவாத தாக்குதலால் சர்வதேச அமைதிக்கும் - பாதுகாப்புக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் இந்த தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு அமைச்சர் இ. அஹமது இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

பேச்சின் தொடங்கத்தில் அவர் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் அதற்கு முன் ஜெய்ப்ப+ர், டெல்லி மற்றும் அஹமதாபாத் போன்ற நகரங்களில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விவரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான அனைவரும் நீதியின் பிடியின் கீழ் கொண்டு வரவேண்டும்., இந்தியா தொடர்ந்து நாட்டுக்கு வெளியே இருந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆட்பட்டு வருகிறது.

ஒரு நாட்டினுடைய அரசியல் விருப்பங்களை பயங்கரவாத தாக்குதல் மூலம் நிறைவேற்ற முயலும் போது பயங்கரமான ஒரு இயந்திரம் உருவாக்கப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல்களால் உயிர்ச் சேதங்களும், பொருளாதார சேதங்களும் மிகப்பெரிய அளவில் ஏற்படுகிறது.



எனவே, இந்த மாதிரியான பயங்கரவாத அமைப்புகளை குறிப்பாக, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கரே இ தொய்பா மற்றும் ஜமாத் யுத் தாவா போன்ற அமைப்புகளை சட்ட விரோதமான தீவிரவாத அமைப்புகளாக ஐ.நா. சபை அறிவிக்க வேண்டும்.

ஜமாத் யுத் தாவா மற்றும் அதுபோன்ற, அமைப்புகள், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டு அவற்றிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.

எந்த நாட்டில் தீவிரவாதம் முளைவிடுகிறதோ அந்த நாட்டில் அவை செயல்படுவதை வேகமான நடவடிக்கைகள் மூலம் தடை செய்ய வேண்டும்., தீவிரவாத தாக்குதல்களி லிருந்து இந்திய மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது., ஆனால், இதுவரை இந்தியா பொறுப்புணர்வோடும், சகிப்புத்தன்மையோடும் இந்த விஷயத்தில் நடந்துகொண்டிருக்கிறது., பயங்கரவாத தாக்குதலை நடத்த அமைப்புரீதியாக செயல்படுபவர்கள், நிதி உதவி வழங்குபவர்கள், விய+கம் வகுத்து கொடுப்பவர்கள் போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .

பயங்கரவாதம் என்ற, தீமையான நடவடிக்கைகளுக்கு கொள்கை ரீதியாக மற்றும் தார்மீக ரீதியாக உதவி செய்பவர்களும் நீதியின் பிடிக்குள் கொண்டுவர வேண்டும். பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் போதெல்லாம் உலகம் அதிர்ச்சிக் குள்ளாகிறது. அந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள கட்டமைப்புகள், வெளிப்படையாக தெரிவதில்லை. பயங்கரவாத தாக்குதல்கள் எதேச்சையாக நிகழ்பவை அல்ல. அல்லது எப்போதோ நிகழ்வதும் அல்ல. அவற்றிற்கு முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். போதிய பண உதவியும் வழங்குகிறார்கள்.

ஒரு பயங்கரவாத தாக்குதல்களுக்கு சரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. அதற்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன., பயங்கரவாதிகள் தங்குவதற்கு மறைவிடங்கள் தேவைப்படுகின்றன.

எனவே, சர்வதேசரீதியிலும், தேசிய அளவிலும் பயங்கரவாத தாக்குதல் என்ற கொடுமையை அடியோடு வேரறுக்க பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



1996ஆம் ஆண்டில் பயங்கரவாதம் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சர்வதேச ரீதியில் சட்ட வரைவு கொடுக்கப்பட வேண்டும்., அந்த தீர்மானம் தீவிரவாதத்திற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படாத காரணத்தை காட்டி அதை கிடப்பில் போட்டுவிடக்கூடாது. ஏனென்றால் பயங்கரவாதம் தொடந்து அப்பாவிகளின் உயிரை பறித்து வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் .இ.அஹமது தெரிவித்தார்.

ஐ.நா.சபை பாதுகாப்பு சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அதில் இந்தியா இடம் பெறவில்லை. ஆனாலும்கூட இந்தியா அழைக்கப்பட்டு, பேச பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, இ.அஹமதின் பேச்சை ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாட்டு பிரதிநிதிகள் மிகுந்த அக்கறையுடன், கேட்டார்கள்.

Thursday, December 11, 2008

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு அறிவிப்பு!


தமிழ்நாடு மாநில, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் குழுக்கூட்டம், 27-12-2008 சனிக்கிழமை, காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில், கீழ்கண்ட முகவரியில், தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் தலைமையில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் :
1., அரசியல் நிலைமை
2. இயக்க நிதி சேகரிப்பு
3. மண்டல மாநாடுகள், முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு பற்றி
4. லக்னோ அகில இந்திய மாநாட்டில் பங்குபெறுவது பற்றி
5. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்

கூட்டம் நடைபெறும் இடம் :
வாவு வஜிஹா மகளிர் கல்லூரி காயல்பட்டினம் -, திருச்செந்தூர் நெடுஞ்சாலை காயல்பட்டினம் - 628 204.

திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு வருபவர்களை காயல்பட்டினம் அழைத்து வர தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புக்கு கீழ்கண்டவர்களில் ஒருவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்:
1. வாவு நாஸர் (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்) - செல் : 9788131176
2. பி.எம்.எஸ்.அமானுல்லா (காயல் நகர செயலாளர்) - செல் : 9842199731
3. எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ (மாநில பதிப்பக குழு உறுப்பினர்) - செல் : 9443839401

http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=27

கேட்பதாக இல்லை இனி....

கேட்பதாக இல்லை இனி....
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.

வேறு என்ன இருக்கு...?

இஸ்லாமிய அடையாளத்தோடு
நாட்டிலே நாடமாட ஊறு ஏற்பட்டதே...
உலகரங்கமே பார்த்ததே நாட்டின்
நாடாளும் சபை கண் விழித்திருந்ததை...!

உங்கள் ஊரரியுமே,இன்றும்
நம் ஷரீஅத்தின் சுக வாழ்வை
சுவைக்கும் உரிமையை பெற்று தந்தவர்
மராட்டிய மாவீரர் பனாத்வாலா என்பதை...!

அப்புறம் ஏதாவது...?
ஆம்...இதோ ..!
அவசர ஊர்தி எனும் ஆம்புலன்ஸ் சேவையை
அறிமுகம் செய்து காட்டியது யார்...?
தஞ்சை மாவட்டத்து தாய்ச் சபை
சொந்தங்கள் தானே...!

அதற்க்கு ஒன்றும் நாங்கள் சலைத்தவர்கள்
அல்ல என்று
அன்று மறுமொழி பகன்ற இராமநாதபுரம் மாவட்ட
தாய்ச் சபையின் ஆம்புலன்ஸை மறக்க முடியுமா...?

ஏன் இதெல்லாம் இப்போ..?
பூனை கண் மூடினால் உலகம் இருட்டாம்...!
நாங்கள் கண்ணயர்ந்தால் குருடாம்?

நாட்டிற்க்கு புதிய சட்டம்...
திருமணத்தை பதியுங்கள் என்று...!
இல்லை..இல்லை..அது பதியாதவர்களுக்கு...
நாங்கள் பதிவை பல்லாண்டாக செய்து
காட்டிக் கொண்டிருப்பவர்கள்.

எங்களின் பதிவை
சட்டத்தின் பட்டமாக்குங்கள்!
என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் முழக்கம்
தெருவில் அல்ல...நாட்டின் ஆட்சி மன்றத்தில்...!

வேற புதுசா...?
மதரசாக்களில் தீவிரவாதமென்று
அபாயக்குரல் பாராளுமன்ற்தில்...
எழுந்தது சமுதாயக்குரல்..,

அப்படியானால் நான்...?
அங்கிருந்து வந்தவன் தானே நானும்...?
அறநெறிகள் போதிக்கப்பட்டுத்தானே வளர்க்கப்பட்டேண்.
மதரஸா என்பது ஒழுக்க நெறிக்கூடம்
இது பேராசிரியரின் சொல் வீச்சு...!

அடுத்து என்ன..?
சன்மார்க்க மேதைகளான உலமாக்களின்
கோரிக்கை பேராசிரியர் முனீருல் மில்லத்திடம்...
மதரஸாக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த
சிறப்பு விலைசிலிண்டர் தளர்த்தப்பட்டு விட்டது
திருப்பித்தர ஆவண செய்ய வேண்டும்!

அடுத்த சில வாரங்களில்
அந்த கோரிக்ககை பேராசிரியரால் பாராளுமன்றத்தில்,
எதையும் உரிய இடத்தில் சொல்லி செய்வதுதானே
முஸ்லிம் லீகின் பண்னெடுங்கால பண்பு!

இன்னும் வேண்டுமா..?
ஆம்...இருக்கிரது
இன்னும் பல நூறாண்டுகளுக்குப் பின்
சமுதாயத்திற்க்கு உள்ள
தேவைகளும்,சேவைகளும்,மணிவிழா மாநாட்டின்
பிரகடனத்தில் மணி மணியாய் இருக்கிரது..!

சிலதை சொல்ல முடியும்!
சிலதை சொல்ல முடியாது...!
ஆனால்...!ஒன்று-
சொல்லிக் காட்டத் தேவையில்லை
என்று சொல்லி வளர்த்த
எங்கள் தலைவர்களின் சொல்லை
கேட்பதாக இல்லை...!இனி!!!



Abdul rahman
ibnuthalabathi@yahoo.co.in

Thursday, December 4, 2008

ஓ டிசம்பர் ஆறே நீ அமைதி பெறு!!!

ஓ டிசம்பர் ஆறே நீ அமைதி பெறு!!!

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.


இந்தியாவிற்க்கு ஏற்ப்பட்ட
தலை குனிவு...!
உலக வரலாற்றிர்க்கு ஒரு
கருப்பு நாள்!


இறை இல்லத்தையா
இடித்தார்கள்...?
இந்திய இஸ்லாமியர்களின்
இதயங்களை அல்லவா இடித்தார்கள்!


இடிந்த இதயங்கள்...
படபடத்துக் கொண்டே இருக்கிரது
ஒரு நாள் வியாபாரம் செய்ய
இயக்கம் ஆரம்பித்தவர்கள்...!


இன்னும் வியாபாரத்தை
முடித்தபாடில்லை...!
ஆம்!இதோ அடுத்த ஆண்டு
பள்ளி வாசலை கட்டி விட்டு வருகிறோம்..!


என்று புறப்பட்டவர்கள்
இன்னும் சொன்ன இடத்திலேயே
நிற்கிறார்கள் ஆனால்.. நம்மவர்கள்
இன்னும் ஏமாந்து நிற்கிறார்கள்!!!


முஸ்லிம் லீக் மட்டும்
டிசம்பர் 6 க்கு என்ன செய்யும்?

ஆக்கப்பூர்வமான பணிகளை
அரவமில்லாமல் செய்கிரதே...!
நாட்டை ஆளுபவர்களுக்கு எத்தனை
ஆயிரம் கடிதங்கள்,தந்திகள்..?


இடித்து விட்டு பாறாளுமன்றத்தில்
அமர்ந்திருந்த அத்வானி,ஜோஷி போன்ற
எதிரிக்களை நேரிலே
குற்றவாளிக்காளே வெளியேறுங்கள்
இன்று வீர கர்ஜனை செய்ததது
முஸ்லிம் லீக் தலைவர்கள் தானே?


எத்தனை சமய,சமூக நல்லிணக்க
கூட்டங்கள்...?
இடித்தப் பள்ளியை கட்டித் தாருங்கள்
என்று ச்கோதர சமுதாய தலைவர்களின்
வேண்டுகோளாக பேச வைத்தது...?


இன்றும் நாங்கள் சொல்லுவது!
ஆண்டவனின் நீதிமன்றத்தை
நம்பி நிற்பவற்கள் நாம்...,


இருந்தாலும்,இந்தியாவின்
இறையான்மைக்கு ஊறு வேண்டாம் என்று
இந்நாட்டின் நீதி மன்றத்தையும் நம்பி
நிற்கிறோம்...!


பள்ளி வாசல் நமக்கே என்ற
பக்குவமான உண்மை தீர்ப்பிர்க்காக!!!

சரி
இந்தியாவில் எத்த்னை மாநிலங்கள்
அங்குள்ள முஸ்லிம்கலெல்லாம்
டிஸம்பர் பிஸ்னஸ்
செய்வதில்லையே ஏன்..?


அவர்களும் நம்பி நிற்கிறார்கள்
நீதிமன்ற தீர்ப்பு நமக்கென்று...!
இனி நாமும் சொல்லுவோமே
டிஸம்பர் ஆறே அமைதி பெறு என்று!!!


டிஸம்பர் ஆறே உன்னை
மறக்கவே மாட்டோம்
மாண்டவர்கள் நங்கள் தானே..?
மருந்தாக தருவோம் மக்களுக்கு!


சமய நல்லிணக்க கூட்டங்கள்
வாயிலாக சகோதர வாஞ்சையோடு
சபதமெடுப்போம்
சத்தியம் பள்ளி வாசல் சமுதாயத்திற்க்குத் தான்!!!



Abdul rahman
ibnuthalabathi@yahoo.co.in