Wednesday, December 30, 2009

தென்சென்னை-தாண்டர் நகரில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை : மாநில பொருளாளர் முன்னிலையில் ஏராளமானோர் இணைந்தனர்

தென்சென்னை-தாண்டர் நகரில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை : மாநில பொருளாளர் முன்னிலையில் ஏராளமானோர் இணைந்தனர்


சென்னை, டிச.30-

தென்சென்னை மாவட் டம் சைதை பகுதி தாண் டர் நகர் அரசு குடியிருப் பில் அமைந்துள்ள முஸ் லிம் தொழுகை கூடத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர் சேர்க் கைப் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் முன்னிலை யில் ஏராளமானோர் முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண்டனர்

25.12.09 வெள்ளிக் கிழமை ஜும்ஆவிற்குப் பிறகு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது தலை மையில் தென் சென்னை மாவட்ட தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, தென் சென்னை மாவட்ட செய லாளர் ப+வை. எம்.எஸ். முஸ்தபா, சைதை பகுதி தலைவர் போகளூர் கே. அப்துல் கதீம். செயலாளர் சாத்தை எம். மீரான் முகைதீன், தி.நகர் சர்க்கார் இஸ்மாயில், சேப்பாக்கம் பகுதி ஆலம்கான், சைதை ஏ. இஸ்மாயில் இளைஞர் அணி அமைப்பாளர் எம். முகம்மது ரியாஸ், எம். முகம்மது அலி, ஷேக், அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் சேர்ப்புப் பணி நடை பெற்றது.

தாண்டர் நகர் அரசினர் குடியிருப்பு வளாகத்தி லுள்ள தொழுகைக் கூட தலைவர் செய்யது ஜவ் வாது, துணைத் தலைவர் முனீர் அஹ்மத், எம். எஸ். முஹம்மது ரபி, முனீர் பாஷா, செயலாளர் சாந் துனி செய்யது, பொருளா ளர் எஸ். உமர் ஆகியோர் முயற்சியின் காரணமாக அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய மக்கள் அனை வரும் ஆர்வத்துடன் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களை முஸ் லிம் லீகில் உறுப்பினர் களாக இணைத்துக் கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் ப+வை. காதர், தென் சென்னை மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள்.

முன்னதாக இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது ஜமா அத்தார் முன்னிலையில் உரையாற்றினார். ஜும்மா பேரூரை மௌலான அப்துல் அஜீஸ் பைஜி பையாஜி உரையாற்றினார், மௌலவி நூர் முஹம்மது நன்றி கூறினார்.