பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்
பாளையங்கோட்டை, டிச.30-
பாளையங்கோட்டை ரஹ்மத்நகர், கிரஸண்ட் நகர் பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் நெல்லை ஷிபா மருத் துவமனை நிர்வாக இயக்கு நர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமையில் நடை பெற்றது.
எம்.கே.எம். ஜுவல்லர்ஸ் அதிபர் எம்.கே.எம். கபீர் முன்னிலை வகித்தார். ரஹ்மத் நகர் பள்ளிவாசல் பொருளாளர் எம். சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.
நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா முஸ்லிம் லீக் அவசியம் பற்றியும், சமு தாய ஒற்றுமை பற்றியும் விரிவாகப் பேசினார்.
பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், பரக்கத் மாநகரம், கிரஸண்ட் நகர் பகுதிகளில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மிய்யா கான், கே.என்.எம். மஹப+ப் அலி, ஹாஜா முகைதீன் ஆலிம், எம்.எஸ்.எஸ். செய் யது இப்ராஹீம், ஷாகுல் ஷிப்லி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
முடிவில் ரஹ்மத் நகர் பள்ளிவாசல் செயலாளர் எம். வருசை மியாபிள்ளை நன்றி கூறினார்