ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் இ.அஹ்மத் ஆற்றிய உரை!
http://www.muslimleaguetn.com/news.asp
தீவிரவாத தாக்குதல் நடத்தி பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புகளை குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் ஜமாத்-யுத்-தாவா அமைப்புகளை சட்டவிரோதமான அமைப்புகள் என்று ஐ.நா. சபை அறிவிக்குமாறு இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான, இ.அஹமது கேட்டுக்கொண்டார்.
ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ~பயங்கரவாத தாக்குதலால் சர்வதேச அமைதிக்கும் - பாதுகாப்புக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் இந்த தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு அமைச்சர் இ. அஹமது இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
பேச்சின் தொடங்கத்தில் அவர் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் அதற்கு முன் ஜெய்ப்ப+ர், டெல்லி மற்றும் அஹமதாபாத் போன்ற நகரங்களில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விவரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான அனைவரும் நீதியின் பிடியின் கீழ் கொண்டு வரவேண்டும்., இந்தியா தொடர்ந்து நாட்டுக்கு வெளியே இருந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆட்பட்டு வருகிறது.
ஒரு நாட்டினுடைய அரசியல் விருப்பங்களை பயங்கரவாத தாக்குதல் மூலம் நிறைவேற்ற முயலும் போது பயங்கரமான ஒரு இயந்திரம் உருவாக்கப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல்களால் உயிர்ச் சேதங்களும், பொருளாதார சேதங்களும் மிகப்பெரிய அளவில் ஏற்படுகிறது.
எனவே, இந்த மாதிரியான பயங்கரவாத அமைப்புகளை குறிப்பாக, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கரே இ தொய்பா மற்றும் ஜமாத் யுத் தாவா போன்ற அமைப்புகளை சட்ட விரோதமான தீவிரவாத அமைப்புகளாக ஐ.நா. சபை அறிவிக்க வேண்டும்.
ஜமாத் யுத் தாவா மற்றும் அதுபோன்ற, அமைப்புகள், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டு அவற்றிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.
எந்த நாட்டில் தீவிரவாதம் முளைவிடுகிறதோ அந்த நாட்டில் அவை செயல்படுவதை வேகமான நடவடிக்கைகள் மூலம் தடை செய்ய வேண்டும்., தீவிரவாத தாக்குதல்களி லிருந்து இந்திய மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது., ஆனால், இதுவரை இந்தியா பொறுப்புணர்வோடும், சகிப்புத்தன்மையோடும் இந்த விஷயத்தில் நடந்துகொண்டிருக்கிறது., பயங்கரவாத தாக்குதலை நடத்த அமைப்புரீதியாக செயல்படுபவர்கள், நிதி உதவி வழங்குபவர்கள், விய+கம் வகுத்து கொடுப்பவர்கள் போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .
பயங்கரவாதம் என்ற, தீமையான நடவடிக்கைகளுக்கு கொள்கை ரீதியாக மற்றும் தார்மீக ரீதியாக உதவி செய்பவர்களும் நீதியின் பிடிக்குள் கொண்டுவர வேண்டும். பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் போதெல்லாம் உலகம் அதிர்ச்சிக் குள்ளாகிறது. அந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள கட்டமைப்புகள், வெளிப்படையாக தெரிவதில்லை. பயங்கரவாத தாக்குதல்கள் எதேச்சையாக நிகழ்பவை அல்ல. அல்லது எப்போதோ நிகழ்வதும் அல்ல. அவற்றிற்கு முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். போதிய பண உதவியும் வழங்குகிறார்கள்.
ஒரு பயங்கரவாத தாக்குதல்களுக்கு சரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. அதற்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன., பயங்கரவாதிகள் தங்குவதற்கு மறைவிடங்கள் தேவைப்படுகின்றன.
எனவே, சர்வதேசரீதியிலும், தேசிய அளவிலும் பயங்கரவாத தாக்குதல் என்ற கொடுமையை அடியோடு வேரறுக்க பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
1996ஆம் ஆண்டில் பயங்கரவாதம் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சர்வதேச ரீதியில் சட்ட வரைவு கொடுக்கப்பட வேண்டும்., அந்த தீர்மானம் தீவிரவாதத்திற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படாத காரணத்தை காட்டி அதை கிடப்பில் போட்டுவிடக்கூடாது. ஏனென்றால் பயங்கரவாதம் தொடந்து அப்பாவிகளின் உயிரை பறித்து வருகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் .இ.அஹமது தெரிவித்தார்.
ஐ.நா.சபை பாதுகாப்பு சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அதில் இந்தியா இடம் பெறவில்லை. ஆனாலும்கூட இந்தியா அழைக்கப்பட்டு, பேச பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே, இ.அஹமதின் பேச்சை ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாட்டு பிரதிநிதிகள் மிகுந்த அக்கறையுடன், கேட்டார்கள்.