Wednesday, December 30, 2009

அனைவரும் செல்வோம்! அய்மானின் தலைவரை அகமகிழ வழியனுப்புவோம்!!!

அனைவரும் செல்வோம்! அய்மானின் தலைவரை அகமகிழ வழியனுப்புவோம்!!!

கீழக்கரையில் கீர்த்திப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்,பொருளீட்ட வந்தவர்களை எல்லாம் அல்லாஹ்வின் அருளையும் ஈட்ட வைத்த பெருமைக்குரியவர்,அய்மானின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தவர்களில் ஒருவர்.அனைவர்களின் உள்ளத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்திருப்பவர்.

ஆம்! அய்மானின் பெயரைக் கேட்டாலே அடுத்த வினாடி நம் கல்பிலே நிற்பவர் மரியாதைக்குரிய கீழக்கரை டவுன் காஜி .."ஹாதிமுஷ் ஷரீஆ" அல்ஹாஜ் ஏ.எம்.எம்.காதர் பக் ஷ் ஹுஸைன் ஸித்தீகி அவர்கள்தான்!

தனது முப்பத்தைந்தாண்டுகால அமீரகப் பணியில் அசராமல் சமுதாயப் பணியாற்றியவர்.அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் ஆற்றல் பெற்றவர்.இவைகளை எல்லாம் பெருமைக்காகச் சொல்லவில்லை.அவரின் ஒப்பற்ற சமுதாய சேவை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே இவைகளை பதிய வைக்கின்றோம்.காஜி ஏ.எம்.எம்.காதர் பக் ஷ் ஹுஸைன் ஸித்தீகி அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் இனிய நிகழ்ச்சி அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள ஹம்தான் ரோட்டில் அமைந்திருக்கு ருசி ரெஸ்டாரண்ட் ஹாலில் நிகழ இருக்கின்றது.நமது அய்மானின் இன்றைய தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் அவர்கள் தலைமையில் நடைபெறும்விழாவிற்க்கு நோபிள் மரைன் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீத் அவர்கள் முன்னிலை வகிக்க இசைந்துள்ளார்கள்.இவ்விழாவில் பங்கேற்ப்பதற்க்காக அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் எம்.லியாகத் அலி அவர்களும், துபை ஈமான் சங்கத்தின் நிர்வாகிகளும்,சங்கைக்குரிய ஆலிம் பெருந்தகைகளும் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிக்களும் பங்கேற்று உறையாற்ற இருக்கிறார்கள்.."ஹாதிமுஷ் ஷரீஆ" தாயகத்திலும் தன் பணியை தொடர்ந்திட வாழ்த்தி வழியனுப்புவோம் வாரீர்!!