Thursday, December 31, 2009

பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் அவையில் இடம் பெற்றிருப்பது வெட்கக்கேடு

பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் அவையில் இடம் பெற்றிருப்பது வெட்கக்கேடு

லிபரான் கமிஷன் விவாதத்தில் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. ஆவேசம்


பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் இந்த அவை யில் இடம் பெற்றிருப்பது மிகவும் அவமானகரமானது - வெட்கக்கேடானது என்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆவேசமாக பேசினார்.
பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அமைக் கப்பட்ட மாண்பமை நீதி பதி லிபரான் குழு நீண்ட விசாரணைக்கு பிறகு தனது அறிக்கைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள் ளது.

இந்த அறிக்கை மீதான விவாதம் நேற்று (7-10-2009) அன்று மக்களவையில் நடை பெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு உரை யாற்றினார்.

அப்போது அவர் தெரி வித்ததாவது-

பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் வாய்ப் பினை எனக்கு அளித்த மைக்கு நன்றி தெரி வித்துக் கொள்கின்றேன்.
மாண்பமை நீதிபதி லிபரான் தனது அறிக்கை யில் பல விவரங்களை மிக தெளிவாக பதிவு செய்துள் ளார்.
மஸ்ஜிதை இடித்தவர் கள் யார்? தூண்டியது யார்? துணை போனது யார் என்பதையெல்லாம் தெளிவாக தெரிவித்துள் ளார்.

இடிக்கப்பட்டது (மஸ்ஜித்)வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. இந்தியா வின் இறையாண்மையும் தான். தகர்க்கப்பட்டது இந்தியாவின் தேச ஒற் றுமை, கோடிக்கக்கான மக்களின் உணர்வுகள் என்பதை லிபரான் பதிவு செய்துள்ளார்.

தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், வேற்றுமை யில் ஒற்றுமை என்ற நமது தேசத்தின் தனிப் பண்பாடு போன்றவையெல்லாம் தகர்க்கப்பட்டன என்பதை தெளிவாக அவர் தெரிவித் துள்ளார்
மஸ்ஜிதை இடித்ததன் மூலம் நமது தேசத்திற்கு நீங்காத அவமானம் ஏற்பட்டுள்ளது.

மஸ்ஜித் இடிப்பு என்பது தற்செயலாக நடந் தது அல்ல. திட்டமிட்ட முறையிலே ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தளம், சிவ சேனா மற்றும் பி.ஜே.பி.யை சேர்ந்தவர்கள் அரங்கேற்றி யது என்பதை அவர் பதிவு செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை உ.பி. மாநில பா.ஜ.க. அரசு மீறியது

பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்ட சமயத்திலே உத்த ரப்பிரதேச மாநிலத்திலே பா.ஜ.க.தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பா.ஜ.க.வை சேர்ந்தவர் கல்யாண்சிங்தான் முதல் அமைச்சராக இருந்தார்.

பாபரி மஸ்ஜித் வளா கத்திலே கரசேவை நடத்து வதற்கு மாநில அரசு அனுமதி அளித்ததுடன் உச்சநீதிமன்றத்திலேயும் வாக்குறுதி அளித்தது. பாபரி மஸ்ஜிதுக்கு எந்தக் கெடுதலும் இல்லாத வகை யிலே கரசேவை நடக்கும் என்பதற்கு மாநில அரசு பொறுப்பேற்றுக் கொள் வதாக உறுதி தெரிவித்தது. ஆனால், உறுதிமொழியை மீறி விட்டு சட்டவிரோத மான செயல்களை அரங் கேற்றினார்கள்.

பா.ஜ.க.வும், அதன் சகோதர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த வர்கள் வன்முறை செயல் களில் ஈடுபட்ட போது அரசு எந்திரம் ஸ்தம்பித்து போய் இருந்தது.

அரசு உயர் மற்றும்காவல் துறை அதிகாரிகளின் மெத்தனம்

காவல் துறை அதிகாரி கள் அந்த அக்கிரமங்களை தடுக்க முயற்சி எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தனர். அரசு உயர் பொறுப்பில் இருந்த வர்களும் அந்த அக்கிரமங் களுக்கு துணைபோய் சீருடை அணிந்த கரசேவ கர்களாக செயல்பட்டதாக மாண்பமை நீதிபதி லிபரான் சுட்டிக்காட்டியி ருக்கிறார்.

பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்ட அன்று அயோத் தியிலும், சுற்றியுள்ள பகுதி யிலும் சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப் பட்டனர். பலர் உயி ரிழந்தனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்ட போது அதனை சீர்படுத்த அரசு எந்திரம் எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஊடகவியலாளர்களுக்கு தடை

அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் சாட்சி ஆவணங்களாக உள்ளன என்பதையும் லிபரான் அறிக்கை தெரி யப்படுத்தியுள்ளது.

அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத் துறையினர் தடுத்து நிறுத்த பட்டுள்ளனர் என்பதையும் அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்படு வதற்கு முன்பாக அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை ஒன்றை நடத் தினார்.

அத்வானியின் ரத்த யாத்திரை
1990-ம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த யாத் திரையின் விளைவாக நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மதக் கலவ ரங்கள் ஏற்பட்டன. ஆயி ரக்கணக்கானோர் இறந்த னர். இறந்தனர் என்று சொல்ல முடியாது. அநி யாயமாக கொல்லப்பட்ட னர். ஆமாம். அவர்கள் எல்லாம் படுகொலைதான் செய்யப்பட்டார்கள்.

அந்த சம்பவம் குறித்து ஹடைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை தனது தலை யங்கத்திலே அத்வானி நடத்தியது ரத யாத்திரை அல்ல. ரத்த யாத்திரை என்று எழுதியது. அந்த அளவுக்கு நாடு முழுவதும் கலவரங்களால் அப்பாவி கள் ரத்தம் ஆறாக ஓடியது.

மறைந்த வி.பி.சிங்கிற்கு நன்றியும் - பாராட்டும்

அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவர் அன்றைய பிரதமர் வி.பி.சிங்தான். அவரது துணிச்சலான நடவடிக்கையால் வன் முறை கட்டுப்படுத்தப் பட் டது. அதனால் பா.ஜ.க. வினர் அவரது ஆட்சியை கவிழ்த்தனர். பிரதமர் பதவியை இழந்தார். என்றாலும், நாட்டு மக்களிடம் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்ற அந்த மறைந்த தலைவருக்கு எனது மரியாதையையும், நன்றியையும் இந்த அவை யில் தெரிவித்துக் கொள்கி றேன்.

அயோத்தியில் வன் முறையில் ஈடுபட்டவர்கள் மீதும், மஸ்ஜிது இடிப்பில் தொடர்புடையவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்து கடுமையான தண்டடை அளிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி இதுவரை நடை பெறாதது வருத்தத்துக் குரியது.

இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி மற்றும் பலர் இந்த அவை யிலே இடம் பெற்றிருப்பது மிகவும் அவமானகரமானது - வெட்கக்கேடானது. பாபரி மஸ்ஜித் விவகாரம் குறித்து அத்வானி நேரத்திற்கு தகுந்தாற்போல் பல கருத் துக்களை தெரியப்படுத்தி யுள்ளார்.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட தும் தனக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார். சில நாட்க ளில் பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதன் காரணமா கவே பி.ஜே.பி. வளர முடிந் தது என்று தெரிவித்தார்.
இப்படி பல நேரங் களில் அவர் பல நிலைப் பாடுகளை தெரிவித்துள் ளார்.

பாபரி மஸ்ஜித் தொடர் பான அனைத்து வழக்கு களையும் ஒன்றுசேர்க்கப் பட்டு விரைந்து விசாரித்து வழக்குகள் முடிக்கப்பட வேண்டும்.

நாட்டைப்பற்றி அல்ல ஓட்டப்பற்றியே பா.ஜ.க.வின் கவலை

வாக்கு வங்கிக்காக - அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரச்சினையை பா.ஜ.க.வினர் கையாண்டு வருகின்றனர். ஓட்டு பற்றி கவலைப்படும் அவர்கள் நாட்டைப் பற்றியும் அக்கறை செலுத்த வேண் டும்.
பாஜக ஆட்சி காலத் திலே உண்மையில் ஆர். எஸ்.எஸ்.தான் ஆட்சியா ளர்களோ என்று எண்ணத் தக்க வகையில் தனி அர சாங்கமே நடத்தப்பட்டது.

ராமருக்கு கோவில் கட்டுகிறோம் என்ற பெயரிலேயே வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் கோடிக் கணக்கான ரூபாய் நிதி திரட்டியது. அந்த பணம் எப்படி வந்தது? யார் யார் கொடுத்தது? அந்த பணம் எதற்காக செலவிடப் பட்டது என்ற விவரங் களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தேசப்பற்றுக்கும், மதசகிப்புத் தன்மைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் பாடுபட்ட - உழைத்த தலை வர்களை கொண்டது நமது நாடு.

அனைத்து மதங்களுமே மக்களுக்கிடையே சகோ தரத்துவத்தையும், நல்லி ணக்கத்தையுமே வலியுறுத் துகின்றன. ஒற்றுமையை யும் - ஒழுக்கத்தையும் போதிப்பதே அனைத்து மதங்களின் சாராம்சமாக உள்ளது.

மதநல்லிணக்கத்திற்கு காயிதெ மில்லத் காட்டிய முன்னுதாரணம்

நமது தேசம் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடியது. நமது நாட்டின் அரசியலமைப்பு அனைத்து மதங்களுக்கும் முழு சுதந்திரம் வழங்கி யுள்ளது. அப்படியிருக்க பிற மத வழிபாட்டுத்தலங் களை இடிப்பதை - அனு மதிக்க முடியாது.

இந்த அவையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

நமது நாடு சுதந்திர போராட்டத்திற்கு பின் நாடு இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் பிரிந்தபின், நாட்டுப் பிரி வினையின் காரணமாக பல பகுதிகளிலும் கலவரம் ஏற்பட்டது. அப்படி ஒரு கலவரத்தில் கேரளாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாயினர். அந்த சமயத்தில் பாகிஸ்தா னிலிருந்து முஹம்மது அலி ஜின்னா ஒரு தகவலினை அனுப்பினார்.

சிறுபான்மை முஸ்லிம் களை பாதுகாக்க தேவைப் பட்டால் பாகிஸ்தான் உதவத் தயாராக இருப்ப தாக தெரிவித்தார். அப் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் கண்ணியமிகு காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், ஜின்னாவுக்கு பதில் அளித்தார். அதில், ஜின்னா அவர்களே இப் பொழுது நீங்கள் இந்தியர் அல்ல. வேறொரு நாட் டைச் சேர்ந்தவர். நீங்கள் இந்திய குடிமகனோ, குடி யுரிமை பெற்றவரோ இல்லாதபோது இந்திய நாட்டின் உள் விவகாரங் களில் தலையிடுவதை நாங் கள் ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம். நாங்கள் இந்தியாவின் சிறுபான்மையினராக இருந்தாலும் எங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும். நீங்கள் சிறு பான்மை மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருந்தால் உங்கள் பாகிஸ் தானில் உள்ள சிறு பான்மை மக்களாகிய இந்துக்களையும், சீக்கிய, கிறிஸ்தவர்களையும் முழு மத சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும், சகல உரிமைகளுடனும் வாழ் வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். அதை விட்டு விட்டு, இந்திய முஸ்லிம் கள் விவகாரத்தில் கவனம் செலுத்துவதை கைவிடுங் கள் என்று மிக உறுதியு டனும், தெளிவாகவும் காயிதெ மில்லத் அவர்கள் தெரியப்படுத்தினார்கள்.

மதச்சார்பற்ற நமது அரசாங்கம் மஸ்ஜிதை கட்டித் தருவதில் தயங்க வேண்டியதில்லை

இதனை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நமது நாட்டின் தலைவர்கள் எவ்வளவு உயர்ந்த சிந்தனையுடை யவர் களாகவும், தேசப் பற்று மிக்கவர்களாகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தக்கூடியவர் களாகவும் இருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டத் தான்.

அப்படிப்பட்ட பெரு மைக்குரிய நமது தேசத்தில் மதத்தின் பெயரால் சண்டை, சச்சரவுகள், வகுப்பு மோதல்கள் ஏற்படு வதை நினைத்து வருந்த வேண்டும். நான் இங்கு இன்னொரு விஷயத்தை யும் சுட்டிக் காட்டுகிறேன்.
அயோத்திலே பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த சமயத்திலே பாகிஸ் தானிலே இந்து மத ஆலயங்கள் சிலவற்றை அங்குள்ள சில மதவாதிகள் சேதப்படுத்தினார்கள். அப்படி சேதப்படுத்தப் பட்ட அந்த கோவில்களை பாகிஸ்தான் அரசாங்கம் தனது சொந்த நிதியை செலவிட்டு புனரமைத்து கொடுத்தது. அந்த கோவில் கள் திறப்பு விழாவுக்கு பா.ஜ.க.வின் தலைவர் எல்.கே. அத்வானியை அழைத்து அவரது கரங்க ளாலேயே திறந்து வைத் தது.

பாகிஸ்தான் அரசியல மைப்புப்படி அது ஒரு மதம் சார்ந்த நாடாகும். அதிகாரப்பூர்வமாக அது ஒரு முஸ்லிம் நாடு. அப் படியிருந்தும் அது பிற மதங்கள், அதுவும் சிறு பான்மை மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து பெருந்தன்மையாக நடந்துள்ளது. (பா.ஜ.க. வினர் கூச்சல், குழப்பம்).

நமது தேசம் அரசிய லமைப்புப்படி மதச்சார் பற்ற நாடு. செக்யூலர் கண்ட்ரி. நமது அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல. எல்லோருக்கும் பொது வான அரசாங்க முறை கொண்டது. அப்படிப் பட்ட தேசத்தில் இடிக்கப் பட்ட மஸ்ஜிதை மீண்டும் கட்டித் தருவதில் அரசுக்கு தயக்கம் இருக்கக் கூடாது. அப்படி கட்டித் தருவது தான் நமது அரசுக்கு பெருமை சேர்க்கக்கூடிய தாக அமையும்.

இந்தியாவின் கலாச்சார பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்

இதற்காக அனைவரும், இங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப் புத் தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உலக அரங்கில் நமது இந்தியா வின் பெருமையை நிலை நாட்டும் வகையில் நமது இந்திய கலாச்சா ரத்தை - அனைத்து சமயங் களையும் மதித்து போற் றும் பண்பாட்டை மறு படியும் நிலைநாட்டும் முயற்சியில் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதற் கான வாய்ப்பினை உரு வாக்கித் தர வேண்டும் என கேட்டு உரையினை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசினார்.