Thursday, December 25, 2008

தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கம் முஸ்லிம் லீக்! -கே.எம்.நிஜாமுதீன்

தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கம் முஸ்லிம் லீக்! -கே.எம்.நிஜாமுதீன்



சென்னை புளியந்தோப்பு தாதா ஷா மக்கானில் இந்திய ய+னியன் முஸ்லிம்லீக் - வட சென்னை சார்பாக பயங்கரவாத எதிர்ப்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்று உலகம் திகைத்துக் கொண்டிருக்கிறது. பதைபதைத்து கொண்டிருக்கிறது. எதனால் திகைக்கிறது? ஏன் பதைபதைக்கிறது?

தீவிரவாதச் செயல்கண்டு திகைக்கின்றோம். பயங்கரவாத அட்டூழியம் கண்டு பதை பதைக்கின்றோம்.

இன்று நாட்டில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் நூற்றாண்டு வரலாறு உடைய ஒரே இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் சமுதாய உரிமைகளுக்காகவும் - பிரச்சினைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் - சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. மக்கள் மன்றத்திலும் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்., தீவிரவாதம் எங்கு தலைதூக்கினாலும் அதனை எதிர்க்கின்ற இயக்கம் முஸ்லிம் லீக்.

தீவிரவாதம் - பயங்கரவாதம் இரண்டுமே தடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறவே இன்று இந்த தெருமுனை கூட்டம் தாதா ஷா மக்கா னில் இளைஞர் பட்டாளம் விடுமுறை நாளிலும் பெருவாரியாக கூடியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமுதாயத்தின் சார்பாக நன்றியினை கூறிக்கொள்கிறேன்.

இம் மாத முதல் வாரத்தில் மும்பையில் நடைபெறும் பயங்கரவாத - தீவிரவாத செயல் கண்டு உலகமே திகைத்து போய் இருக்கிறது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பாக மலேகானில் குண்டு வெடிப்பு கண்டு நாமெல்லாம் பதை பதைத்து போனோம்.

பார்த்தால் பசு போல அதிகாரியும் இன்னும் சிலரும் மலேகான் பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு மற்றும் சில தீவிரவாத செயல்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஹேமந்த கர்கரே, தீவிரவாத நோயை கண்டு பிடித்து - அந்த தீவிரவாத நோய்க்கு மருந்து கொடுக்க போகும் போது - மும்பை பயங்கரவாத அட்டூழியத்தால் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டார்.

இந்த பயங்கரவாதிகள் செயலுக்கு காரணம் எது வென்றாலும் - நாடு விட்டு நாடு சென்று நடத்திய கொடுஞ்செயலாக இருந்தாலும் கண்டிக்கவே நமது இந்த பொதுக் கூட்டம்.

ஹேமந்த கர்கரே போன்ற உண்மையான அதிகாரிகள் லட்சத்தில் ஒருவர். அவருடைய உண்மையான உழைப்புக்கு, இந்திய மக்கள் அனைவரும் மரியாதை செலுத்துகிறார்கள். அவர் கொல்லப்பட்டதில் பலருக்கும் ஐயப்பாடுகள் உண்டு. நம்முடைய மும்பை முன்னாள் முதல் அமைச்சரும் - மத்திய அமைச்சருமான ஏ.ஆர். அந்துலே கூட பாராளு மன்றத்தில் இது குறித்து மும்பை பயங்கரவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது - தாஜ் - ஓப்ராய் ஹோட்டலுக்கு செல்லாமல் - காமா ஓட்டலுக்கு கர்கரேயை போக சொன்னது யார்? இந்த கேள்வி மாண்புமிக மத்திய அமைச்சர் ஏ.அர். அந்துலே, பாராளுமன் றத்தில் வினா எழுப்பியது இன்றைக்கு நாட்டு மக்களுக்கு உள்ள ஐயப்பாடு களாகும். இதற்கு ப+ர்வாங்க நீதிவிசாரணை தேவை என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா - நாகசாகி, ஆகிய நகரங்களின் மீது அமெரிக்க அணு குண்டை வீசியது உலகின் முதல்பெரு பயங்கரவாதம்.

இன்னும் ஈராக் நாட்டை அழித்தது - ஆப்கன் நாட்டை அடிமைப்படுத்தியது எல்லாம் அமெரிக்காவின் பயங்கரவாத செயலின் தொடர்ச்சியாகும்.

இந்தியாவில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் 400 ஆண்டு பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜிதை இடித்தது., இந்தியாவில் நடைபெற்ற முதல் பயங்கரவாதம்.

இதனை நடத்தியவர் கள்தான் பி.ஜே.பி. தலைவர் களான அத்வானி - முரளி மனோகர் ஜோஜி - உமா பாரதி ஆகியோர்.

பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் மத்திய அரசு கட்டித்தர வேண்டும் என்பதுதான். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலையாய கோரிக்கையாகும்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சட்டத்தை மதிக்கிறது. இந்திய இறையாண்மையை . தேசிய ஒருமைப்பாட்டை - சமய நல்லிணக்கத்தை - சமய ஒற்றுமையை ஆகிய வற்றை கருத்தில் கொண்டுதான் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கத் தயார் என்று தனது நிலையை பாராளுமன்றத்திலும் - சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் ஆணித்தரமாக கூறி வருகின்றார்கள். எங்களது ஒப்பற்ற தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், கரத்தை பலப்படுத்தும்விதமாக இளைஞர்கள் அனைவரும் முஸ்லிம் லீகில் சங்கமித்து சமுதாய பணியாற்ற வாருங்கள் என அழைத்து புலந்தரீ ஸஃபா ஸே நஹி ஹீலா
கலந்தரீ ஸஃபா ஸே ஹீலா

என்ற அல்லாமா இக்பால் கூறியதை போல - இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டவில்லை - மாறாக அன்பு - அறம் - தர்மம் இவற்றால் வளர்ந்தது என்பதை தெரிவித்து எம்பெருமானான் ரசூல் கறீம் (ஸல்) அவர்களின் சுன்னத்தை பேணியவர்களாக எல்லோருடனும் சமய நல்லிணக்கத்தோடு வாழ்வோம் என கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன் பேசினார்.