காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாற்று நூல் வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் முஸ்லிம் லீக் பொதுக்குழுவினையொட்டி முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் எழுத்தரசு ஏ. எம். ஹனீஃப் சாஹிப் அவர்கள் எழுதியுள்ள முஸ்லிம் லீக் வரலாறு முதற்பாகம் வெளியிடப்பட இருக்கிறது.
முஸ்லிம் லீக் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட இருக்கும் இந்நூலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களாள் வெளியிடப்பட இருக்கிறது.
முதல் பிரதியினை இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூஃப் ஹக்கிம் பெற இருக்கிறார்.
இத்தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையச் செயலாளர் காயல் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தெரிவித்தார்.
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=29