Showing posts with label காயிதெமில்லத் பேரவை. Show all posts
Showing posts with label காயிதெமில்லத் பேரவை. Show all posts

Sunday, March 14, 2010

அமீரக காயிதெமில்லத் பேரவை

அமீரக காயிதெமில்லத் பேரவை

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த 04.02.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை த‌மிழ் உண‌(ர்)வ‌க‌ காயிதெமில்ல‌த் அர‌ங்கில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிக‌ழ்வில் காயிதெமில்ல‌த் பேர‌வையின் ச‌ர்வ‌தேச‌ ஒருங்கிணைப்பாள‌ரும், வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ருமான‌ எம். அப்துல் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ள் த‌லைமை வ‌கித்தார்.

புதிய‌ நிர்வாகிக‌ளாக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விப‌ர‌ம் வ‌ருமாறு :

த‌லைவ‌ர் : குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி

துணைத்த‌லைவ‌ர்க‌ள் :

க‌ள‌ம‌ருதூர் ச‌ம்சுதீன் ஹாஜியார்
காய‌ல் நூஹு சாஹிப்
முதுவை எஸ். ச‌ம்சுதீன்

பொதுச்செய‌லாள‌ர் : கும்ப‌கோண‌ம் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா

பொருளாள‌ர் : கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான்

துணைச்செய‌லாள‌ர்க‌ள் :

அய்ய‌ம்பேட்டை ராஜாஜி,
முத்துப்பேட்டை அப்துஸ் ஸ‌லாம்
கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின்
காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன்

ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பு செய‌லாள‌ர் : கோட்ட‌க்குப்ப‌ம் ர‌ஹ்ம‌த்துல்லா
ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் : ப‌ர‌ங்கிப்பேட்டை ரியாஸ் அஹ‌ம‌து
ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் : முதுவை ஹிதாய‌த்
ஊட‌க‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் : பாஷா க‌னி

அமீர‌க‌ ப‌குதி செய‌லாள‌ர்க‌ள் :

துபாய் : அய்ய‌ம்பேட்டை முஹ‌ம்ம‌து சுலைமான்
சோனாப்பூர் : முதுவை ஏ. அஹம‌த் இம்தாதுல்லாஹ்
அபுதாபி : லால்பேட்டை அப்துல் ர‌ஹ்மான்
அபுதாபி துணைச்செய‌லாள‌ர் : லால்பேட்டை முஜிபுர் ர‌ஹ்மான்

தணிக்கையாள‌ர் : ராஜகிரி அப்துல் க‌த்தீம்

புதிய‌ நிர்வாகிக‌ளுக்கு அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. வாழ்த்து தெரிவித்து காயிதெமில்ல‌த் பேர‌வை அமீர‌க‌த்தில் முனைப்புட‌ன் செய‌ல்ப‌ட்டு கட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு பாடுப‌ட‌ கேட்டுக் கொண்டார்.

விரைவில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காயிதெமில்லத் பேரவையின் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன

Tuesday, December 16, 2008

ரியாத் காயிதெ மில்லத் பேரவை நடத்திய கருத்தரங்கம்





ரியாத் காயிதெ மில்லத் பேரவை நடத்திய கருத்தரங்கம்

ரியாத் காயிதெ மில்லத் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் மையம் ஆகியவை இணைந்து மாபெரும் கருத்தரங்கத்தினை ரியாத் பத்தா கிளாசிக் ஆடிட்டோரியத்தில் 07-12-2008 ஞாயிறு மாலை நடத்தியது.

இக்கருத்தரங்கிற்கு ரியாத் காயிதெமில்லத் பேரவை தலைவர் எம்.டி. ஹஸ்புல்லாஹ் தலைமை வகித்தார். எஸ். அப்துர் ரஹ்மான், பி. முஸ்தபா கமால், பி.எம். ரஹ்மத்துல்லாஹ், காஜா நவாஸ், பண்ருட்டி எம். ஜக்கரிய்யா, வி.ஏ.எம். இக்பால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

லால்பேட்டை முஹம்மது நாஸர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், குவைத் காயிதெமில்லத் பேரவை தலைவர் டாக்டர் அன்வர் பாஷா, ரியாத் கேரளா முஸ்லிம் கலாச்சார மைய பொதுச்செயலாலர் அஷ்ரப், ரியாத் மர்கஸ் இஸ்லாஹி செண்டர் செயலாளர் மௌலவி அப்துர் ரஸாக் பாகவி, எஸ்.வி. அர்ஷுல் அஹமது, எஸ்.ஏ. அப்துல் மாலிக், ஏ. இம்தியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.

என்.டி. சதக்கத்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார்.