ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் சட்டங்கள் மூலம் அமல் படுத்தப்பட வேண்டும்
பிரதமருக்கு பேராசிரியர் கே.எம்.கே. கோரிக்கை
சென்னை, டிச. 24:
சிறுபான்மையினர் குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் செய்துள்ள பரிந் துரைகளை சட்டங்கள் மூலம் அமல் படுத்த வேண் டும் என்று சிறுபான்மை யின மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமர் மன்மோ கன்சிங்கிற்கு இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிர தமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:
மத மற்றும் மொழி சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கு ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் தேசிய செயல் திட்டத் தில் சேர்த்ததற்கும் அதற் காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனை அமைத் ததற்கும் அவர் அறிக் கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று கூறி, தாக்கல் செய்ததற்கும், இந்தியாவின் சிறுபான்மை சமூகம் தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது.
உண்மையிலேயே சுதந்திரம் அடைந்தபிறகு சிறுபான்மையின மக் களுக்கு இது ஒரு திருப்பு முனையாகும். அதற்கு சிறுபான்மையின மக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். தாங்கள் ஐ.நா. சபை மூலம் இந்தியா அமைதி, ஒற் றுமை, சக வாழ்வு மற்றும் மேம்பாடு இவற்றின் மூலம் ஒரு புதிய உலகை ஏற்படுத் தும் என்று உலகத்திற்கு தாங்கள் உணர்த்தியதை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது எனது பாராளு மன்ற உரைகளில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.தாங்கள் கூறியபடி அந்த நான்கு தூண்களும்தான் புதிய இந் தியாவை உருவாக்கும் ஊற் றுக் கண்களாகும். தங்க ளது பொன்மயமான கொள்கைகளை மிஸ்ரா கமிஷன் தனது ஆக்கப் ப+ர்வமான அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.
நீதிபதி மிஸ்ரா கமிஷ னின் பரிந்துரைகள் சட்டத் தின் மூலம் அமலாக்கப் படும் பிரகாசமான நாளை இந்திய சிறுபான்மையின சமூகத்தினர் பார்க்க ஆவ லுடன் காத்திருக்கிறார் கள். அந்த நாள் விரைவில் வந்திட நாங்கள் ஆவலு டன்எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் தனது கடிதத்தில் குறிப்பிட் டிருக்கிறார்.