Saturday, December 26, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது - தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டிசம்பர் 29-ல் காயல்பட்டினம் வருகை தருகின்றனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது - தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டிசம்பர் 29-ல் காயல்பட்டினம் வருகை தருகின்றனர்

பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது


சென்னை, டிச.24-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துணை இணைய மைச்சருமான இ.அஹமது சாஹிப், தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் வரும் டிசம்பர் 29-ம் தேதி செவ்வாய்கிழமை காயல் பட்டினம் வருகை தரு கின்றனர். அவர்களுக்கான வரவேற்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடை பெறுகின்றன.

நெல்லை ரயில் நிலையத்தில் வரவேற்பு

டிசம்பர் 29.ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு குருவாய+ர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வருகை தரும் தலைவர்க ளுக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் தலைமை யில் நடைபெறும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்கள் நெல்லை மஜீத், காயல் மஹப+ப், நெல்லை மாவட் டத் தலைவர் தென்காசி எம்.எஸ். துராப்ஷா, செய லாளர்கள் மேலப்பாளை யம் எல்.கே.எஸ். மீரான் மைதீன், கடையநல்லூர் டி.ஏ. செய்யது முஹம்மது, பொருளாளர் புளியங்குடி அப்துல் வஹாப், மாநில ஆலிம்கள் அணி அமைப் பாளர் ஹாமித் பக்ரீ, ஷிபா பாலிகிளினிக் அதிபர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, தூத்துக் குடி மாவட்டத் தலைவர் ஹாஜி குலாம் ஹசன், துணைத் தலைவர் எம். அப்துல் கனி, செயலாளர் வாவு முஹம்மது நாசர், தூத்துக்குடி மாநகர தலைவர் ஷிஹாபுதீன், நெல்லை மண்டல இளைஞர் அணி அமைப் பாளர் உவைஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.

பொதுமக்கள்

வரவேற்பு

காலை 9 மணிக்கு காயல்பட்டினம் ரயில் நிலையத்தை தலைவர்கள் பார்வையிட்டு குறைபாடுக ளை கேட்டறிகின்றனர். காலை 10 மணிக்கு ஜலா லியா திருமண மண்டபத் தில் காயல்பட்டினம் ஊர் மக்கள் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படு கிறது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் தலைமை யில் நடைபெறும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நகரின் அனைத்து ஜமா அத், அனைத்து பள்ளி வாசல்கள், அனைத்து அரபிக் கல்லூரிகள், அனைத்து கல்வி நிலை யங்கள் மற்றும் அனைத்து பொதுநல ஸ்தபானங் களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கேற் கின்றனர்.

பிற்பகல் 12.30 மணிக்கு காயல்பட்டினம் நகராட் சித் தலைவர் வாவு எஸ். சையது அப்துர் ரஹ்மான் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. பின்னர் பேங்காக் காயிதெ மில்லத் அமைப்பாளர் வாவு எம்.எம். சம்சுதீன் இல்லத்தில் தங்குகிறார்.

கே.எம்.டி. மருத்துவமனை

விழா

மாலை 4.30 மணிக்கு பேங்காக் காயல் நற்பணி மன்றம் சார்பில் காயல் பட்டினம் மருத்துவ அறக் கட்டளை மருத்துவ மனைக்கு கட்டிக் கொடுக் கப்பட்டுள்ள லேபர் பிளாக்கை பேராசிரியர் முன்னிலையில் இ.அஹ மது சாஹிப் திறந்து வைக் கிறார்.

இவ் விழாவுக்கான ஏற் பாடுகளை கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகி கள் செய்து வருகின்றனர்.

மாலை 5 மணிக்கு முஸ்லிம் லீகின் மூத்த தலை வரும், நகரின் முக்கியப் பிரமுகருமான ஹாஜி எஸ்.டி. வெள்ளைத் தம்பி இல்லத் திருமண வரவேற் பில் தலைவர்கள் பங்கு பெறுகின்றனர்.

மாலை 5.30 மணிக்கு வள்ளல் சீதக்காதி திடலில் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் பச்சிளம் பிறைக்கொடி ஏற்றுவிழா நடைபெறு கிறது.

மேலப்பாளையம்

வரவேற்பு

மாலை 6.30 மணிக்கு மேலப்பாளையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.50 மணிக்கு திருநெல் வேலியிலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தலைவர்கள் சென்னை திரும்புகின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை காயல்பட்டினம் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம். பாசுல் அஸ்ஹப் ஆலோசனையின் பேரில் நகரச் செயலாளர் பி.எம்.எஸ். அமானுல்லா, இப்ராஹீம் மக்கீ, மன்னர் பாதுல் அஸ்ஹப், அப்துல் வாஹித், எஎல்.எஸ். அபு சாலிஹ், ஏ.கே. முஹம்மது சுலைமான், மஹ்மூதல் ஹசன், சுஹைல் உள்ளிட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.