என்ன பதில் கொடுத்துள்ளIர்கள். வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் லீக் சார்பாக திமுக கூட்டணியில் அதுவும் திமுக சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் இது எல்லோருக்கும் தெரியும்.
அது என்ன இவரை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் திமுக உறுப்பினர் என்று தான் அழைப்பார் அதுதான் உண்மையும் கூட இதில் மாற்ற எப்படி செய்ய முடியும். உங்கள் அறிவுமிக்க கருத்துடன் தனிசின்னத்தில் இந்த தமிழக அரசியலில் புயல், கடல், எழுச்சி என்றும், நாளை அரசியல் என்றால் இந்த தெருவில் வந்து தான் நிர்ணயம் செய்ய வேண்டும் எல்லாம் பகல் கனவு கண்டு இந்த சமுதாயமும் ஏன் நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தீர்கள் எந்த அளவில் சமுதாயத்திற்கு என்று பலகதவுகளை திட்டு அனைத்தும் முடிய பின் தனிசின்னத்தில் நின்று கடைசியில் என்ன ஆகியது?
சரி திமுக சின்னத்தில் வெற்றி பெற்று சென்றாலும் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், சமுதாய எதிர்பார்ப்புகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய முழு உரிமை இந்த முஸ்லிம் லீக் சார்பாக நிறுத்தி பெரும் அளவில் வெற்றி பெற்றவருக்கு திமுக கூட்டணிக்கட்சி என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இவர் பட்டவர்த்தமாக பத்திரிகை மற்றும் கூட்டத்தில் அறிவித்துவிட்டார்.
நமக்கு தனிசின்னத்தில் நின்று வெற்றி பெற அனைத்து சமுதாய கவலை கொண்டவர்களுக்கு ஆர்வமும் ஆசையும் இல்லை என்று சொல்லவில்லை. இது தற்போது உள்ள சமுதாய மக்கள் தொகையில் அதுவும் பல பிரிவு அமைப்பு, இயக்கம், கழக, ஜமாத் என்று இருக்கும் சமுதாயத்தில் சாதிக்க முடியுமா? என்று அறிவு பு>ர்வமாக கருத்து சொல்லுங்கள் சகோரர்களே. ஏதோ நமக்கு ஒரு வேலை முஸ்லீம் லீக், தமுமுக, அல்லது பல்வேறு சமுதாய அமைப்புளை விமர்சனம் செய்வது என்று இருக்க வேண்டாம்.
அல்லாஹவிற்கு பயந்து திமுகவிற்கு ஜால்ரா தட்டாமல் நம் சமுதாய பற்றி வரும் பிரச்சனையில் குறைந்த பட்சம் தன் சக்திக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் இந்த உறுப்பினராவது எடுத்து பேசுகிறே என்று பெருமையும் சந்தோசமும் படுங்கள். சும்ம மடமையான நினைவில் கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் உங்களை போன்றவர்கள் வெட்டி பேச்சும், விவாதமும் செய்வதால் தான் சமுதாயத்தில் கொஞ்சம் கவலையுடன் செயல்படுபவர்களும் வருத்தப்படுகிறார்கள். எனவே உங்களால் முடிந்தால் ஊக்கம் செய்யுங்கள் இல்லை என்றால் சும்ம இருங்கள் ஒருவர் அதுவும் நம் சமுதாய சகோதரர் நம் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கிறார் என்றால் அல்லாஹுfவிடம் அவருக்காக துஆ செய்யுங்கள். ஒருவேளை இது சம்பந்தமாக எதுவும் பேசாமல் மற்றவர்கள் மேசையை தட்டி கொண்டு இருப்பது போல் செய்ய வேண்டும் என்று முட்டாள் தனமான கருத்தை தயவு செய்து நமது சமுதாய மக்களiடம் எடுத்து வரவேண்டாம்.
திமுக நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லீம் லீக் கூட்டணிகட்சி பெயர் பட்டியலில் முஸ்லீம் உள்ளது அது வேலூர் தொகுதி என்று இன்று கூட திமுக இணையதளத்தில் போட்டு வைத்துள்ளார்கள். வேலுர் திமுக உறுப்பினர் என்று சொல்லவில்லை கூட்டணிகட்சியான முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு என்ற வகையில் வேலூர் தொகுதி என்று உள்ளது.
நீங்கள் சொல்லுவது போல் தனிசின்னத்தில் முஸ்லிம் லீக் நிற்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த குழுமத்தில் பதிவு செய்யுங்கள். அப்படி செய்ய என்ன என்ன செய்ய வேண்டும். ஒரு தொகுதியில் அது சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தொகுதியாக இருந்தால் ஒரு முஸ்லிம் கட்சி நின்று எந்த தொகுதியை வெற்றி கொள்ள முடியும் என்று சரியாக கணக்கெடுப்புடன் இந்த குழுமத்தில் வையுங்கள். இந்த சமுதாய கவலை கொண்ட எத்தனையோ நடுநிலையாளர்கள் உள்ளார்கள் அவர்களiன் உங்களiன் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம். உங்கள் தனிசின்னத்தில் நிற்கும் ஆவல் எந்த விதத்தில் சாத்தியம் என்று அல்லாஹவிற்கு பயந்து விவாதிப்போம். சும்ம இயக்க வெறி அல்லது தனிமனித வழிபாடு இல்லாமல் உண்மையாக சமுதாய கவலையில் செய்வோம் எனவே நீங்கள் சொல்லுங்கள் எந்த தொகுதியில் முஸ்லிம் சார்பு கட்சி நின்று அதுவும் தனிசின்னத்தில் நின்று வெற்றி பெறலாம். நீங்கள் குறிப்பிடும் தொகுதியில் நம் சமுதாய மக்களiன் மக்கள் தொகை என்ன? மற்ற சகோதர இனமக்களiன் மக்கள் தொகை என்ன? அவர்கள் நம் சமுதாயத்தவர்கள் தேர்தலில் நின்றால் நமக்கு ஒட்டு போட்டு வெற்றி பெற செய்வார்களா? என்று உண்மையான ஆய்வு செய்து இந்த குழுமத்தில் வையுங்கள்.
அன்புடன்
எஸ்.முஹும்மது அலி சார்ஜா
smalli786@gmail.com
2009/12/25 Abdul Kader Silingi
நண்பரே
எல்லாம் சரிதான். வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை பேச அழைத்த போது சபாநாயகர் என்ன சொல்லி அழைத்தார். தி.மு.க உறுப்பினர் எனறு, முதலில் இந்தக் குறீயீட்டை தடுத்து நிறுத்துங்கள் அப்புறமாக நீங்கள் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் சொல்லலாம் முஸ்லீம் லீக் அடையாளத்தில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் முழக்கமிடுங்கள் அப்போது பார்க்கலாம்
2009/12/9 QMF UAE
//வழக்கம் போல இந்திய யூனிய்ன் முஸ்லீம் லீக் ஆப்செண்டா ? //
சகோதரர் அவர்களே முஸ்லிம் லீக் வழக்கம் போல் ஆப்செண்டா? என்று எழுதியிருந்தீர்கள் தயவு செய்து இதை படித்து பாருங்கள். அவர்கள் மக்கள் சபையில் சரியான நேரத்தில் சரியானதை பதிவு செய்து வருகிறார்கள். சுயவிளம்பரம் தேடி சமுதாயத்தின் பெயரில் தொழில் செய்யவில்லை. எனவே முஸ்லிம் லீக் காரர்கள் அமைதியுடன் அல்லாஹுவிடம் துஆ கேட்டு போராடி வருகிறார்கள். அல்லாஹு நமக்கு நிச்சியம் ஒரு நாள் சரியான தீர்பை தருவான். இந்த விசயத்தில் யார் யாரேல்லாம் அவர்களiன் சொந்த பாணியில் போராட்டம் செய்கிறோர்களோ அனைவர்களை அல்லாஹுஅறிவான். உண்மையை அறிவதில் அல்லாஹுவை விட யாரும் சக்தி மிக்கவர்கள் இல்லை.
சும்ம எதற்கு எடுத்தாலும் விமர்சனம் செய்வதை விடுங்கள். நல்லதை ஏவுங்கள்