Thursday, December 31, 2009

காயல்பட்டினம் இரயில்வே நிலைய விரிவாக்கம்!

காயல்பட்டினம் இரயில்வே நிலைய விரிவாக்கம்!

நகர்மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றார் இ.அஹ்மத்!!


காயல்பட்டினம். டிச.30

காயல்பட்டினம் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப், முதல் நிகழ்ச்சியாக காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டார். அங்குள்ள குறைபாடுகளையும், செய்யப்பட வேண்டிய பணிகளையும் மக்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, கடந்த 15ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து முழுமையாகக் கேட்டறிந்திருந்தார். அதனடிப்படையில், நேற்று காயல்பட்டினம் நிகழ்ச்சியில் நகர்மக்கள் சார்பாக இ.அஹ்மத் ஸாஹிபிடம் கோரிக்கைகளை அவர் விளக்கிச் சொன்னார்.

பின்னர் உரையாற்றிய மத்திய அமைச்சர் இ.அஹ்மத் இக்கோரிக்கைகள் குறித்து பேசுகையில், காயல்பட்டினம் மிகப்பெரிய ஊர்@ மிகச் சிறந்த மக்கள்@ ஆனால் மிகச் சிறிய இரயில்வே ஸ்டேஷன்... எனவே உங்கள் கோரிக்கைகள் நியாயமானவையே! உங்கள் கோரிக்கைகளில் ஒன்றான, காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் கணணி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் உடனடி பயணச்சீட்டு மையம் விரைவில் திறக்கப்படும் என்றும், 18 இரயில் பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக, இந்நிலையத்திலுள்ள நடைமேடை விரிவுபடுத்தப்படும்... பயணியர் வசதிக்காக, காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் மேற்கூரை விரைவில் அமைக்கப்படும் என்று கூறிய அவர், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள இரயில் நிலையங்களில் நடைமேடை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது@ இது விரைவில் முடிக்கப்பட்டு, செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலை தினசரி இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், சி.லெ.சாகுல் ஹமீது, எஸ்.ஏ.முஹம்மத் அலீ, அ.குலாம் ஹஸன், எஸ்.டி.வெள்ளைத்தம்பி, எஸ்.எம்.மிஸ்கீன் சாஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், சொளுக்கு எஸ்.எம்.கபீர், எஸ்.செய்யித் அஹ்மத், எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, பிரபு சுல்தான், வாவு நாஸர், பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் ஆகிய நகரப் பிரமுகர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட – நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி நன்றி கூறினார். தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ ஃபைஜீ மஹ்ழரீ துஆ ஓதினார்.

தூத்துக்குடி மாவட்ட கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் அனில் சிங்கால், காயல்பட்டினம் இரயில் நிலைய அதிகாரி முஹம்மத் இப்றாஹீம் உள்ளிட்ட இரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.