மும்பை பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துள்ளது! -டெல்லியில் பேராசிரியர்
மும்பையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உடல் ப+ர்வமாக இல்லாவிட்டாலும் உணவுப்ப+ர்வமாக இணைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு கூறி வந்த அந்த உணர்வுப்ப+ர்வமான ஒருமைப்பாடு நிகழ்ந்துள்ளது என்று மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் டெல்லியில் கருத்து தெரிவித்தார்.
நேற்று நடந்த முதல்நாள் பாராளுமன்ற கூட்டத்தில் மும்பை தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்பட பலர் பேசினார்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் பேசினார்கள். பின்னர் மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தானை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி குறித்து பாராளுமன்ற தொலைக்காட்சித் துறையினர் பேராசிரியர் கே.எம்.கே.விடம் நேர்காணல் நிகழ்ச்சியை மேற்கொண்டார்கள்.
அப்போது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேராசிரியர் கூறியதாவது:-
சமீபகாலமாக பாராளுமன்ற நிகழ்ச்சி இடைய+று இல்லாமல் நடைபெறவில்லை. எதிர்பார்த்த அளவு கூட்டம் முழுமையாக நடைபெற முடியாமல் அவை பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளை கடந்தகால பாராளுமன்ற வரலாறு கண்டிருக்கிறது. ஆனால், இன்றையதினம் புதிய வரலாறு ஏற்பட்டிருக்கிறது அவை ஒரே குரலில் ஒலித்தது. இதுவரை, ஆயுத ராணுவம் (யசஅ யசஅல) பற்றி விவாதித்த அவை தற்போது வெடிகுண்டு படை (டிஅ யசஅல) பற்றி விவாதித்தது.
அவை ஒருமித்த குரலில் ஒலித்ததற்கு காரணம் பயங்கரவாத தாக்குதல் என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவப்படும் போர் ஆகும். அது முழுமையாக அகற்றப்பட வேண்டும். உலகில் எங்கிருந்தாலும் அது அகற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை அனைவரும் ஆதரிக்கிறார்கள் - ஏற்றுக்கொள்கிறார்கள்.
பாராளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார் - பாராட்டினார். இதற்கு காரணம் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மேலும் அவை சரியான நடவடிக்கைகளாகும்.
பயங்கரவாதத்திற்கு இந்திய மண்ணில் இடமில்லை என்பதை பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டம் நிரூபித்துள்ளது.
இந்தியா ஒரு முழுமையடைந்த பாராளுமன்ற ஜனநாயக நாடு. எனவே, பயங்கரவாதம் தொடர்பாக மற்ற நாடுகளுடன் நாம் செயல்படும்போது முதுமையடைந்த ஜனநாயக முறைகளில் நாம் செயல்பட முடியும்.
ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல. அங்கே ஒரு நொண்டி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அவர்கள் பேசுவது ஒன்றும், செயல்படுவது ஒன்றுமாக கடந்த காலத்தில் இருந்திருப்பதை வரலாறு கண்டிருக்கிறது.
எனவே, அப்படிப்பட்ட ஒரு நாட்டுடன் நாம் நேரிடையாக சில நடவடிக்கைகளை அறிவுறுத்த முடியாது. அதனால்தான் ஐ.நா. சபை மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவும், நிர்ப்பந்தம் செய்யவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். நமது மத்திய அரசின் கொள்கையும் அதுதான்.
பயங்கரவாத தாக்குதல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஏதோ எதிர்பாராமல் நடக்கக்கூடிய நிகழ்வல்ல. இன்றைய தினம்தான் இந்த இடத்தில்தான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திடீர் என்று அது நடக்கும் என்று இந்திய மக்கள் அனுபவப்ப+ர்வமாக பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின்போது அனைத்து தரப்பினர்களிடமும் ஒற்றுமையும், பலமும், தைரியமும் காணப்பட்டது.
அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் திடமனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். அது பயங்கரவாதத்திற்கு எதிராக, விடுக்கப்படும் ஒரு செய்தியாகும்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளச் செய்திருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களிடையே விழிப்புணர்வை வெளிப்படுத்துவதுதான். இந்த வெளிப்புணர்வு மும்பை தாக்குதலின்போது காணப்பட்டது, மும்பை தாக்குதல் இந்திய மக்களை ஒருங்கிணைத்திருக்கிறது. உடல்ப+ர்வமாக இல்லாவிட்டாலும், உணர்ச்சி ப+ர்வமாக இந்திய மக்களை அது ஒருங்கிணைத்திருக்கிறது. ஒரு உணர்வு ஒருமைப்பாடு உண்டாக்கியிருக்கிறது. காலஞ்சென்ற பண்டித ஜவஹர்லால் நேரு கனவு கண்ட உணவுப்ப+ர்வ ஒருமைப்பாடு மும்பை குண்டுவெடிப்பால் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியர்கள் அனைத்து பாகுபாடுகளையும் நீக்கிவிட்டு ஒற்றுமையையும், உணர்வுப்ப+ர்வமாக, ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தியிருக்கிறது.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்