துபாயில் காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் கூட்டம்
துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை (http://quaidemillathforumuae.blogspot.com ) நிர்வாகிகள் கூட்டம் துபாய் தேரா தமிழ் உண(ர்)வகத்தில் அமையப்பெற்ற காயிதெமில்லத் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் கடந்த தியாகத் திருநாளையொட்டி ரியாத் காயிதெமில்லத் பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் பங்கேற்ற முதல் வெளிநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நினைவுகளை நினைவு கூர்ந்தார். ரியாத்தில் காயிதெமில்லத் பேரவையினர் மிகவும் ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தமிழகப் பெருமக்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்திருந்தனர். தமிழக மக்கள் மட்டுமல்லாது கேரள மாநில சகோதரர்களும் பேராசிரியரின் வருகையினையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சவுதிக்கான இந்திய தூதர் எம்.ஓ.எச். ஃபாரூக் மரைக்காயர் அவர்களை சந்தித்து உரையாடியது, தொழிலாளர் முகாம்களுக்குச் சென்று உதவிப்பொருட்கள் வழங்கியது, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் இந்திய மக்களைச் சந்தித்தது உள்ளிட்ட நிகழ்வுகளை விவரித்தார்.
மேலும் காயல்பட்டணத்தில் நடைபெறும் பொதுக்குழு குறித்தும், அதில் முஸ்லிம் லீக் வரலாற்று நூல் வெளியிடப்பட இருப்பது, மண்டல மாநாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக் செயற்குழுவில் பங்கேற்ற ஹிதாயத்துல்லா அந்நிகழ்வு குறித்தும் ராமநாதபுரத்தில் மண்டல மாநாடு நடைபெற இருப்பது குறித்தும் விவரித்தார்.
கூட்டத்தில் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி, கோட்டக்குப்பம் ரஹ்மத்துல்லா, ஹமீதுர் ரஹ்மான், ஹம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.