Saturday, December 26, 2009

பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து ரயில் பயணம் ஏற்பாடு மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அறிக்கை

பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து ரயில் பயணம் ஏற்பாடு மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அறிக்கை

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=813

வருகிற ஜனவரி 15, 16 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களளுருவில் நடைபெறும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதி கள் மாநாட்டில் கலந்து கொள்ளும், தமிழகப் பிரதிநிதிகள் பெங்களுருவுக்கு பயணிக்க ரயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரத்தை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதி நிதிகள் மாநாடு எதிர்வரும் 2010 ஜனவரி 15, 16 வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் பெங்களூரு நகரில் புதிய ஈத்கா வளாகம் டேனரி சாலையில் அமைந் துள்ள சாதாப் அரங்கில் நடைபெறுகின்றது.

இந்திய இஸ்லாமியர்கள் அரசியலில் விழிப்புணர்வடைந்து கல்வி மற்றும் பொருளாதார‌த்துறைகளில் முன்னேற்றம் காண இம்மாநாடு வழி வகை ஏற்படுத்த இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடு களையும் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப், தேசிய பொதுச் செயலாளர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

இம்மாநாடு தாய்ச்சபை வர லாற்றில் புதிய சரித்திரம் படைக்கும்.

தமிழகத்திலிருந்து தேசிய மாநாட்டில் பிரதிநிதிகளாக பங்கேற்க விரும்புபவர்கள் மாநாடு பிரதிநிதி கட்டணம் போக்குவரத்து (ரயில்), உணவு மற்றும் தங்கும் வசதிகளுக்காக கட்டண மாக ரூ.750 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரப்படி, பெங்களுருவுக்கு தூத்துக்குடி, மயிலாடுதுறை, கோயமுத்தூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலிருந்து புறப்படும் ரயில் வண்டியில் சென்று வர ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இவ் வழித்தடங்களில் உள்ள வர்கள் அந்தந்த ஊரிலிருந்தே பயணிக்கலாம். இப்புகை வண்டிகள் செல்லாத மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வந்து புறப்பட வேண்டும்.

ஏற்பாடு செய்ய இருக்கும் ரயில்களின் விபரம்

1. மைசூர் விரைவு வண்டி (எண்.6731) - தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல்

2. மைசூர் விரைவு வண்டி (எண்.6231) - மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, சேலம்

3. பெங்களுர் மெயில் (எண்.2657) - சென்னை, காட்பாடி, ஜோலார் பேட்டை

4. கோவை, பெங்களளுர் வண்டி (எண்.6525) - கோய முத்தூர், திருப்பூர்

அனைத்து மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலிருந்து தேசிய மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகளின் விபரத்தை அடியிற்கண்ட மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.750- செலுத்தி 31-12-2009க்குள் தலைமை நிலையத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )