அரசு யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்
மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு பேராசிரியர் கே.எம்.கே. கோரிக்கை
சென்னை, டிச. 26-
சென்னையில் உள்ள தமிழக அரசு யுனானி மருத்துவக் கல்லூரி மாண வர்களை 2010 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாதுக்கு வேண்டுகோள் விடுத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செய லாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 2008ம் ஆண்டு சேர்ந்து படித்து வருகிற 21 மாண வர்கள் 2010 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேர்வை எழுத முடியாத படி மத்திய ஆயுர்வேத யுனானி சித்த வைத்தியத் துறை அனுமதி மறுத்துள் ளது. இதன் காரணமாக அந்த மாணவர்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நான் தங் களை விரும்பிக் கேட்டுக் கொள்வது என்னவென் றால், தாங்கள் அந்தத் துறையில் தலையிட்டு 2008ம் ஆண்டில் சேர்ந்து படித்துவரும் 21 மாணவர் களை 2010 பிப்ரவரியில் நடக்க இருக்கும் தேர்வு களை எழுதி அவர்களது பி.யு.எம்.எஸ்., கல்வியை முற்றுப் பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த துறை சென்னை யுனானி வைத்தி யக் கல்லூரியில் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டி அந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாதபடி அனுமதி மறுத்துள்ளது. அந்த உத்தரவு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், யு.ஜி. படிப்புக் காக தமிழக அரசு தேர்வுக் குழு ஆகஸ்ட் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளிலேயே அந்த மாணவர்களை இந் திய முறை வைத்தியக் கல் லூரியில் மேற்படிப்புக்குச் சேர தேர்வு செய்துவிட்டது.
அரசு யுனானி வைத்தி யக்கல்லூரி தொடர்பாக ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா வைத்தியத் துறை 2008ல் சுட்டிக் காட்டியுள்ள குறைபாடு களை தமிழக அரசு அந்த ஆண்டே சரி செய்துவிட் டது.
2009ம் ஆண்டில் கல்லூ ரிக்கு வந்த ஆயுர்வேத சித்தத்துறை குழு அந்த குறைபாடுகள் சரி செய்யப் பட்டிருப்பதை கருத்தில் கொண்டு 2009ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஒரு பாவமும் அறியாத மாண வர்களின் கல்வி கெட்டு விடக்கூடாது என்பதை மனத்தில் கொண்டு அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது கடிதத்தில் கூறியுள் ளார்.