பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் மரணம்: முஸ்லிம் லீக் இரங்கல்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் பள்ளப்பட்டி ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் நேற்று (25-12-09) அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங் கல் தெரிவித்து வழுத்தூ ரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அதில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது-
பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் - தமிழக சட்டமன்ற முன் னாள் உறுப்பினர்:
சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முக்கியப் பெருந் தகையுமான ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார், 25.12.2009 பிற்பகல் 2.30 மணிக்கு காலமானார். தனது 84 வயதிலும், சமுதாய நல னில் பெரும் அக்கறை கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1971-76 ஆண்டு களில் அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதியில், இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, திறம்பட செயல்பட்டவர்.
அவரது காலத்தில் தான், உருது பேசுவோர் உள்ளிட்ட முஸ்லிம்கள் அனைவரும் பிற்பட் டோர் பட்டியலில் இடம் பெற்றனர். இதற்காக கடுமையாக உழைத்தவர் அவர்.
பள்ளப்பட்டி பேரூ ராட்சி மன்றத்தின் தலைவ ராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணி யாற்றியவர். பள்ளப் பட்டி முஸ்லிம் கல்விச் சங்கம், பள்ளப்பட்டி பாவா ஃபக்ருத்தீன் தர்ஹா மற்றும் பள்ளி வாசல், சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி உள் ளிட்ட பல அமைப்பு களில் பொறுப்புகளை ஏற்று, சிறப்பாக பணி செய்தவர்.
அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் பள்ளப் பட்டியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவ ருக்கு மனைவியும், நான்கு ஆண் மக்களும் உள்ளனர். ஒரு மகள் காலமாகி விட் டார். இவரது மறைவு சமுதாயத்திற்கும், தாய்ச் சபைக்கும் பேரிழப்பாகும்.
எல்லாம் வல்ல இறை வன் அன்னாரின் பிழைக ளைப் பொறுத்து, நற்செ யல்களை பரிப+ரணமாக அங்கீகரித்து, மேலான சுவனபதியை வழங்க இச் செயற்குழு பிரார்த்திப் பதோடு, அன்னாரின் பிரி வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கும், பள்ளப் பட்டி நகர ஜமா அத்தா ருக்கும் இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது